Thursday, December 8, 2022
பிள்ளையார் சுழி
முந்தைக் கிருபை பெருகி முத்தான முகம்மதை
நீ யெந்த கிருபை செய் திங்கழைத் தாயிறை நீயெனவும்
வந்தக் குருவிடமஞ் சேராமல் உன்னை வணங்குவதற்கோ
இந்த வுலூத்தரை யும் படைத்தாயெம் மிறையவனே
பீரப்பா பாடல்
பிள்ளையார் சுழி
உ
ஒரு சுழியும் ஒரு சுழியோடு கூடிய கோடு உடைய (உ) இந்த எழுத்தை பெரும்பாலும் பார்க்கலாம் எழுத்தறிவிக்கும் முதற் சுவடியிலும் இந்த எழுத்து இருக்கின்றது, இது ஆதிகாலத்தில் இருந்து எழுதிக் கொண்டு வருவது, ஒரு சிறு சீட்டிலும் இதை முதலில் எழுதும் பழக்கம் இருந்து வருகின்றது, இவ்வெழுத்து கடவுளின் அறிகுறியாகவும் கடவுளை வணங்கும் அடையாளமாகவும் இருக்கின்றது, இது பிள்ளையார் சுழி என்று சைவ தெய்வப் பெயரால் விளங்குகின்றது இது மெய் அனுபவத்தை கைவரவாகப் பெற்ற பெறியோளுக்கு தெரியும், இந்த எழுத்துக்கும் மற்ற எழுத்துக்களுக்கும் பெயரிட்டு இருப்பது போல் இன்னபெயரன கூறும் ஒளி வடிவம் இல்லாததால் இது இது பேசா எழுத்து, எழுதா எழுத்து, மோன எழுத்து,ஊமை எழுத்து, என்று சொல்லப்படுகிறது ஒப்பற்ற ஒரு தனி எழுத்து ஆகையால் ஓரெழுத்து என்றும், வடமொழியில் ஏகாச்சாரம் என்றும், சொல்வது உண்டு இதன் வரிவடிவத்தில் சுழி தலை போலவும் கோடு ஏழுபுள்ளி கொண்ட கால் போலவும் தெரிவதை நோக்கி இதனை சாகா தலை, வேகா கால், ஏழு நிலைக்கம்பம், ஏழ்நிலை கோபுரம், என்றும் சொல்வர் இந்தச் சுழியும் கோடும் பிரணவம் என்னும் ஓங்கார எழுத்தின் வடிவத்தை ஒத்து இருக்கின்றது
பிள்ளையார் சுழி நாதம் கோடு வடிவம், இது சிவம் நாதத்திற்கு பின் அதனை அடுத்து தோன்றுவது விந்து, புள்ளி வடிவம் இது சக்தி கடவுள் என்னும் பரம ரகசிய விந்துவின்னின்றும் முதல் தோன்றும் இந்த விந்துநாதம் எனும் தத்துவங்களின் இணைப்பே பிள்ளையார் சுழி, இன்னும் அனாதி மூலப் பொருள்களாகிய சிவமும் சக்தியும் ஒன்றாக கலந்துள்ள நிலையே "பிள்ளையார் சுழியாம்" இதுவே இறைவனுடைய திருமேனியாகும் இந்தச் சுழியை இட்டாலே போதும், இது பிள்ளையார் வணக்கம், சிவசக்தி வணக்கம்,கடவுள் வணக்கம், உயிருக்குள் இறைவன் எழுந்தருளியிருக்கின்ற பீடம் ஒற்றை வட்டமாக பிரகாசிக்கிறது வட்டமாகவும் நீளமாகவும் உள்ள பிள்ளையார் சுழி
முத்தி வீடே பிள்ளையார் சுழி, மனிதர்கள் மட்டும் இரண்டு உடம்புகளை உடையவர்களாக இருக்கின்றார்கள் ஒன்று தூல உடம்பு மற்றொன்று புகழுடம்பு தூல உடம்பு அழிவது அநித்தியமானது புகழ்புடம்பு அழியாதது நித்தியமானது, நித்தியனாகிய சீவன் நித்திய உடம்பை தெரிந்து அதில் குடியேறி கொள்ள வேண்டும் இந்த நித்திய உடம்பு அநித்தியமான தூல உடம்பில் வைத்து படைக்கப்பட்டிருப்பதால் நாம் அநித்திய உடம்பில் இருக்கும் போதே நித்திய உடம்
பில் குடியேறி கொள்ள வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment