Tuesday, November 29, 2022

னித்தியம் -அனித்தியம் அறிவோம்==

===னித்தியம் -அனித்தியம் அறிவோம்===== அறிவானது அறிவற்ற தன்மையில் இருந்து மீண்டு அனேக கோடி கால கர்ம மல பரிபாக நிமித்தம் அனேக கோடி கால அனேக கோடி யோனி பேதங்களாக பிறந்து பிறந்து பரிபாகமுற்று ஒருபோது பரிபாகம் மீண்டும் அற்று கீழ்நிலை மேனிலை என சுழன்று உழன்று முடிவில் மனித உருவறிவு பூண்டு வந்து பிறந்திட்டோம் எனில் இதுவும் அனித்தியமே. முடிவாக தான் மனித தூலம் தரப்பெற்றது எனில் இதன் மாமகத்துவம் சற்று புரியவும்.இப்பிறப்பு நழுவி விடில் அடுத்து மீண்டும் ஒரு மனித தூலம் அமைந்திடும் என இறமாந்திருத்தல் அனியாயம்.ஏனெனில் இனி நீ பிறக்கபோவதில்லை எவ்வுயிராகவும் இவ்வுலகில். நீ பிறவிகளின் பரிணாமத்தில் முற்றுப்பெற்று விட்டாய்.உனக்கு அனேக கோடி தவப்பலனாய் மனிததூலம் வழங்கப்பட்டுவிட்டது. இவ்வுலகம் போராட்டக்களம்,பரிசும் உன்னிடமே இருக்கிறது,அதை உனக்கு வழங்குபவனும் நீயே தான்.அப்படியான ஜீவபரிசை வாழ்நாள் முழுதும் கொண்டு திரிந்தும் அதன் பலனை அறிவு இழந்து நழுவவிட்டு விட்டால் மீண்டும் ஒரு முறை கூட வாய்ப்பு உண்டு,அப்படி பலகோடி மனிததூலம் கொண்டு பரிசினை வெல்லலாம் என கூமுட்டைகளாக இருந்துவிட்டு போக கிடைப்பதே நித்தியம்.பரிசினை வென்று பிறவியின் பயனை நுகர்ந்து பரிபூரணமுற்று போக கிடைப்பதுவும் நித்தியமே தான். அனித்தியம் எனும் பிறவி தோன்றி மறைந்து கொண்டே பல பல யோனி பேதங்களாக சதா நிகழ்ந்து கொண்டிருக்கும். நினித்தியம் எனும் வாழ்க்கையோ முடிவற்றதுவாய் சர்வ காலத்துக்கும் தொடர்ந்து கொண்டிருப்பதுவாம். நன்மை புரிந்தவன் நித்தியமான சொர்க்க பலனையும், தீமை புரிந்தவன் நித்தியமான நரக பலனையும் அடைவான்,அவனே தேடி கொண்ட பரிசு அது. சொர்க்கமும் நரகமும் ஒரு போதும் ஒருவனும் அவன் கடந்து வந்த எந்த கோடிகால பிறப்புகளிலும் அனுபவித்தது இல்லை.மண்ணாக மரமாக புல்லாக புழுவாக பிறந்திளைத்த எந்த பிறவிக்கும் சொர்க்கம் நரகம் என கிடையாது. சொர்க்கமும் நரகமும் மனிதனாக பிறந்தவர்களுக்கு மட்டும் நித்தியமாக வகுக்கப்பட்டுள்ளது.அனித்தியத்தில் இருந்து நித்தியத்துக்கு புகப்பெறுபவன் மனிதன் மட்டுமே. ஏனைய யோனிபேத பிறப்புகளுக்கு இல்லை. நித்தியத்தில் எத்தகைய நித்தியம் வேண்டும் என்பதை போராடி பெறுவாய்....னித்தியமான சொர்க்கமோ...அல்லது நித்தியமான நரகமோ. Hseija Ed Rian தூங்குறோம்..அப்போது உலகத்தை அறியவில்லை...ஆனால் உலகம் இருந்தது தான்..... விழிக்கிறோம்..அறிவு வருகிறது...அப்படி உலகமும் வருகிறது.அறிவானது எங்கும் போய்விடவில்லை,ஆனால் அது அறிவற்ற தன்மையில் இருந்ததனால் உலகத்தை அறியவில்லை,பிறவிகளை அறியவில்லை.அவ்வண்ணம் அறிவின் மலர்ந்த சொரூபம் மனிததூலம்

No comments:

Post a Comment