Tuesday, November 29, 2022

தலை வாசி ஏது -கால் வாசி ஏது-குண்டலி தான் இங்கேது?

தலை வாசி ஏது -கால் வாசி ஏது-குண்டலி தான் இங்கேது? ஆகார முதலிலே பாம்ப தாக ஆனந்த வயலிலே படம் விரித்தே ஊகார முதலிலே யொத்தொ டுங்கி ஓடி வகாரத்தி னாவை நீட்டிச் சீகாரங் கிடந்ததோர் மந்திரத் தைச் சித்தப்பி டாரனார் போதஞ் செய்ய மாகாரப் பிறப்பையும் வேர றுத்து மாயபந்தங் கடந்தோமென் றாடாய் பாம்பே. தந்திரஞ் சொல்லுவார் தம்மை யறிவார் தனிமந்தி ரஞ்சொல்லுவார் பொருளை யறியார் மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார். அந்தரஞ் சென்றுமே வேர்பி டுங்கி அருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே இந்த மருந்தினைத் தின்பீ ராகில் இனிப்பிறப் பில்லையென் றாடாய் பாம்பே. (பாம்பாட்டி சித்தர்

No comments:

Post a Comment