Tuesday, October 11, 2022

ப்ரம்மஞ்ஞானம்

 ப்ரம்மஞ்ஞானத்தை போதிக்கும் வேதாந்த நூல்கள் அனைத்தும் மனதுக்கும் வாக்கிற்கும் எட்டாத ப்ரம்மத்தை பக்கம் பக்கமாக விளக்குவதற்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன.

எத்தனை கோடி பக்கங்களால் விளக்கினாலும் எத்தனை கோடி நிரூபணங்களினாலும் ப்ரம்ம விளக்கம் உண்டாகுமா. அஹம் பரம்மாஸ்மி நான் பரம்மமாக இருக்கின்றேன் என சிந்திப்பதனால் ப்ரம்மத்வம் உண்டாகுமா .? மூடனானவன் இப்படி முயல்கிறான்.

Monday, October 10, 2022

ப்ரம்ம தர்சனம்

 வேத வேதாந்த நூல்கள் அவ்யயம் அசிந்யம் என ப்ரம்மத்தை வருணிக்கின்றன. விவரிக்க இயலாததும் கற்பனைக்கு எட்டாததும் எனப்பொருள்.இப்படியாக பிரம்ம சொரூபத்தை மறைத்து குரு பரம்பரைக்குள் ஒளித்து வைத்துள்ளது. கால ஓட்டத்துள் அது மறைந்தே போனது.குரு எனும் பதம் இந்த ரஹஸ்யத்தை திறமையாக மறைத்துக் கொண்டது.காலப்போக்கில் குரு என்றால் ஒரு நபர் என கருதக் கொள்ள திரிந்தது. உண்மை மறைத்துக் கொள்ளப்பட்டது.ப்ரம்ம ஸத்யம் விளங்கா புதிராக ஒளிந்தது.ப்ரம்மத் தியானம் அழிவுண்டு போனது.

Sunday, October 9, 2022

குரு ரஹஸ்யம்

 ...குரு ஸ்லோஹ ரஹஸ்யம்...


உண்மையின் மறை ரஹஸ்யம் எப்பொழுதும் வெளியரங்கமாக வைக்கப்பட்டிருக்காது. குரு சாட்சாத் பரப்பிரம்மம் எனும் மந்திரமும் அப்படியே ரஹஸ்யமானது.

அஞ்ஞானம் என்பது உண்மையில் இருப்பில் இல்லாதது. இருள் என்பது எப்படி இருப்பு வடிவம் இல்லாததோ அதுபோல அஞ்ஞானமும் இருப்பு நிலை அற்றது.ஆனால நிஜமாக இருப்பதை போன்று தோற்றப்புலனாகும்.

உண்மையில் வெளிச்சமான ஞானம் பிரகாசிக்கும் போது அஞ்ஞானமான இருள் இல்லாதது எனும் போதம் மலர்கின்றது.நிச்சயமாக இருள் என நினைத்திருந்த இடத்தில் அனாதியாகவே சுயம் பிரகாசமாக இருந்தது பிரம்மமே அன்றி வேறொன்றல்ல. அதை எக்காலத்திலும் இருள் மூடினதும் இல்லை.

குரு எனும் சொல்லில் வரும் கு என்பது உண்மையில் அஞ்ஞானம் இல்லை. அது சதா இருப்பு நிலை கொண்ட பிரம்மமே அன்றி வேறொன்றல்ல. ரு என்பது அதன்  விளக்கம்.அதாவது பிரம்ம பிரகாசம் எனப்பொருள். கு என்பது அத்வைதப்பிரம்மம்.