Tuesday, December 6, 2022

அட்சரங்கள் அறுபத்துநாலு (இயற்கை உண்மை ஒலி அமைப்பு அட்சரங்கள்)

அட்சரங்கள் அறுபத்துநாலு (இயற்கை உண்மை ஒலி அமைப்பு அட்சரங்கள்) அண்ட எழுத்துக்கள் (12) அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஒள கண்ட எழுத்துக்கள் (28) க்க(ka) - க்க(ga) - ங்ங(nga ) - ச்ச(cha) - ஜ்ஜ(ja) - ஞ்ஞ(nja) - ட்ட(da) - ட்ட(ta) - ண்ண(NNa) - த்த(tha) - த்த(dha) - ந்ந(nna) - ப்ப(pa) -ப்ப(bha) - ப்ப(fa) - ய்ய(ya) - ர்ர(ra) - ல்ல(la) - வ்வ(va) - ஸ்ச(ssa) - ஷ்ஷ(sha) - ஸ்ஸ(SSa) - ஹ்ஹ(ha) - ள்ள(LLa) - ழ்ழ(zha) - ற்ற(RRa) - ன்ன(na) - ம்ம(ma) (28) பிண்ட எழுதுக்கள் (24) அம் -ஆம் - இம் - ஈம் - உம் - ஊம் - எம் - ஏம் - ஐம் - ஒம் - ஓம் - ஒளம் அஃ - ஆஃ - இஃ -ஈஃ - உஃ - ஊஃ - எஃ - ஏஃ - ஐஃ - ஒஃ ஓஃ - ஒளஃ Hseija Ed Rian ஆதியே துண திருச்சி மாவட்ட பெரம்பலூர் உயர் னிலைப்பள்ளியிலிருந்நு ஆசிரியர்கள் வந்நிருந்ந போது திரவாய்மலந்நருளிய ஆண்டவர்கள் வாக்கியம்: தமிழிலே எறக்குறைய முப்பத்து மூன்று எழுத்துக்கள் விட்டுப் போயிருக்கின்றன - அவை தமிழ் எழுத்து வரிசைகளிலிருந்நும், உபயோகத்தில்லாமலிருக்கின்றன - தொடக்கத்தில் எழுத்து சொல்லித் தரும் போது அவை சொல்லித் தரப்படுகின்றன - ஆனால் னாம் எழுதுவது எதிலும் அவை உபயோகப்படுத்தப் பெறுவதில்லை. அப்படியுள்ள எழுத்துக்கள்: "க" வுக்கு அடுத்த எழுத்தாகிய "ங" வின் வரிசை, "ச" வுக்கு அடுத்த எழுத்தாகிய "ஞ" வின் வரிசை, "த" வுக்கு அடுத்த எழுத்தாகிய "ந" வின் வரிசையும் ஆகும். திண்ணைப் பள்ளிக்கூடங்ஙளில் "ங" வரிசையைச் சொல்லித் தரும் போது அவ்வரிசையில் கடைசி எழுத்தை "ங்" (ING) என்றும், "ஞ" வரிசையைச் சொல்லித் தரும் போது அதில் கடைசி எழுத்தை "ஞ்" (INJ) என்றும், "ந" வரிசையில் கடைசி எழுத்தை "ந்" (INDH) என்றும் சொல்லித் தருவது வழக்கம் - இதை னன்றாகக் கவனித்துப் பார்த்தால் ஒரு கேள்வி எழுகிறது -  "ங" வரிசையின் கடைசி எழுத்து "ங்" (ING) என்றால், முதலெழுத்து "ங" (NGA) என்றுதானே உச்சிக்கப் பெற வேண்டும்? அவ்வரிசையில் மற்ற எழுத்தக்களும் இந்ந ஒலியை ஒட்டித்தானே வர வேண்டும்? அப்படியில்லாமல் "ங" முதல் "ஙௌ" வரை ஒருவித மூக்கு ஒலிகளாகவே உச்சரிக்கப்படுகின்றன - இதே போலத்தான் "ஞ" வரிசையும் தவறாக உச்சரிக்கப்படுகின்றது - இப்படியுள்ளதால் ங, ஙா, ஙி. ஙீ முதலிய மூக்கொலிகளுக்குப் பதிலாக, ங (INGA), ஙா (INGAA), ஙி (INGI), ஙீ (INGEE) என்ற தொண்டை யொலிகளையும் பயன்படுத்துவதுதான் முறையென்று தெரிகிறது - திண்ணைப் பள்ளிக்கூடங்ஙளில் சொல்லித்தரும் முறையில் அந்நக் கடைசி இரண்டு எழுத்துக்களில், அதாவது "ங்", "ஞ்" , என்ற எழுத்துக்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஓசையிலிருந்நுதான் விட்டுப்போன எழுத்துக்களைக் கண்டுப்பிடிக்க முடிகிறது! தின்னைப் பள்ளிகூடத்து னடைமுறை ஒருபுறமிருக்கட்டும் - தற்போதுள்ள னடைமுறையையே னம் அறிவைக் கொண்டு னாம் சிந்நித்துப் பார்த்தாலும் இது னமக்கு வளங்ஙும் - தற்போதுள்ள னடைமுறை என்னவென்றால், அங்ஙு (ANGU) என்று வாயில் சொல்கிறோம் ஆனால் எழுதும் போது அங்கு (ANKU) என்றே எழுதுகிறோம் - அதனால் தான் வெளினாட்டார் னம் தமிழை எவ்வளவு படித்தாலும், அவர்களுக்குச் சரியாக உச்சரிக்க வருவதில்லை - அங்கு (ANKU) என்று உள்ளபடியே எதார்த்தமாக உச்சரிக்கின்றார்கள் - இது னாம் எழுதுவதில் உள்ள குறையேயன்றி வேறொன்றுமல்ல - இப்படி வாய்க்கும் கைக்கம் முரணாக இருக்கிறது - இதே போலத்தான் அஞ்ஞு என்று பிழையில்லாமல் சொல்லுகிறோம், ஆனால் அஞ்சு (ANCHU) என்று பிழையாக எழுதுதிறோம் - இதனால் ங், ஞ் தவிர அவை வரும் வரிசைகளிலுள்ள மற்ற எழுத்துக்கள், ஏறத்தாழ எல்லாமே வழக்காறற்றுப் போய்விட்டன Hseija Ed Rian இங்ஙனம் என்ற சொல்லில் மட்டும் தான் "ங" (NGA) சரியாக வழங்ஙப்படுகிறது - மற்றபடி னம் செந்நமிழ் மொழியிலுள்ள எந்ந னூலைப் பார்த்தாலும், இந்ந எழுத்துக்கள் காணப்படவில்லை - இவை எப்போது விட்டுப்போயின என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை - னம் வீட்டில் உயிர்ப்புக்குரிய பொருள் ஒன்று அனுபவிக்க முடியாதபடி கண்ணாடி அலமாரியிலே காட்சிப்பொருளாக இருப்பதால் பயன் என்ன? னம் தமிழ் மொழியிலுள்ள ஒவ்வொரு எழுத்துக் குடும்பத்துக்கும் னம் வாயில் ஒவ்வொரு வீடு உள்ளது. ஒரு எழுத்து குடியுள்ள இடத்தில் இன்னொரு எழுத்து குடியிருக்காது - ஒரு குடும்பத்திற்கள் இன்னொரு குடும்பத்து ஆடவன், "னான்தான் இதற்கத் தலைவன்" என்று குடியேறிக் கொள்வது எவ்வளவு தவறானது. இப்படியிருக்க, "ற"வை அடுத்து வரும் "ன" வின் வீட்டிலேயே "த"வை யடுத்து வரும் "ந"வையும் அதன் வரிசையையும் கொண்டு போய் குடியேற்றுவது எவ்வளவு பெரிய தவறாகும்! ஒரே வீட்டிலே இரு "ன" (ந)க்களா இருக்கும்? ஒரே ஒலிக்கு இரண்டு எழுத்துக்கள் இருக்க வேண்டியது இல்லை - ஆகவே இதில் தவறு னேர்ந்நுவிட்டது என்பது மிகவும் திட்டவட்டமாகத் தெரிகிறது - "த"வை அடுத்து வரும் "ந" வின் உண்மையான ஒலி அறியப்படாமையால் - " மொழிக்கு ஒன்று முன்னே வரும், மற்றொன்று பின்னே வரும் " என்று சப்பைக்கட்டு கட்டி எழுத னேர்ந்நுவிட்டது னாளடைவில் அதுவே மிகவும் ஆழமாக வேரூன்றிப் படர்ந்நுவிட்டது - ஆனால் எவ்வளவுதான் வேரூன்றிவிட்டாலும் தவறு என்று கண்டுபிடிக்கப் பெற்றதும் அத் தவறை வெட்டியெறிந்நால்தான் மொழியை னன் முறையில் வளர்க்க உதவும் -  "ந" வரிசையில் கடைசி எழுத்து மட்டும் "ந்" (INDH) என்று உச்சரிக்கப் பெறுகிறது என மேலே சொன்னோம் - அதை வைத்துப் பார்த்தால், "த" வை அடுத்து வரும் "ந"வின் சரியான ஒலியும் அவ்வரிசையிலுள்ள மற்ற எழத்துக்களின் சரியான ஒலிகளும் என்னவென்று தெரியும் - ந (INDHA), நா (INDHAA) என்று உச்சரிப்பதுதான் பொருத்தமானதும் பயனுள்ளதும், வாய்க்கும் கைக்கும் முரணில்லாததுமாகும் - எப்படியென்றால், "அந்ந" (ANDH) என்று வாயில் சொல்லுகிறோம் ஆனால் "அந்த" (ANTHA) என்று எழுதுகிறோம்; இது முரணில்லாமல் வேறென்ன? இவ்வாறு விட்டுப்போன எழுத்துக்களைக் கண்டுபிடித்ததுதான் தமிழுக்குப் பெரிய வரவாகும் - இதனால் பேச்சுக்கும் எழுத்துக்கம் உள்ள முரண் தீரும் - னம் தமிழில் "ங" (NGA) ஓசை "ஞ" (NJA) ஓசை, "ந" (NDHA) ஓசையில்லாததால் மற்ற மொழிக்காரர்கள் னம் மொழியை "ஓசையில்லாப் பாஷை" என்று குறை கூறிக் கொண்டிருக்கிறார்களே, அந்நக் குறையும் னீங்ஙும் - னம் தமிழைக் கற்கும் வேற்று மொழிக்காரர்களும் னம் தமிழில் எழுதியிருப்பதைப் பிழையின்றி உச்சரிக்கவும் உதவும் - ஏதோ படித்தவர்கள் வந்நிருக்கிறீர்களே என்று இதனை உங்ஙளிடம் சொல்லுகிறோம் - இதனை வேறொருவர் எடுத்துத் தம் பெயரால் பரப்பினாலும் எமக்கு ஆட்சேபணையில்லை என்றும் தெரிவித்துள்ளோம் - ஆனால் யாரும் முன் வராமற் போகவே "ஆதி மெய் உதய பூரண வேதாந்நம்" என்ற முதல் னூலம், இன்னும் பல மெய்மை னூல்களும் விட்டுப் போன மேற்சொன்ன எழுத்துக்களை அறிந்ந பின்னரே எங்ஙள் கிரந்நங்ஙளை எடுத்தோதும்படியாகச் சொல்லியுள்ளோம். என்று ஊன் உறக்கமற்ற எங்ஙள் குலத் தெய்வம் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் திருவாய் மலர்ந்நு அருளினார்கள். Hseija Ed Rian இந்த பூவுலகில் பிறந்த எவருடைய நாவிலும் வருகின்ற ஓசையமுதமே இவைகள்...இறைவன் அருளால் அமைத்த அரும்பெரும் உணவு...இவற்றை கொண்டிருப்பதனாலேயே மனிதன் மேல்குலத்தவனாம் ஆறறிவுடையவன் என்னப்படுகிறான், ஏனைய புல்பூண்டாதி தாவரசங்கமங்களுள்ளும் , புழு பூச்சியாதி வன்மிருகங்களுள்ளும் எவற்றின் நாவிலும் விளையாத விளைவான ஜீவபயிர் கதிர் இதுவே...இதை கொய்து உண்பவன் ஜீவ உணவை உண்டவன்.அவன் எக்குலத்தவனாயின் எத்தேசத்தவனாயினும் எம்மொழியை உடைத்தவனாயினும் இவை அவன் நாவினில் அனாதியாக அமர்ந்திருக்கும் வாணியின் கலைகள் அறுபத்துநாலு..அவள் அக்கினியாகவும் பிரகாசிப்பாள், தண்மதியமிர்தமாகவும் பொலிவுற்றிருப்பாள் Hseija Ed Rian அடியேன் ஆண்டவர் கூறியதற்க்கும் /வள்ளலார் கூறியதற்க்கும்/ தமிழுக்கும் உள்ள தொடர்பினை இங்கு கூறவில்லை. இயற்கை உண்மையான மனித நாவின் ஓசை அமைப்புகலை சொல்லி இருக்கின்றேன். இவை மூல ஓசைகள்..இவை பல பெருக்கங்களாக இணையும் தன்மையுடன் பல மொழிகள் பேசப்படுகின்றன. மனிதனை படைத்த இறைவன் மனிதனின் நாவில் அமைத்திருக்கும் சொல்லோவியம் இவை Hseija Ed Rian Muthu Kumar இயற்கை உண்மை என்பது அனாதிகாலம் முதல் மனிதன் என்று நாவினால் சத்தங்கலை உச்சரிக்க கற்றுகொண்டானோ அன்றிலிருந்து இருந்து வருவது...எந்த மொழியும் இயற்கையாகவே அமைந்தவை அல்ல...மொழி என்பது மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திகொண்டது..ஒரு சமூகம் ஏற்படுத்திகொண்டது...ஆனால் ஓசை என்பது சமூகம் ஏற்படுத்திகொண்டதுவல்ல...அது இறை படைப்பு...அதற்க்கு மொழிவேற்றுமை இல்லை...எம்மொழியாயினும் இறை சம்மதம் ஒன்றே தான்,..அல்லவா Hseija Ed Rian இறை அருளாளர்களான ஞானிகள் ஓசைகளை சீரமைத்து ஒரு தனி முறையாக அமைத்து அதை சரளமாக உபயோகிக்கும் தரத்தில் கற்பித்து இலக்கணமும் வகுத்து வைத்திருகின்றனர், அவ்வளவே தான்...அவர்கள் கொண்ட ஓசைகள் தேசத்துக்கு தேசம் இடத்துக்கு இடம் மாறுபடும்...ஆனால் மனித நாவில் வரும் ஓசை ஒன்றே...அல்லவா Hseija Ed Rian மனிதன் நாவு பேசுகிறது..மிருகங்கள் பேசமுடிவதில்லை...அது மனிதனின் முதிர்வு..அவன் வளர்ச்சியின் முன்னேற்றம்..அவன் அறிவின் வெளித்தோற்றம்...அது இயற்கையாக வெளிப்பட்டிருப்பது...அது இருக்ககூடியது , செயற்கை அல்ல...அப்படியானது இயற்கை உண்மை...பஞ்ச பூதங்கள் சிவனின் அங்கங்கள்..ஆனால் பஞ்சபூதங்களால் பலபல ரூப பேத நாமபேதங்கலாய் திரிவது தான் பேதம் எனும் மாயை Hseija Ed Rian அனாதிகாலத்துக்கு முன்னே மனிதன் மிருகங்களோடு மிருகங்களாக அடர்ந்த காட்டுகளிலும் குகைகளிலும் இயற்கையை ஒன்றி இயற்கையோடு இயற்கையாக பன்னெடுங்காலம் எந்த சமூக சூழலும் உருப்பெறாத காலகட்டங்களினூடே தான் வளர்ந்து பலுகிபெருகி வந்துள்ளான். உண்மையை சொல்லப்போனால் நம்முடய முன்னோர்கள் அனைவரும் என சொல்லப்படுபவர்கள் அனாதி இயற்கை மனித உஇர் பிறப்புகளாக இயர்கையோடு வாழ்ந்த மனிதர்கள் என அழைக்க தகுதையானவர்களாக இருந்த ஓர் உயிரினம் தான்...அவனுக்குள் விசேஷமாக இருந்தது ஒன்று மட்டுந்தான், அது நாவசைத்து ஓசைகளை உருவாக்கிகொள்ளும் திறமை..அந்த விவித தரமான ஓசைகலை மனிதன் சொற்களாக பிரித்து அமைத்துக்கொண்டான், சொற்கள் என அமைக்கப்படும்போது அதற்க்கு பொருள் கொள்ளப்படுகின்ரன...அப்படி பொருள் கொண்டு சீராக்கி புரிந்து கொள்ளத்தகுந்த படி ஓசைகலை அமைத்து தங்களுக்குள் பரிமாறிகொண்டனர்...அவ்விதம் ஒவ்வொரு குலத்தினிரிடமும், பிற்பாடு ஒவ்வொரு சமூகம் எனவும் அந்த பேச்சு சொற்றொடர்கள் வியாபித்தன., பொருள் கொள்ளப்பட்டன, அவை மொழியென அறியப்படுகின்றன.அதன் பிற்பாடே மொழிக்கு என இலக்கணமாக வறையறுத்துக்கொண்டான்.அல்லாது ஆதியிலிருந்தே இலக்கணமும் மொழியும் இருந்திருக்க வாய்ப்பில்லை Hseija Ed Rian ஆனால் ஓசைகள் என்பது எல்லா மனிதரிடத்தும் அவன் நாவினில் குடிகொண்டிருந்தது. அது மனித இயற்கை உண்மை ஓசைகள். அவ்வோசைகள் எல்லா தேசத்து மக்களுக்கும் எல்லா இனமக்களுக்கும் அவ்வோசையானது நாவினில் வழங்கும் படி இறை இயற்கையால் அமைந்திருக்கின்றன..ஆனால் மனிதன் அவற்றை சொற்றொடர்களாக உருவாக்கி பல பல பொருள்கள் கொள்ள அவை பலபல பாஷைகள் ஆயின. வேற்றுமை உருவாகின....மனிதனின் நாவினில் கொடுக்கபட்டிருந்த அனாதி இயற்கைஉண்மை ஓசையின் பயனை அவன் மறந்து விட்டான், அது எதற்க்கு வழங்கபட்டது என புலப்படாமல் போயிற்று, வெறும் மொழி அறிவோடு அது சுருங்கி போயிற்று Hseija Ed Rian ஏனெனில் மனித நாவிற்க்கு வரும் ஓசைகள் ஜீவனிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன, அதை “வாக்கு” என வள்ளலார் சொல்லுவார். அங்ஙனம் ஜீவனை அடைந்து கொள்ள மனிதர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் ஓர் ஏணியே அட்சரங்கள் ...அவை பிறந்த இடத்தை நாடி செல்ல உதவும் ஏணி...ஜீவனுக்கான வாசல் என சொல்லலாம்

No comments:

Post a Comment