வந்து வந்து உலகில் பிறந்து இறந்து போன எண்ணற்ற கோடி மக்கள் நினைத்து ஏமாந்து போன ஒரு விஷயம் என்னவென்றால் மறுபிறவி உண்டு,அதனால் அடுத்த பிறவியில் முக்தி பெற ஆவன செய்வோம்,இந்த பிறவியில் நமக்கு இருக்கும் பிரச்சனைகளினல் நம்மால் செய்ய வேண்டிய விஷயங்களை செய்து முக்தி பெற ஆவன செயலாற்ற முடியாது என்பதே.
ஏ மூடனே, இப்படித்தான் நீ ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றாய். புத்திகெட்ட நீ எப்பேர்ப்பட்ட அப்பாடக்கரானாலும் சரி உனக்கு மறுபிறவி என்பது இல்லை என்பதை அறியாமல் பகல் கனவு கண்டு தூங்குகின்றாய்.இந்த வாய்ப்பை தவறவிட்டு எந்த வாய்ப்புக்கு காவல் காக்கின்றாயோ?.மூடனே உன் வாய்ப்பு இத்தோடு முடியக்போகின்றது என்பதை எப்போது உணர்ந்து கொள்ளப்போகின்றாய்?
சாத்திர வேதங்கள் மறுபிறவி உண்டு என ஆணையிட்டு சொல்லுகின்றனவே என வக்காலத்து பேசி நிற்கின்ற மடையனே சொல்வதை சற்று செவி கொடுத்துக் கேள்.;மறுபிறவி உண்டு தான்,ஆனால் அது உனக்கில்லை.மறுபிறவி என்பது கர்ம பலன்களினால் உண்டாகும் தொடர்.அந்த கர்ம பாவபுண்ணிய தொகுப்புக்கு அதிகாரி நீ அல்ல என்பதை கவனிக்க தவறி விடுகின்றாய்.உன் அறிவு உனக்கு உண்மையை காட்டவில்லை,பொய்யை காட்டுகின்றது.உன் உயிரே உன் பாவபுண்ணிய செயலுக்கு அதிகாரி.நீ வேறு உன் உயிர் வேறு.உன்னை விட்டு பிரியும் உயிரானது உன்னையும் கொண்டு செல்லாது.உன்னை அம்போ என நாதியற்றவனாக நடுத்தெருவில் உதறிவிட்டு பாவபுண்ணியங்களை மட்டும் தூக்கிக்கொண்டு ஓடிவிடும்.ஆன்மாவான உன்னிடம் பாவபுண்ணியங்கள் தங்காது.ஆன்மாவான நீ தனித்திருக்கின்றவன்,உனக்கு உயிரோடோ உடலோடோ ஐக்கியம் என்பது இல்லவே இல்லை.
உயிருக்குத்தான் அனேகம் கோடி மறுபிறப்புக்களே ஒழிய உனக்கில்லை.உயிர் பிரிந்துவிட்டால் உனக்கென்று சொந்தமாக ஒன்றுமில்லை. நீ செய்து விட்டாய் என நீ நினைத்துக்கொண்டிருக்கும் அனைத்தும் உண்மையில் நீ செய்தவை அல்ல.அது உயிரால் ஆனது உயிரால் கர்மங்கள் ஆனவை.செத்த பின் உன் கதி தான் என்ன என கேட்கின்ற மூடனே கேள்,நான் நான் என அபிமானித்திருக்கும் நீ உண்மையில் நாதியற்றவன்.இருளிலே திக்குத்திசை தெரியாமல் உழல்கின்றவன்.அப்படிப்பட்ட உனக்கு ஒரு வாய்ப்பாக உயிரும் உடலும் அமையப்பெற்றது அவன் கிருபை.
இப்போது சொல். நாதியற்று போகவா நீ பிறவி கொண்டாய?.
எப்போது தான் உன் நாதனை அடையாளம் கண்டு கொள்ளப்போகின்றாயோ?.