Tuesday, December 6, 2022
பிராணன் எது அபானன் எது
பிராணன் எது அபானன் எது
பிராணன் எது அபானன் எதுண்ணு கூட சரியாக தெரியாமல் வாசி யோக வகுப்புகள் நடத்துறவங்கள பார்க்கிறோம்.கேட்டால் உள்ள இருக்கிறது பிராணன் ,வெளிய போறது அபானன்ண்ணு விளக்கம் சொல்லுவான்.பிராணனும் வெளிய போகல அபானனும் வெளிய போகலங்கிறத எப்ப புரிஞ்சுக்க போறானோ தெரியல.
இருப்பது தானான தன்னிலை அன்றி வேறில்லை, தானான தன்னிலையின் அசைவே பிரான-அபானன் என சொல்லபடுகிறது. அசைவை பல ஞானிகள் உசும்புதல் எனவும் சொல்லியிருப்பர். பல ஞானிகள் ‘சித்த விருத்தி’ என சொல்லியிருப்பர்.. உள்ளுக்குள்ளாக சிதாகாசத்தில் ஏற்படும் இந்த அசைவுதலே பிராண -அபானனாகவும், அசையும் பொருளே மனமாகவும் இரு கூறுபட்டு பிரபஞ்சமாக அனுபவ மாலையாகின்றது.
உள்ளுக்குள் இருக்கும் வெளி தான் சிதாகாசம், அதாவது நுரையீரலின் அடி மட்டம் முதல் அண்ணாக்கின் மேல் மட்டம் வரை வியாபித்திருக்கும் வெற்றிடம். இங்கு தான் பிரான அபான அசைவு இயக்கமுறுகிறது. கருப்பையில் இருக்கும் போது உடலோ உறுப்புகளோ உருவாகி வியா[இக்கும் முன்னமே இருக்கும் சின்ன வெற்றிடமே வளர வளர பெரிய வெற்றிடமாகி நீண்டு தொண்டைகுழி ஊடாக மேலும் கீழும் அசைகின்றது.இந்த அசைவினால் வெளி காற்றானது உள்ளும் புறமும் சென்று வருகின்றது.அதனால் உடலுக்கு தேவையான மூலகங்கள் இரத்தத்துக்கு கிடைக்கவும் , அசுத்த மூலகங்கள் வெளியேறவும் செய்கின்றன. இப்படியான ஆக்ஸிஜன் கார்பண்டை ஆக்ஸைட் இவற்றை தான் பிராண அபானன் என பல முற்றிய ஞானிகள் என சொல்லப்படுவோரும் உண்மை தெரியாமல் மெய் என விளக்கி சென்றிருக்கின்றனர்
Thavayagi Gnana Deva Bhrathi இதுவும் முழுமைபெறாத பிராண அபாண அபாண்ட செய்தி!பிராணன்,அபாணன் என்பதை கருத்துவடிவில் கொடுக்கமுடியாது!இது முற்றிலும் நாடிகள் சம்மந்தப்பட்டவை!பிராணனையும், அபாணனையும் இணைக்கவேண்டும்!பிராணன் ஆக்சிசன் என்றால் அதை எரித்து சக்தியாக பதியவைப்பதும், கழிவுகளை வெளித்தள்ளுவதும் அபாணன். இதுமட்டுமல்ல செல்களில் பிராணன் தங்க துணைசெய்வது அபாணன்!இதற்குமேல் விரிவாக உணர்த்தமுடியாமல் சித்தர்கள் பரிபாடையாக ஆரியன் நல்லன் குதிரை இரண்டு உள்ளன!வீசி பிடிக்கும் விரகரிவாளர் இல்லை!கூரியநாதன் குருவின் அருள் பெற்றால், வாரிபிடிக்க வசப்படும் தானே!என்கிறது திருமந்திரம்!
தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்வது தர்மம்!ஒரு தவறை சுட்டிகாட்டி தனது மேதாவிதனத்தையும் குழப்பமாகவே பதிவிடுவது, எந்த மாற்றத்தையும் தராது!பிராண,அபாண விவகாரம் வார்த்தையால் விவரிக்க முடியாது என்பது அனைத்து சித்தர்களின் முடிவு!யாமும் ஒரு வாசியோகி தான்!36வருடமாக கடும் பிரயத்தனம் செய்கிறோம்!அவ்வாறு அறிந்ததை!எவ்வாறு ஒருவருக்கு இசைவிப்பது ?என்ற குழப்பம் உள்ளத
Panja Bootha Seenivasan "உறையான கருப்பையில் சுக்கில மாய்ப்பாய,
உத்தமனே சுரோணிதந்தானுறைந்து கொள்ளும்,
கறையாப் பாய்தவழி தமருபோல,,
"முனையறுகு னுனிபனிபோல்
சுரோணிதத்தில் சேர்ந்து,
தாக்கவே சுரோணிதந்திரண்டு
தன்ரூபமாகித்"
தமா்வாசல் தனைமூடும் வாயுதானும்".
என்பதீனால் சுக்கில சுரோணிதம் திரணகடு,தன்
ரூபமாகி அங்கு உண்டான தமர்
வாசல் வாயுவால் மூடப்படும்
என அறிகிறோம்.
வேர்கவே வேலிபோல் வளைந்து காக்கும்",என்பதீனாலும்,
விளங்குகின்ற அபானவாயு
வெளியில் நிற்கும்,விந்துவுடன்
பிராணவாயு பினங்களாகும்,
கலங்குகான்ற ஊதானனது
கருவளர்க்கும் கருவதற்குள்வினை மூன்றும்
கலக்கும் பாரு"
என்பதீனாலும் மேலே கூறிய
வீவரங்கள் தெளிவாகும்
Hseija Ed Rian ஐயா...ஒருதடவை சொல்லுவது என்ன என்பது சற்று ஆழமாக உற்று கவனியுங்கல். ”முதல் உட்செல்வது பிராணன் எனவும் வெளிச் செல்வதை அபாணன் எனவும் கொண்டு” என சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா?. இந்த கூற்று தான் தவறு என்கிறேன். பிரானன் முதலிலும் உட்புகாது கடைசியிலும் உட்புகாது. ஒரு குழந்தை பிறந்த உடன் முதலில் உட்புகும் சுவாசத்துக்கு அபானன் என பெயர்.குக்ஷந்தை முதன்முதலில் வெளிவிடும் சுவாசம் பிரானன்.பிராணன் எப்போதும் வெளியே தான் போய் கொண்டிருக்கும்
Hseija Ed Rian Kumar Venkitasamy பிராணன் வேறு உயிர் வேறு ஜீ.கருவில் இருக்கும் குழந்தைக்கு உயிர் இருக்கும் ஆனால் பிரானன் இருக்காது
Hseija Ed Rian பிறந்த பின் உருவாகும் நேர் - எதிர் அசைவுகளுக்கு பிராண அபான என பெயர்.வெளி போகும் சுவாசம் பிரானன், உட்புகும் சுவாசம் அபானன்
Hseija Ed Rian தன்னில் தானாகி விளங்கும் உயிரை அறியாவிடில் பிராணன் அபானன் என பிரபஞ்ச காற்றை மூக்கு வழி இழுத்துகிட்டு கடைசியில் சாவு தான் வரும்.மூன்றாம் நாள் உடல் நாறும்,அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் ஜீ
Hseija Ed Rian ஐந்து இந்திரியங்களின் ஊடாக செய்யாத ஒரு அறிவு இருக்கின்றது ஜீ.அதை தான் ஆறாம் அறிவு என்பார்கள் ஞானிகள். பஞ்ச இந்திரிய அறிவுகள் பாழானவை. பிரயோஜன படாதவை.. பஞ்ச இந்திரியங்கள் கொண்டு செய்யும் எந்த செயலை ஞானத்தை காட்டாது.ஆகையினால் பஞ்ச இந்திரியம் கடந்து மனிதன் மட்டும் செயலாற்றகூடிய வித்தையினை கண்டுனருங்கள். அதுவே மெய் சாதனம்.
Hseija Ed Rian ஜீவனின் வழி செயலாற்ற வேண்டும் எனில் முதலில் நீங்கள் ஜீவனை அறிந்திருக்க வேண்டும். ஜீவனை தெரியாமல், இருப்பதை அறியாமல் இருப்புக்கு அப்பால் உள்ள பிரம்மத்தை விலக்கி பயனென்னவாம்
Hseija Ed Rian பஞ்ச இந்திரியங்கள் வழி கடந்தால் நீங்கள் பயணிக்கும் பாதை இந்திரிய பாதை என உணருங்கள். முதலில் குரு அறிவிக்கும் பாதை என்பது ஜீவ பாதை
Hseija Ed Rian ஆனால் ஜீவன் எது,எங்கே என்பதில் தான் கானாதவருக்கு சந்தேகம். பிரானன் அபானன் ஜீவன் என பிதற்றல் இருக்கும்.தெரிந்தவருக்கு குழப்பமே இருக்காது
Hseija Ed Rian ஜீவனை கண்டுவிட்டால், அது நாம் சொல்வது அவன் சொல்வது என பேதம் இருக்காது. உங்களில் என்னில் அனைவரிடத்திலும் இருக்கும் ஜீவனை காட்டித்டருபவரே உண்மையான குரு. அப்படி காணவில்லையெனில் இந்த சென்மத்தில் ஜீவன் தரிசனைக்கு வராது.எந்த பிராணாயாமம் பண்ணினாலும் ஜீவன் அறிவுக்கு வராது. குருவின் திருப்பாதமே சரனாகதி
Hseija Ed Rian பிரானாயாமங்கள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகள், மெய்யறிவு என்பது பஞ்ச இந்திரியம் கடந்த அறிவு.சாதாரண உபதேச சாதனைகள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகளே.இவை கறிக்கு ஆகாது.
Hseija Ed Rian இல்லை ஐயா..எனது பதிவு உறுதி படுத்தி எனக்கு ஒன்றும் ஆகபோவதில்லை. நீங்கள் சம்மதிப்பதினால் எனக்கு ஒன்று அதிகம் கிடைக்க போவதில்லை, நீங்கள் மறுத்துவிடாலும் எனக்கு ஒன்று ஆகபோவதுமில்லை. எனது கருத்தை இங்கே பதிகிரேன் என்றால் அது அன்பினாலே தான். இல்லையெனில் இவ்வலவும் இங்கு பதியவே மாட்டேன். எனக்கு என் பாடு போதும். நீங்கள் பலகாலம் ஆன்மீக வாழ்க்கையில் உள்ளீர்கள் என அறிந்திருக்கின்றேன், ஆனால் உலக நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு சாதனைகளும் பிரயோசனமற்றவை என உனர்ந்தீர்கலானால் அடுத்த வாசல் திறக்கும்.சாலை ஆண்டவர் சொல்லுவது பொன்ற ‘அகர வாசல்’’. இல்லையெனில் பிரானாயாம தியான நிஷ்ட்டைகள் தான் பெரிய வித்தைகள் என ஏமாந்து வாழ்வையே இழந்து விடுவோம். சொல்லபடும் எந்த சாதனைகளும் உயிரை காட்டாது. இவை அனைத்தும் மனம் பிரானன் என்பனவற்றிலேயே முடிந்து விடும். ஜீவனை எட்டாது.ஏனெனில் ஜீவனை காட்டும் வித்தையானது உலக நடைமுறையில் பரசியமாக கிடையாது.ஆனால் நிலவி வருகின்றது என்பது நிச்சயம் உண்மை
Hseija Ed Rian இந்திரியங்கள் வழி பிரயானம் செய்தால் மனத்தை அடைவீர்கள், பிரான அபானன் வழி சென்றீர்களானால் சுழுமுனையை அடைவீர்கல்..ஆனால் ஜீவவாசலை அடைய முடியாது.ஜீவனுக்கு போகும் வாசல் ரெம்ப ரெம்ப சின்னது ஜீ.அதாவது சின்னது என்றால் பொருள் ரெம்ப நுணுக்கமானது என்பதாகும்.அறிவுக்கு வருவது ரெம்ப அரிது.குருவே சரனம்
Hseija Ed Rian என்னத்த சொல்ல ஜீ. சொல்லி சொல்லி முடியாது தான் சொல்லாமலே பல காலம் இருந்து விட்டேன். புரிதல் இல்லாதவர்களுக்கு ஆயிரம் காலம் சொன்னாலும் குரு தொட்டு காட்டிய எல்லை சொல்லி புரிய வைப்பது மெத்தக்கடினம் ஜீ. அது தான் உண்மை. வித்தை என்பது லட்சியம் கொண்டது.லட்சியத்தை காணாது பிரயானம் செய்வது தான் உலக நடைமுறை. முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என ஒரு ஆசான் நமுக்கு உணர்த்த வேண்டும்.இலக்கை கண்டு கொண்ட பிறகு தான் பிரயானம் ஆரம்பமாகும். உலக நடைமுறை என்பது எதாவது ஒரு வித்தையை செய்துகொண்டிரு நீ அங்கே இறைவனை அடைவாய் என சொல்லி விட்டு போய் விடுவார்கள்.இதை தான் கூழ் முட்டைத்தனம் என்பது. உண்மையில் குரு பரம்பரையில் முதலி ஒரு விலக்கை ஏற்றி வைப்பார்கள்.அது தான் இலக்கு.அதாவது நமது லட்சியத்தை அன்றே காட்டித்தருவார்கள்.அறிவுக்கு அறிவாக கோடி சூரிய பிரகாசத்தை உபதேச சமயத்திலேயே காட்டி விடுவார்கள்.அதை பிரயானம் செய்து அடைவது சீடனின் கடமை
Hseija Ed Rian நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க...”குளத்தோடு முகம் திருப்புவன் குண்டி தான் நாறும்”ண்ணு. ஏகம் அனேகம் அத்வைதம் சித்தாந்தம் என கதை எல்லாம் காலன் வந்தால் பதபதைத்து வெளியே சாடும், ஒண்ணும் ரெண்டும் வளியுடன் வெளியேறும், கண்ணை சுருட்டி காது அனல் கொண்டு தகிக்கும். மூச்சு திக்குமுக்காடி விம்மும். பொருமி அபானன் மேல் வாங்கும்.பிரானன் தகிக்கும். அப்போது ஏகம் கூகம்ண்ணு கத்துதற்க்கு நா கூட எழும்பாது. தொண்டை சுருக்கிட்டு அலறும், ஆனால் அலறல் வெளி கேக்காது. உனர்ந்த உருவிட்ட மந்திர தந்திர சாத்திர குப்பைகள் எல்லாம் நினைவுக்கே வராது.ஜாக்கிரதை.ஒரு தலைமுறை கூடவே இருக்கும் தன்னினைவை தானறிந்து தன்னிலே தானாகிய உயிரை பழகி உயிரடக்கம் ஆகுதல் நலம்.ஜீவ தண்ணீரை விட்டு விலகி செல்பவ்னுக்கு நாற்றம் தவிர்க்க முடியாததாகி விடும் என்பது நிச்சயம்
Hseija Ed Rian ஏராலம் ஆன்மீகவாதிகள் ஒரு ஜென்மம் முழுதும் கதை பேசி நம்பி ஏமாந்து கடைசியில் வலிய உனர்ந்தே போயிருக்கின்றனர், சீடர்கள் கூட சிரிக்கும் அளவுக்கு கதி கெட்டு அதோகதியாகி இருக்கின்றனர். சொல்லும் போது பெருசாக சொல்லுவார்கள், அனுபவத்தில் பூச்சியம், தெக்கும் தெரியாது வடக்கும் தெரியாது பெரிய மடாதிபதிகளாக வலம் வருவார்கள்.கடைசியில் தலை கூட வெளியே காட்ட முடியாத படிக்கு கேவலமரணம், நாய் கூட இப்படி நாறி சாகாது. அறிவிருந்தும் அதை பிரயோசனபடுத்த தெரியாது நாறி செத்து விடுகிறார்கள்.அறியவேண்டிய அறிவை அறியாமல் மிதப்பாக திரிவார்கள். எதாவது கேட்டா நாடி காற்றுண்ணு பதில் வரும்..யாரிடம் சொல்ல எனத்தான் வந்த வந்த பெரியவர்கள் எல்லாம் சொல்லாமலேயே சென்றிருக்கின்றனர்
Hseija Ed Rian நான் என்பதும் இல்லை இறை என்பதும் இல்லை, இரண்டும் கானல் நீரே. நானும் அவனும் அற்றதே வெட்டவெளியாம் இரண்டற்ற மெய்மை.
Hseija Ed Rian வெங்காயம் தானுரிக்க வந்திருந்த கதை போல் வந்தாயிங்குனுது இறையென்று கண்டாயோ-கண்டார் கண்ணிருந்தும் காணா கனவினுக்கோர் கண்ணுண்டே வம்பாய் வந்திருப்பார் கண்
Hseija Ed Rian தன்னை விட்டு தானல்லாமல் மற்றொன்று இல்லை, எல்லாம் தானே த்ன்மயமே தான்.மற்றை எல்லாம் கற்பனை மனம் தானன்றி பலதாய் கற்பித்து தன்னையே தான் ஏமாற்றி திரிகிறது பொய் மனம்.
Hseija Ed Rian ’நான்’ .’நான்’ என ஏதொன்று சதா மனம் கற்பித்துகொண்டிருக்கின்றதோ அது உண்மையில் தானல்ல, அது மனதின் கற்பிதம். நான் இங்கு இல்லவே இல்லை என்பதே மெய்மை.
Hseija Ed Rian இரு வேறு கூறு பட்ட மனம் ஒரு கூறை ‘நான்’ எனவும் மற்றைய கூறை எண்ணம்’ எனவும் கற்பித்து எண்ணத்தை காட்டி ‘நான்’ என்பதை வலை பின்னி சிக்க வைத்து தன்னையே தானாக ஏமாற்றிகொண்டிருக்கின்ரது. இதில் இறை என்பதும் இரட்சிப்பு என்பதும் கூட மனதின் கற்பனையே தான்.
Hseija Ed Rian வெட்டவெளி ‘ஒன்றுமல்லாதது’ என்பது மனதின் கற்பனை.ஆனால் அதை பிடிக்கும் உபாயமே வித்தை
Hseija Ed Rian அறிவு அறிவு என தமிழ் மொழியிலும்,ஞானம் ஞானம் என வடமொழியாலும் சொல்லபடும் உபாயம் தான் சுத்தவித்தை எனும் ஆறாம் அறிவு. அந்த ‘விளக்கு’ முன் இல்லாமல் பிரயாணம் கூட பொய்
Hseija Ed Rian விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.-திருமந்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment