Wednesday, December 7, 2022
ஆன்மா = மனம்
மனம் புத்தி சித்தம் அகங்காரம் இவை நான்கும் நான்கு பொருட்கள் அல்ல, இவை அனைத்தும் ஒரே பொருளின் பல்வேறு நிலைப்பெயர்களே, ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு பெயர்கள், வீட்டில் மனைவிக்கு கனவன் பிள்ளைக்கு தந்தை, பணியாளுக்கு எசமான் அலுவலகத்தில் மேனேஜர், ஆனால் இருக்கிறது ஒரு நபர், இந்திரிய தொடர்புடன் இருக்க மனமாகவும், இந்திரிய தொடர்பில் பெற்றதை கிரகிக்க புத்தியாகவும், கிரகித்ததை உட்கொண்டு நிர்ணயம் செய்ய சித்தமாகவும் அகங்காரம் என ‘நான்’ ஆகவும் இருப்பது ஒன்றே அதுவே ‘நான்’ எனும் மனம்
இந்த சித்தாந்த மனம் தன்னை விடுத்து தலைவன் ஒருவனை கொள்வதினால் தன்னில் இருந்து அன்னியமான ஒன்று இருக்கிறது என மயங்கி தலைவனை ஆராதிக்கிறது.அதன் சித்தாந்தம் அப்படி கொள்வதினால் மனமே பிளவுபட்டு தானான மனம் எனவும், தனக்கு அன்னியமான தலைவன் எனவும் மனமே இரண்டாக நிற்கும் அவஸ்த்தை உருவாகின்றது. இதுவும் கடந்து போகும்
ஆத்ம போதத்தின் அடுத்த நிலை வெட்ட வெளி, எது ஒன்று இருக்கிறது என நினைத்து கொண்டு பிரயாணம் ஆரம்பிக்கிறோமோ, முடிவில் அது இல்லாமல் வெட்ட வெளி தன்னிலே கலந்து ,மனம் அகல ஆன்மாவும் அகன்று விடுகின்றது. மனம் இருக்கத்தான் ஆன்மா என ஒரு போதம் கற்பனையாக எங்கும் கலந்து நிற்கின்றது. மனமும் ஆன்மாவும் இரண்டும் ஒன்றின் இரு துருவங்களே, ஒன்று பொய் எனில் மற்றையதும் பொய். வெட்டவெளியே மெய்
இறைவன் என்பது மனதின் ஒரு கற்பனை கதாபாத்திரம் தான், மெய்நிலை உதயம் செய்ய ஒரு உபாயம் தான் . ஒரு நிலைக்கு மேல் கடவுள் தன்மை கூட தூர தூக்கி எறியத்தான் வேண்டும், என்றாலே தான் அடுத்த மேல் நிலைக்கு பிரயாணம் ஆரம்பிக்கும். இல்லையெனில் கடவுள் கூட தடையே தான்
//இங்கு மனமில்லையேல் எனினும், உடல் இல்லையேல் எனினும் ஆன்மா உண்டு என்பது மனதின் மனமாக இருக்கும் தன்மையில் கிரகிக்கபடும் தன்மையே தாம் அல்லாது நிதர்சனமாக அதற்க்கு நிரூபிக்கும் உறுதுணை ஒன்று மனதுக்கு இல்லை, மனம் அப்படி கருதுகின்றது, தன்னை விடுத்து அந்த பக்கம் அப்பால் எதுவும் இல்லை எனும் அறிவை அறியாது.
உடலெடுத்த காலத்து குழந்தையாக இருக்க மனமானது இவ்வண்ணம் எந்தவொரு ஆன்ம தத்துவத்தையும் உணர்வதில்லை, காலபோக்கில் த்தத்துவ குப்பைகளினால் எதாவது ஒன்றினை பற்றி அக்கரை செல்ல முற்படுகின்றது ,அதன் விளைவே ஆன்மா எனும் ஒரு கோட்பாடு, அல்லது இறை எனும் கோட்பாடு, அல்லது தன்னை விடுத்து தனக்கு மேலாக தன் ஆளுமை எல்கைக்கு எட்டாத ஒன்று இருக்கின்றது எனும் போர்வை ரொம்ப ஆவேசத்துடன் மனம் போர்த்திக்கொள்ள ஆவல் கொள்கிறது.இதுவும் களையப்பட வேண்டிய போர்வையே
பேசுவதனால் எல்லாம் வார்த்தை ஜால விளையாட்டே தாம் ,எனினும் பேச்சினூடாய் மலரும் புரிதல் என்பது அருமையானது...புரிதலினால் அவித்தையானது அகன்று போகின்றது..மெள்ள மெல்ல ஞானம் அரும்புகின்றது..மனதில் அசைவுக்கு இடம் குறைகின்றது..திருப்தி உருவாக உருவாக ஆனந்தம் களைகட்டும்...இனம் புரியாத மகிழ்ச்சி..தியானத்தை ஆழ்கடலுக்கும் இட்டுச்செல்லும்
எதுவொன்று தன்னுக்குள்ளே “நான்” “நான்” என சதா தன்னிலை போதமாக நிலைநிற்கின்றதோ, எதொவொன்று “நான்” என சகல செயல்களுக்கும் அச்சாணியக இருக்கின்றதோ, எதுவொன்று “நான்” என மனதுக்கு அறியபடாத ஒன்றாக சதா வியபரிக்கின்றதோ அது உண்மையில் மனமே என தெளிந்து சசூட்மம் கண்டு விட்டால் ஆன்மா என சொல்லும் கொட்பாடு அற்றுத்தான் போகும்
வாசல் படி தாண்ட மாளிகையின் பிரம்மாண்டம் புரிகிறது...மனதின் மயக்கம் அகலத்தான் வித்தையின் ஆழம் புரிகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment