Wednesday, December 7, 2022
நமச்சிவாய
பிரம்ம பிரகாச மெய்வழி ஆண்டவர்கள்
உபதேச மொழி :
----------------------------------------------------------------
நமச்சிவாய
----------------------------------------------------------------
பஞ்சாட்சரம் மூல மந்திரம் ஆச்சுதே .
நமச்சிவாய -சிவாயநம -அது இந்த எழுத்தா?
ஆதிமூலம் ஆகிய அந்தப் பஞ்சாட்சர முதல் எங்கே ?அது மனுமுளை தோன்றிய காலத்திலிருந்து உள்ளது ஆச்சே !
தமிழ் எழுத்து எப்போது உண்டாச்சு ?
அதற்குப் பின் உண்டானதா நமச்சிவாய ?
பொருத்தமாக இருக்குதா பார் ?
நிஜமான பஞ்சாட்சரம் எது ?எங்கே ?
நமச்சிவாய எனும் ஐந்தெழுத்தை -பஞ்சாட்சரத்தைத் தியானம் செய்தால் அந்த எழுத்தின் வடிவம் தானே நினைவுக்கு வரும் .எழுதிய எழுத்து அழிந்து விடுவதாச்சே ?இந்த எழுத்து நமச்சிவாய -தமிழ் பாஷை உண்டான பின் வந்தது தானே!
சிவம் எப்போது உண்டானது ?
அது எல்லாவற்றையும் உண்டு பண்ணிய அறிவான தெய்வமல்லவா ?அது ஆதி அந்தம் இல்லாதது .என்றும் உள்ளது .
எங்கும் நிறைந்தது .எல்லாம் வல்லது .எல்லாம் உடையது .
அந்த சிவ முதலாகிய பஞ்சாட்சரம் எது ?
புராதன பஞ்சாட்சரம் எப்படியிருந்தது ?
அந்த நிஜமான பஞ்சாட்சரம் நமக்கு வேண்டும் அல்லவா ?அது எது ?
அந்த புராதன பஞ்சாட்சரம் -அது பரம்பரை யாக வருது .நம் யூகத்திலே எல்லாம் அது தட்டுப்படாது .
இந்த எழுத்துக்கும் கட்டுப்படாது .இந்த அர்த்தத்துக்கும் கட்டுப்படாது .
ஆதியில் உண்டானது இது ஒன்று தான் .
இதை உங்களுக்கு இதுவரை யாராவது சொன்னதுண்டா ?
அந்த அசலான பஞ்சாட்சரம் எது ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment