Tuesday, December 6, 2022

தேறினவன் எவனும் தன் குருவை போலிருப்பான் ~இயேசு கிறிஸ்து

“தேறினவன் எவனும் தன் குருவை போலிருப்பான் ~இயேசு கிறிஸ்து” இந்த வாசகம் அருமையான புரிதலை உடையது. இதையே பரம்பரை என சொல்லுவர்.  நாம் ஆன்மீகத்தில் இருப்போர் அனாதிகாலம் முதல்லே  குருபரம்பரை எனும் ஒரு கோட்பாட்டில் நிலை நிற்பவர்கள். குரு அமையபெறாதவனுக்கு சிவம் இல்லை என கூட மந்திர தொகுப்புகள் விளம்புகின்றன. உண்மையில் குரு பரம்பரை என்பது ஒரு புரிதலை காலம் காலமாக படர விட்டு கொண்டிருக்கும் ஒரு தன்மை. சித்தர்களை பார்த்தவர்கள் சொல்லுவது என்னவெனில் அவர்கள் ஒன்றோடொன்று ஒத்திருப்பர்கள் என்று தான். சொல்லபடுவது என்னவெனில், ஞான பரம்பரையில் வருகின்றவர்கள் ஒரு புரிதலை தன்னகத்துளே அமையபெற்றிருப்பார் என்பதேயாம். நமது மனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் என உருகொண்டிருக்கும். அது காலம் தேசம் சுற்றுசூழல் என மாறுதலுடனும் வளர்த்தி நிலை பேதம் என ஒவ்வொருவித புரிதல் மனபான்மையுடன் ஒவ்வொருவிதமான நிலைபாட்டுடன் வளர்ந்து இயங்குகின்றது. அதனாலேயே பக்குவ நிலை பேதம், குணபேதம், சுபாவ பேதம், கருத்து பேதம், கோட்பாடு பேதம் என பற்பலவாக ஒழுக்கமின்றி சமூகத்துடன் ஒருவிதத்தில் இயைந்தும் இசையாமலும் இயக்கமுற்று தேடுதலை வளபடுத்தி கொள்கின்றது. ஆனால், குரு பரம்பரை என்பது ஒரு தன்மையை சீடனில் ஊன்றுகிறது, ஒரு பார்வையை சீடனில் விதைகின்றது. இதையே குருரூபம் என்பர். அது அனாதிகாலம் முதல் நிஜதோற்றத்தில் மாறுபாடுகளை அறியாமல் மாற்றத்திற்க்கு வழிகொடுக்காமல் என்றும் அன்றும் இளமையை ஆடையாகவும் புரிதலை ரூபமாகவும் கொண்டு நிற்கின்றது.இதனையே மூர்த்தம் என்பர். இத்தகைய குருரூபத்தை தன்னில் உணர்ந்து அதை போற்றி அதனையே தன் ரூபமாக கொண்டு மலர்பவனே உண்மையில் சீடன்.  அல்லாது நூல் பல கற்றும் பயனில்லை. குருசீட பரம்பரையில் வந்த்வர்களுக்கு மட்டும் இது தோற்றத்துக்கு சுலபமாக மலரும், ஏனையோர் பலகாலம் முயன்றும் அதனை புரிந்து கொள்ள இயலும் என்பதுவும் உண்மை. இதனாலேயே குருவை குரு ரூபத்தின்ை முதற்கண் வணக்கநிலைக்கு வைத்திருகின்றனர். குருரூபம் என சொல்லும் போது சாதாரணமானோர் தூலகுருவின் தூல உடலை மனதில் கருதுவர். ஆனால் அது அங்ஙனம் அன்று. குரு என்பது ஒரு மன ரூபம்... மன கட்டமைப்பு மன சொரூபம். இதனை பெற்றவர் கோமணம் கட்டினவராக இருந்தாலும் கட்டாதவர் ஆக இருந்தாலும் அந்த தன்மை மாறாது. நிச்சலம் குருரூபம்.. மவுனம் கூட... சொல்லாமல் சொல்லி வைக்கபட்ட பொருள், தத்துவம்.. சிரஞ்சீவிதத்துவம் அது. குரு வாழ்க, நற்றாள் துணை. “குரு மரபு”   ========= உங்களுக்கு நீங்களே தான் குரு..  உங்கள் அறிவே உங்கள் குரு... உங்களை உயர்த்துவதும் தாழ்த்துவதும் உங்கள் அறிவு தான். "தன்னை" இழப்பது வித்தையின் சொருபம், அதைத்தான் யுக்தி எனவும், உளவு எனவும், தந்திரம் எனவும் புகல்வர் மெய்ஞானியர். "தன்னை" இழப்பது தான் குருமொழிமவுனமான பாஷை. வித்தையை ஏற்றுகொள்ளுகிறவன் குருவை ஏற்பவனாகிறான்...ஆனல் அவன் குருவுக்கு அடிமையாக இருப்பதில்லை.. .வித்தை பெற்று விட்ட உடனேயே குரு காணாமல் போகிறார்.. அங்கு வித்தை தான் இருக்கும், குரு எனும் தூலம் போய் விடுகின்றது... அது அந்த வித்தை ஒளியாக மலர்கிறது... வித்தையே குருவாகின்றது... இதை விட்டு குருவின் தூலத்தோடு ஒட்டி அவரின் அங்க அடையாலங்களை நோண்டிகிட்டு  வித்தையும் நல்லது என நினைப்பவர்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை..... விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே                     --- அகத்தியர் உயர்ஞானம்... வாழ்க குரு  “திருவடி, வாழ்க சிவபாதம்” நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை   நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்   திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப் போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்   புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார் ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே   அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே. ஆசானு மீசானு மொன்றே யாகும்   அவனவளு மொன்றாகும் அது தானாகும் பேசாத மந்திரமு மிதுவே யாகும்   பேரொளியின் வடிவாகும் பேரு மாகும் நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்   நிலையான ஓங்கார பூட மாகும் ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்   கின்பமுடன் கயிலாச மெய்த லாமே. ஆதியும னாதியாய் அஹமதுமு ஹம்மது சோதியா யேக சுபசொரூபாய் -நீதியாய் இப்புவியில் வந்துயிர்க் ளெல்லவர்க்குந் நிற்பவரை நெஞ்சே நினை. ஆதிபெரும் பொருளே யழிவில் லானே அன்னை யிலுமன் பானபெரி யோனே சோதியிறை யோனே துவக்கமில் லானே துய்யவனே யெல்லாம் படைத்தமிழிப் போனே நீதிபெற வெங்கு நிரம்பிநின் றோனே நிச்சயப் பொருளே நிகரில்லா ஞானமே ஓதியுணர் வல்லார்க்கு முத்தமப் பொருளே உண்மையா யென்மனத் தழுக்கறுப் பாயே.

No comments:

Post a Comment