Tuesday, November 29, 2022

எந்த வித்தை மெய்யானது

எந்த வித்தை மெய்யானது? ஆன்மீகவாதிகள் பொதுவாக பார்த்தால் எதையாவது ஒரு சம்பிரதாயத்தை முன்னிறுத்தியே முன்னேறுவதை பார்க்கிறோம், அந்த சம்பிரதாயம் தான் பெரிய வித்தைண்ணு சொல்லிகிட்டு இருப்பதையும் பார்த்திருக்கிறோம். பக்தியில் திளைக்கிறவன் சிவன் தான் பெரிசு அல்லது விஷ்ணு தான் பெருசு அல்லது அம்மன் தான் பெரிசுண்ணு கோஷம் போட்டுகிட்டு இருப்பாங்க. மனம் அவங்களை மயக்கி வெச்சிருக்கும். ஒருவித போதை போன்றது இது,அவர்களின் இஷ்ட்ட தெய்வ சங்கல்பத்தால் போதை கொண்டு இருப்பார்கள், இதையே பக்தி என்கிறோம். இதில் தான் மிதம் தீவிரம் என இருவகை. இந்த பிரிவு எல்லா மதங்களிலும் உண்டு. ஒருத்தன் சண்டைக்கு போவான், மற்றவன் தான் உண்டு தன்பாடு உண்டு என இருப்பார்கள்.இவர்களுக்கு ஆராதனை செபம் தோத்திரம் இவையே போதும், இவற்றில் அடிமுட்டாளாக இருப்பான், ஞானம் சொன்னாலும் காதுக்கு ஏறாது. இப்படியானவர்களை சமீபிக்காமல் இருப்பது நலம். இரண்டாவது குரூப்பு என்பது சற்று உயர்ந்தவர்கள், கொஞ்சம் கேள்விஞானம் கொண்டவர்கள். பலவிதமான ஆன்மீக கேள்விகளை தன்னகத்தே கொண்டவர்கள், ஆனாலும் ஞானம் என்ன என விளங்கி கொள்ள முடியாதவர்கள், இவர்களிடமும் பக்தி நிறைந்திருக்கும்,ஆனால் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள். அரைவேக்காடுகள் என சொல்லலாம்.இவர்களை சொல்லி புரியவைப்பது கடினம். அதனால் இவர்களிடமும் சமீபிக்காமல் இருப்பது நலம். மூன்றாவது வகையறா என்பது ஏராளம் படித்தவன், இவன் ஒன்றையும் ஆழமாக செல்லமாட்டான், எல்லாத்தையும் படிப்பான், பெரிய குப்பைதொட்டியாக இருப்பான். எல்லா குருமார்கள் கிட்டயும் போவான், எல்லா சடங்கு சம்பிரதாயம் நம்பிக்கை என எல்லாம் இருக்கும், ஆனால் தெளிவு இருக்காது. இவனையும் சமீபிக்காமல் இருப்பது நலம். நான்காவது வகை போலிகுரு. ஒண்ணும் தெரியாது, நெறைய வித்தை வகையறாக்கள் இவனிடம் இருக்கும், எல்லாத்தையும் கூவி கூவி அழைத்து வாரி வாரி வித்தைகள் வழங்குவான். எதுக்கு கொடுக்குறோம், யாருக்கு கொடுக்கிறோம் என கூட அவனுக்கே தெரியாது, ஆனால் குருவாக இருக்க ஆசைபட்டு இப்படியெல்லாம் செய்துகிட்டு இருப்பான், பணத்துக்கு ஆசைபடுகிரவனும் உண்டு, பணம் வாங்காமலேயே கிடைக்கிறவங்கலை எல்லாம் குட்டிசுவராக்கி கிட்டு இருப்பான். இவனும் சமீபிக்க தகுதியற்றவன். ஐந்தாவது வகையானவன் எல்லாம் கற்றவனாக இருந்தாலும் ஒன்றும் புரியாதவனாக இருப்பான், இவனிடம் இருக்கும் அருமையான குணம் என்பது தனக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை உணர்ந்திருப்பான். அதனால் தன்னடக்கம் இவனிடம் இருக்கும், ஆனாலும் குருமார்கள் முன் மண்டியிட இவன் ஆணவம் இடம் கொடுக்காது. ஆகையினால் இவன் நுணுக்கங்களை அறியாமலேயே போய்விடுவான். இவனும் சமீபிக்க தகுதி அற்றவன். ஆறாவது வகையானவன் கற்றதெல்லாம் மெய்யல்ல என உணர்வு கொண்டவன், அனைத்து வேத ஆகம சாத்திரங்களுக்கும் மேலாக அறிந்து கொள்ள வேண்டிய அறிவு இருக்கிறது என புரிந்து கொண்டவன், ஆனால் ஆன்ம விளக்கம் இன்றி அலைந்து கொண்டிருப்பான். எதை தான் இவனிடம் போய் சொன்னாலும் ஏற்றுகொள்ளமாட்டான், அலைவதே அவன் கர்மம். இவனையும் சமீபிக்க தகுந்தவன் அல்ல. ஏழாவது வருகிறவன், சாதனையாளன். யராவது சொல்லியோ, அல்லது எங்கிருந்தாவது கேட்டோ, அல்லது எதாவது நூல்கலை கிளறியோ கொண்ட அறிவால் கடினமான சாதனை செய்பவன், தீவிர வைராக்கியம் கொண்டவனாக இருப்பான், ஆனால் தான் செய்வதை மனைவிக்கு கூட சொல்லமாட்டான், அப்படி ரகசியம் காப்பவன். அவன் செய்ய்ம் வித்தையே பெரிசு எனும் எண்ணம் இவனுக்குள் இருப்பதால் மற்றவர்களை பொருட்படுத்தமாட்டான். எப்போதும் தனிமையில் இருப்பான், சாதனையில் கண்ணும் கருத்துமாக இருப்பான். இவனுக்கும் ஆன்ம விளக்கம் இருக்காது, ஆகையினால் சமீபிக்க தகுந்தவன் அல்ல. எட்டாவது வருகிறவன் ஞானமுட்டாள் என வகைபடுத்தலாம். தான் செய்யும் வித்தை பரமோன்னதமானது, வித்தையினால் சொர்க்கம் போகலாம், பரமண்டலத்தில் ஏறிவிடுவேன் என பெருமையினால் இருப்பவன். சிறந்த சாதனையாளனாக இருந்தாலும் இவன் தேடுதலை நிறுத்திகொண்டவனாகையினால் இவனுக்கும் ஞான விளக்கம் இருக்காது. எது சொன்னாலும் உறைக்காது, சாகும் தருவாயில் கூட உபதேசம் ஏற்றுகொள்ள தயங்குவான். அவன் வித்தையே பரமமானது என முட்டாள்தனமாக இருப்பவன்.இவனையும் சமீபிக்காமல் இருப்பது நலம். ஒன்பதாவது வருபவன் வித்தையை நம்புவான் ஆனால் குருவை நம்பமாட்டான். வித்தை மட்டும் போது ஆன்மவிளக்கம் உண்டாகும் என இருப்பவன். வித்தையின் நுணுக்கம் ஆழ்ந்த அனுபவம் கொண்ட குருவிடம் இருக்கின்றது என விளங்கிகொள்ள மாட்டான். குருவை மனுஷதூலம் என கருதி மரியாதை செய்யமாட்டான். குருவிடம் மறைவான ஞானவிளக்கம் குடிகொள்கின்றது என புரிந்துகொள்ளாமல் வித்தையை மட்டும் வாங்கிகொண்டு ஓடிவிடுவான்.இவனும் கதைக்கு ஆகாதவன். ===(தொடரும் உலகத்தில் பெரிய வித்தை என்பது நான் பிரம்மாண்டமான ஏதோ வித்தையை பண்ணி கொண்டிருக்கிரேன், மற்று எல்லா வித்தைகளும் என் வித்தைக்கு மட்டமானது எனும் ’வித்தை பெருமை’, அது எல்லா வித்தை பண்ணுபவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம். யார் ஒருவருக்கு இப்படியான வித்தை கர்வம் இருக்கிரதோ நிச்சயம் அவர்கள் தனக்கு தானே வேலி கட்டி கொண்டு தன்னந்தனியாக கம்பு சுற்றுபவர்கலே ஆம். அவர்கள் மற்றவர்களை, ஏனைய வித்தைகளை, சம்பிரதாயங்களை அறிந்து கொள்லாமலேயே அவை அனைத்தும் தவறு என கங்கணம் கொண்டுவிடுவர். அவர்கள் தன்னை சுற்றி வேலி கட்டி உட்கார்ந்து விடுவதனால் அவர்கள் அந்த வேலிக்கு வெளியே வந்து வெளியில் உலாவி வரும் வித்தைகள் என்னன்ன என்பதை கற்க்க இயலாமல் தனித்து விடுவர். இதன் பரிணாமம் தான் "தன் வித்தை தான் பிரம்மாண்டம்", இதுவே பெரிய வித்தை எனும் தற்பெருமை. இதை வெற்றி கொள்வதே பெரிய வித்தைகளுக்கு எல்லாம் பெரிய வித்தை எந்த வித்தைகளும் ஞானத்தை நேரடியாக தராது.. அதுக்காக அவையெல்லாம் அர்த்தமற்றவை அல்ல... ஒவ்வொரு வித்தைகளையும் எந்த எதிர்ப்புமின்றி உள்வாங்கி செயலாற்றும் போது அவை நமக்கு தனியான ஒரு வித புரிதலை சன்மானமாக தருகின்றன.. அந்த புரிதலாகிய சன்மானம் நம் உயிரோடு ஒட்டிகொள்கின்றது.... அது நம்மை அடுத்த நிலைகளுக்கான படிகலை அடையாலம் காட்டுகின்றது... முதல் படியே பயனற்றது என ஒருவன் நினைத்து கொண்டிருந்தால் அவனுக்கு புரிதல் வருதல் எங்ஙனம்?.. அடுத்த படியை அடையாளம் காண்பது எங்ஙனம்... அதனால் சரியான வளர்ச்சியில் இருப்பவனுக்கு என ஒரு வித்தை நிரந்தரமாக இருக்காது... அவன் வித்தைகளின் ஊடாக பயணித்து கொண்டிருப்பான்.. அவன் எந்த வித்தைக்கும் அடிமைபட்டு கிடப்பதில்லை.. அவன் புரிதலே அவன் நிரந்தர வித்தையாக மலரும் Hseija Ed Rian Sathya Narayanan சாந்து உண்டாகட்டும் ஜீ..மனம் அமைதி பெறட்டும்....அதிக ஆவல் கொண்டால் மனம் அமிதியை இழந்துவிடும்...ஆவலே வினையாகி விடும்..காமம் தலைகேறினவனுக்கும் கோபம் கொண்டவனுக்கும் அதிக ஆவல் இருப்பவனுக்கும் அறிவு வேலை செய்யாது. நடுநிலையே ஞானத்துக்கு அடித்தளம்

No comments:

Post a Comment