Wednesday, December 7, 2022
இறைவனின் நியதி
இறைவனின் நியதி
இந்த பிரபஞ்சத்தில் யாராலும் சிந்திக்க முடியாத அறியப்படாத அனாதி ஆகவும் எந்த ஒரு செயல்களும் செய்ய முடியாமல் தனித்தன்மையாக அதன் நெருக்கத்திலும் இருந்து கொண்டிருக்கும் ஆன்மதுகள் தன்னைத்தானே அறியக்கூடியதாக இல்லாத நிலையில் அதனுடைய கூட்டு முயற்சியால் ஒரு கூட்டாக இருந்து ஒரு வினைக்கு எதிர்வினையாக இல்லாமலும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு தனக்கு என்று விடுதலை கிடைக்குமா என்ற ஒரு இடத்திலே இருந்து கொண்டு இருந்துகொண்டு அதனுடைய புழுக்கத்தில் வெளியே வர முயற்சி செய்து அதனால் ஏற்பட்ட இயக்கத்தினுடைய விளைவால் ஒரு முயற்சி உண்டாகி அது முதல் முதலாக தன்முனைப்புடன் வெளியே வருகிறது அந்த வெளியே வந்த அந்த மிகப்பெரிய ஒரு அற்புதமான நிகழ்வை அந்த ஒளி நிகழ்வை இந்த பிரபஞ்சமாக வியாபித்து அந்த ஒளி நிகழ்வுக்கும் இடையில் ஒரு அன்பு மலர்ந்து இந்த பிரபஞ்சமாக பரந்து விரிந்த கோணத்திலே இருக்கின்றது இது கடவுளின் கிருபையால் இந்த உலகம் முழுவதும் ஒளியால் நிரப்பப்பட்டு அந்த ஒளியிலே ஏகப்பட்ட பிரபஞ்சத்தின் அணு துகள் ஜீவதுகளுடன் மலர்ந்து செடியாகும் கொடியாகவும் வித விதமான பூச்சிகளாக 84 வகை யோனி பேதங்கள் ஆகவும் அந்த யோனி பேதத்திலே முழுவளர்ச்சி அடைந்து பல பல விதமான அணுக்களினால் இந்த ஸ்தூலத்தில் பிண்டம் மனிதனாக வியாபித்திருக்க அதற்கு அவன் என்ன புண்ணியம் செய்தேனோ அந்த புண்ணியத்தில் மலர்ந்த இந்த இந்த ஸ்தூலம் மலர்ந்து இந்த பிராகசத்தில் ஒளிர்கின்றது ஒரு அணு வித்தாக வந்த வித்து இந்த மண்ணிலே வந்து அதனுடைய புழுக்கத்திலேயே நினைந்து நினைந்து அன்பாக மலர்ந்து ஒரு முறை வருவதற்கு அந்த இயக்கத்தின் கவலையிலேயே வெளியே வந்து அந்த ஒளியாகிய அணுவாகிய சூரியனை பார்க்கும் பொழுது அந்த ஆனந்தமும் சந்தோஷமும் அதை பார்க்கும் இந்த ஸ்தூலமும் அதை புரிந்த இருவருடைய சந்தோஷமும் எல்லையில்லா ஆனந்தத்தில் நடனமாடுகின்றது இதை மனிதனுடைய மனதால் அதை பரந்துவிரிந்த நோக்கத்துடன் ரசித்துக் கொண்டிருக்கிறான் இந்த பிரபஞ்சம் அனைத்திலும் இருக்கக்கூடிய இருண்ட அணுத் துகள்களே அதன் வாய்ப்பு கடந்து இருக்கக்கூடிய ஒளி ஆகவும் வியாபித்து இங்கே எத்தனையோ இயற்கையின் வாழ்வியல் முறைகளை அனுபவங்களை இந்த பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது ஒவ்வொரு நீதியும் வளர்ந்தும் மறைந்தும் இல்லாமலும் போகின்றன எவ்வளவோ ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான விண்மீன்களும் நட்சத்திரங்களும் வளர்ந்தும் தேய்ந்தும் போகின்றன ஒரு சிறு அணுவுக்கு கூட இயக்கத்தினால் அது உயிர் பெறுமா இந்த வாழ்வு நமக்கு கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் இந்த ஆன்மஜீவிதம் வியாபிக்க ஒரு துளி கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் இந்த பிரபஞ்சத்தில் அது இருந்து கொண்டு தன்னைத்தானே வருத்திக் . கொண்டுள்ளது இதற்குத் துணையாக ஒரு துணை கிடைக்கும் ஒரு இணைப்பு கிடைக்குமோ அந்த இணைப்பே நாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு ஸ்தூலத்தில் இருக்க முடியுமோ என்று கருதிக் கொண்டே இருக்கிறதே ,அது எவ்வளவு பெற கடவுளின் நியதி வளர்ந்தும் தேய்ந்தும் வரக்கூடிய இந்த பிரபஞ்சத்தில் இதை அறிந்து கொள்ளக்கூடிய அறிவாகிய நம்முடைய அறிவு மனமாக இருக்க கூடிய இந்த மனித குலத்திலேயே இருக்கக்கூடிய மாணிக்கம் ஆனால் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள எத்தனை கோடி தவங்கள் செய்தாலும் கிடைக்குமோ ஒரு பூச்சிக்கும் எத்தனை அணுக்கள் வரவேண்டியுள்ளது எத்தனை விதமான சிதைவுகள் உண்டாக வேண்டியுள்ளது இந்த இயற்கையின் சுழற்சி முறையில் வளர்ந்தோம் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றது ஆனால் மனிதனுக்கோ மனதையும் கொடுத்து அவனுடைய இந்திரியங்களின் கொடுத்து அவன் அறிவுக்கு அறிவாகி இருக்கக் கூடியதை விட்டுவிட்டு இந்திரியங்கள் உறவாக மனம் செய்த போக்கில் நடந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இச்சையைத் தீர்த்துக் கொண்டோம் சுற்றித் திரிந்தான் அவனுக்கு இந்த அறிவு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது அவனுக்குள்ளே இருக்கும் அற்புதமான மலர்வது ஒரு காலமும் நிகழாமல் அவன் சுத்தி திரிந்து கொண்டே இருக்கின்றான் ஆன்மிகத்தில் ஒரு சிறு சிறு நிகழ்வுகளும் அவருடைய ஒரு ஒரு நிகழ்வும் அவனை மாற்றத்திற்கு உட்பட்டது அந்த மாற்றம் என்றும் அதுவரை அவனுக்குள் மலராத வரை அவனுடைய ஆன்மீகம் வெறும் காவி உடை உடுத்தி சுத்தி திரிந்து கொண்டு இருக்க வேண்டும் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டும் இருக்க வேண்டும் தந்தை வழி தெரியாமல் தாய் வழி தெரிந்து என்ன புண்ணியம் நினைந்து நினைந்து தொழ தெரியாமல் அவன் அறிய வேண்டியதை அறியாமல் இருந்தால் அவனுக்கு என்ன புண்ணியம் வந்த வழியும் தெரியவில்லை போகின்ற வழியும் தெரியவில்லை இப்படிப்பட்ட அவனுக்கு ஊசி முனை வாசல் தெரியவே தெரியாது இந்த பிரபஞ்சத்தின் ஸ்தூலமாக வந்த நீ உனக்கு இந்த பிரபஞ்சம் ஒரு வாய்ப்பை கொடுக்கின்றது எவ்வளவு பெரிய மகத்தான உன்னதமான ஒரு செயல் அந்த செயல் நிகழாத வரை நீ இந்த பிரபஞ்சத்தில் ஜிவிப்பாயா உனக்கு இந்த வகை வகையான கண்கவரும் இந்த உலகத்தை நீ ரசிப்பாயா ஒரு சிறு கொசு முதல் நீ பார்க்க முடியுமா பார்க்கவே முடியாது என்றென்றும் நீ அந்த தன்முனைப்பு இல்லாத ஒரு ஜடமாக தான் இருந்திருப்பார் இந்த ஜடமாக இருந்தாயே உனக்கு இவ்ளோ பெரிய கருணையுடன் இறைவன் உனக்கு இந்த பரிசை கொடுத்திருக்கின்றான் அந்த பரிசைப் பெற்ற நீ நீ இன்னும் ஏமாந்து கொண்டே இருக்கிறாய் உன்னை நீ திரும்பிப் பார்க்காமல் ஏதோ ஒரு விஷயத்தை தேடிக்கொண்டு சுற்றிக்கொண்டும் இருக்கின்றாயே இருக்கின்றாயே
இந்த பிரபஞ்ச பால்வீதியில் பிறக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் அவன் அருளாலே நடக்கின்றது உன் சிறு முயற்சியாலேயே நன்மையும் தீமையும் நடக்கின்றது ஒரு மழை பொழிந்தாலும் அவன் இல்லாமல் இந்த மழை கிடையாது ஒரு உயிர் வந்தாலும் அவன் இல்லாமல் கிடையாது ஒரு அணு இல்லாமல் எந்த அசைவும் இல்லை இதுவே இறைவனின் நிலையாக இருக்கின்றது ஆதியில் வந்தவன் அந்த ஆவியை அறிவிக்காமலேயே சென்றுவிட்டார் நீ வந்த வழியை அறிந்து கொள்ள வேண்டும் ஆதி ஆதிக்கு முன்னால் இருந்த அன்பு மயமான கோலத்திலேயே இருக்கின்றதே அது ஒரு நாளும் நீ அறிந்து கொள்ள மாட்டாயா என்ற ஏக்கத்திலேயே இருந்து கொண்டிருக்கின்றான்
நீ இந்த பூமியில் வந்து தஞ்சம் அடைவதற்கு நீ என்ன புண்ணியம் செய்தாய் உன்னை உன்னை அனுதினமும் தொழுது நிற்கின்ற இந்த சக்தியாகிய இந்த ஜீவன் உன்னிடத்தில் இருந்தால் தானே நீ இந்த உலகத்தில் ஜீவிக்க முடியும் இந்த ஜீவனை பெறுவதற்கு நீ எத்தனை கோடி காலம் தவம் இருந்தாலும் இந்த ஜீவன் உன் அன்புக்கு ஈடாகுமா அந்த ஜீவனை நீ அறிந்து கொள்ள முடியுமா இந்த ஜீவன் உனக்குள் பரிணமிக்க நீ என்ன புண்ணியம் செய்து இருப்பாய் இந்த ஜீவன் இருந்ததனால் பிறந்த உன் அறிவு மலர்கின்றது உன் மனம் மரணமடைந்தது இந்த மலரும் தன்மையால் நீ ஆனந்தத்தில் மூழ்கின்றாய் அன்பை அன்பே சிவமாகும் இருக்கின்றாய் உன் இந்த ஒரு வாய்ப்பு உனக்கு இந்த சிவன் கொடுத்த அதனால் அந்த சிவன் ஆகிய இந்த அனு அதனாலே உன் தாயின் கருவறைக்குள் நீ உள்புகுந்தா யே உள்புகுந்து அந்த பிண்டமாக மலர்ந்து அந்த நாடித்துடிப்பு டன் முதல் நாடியாக உருவாகி மலர்ந்து மலர்ந்து கண் காது கை கால் இருதயம் மூக்கு என எத்தனை பரிணாமங்கள் எடுத்து வந்தாயே ஆதியிலே இந்த பரிணாமங்கள் மனித வளர்ச்சிக்கு ஒரு தனித் தனி ஒரு ஆளாக தனித்தனி மனிதராகவும் எத்தனை கோலங்களாக மனிதர்களாக நீ பிறவி எடுத்து இருந்தாய் இந்த மனித கோலமும் எத்தனை சமூகமும் அறிந்து கொண்டு அறிந்து கொண்டு இந்த பல உருமாற்றங்கள் அடைந்து ஊறிய அறிவு விருத்தியாகி இன்று இந்த மானிடச் சட்டை போட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் இதற்கு ஈடு செய்யும் இந்த பிரபஞ்சம் இந்த உன் கருணையே கருணை இந்த மனிதப் பிறப்பில் உனக்கு ஆண் பெண் என்றும் இந்த ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வைத்து படைத்த இறைவனுக்கு ஒரு ஒரு சப்தம் கொடுத்து அவளுக்குள்ளே ஒரு ஆனந்தத்தையும் கொடுத்து ஒரு மகிழ்வையும் கொடுத்து இருக்கின்றார் படைத்துள்ளான் உன்னை நீ அறிவதற்கு உன் ஜீவ அறிவு இருக்கு உனக்கு நீயே அறிவுபூர்வமாகவும் விடுகின்றாய் ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அமைத்த அருட்பெருஞ் ஜோதி அந்த ஜோதி அனுபவமாகவும் தேஜோமய வாழும் ஆண்மகன் உருவாகும் உனக்குள்ளே இருக்கின்றது ஆனால் உனக்குள்ளே அந்த அணுவையும் ஒளியையும் காண முடியுமா உன் உடலிலே உன்னால் ஆன்மாவை காணமுடியுமா எக்கோடி காலத்துக்கும் உன்னால் காணமுடியாது இயற்கையின் சுழற்சியில் இந்த மனித உடல் மண்ணாகி தான் போகுமே தவிர மண் போன்றுதான் இருக்கும் அதனுல் உறவிலும் ஸ்பரிசம் காணமுடியுமா
இந்தசுழற்ச்சியின் காலச்சக்கரம் இந்த காலச்சக்கரத்தில் உன் கர்மா செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும் இது நியதி அணு முதல் அனைத்தும் தன் தன் வேலையை செய்து கொண்டு வருகின்றது இந்த கர்மா உன்னை சுற்றிக் கொண்டே தான் இருக்கும் இருக்கின்றோம் உண்மை உழைப்பவனுக்கு உயர்வாகவும் இருக்கும் இந்த உண்மையை ஒழுக்கமாக இருக்கின்ற அவனுக்கு நல்லது நல்லவனாகவும் தீயவனாகவும் அமைத்துக் கொண்டே இந்தப் பிரபஞ்சம் தோற்றுவித்து உன்னை ஆட்டுவித்து கொண்டிருக்கும் உன்னுடைய இந்த பிறவியிலேயே உன்னுடைய உன்னுடைய ஒரு சிறு அனுப்புதல் உனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அந்த அணுவிலே ஆதியிலே வினையின் செயல்பாடாக இருந்தால் உனக்கு இந்தப் பிறவி விட்டு அடுத்து பிரறவி வைப்பதற்கு நீ செய்த புண்ணியம் பலனாக இருக்கும் அந்த ஒரு வாய்ப்பு கிடைக்குமோ என்று ஏங்கும் இந்த அணுக்களுக்கு நீ நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் நீ அவற்றை தொழுது கொண்டே இருக்கவேண்டும் ஸ்தோத்தரி த்துக் கொண்டே இருக்க வேண்டும் ஒரு நாள் ஒரு காலம் கனிந்து உன் வாழ்வில் மலர்ச்சி உண்டாகும் வரை இந்த பிறவி வாய்ப்பு உனக்குக் கிடைக்கும் வரை நீ காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் அன்பே உருவான இந்த இதயம் இதயத்தின் பால் நீ தொழுது கொண்டிருந்தால் நீ இந்த ஒளிமயமான இந்த விண்ணிலிருந்து வந்தவன் நீ அதை அறிந்து கொண்டு மண்ணிலிருந்து விண்ணுக்கும் பயணப்படுவாய் இல்லை என்றால் இறந்தவனை பார்த்துக் கொண்டிருப்பாய் இந்த விண்ணிற்கும் மண்ணிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால் நீ கோடி காலத்துக்கும் அந்த மனிதத்தின் சடலத்தை மீட்டு பாராமல் இந்த ஸ்தூல வாழ்க்கையை நினைத்து பாராமல் என்றென்றும் அன்புமயமான இந்த ஜோதிமயமான அருட்பெருஞ்ஜோதி நீ மிகவும் நீண்டு கொண்டே இருந்து பல கோடி காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அன்பு மயமான துருவமாக கூடிய அந்த இறைவனின் ஒளிமயமான பாதைக்கு நுழைந்துகொண்டு என்றும் இந்த ஒளி பாதையிலேயே பேசிக்கொண்டிருப்பாய்
ஒரு அணுவின் வித்து வந்த வித்து மலர்வதற்கு எத்தனை கோடி தவமிருந்து இருக்க வேண்டும் அந்த வித்து இந்த இந்த பூமியில் வாழ்ந்து அது மலர்வதற்கு அது எங்கிய ஏக்கம் அதனுடைய இயக்கத்தில் வந்து ஒரு மலர் மலர்ந்து ஒரு அரும்பு வெளியே வந்து அது வளர்ந்து வரும் பொழுது செடியாக அதனுடைய மலராக அதனுடைய காயாக அந்த அதே புசிப்பதற்கு இந்த மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இதை புசித்தால் தான் மனிதன் இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான் இல்லையா முதல் வித்து இல்லையேல் அவனுக்கு இந்த பூவுலகில் உணவும் கிடையாது உணவு படைக்க வைத்த பிறகே இறைவன் மனிதனை படைத்தான் உணவு இல்லையேல் மனிதன் இல்லை அவன் இந்த பிரபஞ்சத்தில் ஜீவிக்க முடியாது நீ எத்தனை கோடி தவங்கள் செய்தாலும் ஜெப தவங்கள் செய்தாலும் உன்னை படைத்தவனை நீ அறியா விடில் நீ பாடுபட்ட மனத்தினாலே இந்திரியங்களின் ஊடாக நீ பயணித்துக் கொண்டு இருப்பாய் உன் வாழ்வில் வசந்தம் உண்டாகும் வசந்தத்தை ஏற்படுத்தியது இந்த முதல் அனைவரின் பேரொளி பற்றிக்கொண்டு ஆனந்தத்தில் மூழ்கிக் கொண்டு இருப்பாய் ஆனால் துன்பமும் இன்பமும் மாறிக்கொண்டே வரும் இது உன் கர்ம வினையா நீ செய்யும் செயலில் இருந்து கொண்டே இருக்கின்றது நீ ஒரு பொருளைத் தொட்டாலும் அது கருணாநிதிதான் அதை பார்த்தாலும் கருணைதான் அதுக்குள்ளே ஊடுருவி நிற்கும் கர்மத்தை நீ காலாகாலத்துக்கும் செய்து கொண்டு இருக்கிறாய் இந்த கர்மத்தில் நீ மீண்டு வர வேண்டுமென்றால் நீ எந்த உறுதியான இறைவனின் பாதையை இறைவனின் திருவடியைப் பற்றிக் கொண்டு இருந்தால் தான் நீ இந்த ஒளிமயமன பாதைக்கு செல்ல வேண்டும்
சூரியன் முதல் சந்திரன் வரை அது அது தன்னுடைய அணுக்களால் நிரம்பியது அது அதனுடைய தன் தன் வேலைகளை செய்து கொண்டே இருக்கின்றது தினமும் ஓயாமல் உனக்கு ஒரு செயலை செய்து கொண்டே இருக்கின்றது அந்த செயல் இப்படித்தான் நீயும் இந்த ஸ்தலத்தில் செய்து கொண்டிருக்கின்றாய் அதை தெரிந்து கொள்ளாமல் நீ சுற்றிக் கொண்டு இருக்கின்றாய் ஒரு செடியாக இருக்கட்டும் ஒரு காய் காய்ப்பதற்கு ஒரு வாய்ப்பு, கொடுக்காத இந்த பிரபஞ்சம் நமக்கு வாய்ப்பு கொடுக்காதா என்று ஒரு செடியின் ஏக்கமும் இருக்கின்றது ஒரு பழுவிற்கு இன்னும் ஒரு நாள் இரண்டு நாள் இன்னும் அதிக காலம் நாம் வாழ்வோம் ஏக்கமும் அதற்கு இருக்கின்றது ஆனால் ஆனால் இந்த மனிதனுக்கு ஆன்மீகத்தில் அறிவுப்பசி தான் இருக்கிறதே தவிர அந்த அறிவுப்பசி என்னவென்றே புரியாமல் தன்னுடைய இந்த மரணத்தை நீட்டிப்பதற்கு இந்த மரணத்தை வெல்வதற்கு அவன் உடலைப் பேணிக் காக்கின்றான் ஆனால் இந்த உடலில் ஒன்றுமே இல்லையே உடல் இருந்தால் தான் இருக்கும் ஆனால் உடலை தாங்கிய சூட்சுமமான விஷயங்களை அவன் புரிந்து கொண்டால் இந்த உடல் அவனுக்கு அவசியப்படாது அவன் ஒளியை புரிந்து கொண்டால் ஒளியை அறிந்து கொண்டால் ஒளியை பிரவேசித்தவனாவான் அவனுக்கு இந்த உலகத்தில் எதற்குமே பயப்படாத அவனுக்கு மரண பயமில்லை மரணத்தை வென்றவன் ஆவான்
ஒரு இடத்தில் மழை பெய்கின்றது அந்த மழை அந்த மழை பெய்து ஒரு இரும்புக் கம்பி அந்த இரும்புக் கம்பி அந்த மழைநீரால் தேங்கி தேங்கி தேங்கி அது துருப்பிடிக்கின்றது துருப்பிடித்து அந்த இரும்பு காலப் போக்கில் உருக்குலைந்து போகின்றது அந்த உருக்குலைந்து போன இரும்புகள் என்னவாகிறது அதுவும் ஒரு இயற்கை சுழற்சியில் சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது ஒரு இரும்புக் கம்பிக்கு அந்த சுழற்சி நிலை என்றால் நீ இந்த அணுயவில் இருந்து இந்த உலகத்தில் ஒளியில் இருந்து வந்தவன் ஆயிற்று உனக்கு ஒரு இயற்கை சுழற்சி கிடைக்காமலா போகப் போகின்றது ஒளி பிரபஞ்ச இயற்கை சுழற்சியின் பரிமாண வளர்ச்சியில் நீ வளர்ந்து கொண்டு தான் இருப்பாய் நீ வளர்ந்து கொண்டும் தேய்ந்து கொண்டும் மாறி மாறிப் பிறந்து கொண்டுதான் இருப்பாய் உன் ஆன்மா என்றும் நிலையானதாக இருக்கின்றது இந்த ஆன்மாவை அறிய எவராலும் முடியாது எவர் கையிலும் அகப்படாது எவர் கண்ணுக்கும் தெரியாது இந்த ஆன்மா இங்கிருந்து இங்கிருந்து வேறு ஒரு உடலை தேர்ந்தெடுக்கும் இங்கிருந்து அஸ்ட்ரோ ட்ராவலிங் என்று சொல்லக்கூடிய இந்த ஆன்மா வேறு ஒரு உருவத்தில் நிற்கும் என்று நாம் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு இந்த மனம் செயல்படும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது ஆன்மாவிற்கு அழிவில்லை ஆனால் உன்னுடைய உடல் இந்த ஜீவனுக்கு என்றும் அறிந்து கொண்டே இருக்கின்றது இந்த அணுக்கள் சிதைந்து கொண்டே இருக்கின்றது இது இந்த பிரபஞ்சத்தின் இறைவனின் நியதி இதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது இந்த எவரும் என்பது ஒரு சொல் தானே தவிர அந்த சொல்லுக்கு ஆயிரக்கணக்கான விஷயங்கள் உள்ளடங்கி இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இந்த ஒரு வாய்ப்பினால் அற்புதமான ஒரு வாய்ப்பினால் கிடைக்கப்பட்ட இந்த மனித குலம் இதன் உபயோகத்தால் நாம் இந்த பிராணனை ஒழுங்குபடுத்தி இதனால் அறிவு விருத்தியாகி தோத்திரங்கள் செய்து என்றும் தொழுது கொண்டே இருப்பேன் ஆனால் உன்னுடைய அறிவு ஆட்சிக்கு வரும் உன்னுடைய அறிவு வளர்ச்சிக்கு வர உன்னை நாடி வந்த ஒரு குரு உனக்குள்ளே இருந்த ஆன்மீக குரு உன்னை ஒரு ஒரு படி நிலையையும் ஏற்றி வைப்பார் உன்னுடைய ஒழுக்கமும் உடைய ஆன்மீக ஒழுக்க நெறியும் இந்த இறைவன் அன்பால் உன்னை இழுத்துக் கொண்டு இறைவன் உனக்கு அருளை பரிபூரணமாக கொடுத்துக்கொண்டே இருப்பார் இது இந்த இயற்கையின் பிரபஞ்சத்தின் நீயே நீ இது யாராலும் மாற்ற முடியாது யாராலும் மாற்ற முடியாது
நீ உனக்குள்ளேயே ஸ்தோத்திரம் செய்வதனால் உன்னுடைய மனம் சீர் நிலைபெற்று உனக்குள்ளே அறிவு மலரும் இந்த அறிவே இயற்கையின் உருவமாகவும் இருக்கின்றது அன்பே அறிவே உடனான அருட்பெருஞ்ஜோதியே உனக்குள் தீபமாக ஒளியாகவும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது இதனை அறிந்து செயல்பட்டு இந்த கடவுள் தன்மையை இறைத் தன்மையை உணர்ந்து நீ கோடான கோடி வாழ்ந்துகொண்டிருக்கும் உன் அன்புக்கு நன்றி செலுத்துவாயாக
இந்த இறைவனால் படைக்கப்பட்டது அனைத்திற்கும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது அது மரணமாக இருந்தாலும் ஜனனமாக இருந்தாலும் ஒரு மீன் குஞ்சு வளர்ந்து கொண்டிருக்கின்றது அந்த மீன் குஞ்சு அடி ஆழத்திலும் கீழுமாக ஆனந்தமாகவும் நீந்திக் கொண்டிருக்கின்றது தன்னுடைய உறவினர்களுடன் ஒருநாள் அந்த மீன் குஞ்சு மேலே சிறுசிறு மழைத்துளிகள் பெய்து கொண்டிருக்கின்றது ஆனந்தமாக இருக்கின்றதே அப்படி என்று நினைத்து மேலே வருகின்றது அப்பொழுது அங்கு ஒரு நீர் மீன் கொத்தி பறவை காத்துக்கொண்டிருக்கிறது அந்த மீன் கொத்தி பறவை அந்த மீனை கவ்விக் கொண்டு சென்று விடுவது ஒரு மீனுக்கு ஜனனம் எப்படி உருவானதோ அதனுடைய மரணமும் நீதியாகவும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது அதேபோல் அந்த மீன் கொத்தி பறவை ஒரு பொந்தினுள் மரத்தில் இருக்கும் பொழுது அது மற்றொன்றிர்க்கு இறையாக இருக்கின்றது அதுவும் ஒரு வாய்ப்பாக அமைந்து கொண்டிருக்கின்றது இப்படி இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றிற்கும் ஒரு வாய்ப்பு பிரகாசமாகவும் அமைகின்றது இருளாகவும் அமைகின்றது இந்த ஒளியும் இருளும் நிறைந்த வாழ்க்கையே பிரபஞ்சமாக இருக்கின்றது
நாம் இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு நான் நான் என்று ஏக குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றது ஆனால் படைத்தவன் எவனோ இது தன்னிலை மறந்து நான் நான் என்று ஓலமிட்டு கொண்டிருக்கின்றது
இன்னும் தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment