Tuesday, December 6, 2022
துன்பமே அடையாத நாக்கு
துன்பமே அடையாத நாக்கு
எல்லாம் வல்ல அருட்சக்தி யான இறைவன் நமக்கு நாவை கொடுத்திருக்கின்றான் இறைவனின் படைப்பில் மகத்தான சிறியதொரு சதை துண்டு தான், இதனால் விளையும் விபரீதங்கள் பல உண்டு, அந்த சக்தி வாய்ந்த இந்தப் பொருள் உள்ளத்தின் கருத்துக்களை அதுவாகவே படம்பிடித்து காட்டுகிறது, நல் வழியை பின்பற்றி நடக்கிறேன் என்று சொல்வதும் ஒதுக்கித் தள்ளுங்கள் என்று சொல்வதும் அது தான் உங்களுக்குள் இருக்கும் எண்ணங்களை வெளிப் படுத்திக் காட்டுவதும் ,இந்த ஒரு சிறிய சதை துண்டு தான், இந்த சிறிய சதை துண்டு தானே இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும் விளக்குகின்றது, கற்பனையில் உள்ளதையும் உண்மையில் கண்டதையும் அது கண்ணாடியில் தோன்றுவதைப் போல தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது, தான் அறிந்த அனைத்தையும் இந்த நாவின் உதவியால் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறவும் செய்கிறது, சில வேளைகளில் இந்த அண்டத்தின் பிரபஞ்சத்தையும் உலகத்தையும் அளந்து பார்க்கின்றது, சூரியன் முதல் சந்திரன் வரையும் எடை போட்டுக் கொண்டு இருக்கின்றது, இறைவனையும் அவர் படைத்த உயிரினங்களையும் வம்புக்கு இழுக்கிறது, இந்த சிறிய சதை துண்டுக்கு உள்ள ஆற்றல் மனிதனின் அவயங்களில் வேறு எதற்கும் கிடையாது, இறைவனே இறைவனே என்று துதிக்கும் மறு சமயம் அந்த இறைவனையே வசை பாடுகின்றது நாவை கட்டுப்படுத்தாமல் பெரும்பாலோர் துன்பத்திற்கு ஆளாகிறார்கள், உங்கள் நாவின் இயக்கத்துக்கு கட்டுப்பாடு தேவை, சமாதானத்திற்கும் வழிவகுக்கும் இந்த நாக்குதான் உங்களுக்கு வெற்றியை கொடுப்பதிலும் இந்த நாக்கு தான் செயல்படுகிறது, ஒரு சில அறிவாளிகள் கூட தட்டுத்தடுமாறி இந்த நாக்கால் அவர்கள் துன்பம் அடைகின்றார்கள், ஒரு சில நல்ல காரியத்திலும் நாக்கு உரிமை காட்டினாலும் கெட்ட காரியத்துக்கு அது என்றைக்கும் தயங்கியதில்லை மற்றவர்களின் மர்மங்களை எல்லாம் சந்திக்கு இழுக்கும், நாம் இதில் தான் எத்தனை இன்பம் அடைகின்றோம், பொய் பேசுவதிலும் இது அதிகமான உச்சமான இன்பத்தை அடைகின்றது , எதையேனும் பேசிக்கொண்டிருப்பதை விட மௌனம் சாதிப்பது மிகச்சிறந்தது.தங்கள் மனம் போன போக்கில் எதுவும் பேசாதீர்கள் நமக்கு பயன் படாத எதையும் பேசாமல் இருப்பது நல்லது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment