Monday, November 28, 2022

உடல், ஓ பிக்குவே ஆன்மா

உடல், ஓ பிக்குவே ஆன்மா அற்றது. ஒருவேளை ஓ பிக்குவே இவ்வுடலில் ஆன்மா உறைந்துள்ளது எனில் துக்கத்தினால் அவதியுறும் தன்மை இல்லாமல் இருந்திருக்கும்,’இந்த உடலம் இவ்வண்ணம் இருக்கட்டும் அல்லது இவ்வுடலம் அவ்வண்ணம் இருக்கட்டும்’ எனும் ஏற்பாட்டுக்கு வாய்ப்பு இருந்திருக்க்கும்.அவ்வண்ணம் எந்த ஏற்பாடும் இல்லாமல் இருப்பதினால் ,அவ்வண்ணம் ஏற்பாட்டுக்கு ஆதாரமான ஆன்மா இல்லாமல் இருப்பதினாலும்’ இவ்வுடலம் இவ்வண்ணம் இருக்கட்டும் அல்லது இவ்வுடலம் அவ்வண்ணம் இருக்கட்டும்’ எனும் கட்டளை செய்யும் ஆன்மா இல்லாமல் உடல் முதல் ,மனம், மெய்யுணர்வு வரைக்கும் அனைத்தும் ஆன்மாவற்றது                                  ~புத்தர்  சாதாரண மக்களுக்கு இது புரியாது ஜீ..இந்தியாவை விட்டு புத்த தம்மம் அகன்று போக நிச்சயமான காரனங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் ஆன்ம தத்துவம். ஆன்ம கோட்பாட்டை அவ்வளவு எளிதாக இந்திய சிந்தனையில் இருந்து அகற்றிவிட முடியாது. எப்போது ஆன்ம தர்சனம் மயக்கம் என தெளிவு வருகின்ரதோ அப்போஒது தான் புத்த தர்சனம் என்ன என புரிய ஆரம்பிக்கும். இல்லையெனில் எண்ணற கர்ம சுழற்சிகளின் ஊடாக பயணித்து பல பிறப்புகள் கடந்து தான் சாத்தியம் என்பது நிதர்சனமான உண்மை ஆன்மாவே ரெண்டாகி மனம் என திரிகிறது.. உண்மையில் மனமே ஆன்மா.. மனமில்லையெனில் ஆன்மா என தனியாக ஒன்றுமில்ல்லை... ஆன்மாவும் மனமும் ரெண்டாக பிளவு பட்டிருப்பதே ஆன்மாவும் மனமும் இரண்டு என பேதலிக்க வைக்கிறது நான் நான் என ஆன்மாவை சுட்டி காட்டிகொண்டிருப்பதே மனம் தான்.. அது தன்னையே தான் என சுட்டிகாட்டுகிறது... வேறு அதை விட்டு பின்னமாக இருக்ககூடிய வேறொரு பொருளை அல்ல... மனமே மனத்தை சுட்டிகாட்டி இது ஆன்மா என மலைக்க வைக்கிறது பார்ப்பவனும் நானே.. அதை பார்க்க வைப்பவனும் நானே..இது தான் நிலை.... இது மயக்கம் இவை ரெண்டுமாக இருப்பது மனம் எனும் ஆன்மாவே தான் Hseija Ed Rian ‘நான்’ எனும் இருப்பின் நிதர்சன ரூபம் வஜ்ர பிம்பமாக வெளியாக மனதின் மயக்கம் அற வேண்டும், இல்லையெனில் ஆன்மா என ஒன்று தனியாக இருக்கின்றது என மனம் பேதலித்து திரியும் Hseija Ed Rian மனமே ‘நானாக’ மனம் தன்னையே ‘நான்’ என சொல்லி, அந்த ‘நானே’ மனமல்ல ,மற்றொன்று எனவும் ‘தன்னையே’ அறியாமல் உழன்று கொண்டு திரிகிறது Mathi Hseija Ed Rian மனமே இல்லையெனில் கர்மம் இல்லை அப்படித்தானே... "என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே உன்செயல் என்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ இங்ஙனம் வந்து மூண்டதுவே......பட்டினத்தார் Hseija Ed Rian கர்மம் என்பது எல்லா செயல்களும் தான், நன்மையானாலும் சரி தீமையானாலும் சரி ,அவையெல்லாம் கர்மம் எனும் கட்டுக்கள் வரும். அகர்மம் என்பது கர்மங்களை நிராகரிப்பது, செயலாற்றாமல் இருக்கும் தன்மை. விகர்மம் என்பது ஞானம், எல்லா கர்மங்களையும் பந்தம் அற்று நிசங்கத்துடன் செயலாற்றும் அர்ப்பண செயல் Hseija Ed Rian கர்மம், மனத்தால் செய்யபடுவது உண்டு, உடலால் செய்யபடுவதும் உண்டுமனம் உடல் சேர்ந்து செய்யபடுவதும் உண்டு Hseija Ed Rian உடலால் செய்தாலும் மனதால் செய்தாலும் இவை இரண்டும் சேர்ந்து செய்தாலும் கர்மம் கர்மம் தான், அதற்க்கு ஏற்ப பலன் நிச்சயம் உண்டு. வினை உண்டு எனில் வினை பயனும் கூடவே உண்டு. இவை இரண்டும் அபின்னமானவையே. Mathi குறைபாடுகள் தேகமுள்ள மனிதர்களும், சிறுவயதிலே அறிவு மேலோங்கி இருக்கும் நபர்களையும் காண்கிறோம்... இது கர்மாவை வைத்து தான் நடக்கிறதா ? Hseija Ed Rian குறைபாடுள்ள மனம் கொண்டவர்கள் செய்யும் கர்மமும் பலனை கொடுப்பனவையே, குறைபாடுள்ள உடலை கொண்டவர்கள் செயலும் பலனை கொடுப்பவையே.ஆனால் குறைபாடின் தன்மைக்கு ஏற்ப்ப குனநலன்களும் குறையாகவே இருக்க வாய்ப்பு அதிகம் அல்லவா?. ஆனால் கர்ம பிறவி என்பதும் கர்ம பூமி என்பதும் ஒன்றோடொன்று பந்தம் கொண்டவை. 80 ஆயிரம் கோடி கர்ம பூமிகள் இருக்கின்றனவாம். அவற்றில் ஒவ்வொன்றிலும் பிறப்பதும் கர்ம புண்ணியம் பாவம் நிமித்தமே தான். Hseija Ed Rian கர்ம பூமிகள் என சொல்லபடுவது இப்பூவுலகு போல, கர்ம பலன்கலால் பிரதிபலிக்ககூடிய உலகங்கள் தாம். இவ்வுலககமும் கூட ஒரு பிரதிபலிப்பு தான். கர்மங்களுக்கு ஏற்ற பிரதிபலிப்பு Hseija Ed Rian இவ்வுலகத்தின் ஒத்த கர்ம நியதி கொண்ட பிறப்புகள் மட்டும் தான் இங்கு பிறக்கும், பிறக்க முடியும். இந்த உலகத்துக்கு ஒவ்வாத மேல்நிலை கீழ்நிலை பிறப்புகள் இங்கு பிறக்கமுடியாது. அவை ஏனைய கர்மபூமியிங்கல் பிரக்கும்.  ·  Hseija Ed Rian ஜோதிடம் கணிதம் வரைதான் கற்றேன், பலஸ்ருதிக்கு போக   Hseija Ed Rian பித்ருகர்மம் என்பது செயல் தானே, அப்போது பலன் கூடவே இருக்கவேணும் அல்லவா?    Hseija Ed Rian ஒருவன் ஒரு பாறாங்கல்லை உடைக்கின்றான் என கொள்ளுங்கள். அந்த உடைக்கும் செயலுக்கு பலன் அவன் கர்ம பந்தத்தில் பலனாக பரிணமிக்கும். அதேவேளை உடைக்கபட்ட பாறாங்கல் ஒருபோதும் பழையபடி ஆவதில்லை, உடைத்த பலனை தாங்கி எக்காலமும் நிற்கின்றது. அடுத்து வருபவனுக்கு உடைக்கும் வாய்ப்பு கிடையாமல் போய் விடுகின்ரது,ஏனெனில் அது உடைபட்டு விட்டது. அப்படியிருக்க, உடைபட்ட கல்லை தரிசிக்க கர்மம் செய்தவன் மட்டுமே அதை தரிசிக்கிறான். முழு கல்லை தரிசிக்க கர்மம் உடையவன் உடைந்த கல் அருகாமையில் வருவதில்லை.

No comments:

Post a Comment