Tuesday, December 6, 2022

நாதம்

அவ்வுடன் உவ்வும் மவ்வும் மனம் புத்தி அகங்காரங்கள் செவ்விய விந்து நாதஞ் சித்தமோ டுள்ள மாகும் ஒவ்வெனும் எழுத்தாம் ஐந்தும் உணர்வுதித் தொடுங்கு மாறும் பவ்வமும் திரையும் போலும் பார்க்கில்இப் பண்புந் தோன்றும். ஆணவ மூலமடி …..அகப்பேய் அகாரமாய் வந்ததடி கோணும் உகாரமடி …..அகப்பேய் கூடப் பிறந்ததுவே. ஒலித்துப் பாருங்கள். அகாரம் உயிரை மேலும் கீழும் செலுத்துகிறது. உகாரம் பக்கவாட்டில் திரும்புவதைப் போல் தோன்றுகிறது. “ம்” என்னும் மகாரம் ஓரிடத்தில் பற்றி நிற்கும் உணர்வைத் தருகிறது. ஓட்டுமொத்தஎழுத்துஓங்காரம். அதன்பிரிவுகளானஅ, உ, ம, விந்து, நாதம் ஆகியவையே இந்த அந்தக் கரணங்களை இயக்குகின்றன, அந்தந்த எழுத்துக்களையும் இயக்குவது ஒவ்வொரு கடவுள் தன்மை   நாத வடிவம் உயிர், அதாவது நிலை பெற்ற பிராணன் என்றும் அகாரம், உகாரம் மகாரம் எல்லாம் எப்படி இருக்கும் அதுவும் நிலை பெற்ற பிராணன், மற்றும் இயங்கும் பிராணனே ஆகும். நாதமே(உயிரே) மேலும் நீண்டு நிலை பெற்று இயங்கி அறிகிறது அறிவை இயக்குகின்றது.

No comments:

Post a Comment