Tuesday, December 6, 2022

எண்ணங்களின் பல வகை வேறுபாடு

எண்ணங்களின் பல வகை வேறுபாடு எண்ணங்களற்று தன்னை உணர்வதோ, இறைவனாக தன்னை உணர்வதோ, இறை நிலை அடைவது எதுவாக இருந்தாலும் தாண்டி செல்ல வேண்டியது மாயை உண்டாக்கும் எண்ணங்கள்.  எண்ணங்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எண்ணங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு  எண்ணங்களை என்னிடமிருந்து உருவாகிறதா அல்லது எண்ணங்களை நான் அறிகின்றேனா? எவ்வாறு?  எல்லாமே எண்ணங்கள் என்றாலும் எல்லாம் ஒரே மாதிரியான எண்ணங்கள் இல்லை. எண்ண அலைகள்  வலியுள்ளவை, வலியற்றவை மெய்யறிவு, பொய்யறிவு, கற்பனை, உறக்கம், ஞாபகம் பட்டறிவு, யூகம், ஆகமம் ஆகியவை மெய்யறிவு,அஞ்ஞானம், உண்மைக்குமாறாகப் புரிந்து கொள்ளும் அறிவு பொய்யறிவு இதுவரை எண்ணங்கள் ஏற்படுத்திய நினைவுகளைக் கொண்டு உண்மையில்லாமல் பொய்யாய் உணர்வது கற்பனை. உணர்வில்லாத ஒரு தனியான விருத்தியே உறக்கம் அனுபவித்த விசயங்களைத் நினைவில் கொள்ளும் தன்மையே ஞாபகம் எண்ணங்கள் பல விதம். பார்த்து அறிகிறோம், அதாவது புலன்களால் நேரடியாக அறிகிறோம். புலன்களால் அறிவதை சிந்தித்து உணர்கிறோம். கற்பனை செய்கிறோம், இறந்த காலத்தை ஞாபகத்திற்கு கொண்டு வருகிறோம், எதிர் காலத்தை யூகிக்கிறோம், இப்படி எண்ணங்கள் பல விதம். அறிவியலின் படி சிந்தனை, எண்ணங்கள் மூளையின் வேலை. ஆனால் மூளை அறிவதற்கு வேறு சிலவற்றின் இயக்கம் தேவை என்பதை அறிவியல் அறிய மாட்டாது. அதுவே உயிரும் உயிரோடு இணைந்த பிராணனும் ஆகும்.

No comments:

Post a Comment