Friday, October 28, 2022

குரு த்யானம் ப்ரம்ம ஸாட்ஷாத்காரம்

 குரு ரூபம் ப்ரம்ம ஸ்வரூபம் என நினைப்பது அஞ்ஞானம், ஆனால் குரு ஸ்வரூபம் ப்ரம்ம ரூபம் என்பது ஞானம். முதலில் வருவது குருவின் தூல உடலை குறித்தானது, இரண்டாவது சொன்னது குரு எனும் பதத்தை குறித்தானது.முதலில் சொன்னது குரு எனும் சொல்லால் சுட்டிக்காட்டப்பட்ட நபரை குறித்தானது, இரண்டாவதாக குறிப்பிட்டது குரு எனும் சொல்லால் சுட்டிக்காட்டப்படும் ப்ரம்ம நிலை. இவ்வாறாக குருவே ப்ரம்மம் என அறியப்படுகின்றது.