Wednesday, November 30, 2022

ஆன்ம விடுதலை

===== ஆன்ம விடுதலை ===== முக்தி என்பது உடலுக்கு உயிருக்கோ, உனக்கோ அல்ல. முக்தி என்பது சுழற்சியின் *விடுதலை*. கர்மம் எனும் மகா சாகரம் சதா ஓயாமல் அலை வீசி, நொடிக்கு நொடி ஆசையெனும் காற்றில் அலைவீசி கொண்டிருக்கும் தன்மையில் இருந்தும் விடுதலை. *கர்மம் எனும் சக்கரத்தில் இருந்து விடுதலை.* ஒவ்வொரு பிறவியும் கர்மத்தின் எச்சங்கள் தான், கர்மங்கள் தான் மறு பிறப்பு கொள்கின்றன, அவையே பிறப்பின் பீஜம், பிறப்புக்கு ஆதாரம், இவ்வண்னம் கர்மங்களினால் பிறவிகள் நிலைகொண்டுள்ளன. "நீ" ஒவ்வொரு பிறவியிலும் செத்து போகிறாய், உண்மையில் சாவு என்பது உன் மனதின் சாவு, "நான்" எனும் உன் எண்ணத்தின் சாவு, "நான்" எனும் தற்போதத்தின் சாவு.... வந்த வந்த பிறவிகள் எல்லாம் சாவு கொள்ளும், ஞானியென்றோ சித்தனென்றோ சாவுக்கு வேறுபாடு இல்லை, "நீ" இந்த சாவிலிருந்து தப்ப போவதில்லை. எத்தனித்தாலும் இல்லையென்றாலும் செத்துத்தான் போவாய். இதெல்லாம் உன் கற்பனையின் சாவு தான், உன்மையில் நீ ஒருபோதும் மறு பிறப்பு எடுப்பதில்லை, ஏனெனில் ஒரே “நான்’ அதே "நானாக” பல பல பிறவிகளில் அதே “நான்” ஆக இருப்பதில்லை. "நான்" சதா மாறிகொண்டிருக்கும், மனமும் மாறி கொண்டிருக்கும், உடலும் மாறிக்கொண்டிருக்கும்... கர்மம் மட்டும் நிலையாக சுழன்றுகொண்டிருக்கும். *இந்த கர்ம சுழற்சியில் இருந்து விடுதலை என்பதே முக்தி.* -❣️திரு. ரியான் ஐயா அவர்கள்❣️ கர்மாவே காரணி எனும் அறிவு மலர மனம் மணக்கும், அதனுட் அகந்தைக்கு அழிவு வர ஆரம்பிக்கும். பொய்யான கர்வம் போய் தொலையும், கெட்ட நாற்றம் அகல அறிவு மணக்கும். அறிவு மணக்க ஆனவம் அகலும், ஆணவம் அகல ஞானம் தென்படும். ஞனத்தில் ஊன்ற *விடுதலை* சித்தியாகும். முதுமை பிணி மரனம் என்பவை ‘நான்’ எனக்குத்தான் நிகழ்கின்றன என வருத்தமுற்றேன், இல்லை இங்கு ‘நான்’ இருக்கவேயில்லை, அப்புறம் இவை எனக்கு எங்ங்னம் வரும் என தெளிவுற்றேன், இவை ‘என்னை’ பற்றியிருக்கவில்லை, ‘நான்’ தான் இவைகலை பற்றியிருக்கின்றேன் என அறிவறிந்தார், *விடுதலை* அடைந்தார். மரணம் என்பது எப்படி உறுதியானதோ, அப்படி விடுதலையும் உறுதியானதே. பிறந்தவன் மரணத்தாக வேண்டும், அதுபோல சுழலில் சிக்கியவனும் கரையடைந்தாகவேண்டும். இது முற்றான நியதி விக்ரக வழிபாடு முதல் தபசெபங்கள் அனைத்தும் உபாதிகளெ, மனதை செம்மையாக்கும் பணிகளே அவை செய்கின்றன. சூட்சுமம் அறிந்து செயல்பட கர்ம விடுதலை நிகழ்கின்றது. தன்னலமற்ற குணம் வலர்து பூத்து காய்த்து தன்னை இழக்கும் போது ஞானம் மிளிர்கின்ரது, விடுதலை சித்திக்கின்றது. விடுதலை என்பது விடுதலை ஆனவர்களின் உனர்வுநிலை அன்று. அவர்களுக்கு விடுதலை எனும் உனர்வு இருக்காது. சிறை எனும் உணர்வும் இருக்காது. இவை இரண்டும் அற்ற நிலை. எனக்கு விடுதலை கிடைத்து விட்டது எனும் உணர்வு அவனில் எழுந்தால் அக்கனமே அவன் சிறைவயப்பட்டுவிடுவான்.அவ்வலவு நுணுக்கமானது இதன் தன்மை ஆனால் இவனின் மூடபுத்தி பலபல கர்மங்கலை செய்யவே இவனை தூண்டும், அப்படி கர்மங்களிலேயே மீண்டும் மீண்டும் அகப்பட்டு என்று தான் கிடைக்கும் விடுதலை என ஏங்கி ஏங்கி சென்மங்கள் பல புகுந்து கொண்டிருப்பான், கர்மங்கள் சம்பாதித்துகொண்டுமிருப்பான்.விடுதலை என்பது அசாத்தியமாக இஅவனுக்கு தோன்றும். மாயவலைக்குள் சிக்கி தவித்து தவித்து கர்மபலன்களால் மீண்டும் மீண்டும் பிரந்து கொண்டேயிருப்பான்.. --  .திரு. ரியான் ஐயா அவர்கள்

No comments:

Post a Comment