Wednesday, December 7, 2022

ஓ ஓ என்னுயிரே

ஓ..ஓ..என்னுயிரினும் மேலான இன்னுயிரே..என் காதலனே..நீ ஒருவனேயன்றோ நான்?... ஓ என் ஆதியாம் உடலமே... என் உடன் பிறப்பே..என்னுடன் கருவோடு அமர்ந்து வளர்ந்தவனே..ஓ..ஓ..உன்னையே நான் மறந்தேனல்லவா??..மன்னித்துவிடு ..என்னருமை உடலமே..!!! ஓ..ஓ..சிற்றணு வடிவேவென  என் அன்னை கற்பமதில் உருவோடுருவாய் அருவேயருவாய் உருவருவாய் உயிராய் உயிர்காதாரமாகினவனே உனை எந்தோ மறந்தேன் ..மன்னித்தருள்வாய் என் ஆருயிர்க்காதாரமாகினவனே..எந்தாயும் தந்தையே...!! அகமென்றார் அலைந்தலைந்தேன் புறமென்று நீயிருக்க புகின்றறியேன்...எத்தன்மையென பகிர்ந்தறியேன்...பித்தனாய் திரிந்தேன் உன்னுள் நானே..உன்னையறியாமலே....எந்தையே தாயே..என்னுயிர் காவலனே..உயிர் காக்கும் உடலமே...!! அகமென்று நானிருக்க புறமென்று நீயிருந்தாய் எஞ்ஞான்றும் காவலாய் கருத்தாய்...கண்ணிருந்தும் காணறியேன் உன்னை கருவாயோடுருவாய் காத்து நின்றோனே...உன்னுள் என் உயிரிருந்தும் உணர்ந்தறியேன் உயிரின் உயிராமென் உடலமே...நீயன்றி என்னுயிரெங்கே..கண்டறியாது கலங்கி நின்றேனே கருணை புரிவாய் கருத்தோனே...!!!! உயிரென்றார் உணர்வறியார்...உணர்விற்க்கு ஆதாரமாம் உடலறியார்..அழியார் எனினும் புகுந்தறியார் ..உயிரோடு புகுந்தோமென்பார்..உடலமே நீயன்றி உயிர் கொண்டதெப்போதென பகிர்ந்தறியா குற்றமே எனவறியா புலம்புகின்றனரே..பொறுத்தருள்வாய் எந்தையே தாயே....!!! ஒத்ததாகி உனர்வாகி உயிராகி இத்திசை கொண்டெழும் வேந்தே எத்திசை நோக்கினும் உன் உடலமே உன் உருவேயன்றி மாற்ரொன்றுமிலையே கருணையே கடலாய் பூவாய் பல்லுயிராய் பலதாய் பலப்பலதாய் பல்லுயிராய் படைப்பிற்காதாராமகி பலகோடி அண்டமெல்லம் தானாய் நிறைந்து தானலதாய் விலங்கும் தம்பிரானே உனை மறந்த குற்றம் நினையாது என்னுடன் மேவி எஞ்ஞான்றும் இருந்தருள்வாயே....!!! நீயிருக்க என்னுடன் உயிராய் உன் நிறை அகலுமென பாரானபாரெலாம் நான் பறந்து திரியாமல் என்னுடன் நீயும் உன்னுடன் நானும் பலவல்லாமல் பதிந்திருப்போமாக...பரமனாம் பதியே பதமருள்வாயே பதறாமல்..என்ந்தையே தாயே உயிர் காவலாம் தனித்துணையே...!!! அண்டபகிரண்டமெலாம் நீயே இறைவாய் அந்த பகிரண்டத்தினுள் வந்து பிறந்தேன்..நீயே எனை வளர்த்தாய் உன்னுயிரை தந்தே..உன்னுயிரை அறியா பேதை  என்னுயிரென்றேன் பொறுத்தருள்வாய் புண்ணியனே என்னுடலமே எந்தாயே தந்தையே...!!! உன்னுளே இயங்குகின்றேன் அந்நாள் தொடூ நாம் ஒத்திசைந்த தருணமாம் காலத்தே இத்திசை யனைத்தும் நிறை கொண்டெழும் பேராற்றல் விளக்கே..அருமையே ஒருமையின் நாயகனே உள்ளுணர்வே உணர்வாய் உடலமாய் மறைந்திருக்கு மறை பொருளே...மறைக்குமெட்டாத மணிவிளக்கே..மணிமன்றில் ஆடும் வேந்தே...!!! அகமென்று அலைந்தன ரொருகோடி அகத்தின் அகமென திரிந்தனரொரு கோடி உயிரென மலைத்தனரொரு கோடி உயிரினுயிரென திகைத்தன ரொரு கோடி அந்தோ இழந்தனரொரு கோடி எந்தாய் நீயோ அவர் எவராலும் பகுத்தறியா வண்ணம் பரத்தில் பரமாய் பகுத்தறியா விதமாய் இகத்திலோர் உயிர் கொண்ட உடலமாய் தரித்திருக்க கண்டறியா பேதைகள்..அந்தோ எஞ்ஞான்று சொல்வேன் உன் திருத்திற மதனை எங்ஙனம் புற்றுதல் எளிதோ எந்தாயே தந்தையே..தனிப்பெரும் தலைவனே....!! தத்துவ குப்பைகள் தனித்தனி கடத்தியெனை தத்துவாதீத உறுபொருளை காண்பித்தாய்...இத்தல மொக்கும் பரந்திருக்கு பரமனே பராபர பரதலமே..எத்திசை தேடினும் காணா திருப்பொருளே...என்னுடல் நாயகனே உயிர்காவலனே உணர்வாய் வீற்றிருப்போனே..நீயே எனையாட்கொண்டாய்..நீயே திருவீற்றிருக்கின்றாய்...நானே சிற்றடியேன் உந்திருமார்பில் உன்கருணை திருதிறத்தால் வாழ்ந்திருக்கின்றேன் உன்னுடன் இசைந்தே...எந்தையே தாயே தயாபரனே....!!!! மந்திரங்கள் பலகோடி நூறாயிரம் படைத்து நீயே உன்னாவில் பகிர்ந்திருக்கின்றாய்..நீயே அதை உச்சரிக்கவும் செய்கின்றாய்..ஆனால் நானோ நானே உச்சரிக்கின்ரேன் என மதிமறந்தேன்..செயெலெலாம் நீயே செய்கின்றாய் எந்தையே எனினும் நானோ நானே செய்கின்றேன் என மதித்திருந்தேன்...மனமே உடலென  வெறுத்திருந்தேன் மனமறியாமல் நீயே மனதுக்கும் மறலியாய் கொண்டிருப்பதை இருப்பறியேன்... மறந்தருள்வாய் மறலி தீண்டா உருவோனே..மாகாகாலனே..!!! உன்னை மறந்தோர் பலகோடி கொண்டழிந்தார் பலகோடி ஜென்மங்கள் நிறைபொழுதும்..இசைந்தங்கிருந்தார் ஒருபேர் சொல் பேரறியா பரமேஸ்வரர்கள்... ஈசனென சொல்வார் ஈசன் வடிவறியார், வடிவே வாழ்வாக வந்திங்கமர்ந்திருக்கும் திருவடிவே இங்கு உன் வடிவே அன்றி எவ்வடிவில் உயிர் தங்கும் இறையே...புறத்தார் புகன்றாலும் புகுமாறில்லையே பரமே குருவே பராமகமே....!!! Z

No comments:

Post a Comment