Sunday, December 4, 2022
ஒருவனை பற்றி ஓரகத்திரு
ஒருவனை பற்றி ஓரகத்திரு
ஒருவனை பற்றி ஓரகத்திரு என்ற திருவாக்கு என்ன உன்னத வாக்கு என இப்ப எண்ணிப்பார்.
நாசிக்கு வெளியே மூச்சு ஓடாது நின்றதும் உன் ஜீவன் துவாதசாந்த பெருவெளி கடந்து வெளிச்சக்காலில் போய் மாட்டிகொள்கிறது.அந்த நிலை கைவரவான பின் சுவாசம் வெளியே ஓடும்படி அதை வலுக்கட்டாயம் செய்து இழுத்து முயற்சித்தாலும் அது வெளியே ஓடுவதில்லை.
நாசிக்கு வெளியே எமது மூச்சு ஓடாதபடி,மூக்கின் ஓரக்கங்கு வரை வந்து அது திரும்பி உள்ளே போகிறது என்பது எமக்கு இப்ப திட்டமாக தெரிகிறது.
~சாலை ஆண்டவர்கள்
____________________________________
Vellingiri Vellingiri குருவே வணக்கம்
சற்று தெளிவாக கூறவும் இதில் சரியான வாசகங்கள் இல்லாதது போல் தெரிகிறது
3
Hide or report this
விஜயகுமார் சு காணுமூச் சடக்கி விழியதை உருட்டிக் கபாலமுந் திறந்தனர் கோடி கனத்த வாயுவதனால் குன்ம நோய் அனுகி கலங்கினோர் ரொரு கோடி தோணு மெய் மறந்து சுழன்று அனல் எழுப்பிச் சொக்கி னோர் ரொரு கோடி சூலைவாயு அனுகி சுவாலையும் எழுப்பி சுரமதனால் இறந்தவர் ரொரு கோடி ஊண உண்ணாக்கை உள் தூக்கி உள்ளடங்கி னோர் ரொரு கோடி உயர சாணீளம் முழமது எழுப்பி உறங்கி ஒடுங்கினோர் ரொரு கோடி பேனாதி சாரப் பேதி வந்தனுகி பிறவியா இறந்தவர் ரொரு கோடி இனமறியாமல் இருத்தியே வாய்வை இறந்தனர் ரொரு கோடி இனிய தம்பனஞ் செய்து எழுப்பி கும்பித் தேங்கியே இறந்தனர் ரொரு கோடி கனமறி காற்றை நாசியால் விட்டு கருதியே இறந்தனர் ரொரு கோடி கண்ட நாசியை விட்டொன்று விட்டொன்று கலங்கியே மடிந்தனர் கோடி தினமொரு நாழி வாசி கொண்டேற்றிச் சிவபுரம் மேவினர் ரொரு கோடி அம்புவி தனிலே மறையவும் சூழ்செய் தனிதும் பதுங்கினோர் கோடி தெளிந்தவர் அறிந்துமே செப்ப தேறிடும் வாசி யோகத்தின் பெருமை திருத்தமாய் உரைத்திடலாமே
Hseija Ed Rian "கண்ட நாசியை விட்டொன்று விட்டொன்று கலங்கியே மடிந்தனர் கோடி தினமொரு நாழி வாசி கொண்டேற்றிச் சிவபுரம் மேவினர் ரொரு கோடி அம்புவி தனிலே மறையவும் சூழ்செய் தனிதும் பதுங்கினோர் கோடி தெளிந்தவர் அறிந்துமே செப்ப தேறிடும் வாசி யோகத்தின் பெருமை திருத்தமாய் உரைத்திடலாமே"".....ithu enna porul aiyaa?
விஜயகுமார் சு ஐயா சித்தர் வழி வந்த புலத்தியர் அவர்களின் பாடலே மேற்கண்டது.....இந்த வாசியோகம் என்பது இந்த உடலில் செய்வது அல்ல என்றும்.,மெய்ப்பொருள் என்ற ஒன்றில் நிகழ்த்துகிற நிகழ்வாக சித்தர்கள் தெரிவிக்கிறார்கள்....இந்த மெய்பொருளை கிரமப்படி யார் ஒருவர் 12 வருடங்களில் உட்கொள்கிறாரோ அவருக்கு இந்த வாசி என்ற மூச்சு ஆனாது தானாகவே லயமாகி நாசிக்கு வெளியே ஓடாத நிலையை அடைவாராம் ஐயா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment