Tuesday, December 6, 2022

விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே

"ஊனான உடலுக்குள் முகவட்டத்துக்குள் ஒளிபோல நிற்குதப்பா , அகாரபீடம், தேனான மணிபூரகத் துக்குள்ளே செய்தான் பீடமெனச் சிறந்தவாரே" -போகம் ஞானம்- "அறைகுவேன் அகரமது சிவமதாச்சு  ஆச்சரியம் உகரமது  சத்தியாச்சு" -சுந்தரானந்தர் சிவயோக ஞானம்- "அகாரம் நயமாச்சு உகாரம் உச்சி சிரசாச்சே--இதை உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே" -கொங்கண சித்தர் - "குண்டலி வாசி அகாரமடி ;பிடர்க் பிடர்க்கண்டமதிலே உகாரமடி " -ஞானக்கும்மி - "இருள்வெளியாய்  நின்ற சிவ பாதம்  போற்றி எழுத்ததனின் விவரத்தை  விரித்துச்சொல்வேன்; அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்; ஆதியந்தம்  அண்ட பிண்டம் அதுவேயாகும் . திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம் ; சிவ சக்தி திருமாலின் ரூபாமாகும்; வருமுருவே சிவசக்தி வடிவமாகும்; வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே. -வான்மீகர் ஞானம் - "உண்ணும் போது உயிரெழுத்தை உயரவாங்கு உறங்குகின்ற போதெல்லாம் அதுவேயாகும்; தின்னும் காய் இலை மருந்தும் அதுவேயாகும்; தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் மண்ணூழி கால மட்டும் வாழ்வார் பாரு; மறலிகையில்  அகப்படவு மாட்டார் தாமே! -அகத்தியர் ஞானம் - "எட்டும் இரண்டும் அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் -ஏகாமல் நிற்கும் கதி எய்துங் குயிலே " -இடைக்காட்டுச் சித்தர் - "எட்டும் இரண்டும் இனிதறி  கின்றிலர்  எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்; எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்கப் பாதமே" -திருமந்திரம் - "எட்டும் இரண்டும் அறியாத என்னை எட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்தி எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின் எட்டும் இரண்டும் இலிங்கம தாமே" -திருமந்திரம் - "கணக்கறிந் தார்க்கன்றிக் காண வொண்ணாது; கணக்கறிந்தார்க்கன்றி கைகூட காட்சி; கணக்கறிந்து உண்மையைக் கண்டண்ட நிற்கும் கணக்கறிந்தோர் கல்வி கற்றறிந் தாரே; --திருமந்திரம்--- எண்ணனாய்  எழுத்தனாய்! எழுத்தினுக்கோர் இயல்பனாய்! -அப்பர் தேவாரம் - 'கடிகைக்கு கடிகை நூறு நூறு தடவைகள் குருவை  நினைத்து நினைந்து  அழுகிறேன் , கொஞ்சம் கூட நேரம் தாழ்த்தாமல் மனிதனிலிருந்து என்னை தேவனாக்கினாரே' -கபீர்தாசர் ஓரெழுத்தில்  ஐந்து உண்டென்பார்  வெண்ணிலாவே -அது ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே -திருவருட்பா - அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 30 ஓமென்ற பிரணவமே ஆதி வஸ்து   உலக மெல்லாந் தானிறைந்த யோமசத்தி   தாமென்ற சத்தியடா எவரும் தானாய்ச்   சதா கோடி மந்திரத்துக்கு உயிராய் நின்று   ஆமென்று ஆடினதும் ஓங்காரம் தான்   அடி முடியாய் நின்றதும் ஓங்காரம் தான்   நாமென்ற ஓங்காரம் தன்னிலே தான்   நாடி நின்ற எழுவகையும் பிறந்தவாறே பாதம் கொழுமுனையாம் கதிர்முனையி லாடும் பாதம் கோடான கோடி மறைபுகழும் பாதம் தளிரிலை பூங்காய் பழமாய்ச் சொரிந்த பாதம் சகல உயிர் ஜீவனிலு மாடும் பாதம் -சாலை ஆண்டவர்கள் - 'தோணுமிகு பாதத்தொன்று தூக்கிமறு பாதம் தேவ னடனம் தெரியும் தேசி பஞ்சாட்சரமே' -மெய்வழி சாலை ஆண்டவர்கள் - ஆதிமெய் உதய பூரண வேதாந்தம் "நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர் பாலு நெய் கலந்தவாறு பாவிகாளறி கிலீர்  ஆலமுண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலனென்று சொல்லுவீர் கனவிலும் மதி ல்லையே" -சிவவாக்கியர்-- "போட்டது ஒரு விந்து வட்டக் கோட்டைக்குள்ளே பூரண ஏகாட்ஷரத்தைப் பார்க்கும்போது நாட்டமென்ற அஞ்செழுத்தும் அங்கே கண்டேன் நன்மையுள்ள எட்டும் இரண்டும் அங்கே கண்டேன் ஆட்டமென்ற முக்கோண மேறு கண்டேன் அதில் நிறைந்த சிதம்பரச் சக்கரமுங் கண்டேன் தோட்டமென்ற தேட்டமெல்லாம் அங்கே கண்டேன் சேர்ந்து மிக வொன்றான செயல் கண்டேனே" "சண்முகம் ஆறு சடாட்சரம் போடு உண்மையாய் அதனுள் உமை திரிகோணம் நன்மையாய் அதினுல் நாட்டிடு விந்து கண்மைய்யம் அதினுள் கணபதி சுழியே" -திருமூலர்- உ சிவமயம் திருச்சிற்றம்பலம் குருபாதம் "அறியோம் நற்றாள்கள் குரு வாழ்க குருவே துணை" வாலறிவன் நற்றாளாக  விளங்குகின்ற அதை அறிவிக்கின்ற குரு வாழ்க, குருவே துணை. ந ம சி வ ய நவ்வெழுத்தே  பிரமனாராகும்- அதில் நாரணன் மவ்வெழுத்தானானே சிவ்வெழுத்தே தெய்வருத்திரனாம்- இன்னும் செப்புவன் கேளடி ஞானப்பெண்ணே! செப்பவே வவ்வு மகேசுவரனாம்- வட்டம் சேர்ந்து யகாரம் சதாசிவனாம் தப்பில்லா ஐந்தெழுத்தாலே சராசரம் தங்கியிருந்தது, ஞானப்பெண்ணே! -ஞானக்கும்மி- ந-      பிரமன்-             படைத்தல் ம-      திருமால்-          காத்தல் சி-      உருத்திரன்-      அழித்தல் வ-      மகேஸ்வரன்-     மறைத்தல் ய-      சதாசிவம்-           அருளல் "வாசியென்றால் மூச்சதுவென்று- தாறுமாறாய் மோசமது போகாதேமுக் காலூமே சொன்னேன் பேசரிய பாதமதுகாண்- ஊசிமுனை வாசிவச மாகுமது தேசு நிறமே" -சாலை ஆண்டவர்கள் - வள்ளல் அறியாத மெய்ப்பொருளாகிய செல்வத்துக் கெல்லாம் தலைச் செல்வமாகிய செவிச் செல்வத்தை வழங்குபவர்கள் யாராக இருப்பார்கள், அவர்களே நிஜமான வள்ளல், அறியாமை இருளை அகற்றி மெய்ஞான ஒளியை உள்ளத்தில் பாய்ச்சும் பெருமானாரே வள்ளல். பாரடா வாணியுந்தா னிருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்; ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே அண்டத்தைப் பற்றியடா விழுது போலே நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும் நிலையான அக்கினியின் மத்தி தன்னில் வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே

No comments:

Post a Comment