Monday, November 28, 2022

அறிவு விளக்கம்

அறிவு விளக்கம் விவசாயம் என்பது கத்து கொடுக்கமுடியாது...மண்வெட்டி எடுத்து வெட்டி கிளைத்து வர வர அதுவே புது பரிணாமத்தில் பயிற்சியாக அமைந்து உங்கள் இயல்புக்கு தக்கபடி மலரும்... யாரையும் காப்பி அடிக்க வேண்டாம்...நீங்கள் நீங்களாகவே மலருங்கள்..பயிற்சியில் ஏதாவது திருத்தம் வேண்டும் எனில் உங்கள் அறிவே கொஞ்சம் கொஞ்சமாக காட்டிகொடுக்கும். உங்களுக்கு நீங்களே தான் குரு.. உங்கள் அறிவே உங்கள் குரு...உங்களை உயர்த்துவதும் தாழ்த்துவதும் உங்கள் அறிவு தான் ஒரு மரத்துல எப்படி ஒரு வித்துக்குள்ள இருக்கிற அறிவு தான் ஒரு மரத்தையே உருவாக்குவது போல... தந்தையின் சுக்கிலம் தாயோட சுரோனிததோட போய் கரு உருவாகி அதில் இருக்கிற ஒரு வஸ்து தான் மனித உருவை வளர்கிறது. ஐந்து இந்திரியங்களின் ஊடாக செய்யாத ஒரு அறிவு இருக்கின்றது. அதை தான் ஆறாம் அறிவு என்பார்கள் ஞானிகள். பஞ்ச இந்திரிய அறிவுகள் பாழானவை. பிரயோஜன படாதவை.. பஞ்ச இந்திரியங்கள் கொண்டு செய்யும் எந்த செயலை ஞானத்தை காட்டாது. ஆகையினால் பஞ்ச இந்திரியம் கடந்து மனிதன் மட்டும் செயலாற்றகூடிய வித்தையினை கண்டுனருங்கள். அதுவே மெய் சாதனம். பிராணாயாமங்கள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகள், மெய்யறிவு என்பது பஞ்ச இந்திரியம் கடந்த அறிவு. சாதாரண உபதேச சாதனைகள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகளே. இவை கறிக்கு ஆகாது. இந்திரியங்கள் வழி பிரயாணம் செய்தால் மனத்தை அடைவீர்கள், பிராண அபானன் வழி சென்றீர்களானால் சுழுமுனையை அடைவீர்கள்.. ஆனால் ஜீவவாசலை அடைய முடியாது ஜீவனுக்கு போகும் வாசல் ரொம்ப ரொம்ப சின்னது. அதாவது சின்னது என்றால் பொருள் ரொம்ப நுணுக்கமானது என்பதாகும். அறிவுக்கு வருவது ரொம்ப அரிது. இதை தான் வள்ளுவர் பெருந்தகையோ"அறிவுடயார் ஆவது அறிவர் அறிவிளார் அஃதறி கல்லாதார்" எள உணர்த்தினார் வித்தியா தத்துவத்தை தான் அறிவு என்கின்றனர்..... ஆனால் அந்த அறிவு நமக்கு காரியப்படாமல் உள்ளது , அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கிறோம்... அந்த அறிவினாலேயே ஆன்மாவை அறியகூடும்.. அல்லாது மனமோ, பிரானனோ ஆன்மாவை சென்று அடையாது... அதனாலேயே அறிவு விளக்கம் பெறவேண்டும் என வள்ளலாரும் சொல்லுகின்றார்... அதற்காகவே பல பயிற்ச்சிகளும் உள்ளது... ஆனால் விளக்கம் பெறுவதற்க்கு தயவே உத்தம வழி... தயவு வர்த்திக்க அறிவு விளக்கம் உண்டாகும்.. தூல சடமானது உயிருடன் தொடர்பு, அந்த உயிரானது அறிவுடன் தொடர்பு, அந்த அறிவானது ஆன்மாவுடன் தொடர்பு கொண்டவை “இப்போது என்னுடைய அறிவு அண்டங்டாங்களுக்குப்குப்பாலும் விரிந்திருக்கிறது” என வள்ளலார் சொல்லுவது என்னவென விளங்க தொடங்கும்..... அறிவு வரும் போது பற்றுதலும் விடுதலும் இருக்காது.... எல்லாத்தையும் கடவுளின் ஏகதேச விளக்கமாக பார்க்கும் போது விட்டு விடுவது என இருக்காது... அது உண்மையில் தனியாக பற்றுவது இல்லை... இருப்பதை வளர்த்துகொள்வதே.... தயவு என்பது நம் கூடவே இருப்பது, கடவுளின் ஏகதேச விளக்கம்.. அதை பற்றுதல் என்பது கூட இல்லை... அதை வளர்ப்பது...அதற்க்கு உணவு கொடுப்பது... அதுவாகவே இருப்பது.... அதை "அறிய” வேண்டும் என்பது தான் ‘அறிவு” .... சும்மா வாயினால் சொல்லும் தயவு என்பதுவல்ல அது.... அறிகிற தயவு... உணர்கிற தயவு... இருக்கிறதை அறிந்து கொண்டாலே போதுமானது... அதை கவனிக்க அது விழிப்புக்கு வரும்... அதை வளர்த்துகொள்ல அது வளரும்.... முதலில் இந்த தயவை புரிந்து அதனை கவனிக்க அது அதனுடைய சொரூபத்தை அறிவிக்கும்.... அப்படி அதன் சொரூப விளக்க நிலைகளை கவனித்து ஆழமாக செல்லுவது சத்விசாரம்... இவை ரெண்டும் சார்ந்து இருக்கிறது..... தயவு இல்லாமல் சத்விசாரம் பயனற்றது.. அறிவு பல விஷயங்களுக்கு புரிதல் உண்டாக்கிகொள்ளவேண்டும்...எல்லா விதத்திலும் மேன்மையான புரிதல் உண்டாகும்...அது காலத்தின் கையில் இருக்கிறது...நாம் அனைவரும் முயற்சி செய்யவேண்டும்...ஒரு சமயம் முயற்சி எல்லாம் வீணாகி போகும் தருவாயில் புரியவேண்டியது நன்றாக புரிந்திருக்கும்...அது முயற்சியினால் வந்தது அல்ல..அறிவின் மலர்ச்சியே தான்... அறிவு என்பது சற்குருபிரான் தயவால் கிடைப்பது என்பது நிச்சயம்..ஆனால் அது அவரால் நிகழ்வது இல்லை...சீடனின் ஆழ்ந்து செல்லும் திறத்தால் நிகழ்கிறது ...தூங்குற சீடனுக்கு சித்தர் குருவாகி வந்தாலும் பயனொன்றுமில்லை குரு விரல் சூண்டும் முன்னரே இலக்கை நிர்னயிக்க தெரிந்தவன் உத்தம சீடன் அதுனாலத்தான் குரு தட்சிணாமூர்த்தி சூண்டாமல் முத்திரையோடு நிறுத்திகொண்டார்..சீடர்களுக்கு நிர்னயிக்க தெரிந்திருந்தது தொட்டு காண்பிப்பது என்பது கையால் தொட்டு காண்பிப்பதுவல்ல...அறிவின் எல்லைக்கு கொண்டு வருதல்..மறைந்ததை அறிவுக்கு தருதல் தான் தொட்டுகாட்டுதல். ஒரு பொருளை பற்றி ஆழமாக அறியவேண்டும் எனில் அந்த பொருளைப் பற்றி ஆழ்மான கேள்விகள் உருவாக்கிகொண்டு கேட்பது எங்ஙனம் என கற்று கொள்ளவேண்டும்... பதில் தெரிகிறதோ இல்லையோ, யாராவது பதில் சொல்கிறார்களோ இல்லையோ, அதை கேள்விகளால் துளைத்து எடுக்கும் முறை இருந்தால் ஒழிய விசாரம் செய்யமுடியாது.... விசாரத்துக்கு முக்கியம் கேள்வி... பேருபதேசத்திலும் பெருமானார் கேள்விகள் கேட்கவே சொல்லுகிறார்.. அண்டம் எப்படி?.. அதன் சுபாவம் எப்படி , அதன் குணம் எப்படி... காது ஏன் பொத்தலாகி இருக்கு... இப்படி கேள்வி கேட்டு பதில் பெறுவதே விசாரம்... அதிலும் சத் விசாரம் எனும் போது அதிகமாக அறிவு உட்பெடும்... இப்படி விளக்கம் இல்லாத அறிவு விளக்கம் பெற்றுக் கொண்டிருக்கும்... இப்போது கூட நாம் சாட் பண்னிகொண்டிருக்கிறோம்... பிறகு வேறு வேலைகளுக்கு போய்விடுவோம், என்றாலும் அறிவானது இங்கு கேட்கப்பட்ட கேள்விகளையே அலசி கொண்டிருக்கும்... மனதுக்கு அதன் பதில் தெரியாது... அப்படி கேட்கும்போது ஒரு நொடி பொழுதில் அந்த பதில் எங்கிருந்தோ நமக்கு கிடைக்கும்.... இதுவே அறிவின் செயல்... செயல்பாடு "அப்படி செய்துகொண்டிருக்கும் போது நாம் பெற்றுகொள்ளவேண்டியதை பெற்றுகொள்ளலாம்" என்பது தானே பெருமானார் வாக்கு.... அதாவது இப்படி இருக்கும் தருவாயில் நமக்கு ஒரு பொருள் புலப்படும்... சாதனை எப்படி செய்யவேண்டும் என்பது.... அது தான் “பெற்றுகொள்ளவேண்டியது”......வள்ளலார் சொல்லி இருக்கும் நுணுக்கமான விஷயம் பிண்டத்திற்க்கு மத்தியாக உயிர்ப்பு எனும் ஜீவன் இருக்கிறது... அதுபோல அண்டத்திற்க்கு மத்தியாக அறிவு எனும் ஜீவன் இருக்கிறது... ஒன்று செத்து போகும் மற்ரையது சாகாது.... அப்படி அண்டத்திற்க்கு மத்தியாக....கண்ணாக இருப்பதே அறிவெனும் “திரு”...... அதுவே நடுக்கண்... அதுவே திருக்கோயில்...அதயே திறந்து கொள்ளவேண்டும்... அதற்க்கு தக்க ஆசாரியன் அருள் வேண்டும்...அல்லாது கண்ணை திரு திரு என முழித்துகொண்டு இருந்தால் திறக்காது.... அறிவை அடைந்தவர்கள் கருணை வேண்டும் ---------------====---------==== உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த உயிர் உலகத்தில் வரவேண்டுமெனில் ”இரு” பொருள்கள் ஒன்று சேரவேண்டும். ஆகையினால் “உயிரானது உலகில் வாழ” இரு பொருள்கள் சேர்ந்தால் அல்லாது ”வாழாது”. அதனால் “வாழ்வு” என்பது “இரு பொருள்களின்” சேர்க்கை என்பதில் ஐயமில்லை அன்றோ?. அந்த “இரு பொருள்கள்’ யாதெனில்” தாயும் தந்தையுமே” ஆகும். அதாவது தாயையும் தந்தையையும் அறிந்தவன் உயிர் வாழ்வான், ஏனையவர்கள் செத்தவர்களிடம் சேர்க்கப்படுவார் என்பதில் ஐயம் வேண்டாம், அப்படித்தானே?.ஆகையினால் “தாயையும் தந்தையையும் “ அறிவோமாக. நம்முடைய உடலில் உயிர் இருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது, ஆனால் அது எங்கிருக்கிறது என தெரியாது, அப்படித்தானே?. ஆகையினால் உயிர் எங்கிருக்கிறது என்பதை அறிய எளிய மார்க்கமானது அது எங்கிருந்து வந்தது என்பதை அறிதலேயாம்.அல்லவா?.அதாவது நமது தாயும் தந்தையும் நமக்கு இரண்டு பொருள்களை தந்துள்ளனர், ஒன்று விந்து , மற்றொன்று நாதம். இவை இரண்டுமே அவர்கள் நமக்காக தந்த மேலாம் பொருள்கள், அல்லவா?. அப்படியாயின் உயிரானது இவ்விரண்டையும் சார்ந்து தானே இருக்கவேண்டும் உயிரானது நமது தந்தையானவர் நமக்கு தந்த ”விந்து” எனும் நிலையத்தில் இருக்கிறது., அது கோடி சூரியபிரகாசத்துடன் இருக்கிறது என்கின்றனர் ஞானிகள். இங்கு ஒரு விஷயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன “விந்துவும் நாதவும்” ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது என்பதாகும்.அதாவது “விந்துவும் நாதவும்” கருப்பையில் சேர்ந்து ஏழு நாட்கள் அவை ஆனாகவோ பெண்னாகவோ அறிவு பிரியாமல் ”இரண்டுமற்ற” தன்மையில் இருக்கும், பிறகு ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ பிறவி எடுக்கும். ஆண் தன்மை மிகுந்தது ஆனாகவும் பென் தன்மை மிகுந்தது பெண்ணாகவும் இருக்கும். அப்போதும் ஆணிடத்தில் கொஞ்சம் பெண் தன்மையும் , பெண்ணிடத்தில் கொஞ்சம் ஆண் தன்மையும் இருக்கவே இருக்கும். இப்படியான “விந்துவும் நாதவுமே’ “ஒத்த பொருட்கள்”., இவை இல்லையெனில் உயிர் நிலை என்பது உலகத்தில் வராது. எந்த ஒரு உயிரும் உலகத்தில் வந்து முதிர்ச்சி அடைந்தாலும், அந்த உயிரின் அடிப்படை கூறான “ விந்துவும் நாதவும் அவ்வுடம்பில் குடி இருக்கும் ஆன்மாவானது உயிரையோ ,விந்துவையோ நாதத்தையோ அறியாது “நான்’ எனும் அகந்தையினால் அறிவழிந்து கெட்டு மரணத்தை அடைகின்றது. ஆகையினால் அப்படி போகாது உயி நிலையை கண்டடைந்து கொள்ளவேண்டின் நாம் “ஒத்த பொருள்களை” கண்டடையவேண்டும். அந்த இரண்டு பொருட்களையும் “அகர உயிர் எனவும் உகர உயிர் எனவும் “ கொளளுவர் ஞானிகள். இவை இரண்டும் “தாய் தந்தை” அணுக்களேயாம், அல்லது “நாத விந்துக்கள்”, அடுத்து இவ்விரண்டின் சேர்க்கையினால் பிறக்கும் உயிரே “ம்” எனும் ஜீவ ஆன்மா. ஆனால், ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது ,தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது.ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே,.....என அகத்தியர் சொன்னதுவே உயர்ஞானம்...வாழ்க குரு “திருவடி, வாழ்க சிவபாதம் கூறும் ஒளி ஒலி தத்துவங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் இரண்டையும் கடந்து நிற்பதுவே உயிர் தத்துவம்.... ஒளியும் ஒலியும் மனதினால் காணப்படுவதும் கேட்க்கப்படுவதும் ஆம்.... ஆனால் உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்...அதற்க்கு மனம் தேவை இல்லை..... ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?... அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது... அறிவானதே அந்தகாரத்தை ஊடுருவும் தன்மை கொண்டது...அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்...அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்....எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது

No comments:

Post a Comment