Saturday, November 5, 2022

ஜெயவாசி தெரியுமா?

 ஜெயவாசி தெரியுமா?


மார்க்கம்போல் நேர்வழியே குறுக்கு மார்க்கம்
வாய்வழியே தான்வந்து வாசியேறும்
தீர்க்கம் போற் செப்பிவிடும் வாசிவாசி
செயவாசி கூறிவிடும் வாசிபாசை
காப்பதுபோற் சொல்லிவைக்குந் தனக்குமுன்னால்
கண்டுகொள்ளும் பின்னாலே துடர்ந்துசெல்லும்
சேர்ப்பதுபோற் சொல்லிவைக்கும் பொருந்திடாதே
தீண்டாதே நீயிருந்து ஒடுங்கிநில்லே. (காகபுசுண்டர்-பெ.நூ.கா 1000 : 62).

எல்லா மார்க்கத்துலயும் ஷார்ட் கட் என ஒண்ணு இருக்கும், அது போல நம்ம சித்தர்களின் ஷார்ட் கட் தான் இந்த ஜெயவாசி சம்பிரதாயம்.ஷார்ட் கட் என்பதை தான் குறுக்கு மார்க்கம் என்கிறார் காகபுசுண்டர்.சாதாரணமான சித்தர் வாசி நேர் மார்க்கம் எnனவும் சொல்றார்.


சாதாரணமாக நாடி சாத்திரம் வாசி யோகம் பண்றவங்களுக்கு தெரியும் வாசி கண்டத்துல ‘மாறி போட்டு” கலை பிரியும்ண்ணு. அதாவது சந்திர சூரிய கலையாக பிரிந்து வெளிப்படுவது கண்டம் முதல்.நாடி துவக்கம் முதல் கண்டம் வரை ஏகமாக கயிறு மாதிரி பிணைந்து செல்லுமாம்.இதை குரு நாடிண்ணு சொல்லுவார் புசுண்டர் பிரன்.


”இச்சியாம் இடுப்பிடையில் கோசபீசம்
குச்சியாம் கோசபீச தண்டை தொட்டு
குரு நாடி நாக்கு வரை கயிறே போல
நச்சியே போய் பாரு நாக்கண்ணாக்கு
நடு மண்டை உச்சிவரை கபால நாடி” என்பது அவர் பாடல்.


..ஹி..ஹி..ஹி இதன் தொடர்ச்சி அப்புறம் பார்க்கலாம், ஏண்ணா வாசி கூட இது வரை சொல்லல. அதுக்கு முன்ன ஜெயவாசி சொன்னா குழப்பம் ஆயிரும்லியா...அதான்.கொஞ்சம் பொறுத்துக்குங்களேன்..வரும்....வரும்..வராமலா போயிரும்

சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும்”

சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும். இது வள்ளலார் உபதேசம். இதுல சாமானியம் என்பது விசேஷம் என்பனவற்றில் மேலான்a பதம் எதற்க்கு? சிரசில் இருக்கும் இறந்து போகா த்ன்மையா அல்லது விசேஷமான கண்டத்தில் இருக்கும் இறந்து போகும் த்ன்மைக்கா?.

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் “அதை” எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.எந்த மொழி வழி அறிவிப்புகளாகிய நூல்களையும் ஆதாரமாக எடுத்துக்காட்டாமல் நன்நம்பிக்கையாளர்கள் என்னும் மூமின்களுக்கு ‘வரிவடிவம்’ என்கிற எழுத்துமில்லாமல், ‘ஒலிவடிவம்’ என்கிற சொல்லுமில்லாமல், மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மொழியை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்குமாக, யாவருக்குமே இருட்டிலும், வெளிச்சத்திலும், மௌன குருவாயிருந்து நிகழ்வுகளாலேயே கல்வி எனும் ஞானத்தை கற்றுக் கொடுப்பதே “உம்மி நபி” ஆகும்.وَالْأَرْضِ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்

மூலத்திருவிரல் மேலுக்கு முன் நின்ற இடம்

 மூலத்திருவிரல் மேலுக்கு முன் நின்ற இடம்


சூரியன் ஆணாகவும் சந்திரன் பெண்ணாகவும், வலம் இடம் சத்தி சிவமுமாக வுடையது மருட்டேகம். வலம் சந்திரனாகிய சத்தியாயும் இடம் சூரியனாகிய சிவமாயு மிருப்பது அனுபவம். திரிசிய அனுபவத்திலுள்ள இடம் வலமாகவும் வலம் இடமாகவும் அனுபவந் தோன்றும்.(வள்ளலார்).


ஈராறு பெண்கலை எண்ணிரண்டாண் கலை பேராமற்புக்கு பிடித்து கொடு வந்து நேராக தோன்றும் நெருப்புறவே பெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்தமாமே (திருமூலன்)


இடை நாடி என்பது சுஷும்னாவுக்கு இடமாக துவங்கி வலது நாசி வழியாக இயக்கமுறுவது(ஹேரண்ட சம்ஹிதை)


அப்படீண்ணா வலது நாசியில போறது சந்திரன்,இடது நாசி வழியா போறது சூரியன்.அது மட்டுமல்ல, துவங்குறது வலது இடது விதைகளில் இருந்து. அது தான் திருமூலர் சொல்ர “மூலத்திருவிரல் மேலுக்கு முன் நின்ற” இடம்.பெண்களுக்கு “பாலித்த யோனிக்கு இரு விரல் கீழ் நின்ற” இடம்.குதம் அல்ல.விதை அறு பட்டவனுக்கும் சூல் அற்ற பெண்களுக்கும் குண்டலினீ ஆகாது.(ரியான்)

வாசி வாசித்து பழகுவோம் வாங்க

 வாசி வாசித்து பழகுவோம் வாங்க


”வாசி வாசி என்று வாசித்த பொருள் ஒன்று- சிவா சிவா என்று சிந்தித்த பொருளும் ஒன்று” என்பது சித்தர் வழக்கம். சாதாரணமாக பிராணாயாமம் செய்வதை தான் நம்ம மக்கள் வாசி யோகம்ண்ணு சொல்லி கேட்டிருப்பீங்க, ஆனா உண்மையில் வாசி யோகம் என்பது சிவா சிவா என சிந்தித்திருப்பதேயாம் என்பதை வெகுசிலரே அறிவர்.


வாசிப்பது என்பது ஒன்று சிந்திப்பது மற்றொன்று, ஆக இரு வித நிலைகள் ஒன்று சேர்ந்து வருவது தான் வாசி யோக நுணுக்கம். ஆனால் உண்மையில் இது பிராணாயாமமும் அல்ல ஜெபமும் அல்ல, ஆனால் இரண்டையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட முறையாகும் என்பது அறிவார் அறிவர்.


‘வாமத்தே ஈரெட்டு மாத்திரை பூரித்து ஏமுற்ற முப்பத்திரண்டும் ரேசித்து காமுற்ற பிங்கலை கண்ணாக இவ்விரண்டோமத்தால் எட்டெட்டும் கும்பிக்க உண்மையே” என திருமூலர் சொல்வதை கவனிக்க இதன் நுணுக்கம் புரியும்.


பூரித்து ரேசித்து கும்பித்து என சொல்வதை பார்த்தல் மக்கள் உடனேயே இது பிராணாயாம முறை தான் என நிர்ணயித்து விடுகின்றனர். ஆனால் “பிங்கலை கண்ணாக” எதோ சொல்லி வருகிறாரே மூலர், அது என்னவாம் என சிந்திப்பது இல்லை.


அப்ப..டாட்டா பை பை...அடுத்த பதிவுல கொஞ்சம் அதிகமா பார்ப்போம்..சரியா

பெரிய வித்தை எது தெரியுமா?

 பெரிய வித்தை எது தெரியுமா?


ஆன்மீக வாழ்கையில் பல படிகள் கடந்து எங்குமே அடையாமல் வீணாக செத்து தொலையும் மக்களை அனேகம் காண்கிறோம். வள்ளலார் சில இடங்களில் சொல்லி வருகிறார், சின்ன ஒளியை கண்டு ஏமாந்து பெரிய ஞனிகளாக வலம் வருபவர்கள் ஏராளமாக காண்கிறோம்.ஆனால் பெரியதாக இருக்கிற வித்தையை நாம் நிச்சயம் கண்டிருக்க வேண்டும்.நிச்சயம் நமுக்கு அது பெருந்துணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


வித்தைகளுக்கு எல்லாம் ராஜ வித்தை என்பது தன்னை காப்பதுவாகும்.தன்னை காப்பது என்பது தன்னை வெளிக்காட்டாமல் இருப்பது ஆகும். தன்னை வெளிகாட்டாமல் இருப்பது என்பது தன்னடக்கம் ஆகும். தன்னடக்கம் என்பது வீண் கர்வம் கொள்ளாதிருத்தலே ஆகும்.


உலகத்தில் பெரிய வித்தை என்பது நான் பிரம்மாண்டமான ஏதோ வித்தையை பண்ணி கொண்டிருக்கிரேன், மற்று எல்லா வித்தைகளும் என் வித்தைக்கு மட்டமானது எனும் ’வித்தை பெருமை’, அது எல்லா வித்தை பண்ணுபவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம்.


யார் ஒருவருக்கு இப்படியான வித்தை கர்வம் இருக்கிரதோ நிச்சயம் அவர்கள் தனக்கு தானே வேலி கட்டி கொண்டு தன்னந்தனியாக கம்பு சுற்றுபவர்கலே ஆம்.அவர்கள் மற்றவர்களை, ஏனைய வித்தைகளை, சம்பிரதாயங்களை அறிந்து கொள்லாமலேயே அவை அனைத்தும் தவறு என கங்கணம் கொண்டுவிடுவர். அவர்கள் தன்னை சுற்றி வேலி கட்டி உட்கார்ந்து விடுவதனால் அவர்கள் அந்த வேலிக்கு வெளியே வந்து வெளியில் உலாவி வரும் வித்தைகள் என்னன்ன என்பதை கற்க்க இயலாமல் தனித்து விடுவர். இதன் பரிணாமம் தான் ’தன் வித்தை தான் பிரம்மாண்டம்’, இதுவே பெரிய வித்தை எனும் தற்பெருமை.இதை வெற்றி கொள்வதே பெரிய வித்தைகளுக்கு எல்லாம் பெரிய வித்தை.

ஆதி புள்ளியே துணை

 ஆதி புள்ளியே துணை


ஆதியில் புள்ளி இருந்தது,அந்த புள்ளி ஆதியோடு இருந்தது, அந்த புள்ளி ஆதியாகவும் இருந்தது, அந்த புள்ளியின் உள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்குள் ஒளியாக இருந்தது. அந்த ஒளி மனிதனுக்குள் பிரகாசிக்கின்றது, ஆனால் மனிதனோ அந்த புள்ளியை பற்றி கொள்ளாமல் இருக்கின்றான். அந்த புள்ளியே தனது தந்தையாகிய பிதாவினிடத்தில் இருந்து கன்னியாகிய தாயின் சூலில் தங்கிய குமாரனாகிய நீ

இறைவனும்= வேதமும்

 உண்மையான சீடனுக்கு தகுந்த குணநலன்கள் கொண்ட பிற்பாடு அல்லவா உண்மையான குருவை அடையாளம் காண்பது எவ்விதம் என விழையவேண்டும் அல்லவா


தூலமான உடலை கண்டு என்ன பிரயோசனம் ஐயா...அறிவான உருவை அல்லவா அறிதல் நலம்.அது எங்கிருந்தால் என்ன...விருந்து சாப்பிட்டால் போதும் அல்லவா?

 சாந்து உண்டாகட்டும் ஜீ..மனம் அமைதி பெறட்டும்....அதிக ஆவல் கொண்டால் மனம் அமிதியை இழந்துவிடும்...ஆவலே வினையாகி விடும்..காமம் தலைகேறினவனுக்கும் கோபம் கொண்டவனுக்கும் அதிக ஆவல் இருப்பவனுக்கும் அறிவு வேலை செய்யாது. நடுநிலையே ஞானத்துக்கு அடித்தளம்

குருவும் லித்தும்

 எந்த வித்தைகளும் ஞானத்தை நேரடியாக தராது.. அதுக்காக அவையெல்லாம் அர்த்தமற்றவை அல்ல... ஒவ்வொரு வித்தைகளையும் எந்த எதிர்ப்புமின்றி உள்வாங்கி செயலாற்றும் போது அவை நமக்கு தனியான ஒரு வித புரிதலை சன்மானமாக தருகின்றன.. அந்த புரிதலாகிய சன்மானம் நம் உயிரோடு ஒட்டிகொள்கின்றது.... அது நம்மை அடுத்த நிலைகளுக்கான படிகலை அடையாலம் காட்டுகின்றது... முதல் படியே பயனற்றது என ஒருவன் நினைத்து கொண்டிருந்தால் அவனுக்கு புரிதல் வருதல் எங்ஙனம்?.. அடுத்த படியை அடையாளம் காண்பது எங்ஙனம்... அதனால் சரியான வளர்ச்சியில் இருப்பவனுக்கு என ஒரு வித்தை நிரந்தரமாக இருக்காது... அவன் வித்தைகளின் ஊடாக பயணித்து கொண்டிருப்பான்.. அவன் எந்த வித்தைக்கும் அடிமைபட்டு கிடப்பதில்லை.. அவன் புரிதலே அவன் நிரந்தர வித்தையாக மலரும்....


ஒருவரை பார்த்த உடனேயே..அல்லது வித்தையை பெற்ற உடனேயே அதை தீர்மானம் பண்ணி விடுகிறார்.. இது இவ்வலவுதான்ணு...அதில் அவர் நுழைவதில்லை.. அதை நுழைந்து பரிசோதனை பண்ணுவதில்லை... அதை கொடுத்த குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பார்...... இது தவறான அணுகுமுறை... ஏற்றுகொள்ளும் மன பக்குவம் இருப்பவன் குருவை அல்ல ஏற்று கொள்ளுவது.. அவர் கொடுத்த வித்தையை... வித்தையை ஏற்றுகொள்ளுகிறவன் குருவை ஏற்பவனாகிறான்...ஆனல் அவன் குருவுக்கு அடிமையாக இருப்பதில்லை..குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பஹ்டில்லை...வித்தை பெற்று விட்ட உடனேயே குரு காணாமல் போகிறார்..அங்கு வித்தை தான் இருக்கும், குரு எனும் தூலம் போய் விடுகின்றது...அது அந்த வித்தை ஒளியாக மலர்கிறது...வித்தையே குருவாகின்றது...இதை விட்டு குருவின் தூலத்தோடு ஒட்டி அவரின் அங்க அடையாலங்களை நோண்டிகிட்டு அவர் நல்லா பிகேவ் பண்ணுகிறார் என்றால் வித்தையும் நல்லது என நினைப்பவர்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை.....

இவ்வண்ணம் ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் எனும் அலாதியான ஆவலோடு ஆழ்மன தேடுதலோடு உண்மை சிறக்க உள்ளன்போடு எதிர்பார்த்து இருக்க , அவரின் முகம் நோக்கி ஆன்ம வாஞ்ஞையோடு அப்படியான சுத்த இருதயம் படைத்தவருக்கு புரியபடுத்தி கொடுக்கவேண்டும் எனும் உள்ளன்பு பொங்கும் நேரம் அது அந்த அருமையான தருணம் சீடன் புரியவேண்டியதை ஆழமாக புரிய தொடங்குகிறான்...இதுவே சத் சங்கம்.

-- திரு. ரியான் ஐயா அவர்கள்

மெய்யறிவு

 மெய்யறிவு

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதே குரு மரபு. நாம் முதலில் அறிவது உயிரெழுத்தையே, பின்னர் மெய் எழுத்தும் நம் புலன்களை அடைகின்றன. இறைவன் எழுத்தை ஏன் அறிவித்தான் எனில் அது மெய்யறிவு பெற்றற்கண்ணே. சிறாபோது எழுத்தறியுமுன்னே நாம் உயிர் ஈது மெய் ஈதுவென அறிந்திலோம், அவ்விருட்கண்ணே அருட்திருவுருவாம் ஆசான் அமைந்து, நம் சூண்டாணி விரல் பிடித்து அரியென வரைதல் அருமை. உயிர் எழுத்தின்பால் அவ்வாசான் சூண்ட அவ்வகாரமான உயிரை இரீங்காரமான அருட்சக்தியின்கண்ணே பதிப்பித்தல் இனிதே அமைவுறுகிறது. உயிரின்றி மெய்யில்லை அம்மெய்யும் உயிரின்றி வெளிப்படுமாறில்லையெனவறிந்தே இறையறிவு மெய்யை உயிரின்கண் உடம்பில் அமைத்தான் அமைவுற. மெய்யென வகுப்ப அது விந்து நிலையதாம், ஆதலின் அகத்திய பெருந்தகை விந்து நிலை தனை அறிந்து விந்தைக்காண விதமான நாதமது குருவாய் போகும் என வகுத்தார். அதாவது விந்துநிலையதாம் மெய்யறிவு பெற நாதநிலையே குருவதாம். நாத நாதாந்த நிலையே இறையறிவு, அவ்வறிவு இரக்கமுற்று சீவர்கள்பால் கருணையுற்று நாதநிலை கொண்டு உயிரென விளங்கும். மெய்யென்பது விந்து நிலையுடன் விளங்கும் ஆன்ம அறிவேயாம், அவ்வான்ம அறிவிற்கு விளக்கம் உண்டாகும்பொருட்டே உயிராணி திருவசனம் நாதநிலையாய் பனிரெண்டு பிரிவாய் விளக்கமுறும். உயிராணிநாதத்திருவசனத்தின் தூண்டுதலால் மெய்க்கு மெய்யறிவு தோன்றும் அவனருளாலே. அவ்வசனம் ஊடுருவுங்காலே விந்துநிலை விளக்கமுற்று ஒளிபெருகி ஒளிரும், அவ்வொளியே மெய்யறிவு பகரவும் அமைத்து.மெய் பதினெட்டும் விந்துநிலையதாம், ஆதலின் அதன்கண் விந்து பதிற்று. (விந்து-புள்ளி)

பாத்திரங்களில் சிறந்தது எதுவாம்?

 பாத்திரங்களில் சிறந்தது எதுவாம்?



தலைப்பை பாத்துகிட்டு சிரிக்காதீக!!!!...பாத்திரம் என்றால் தீட்சை பெற்றுகொள்ள தகுந்தவன் என பொருள் சொல்றாங்க மகான்கள்.


பரமோன்னத குருவை அடைவது என்பது இப்பிறவியின் பயன் மட்டுமல்ல, பலபிறவிகளின் பலன். எண்ணற்ற பிறவிகளின் பலனே குரு வடிவமாக எழுந்தருளுகின்றது. அதை பயன்படுத்திகொள்வதும் அவனவன் செய்த புண்ணிய ஸுஹ்ருதமேயாம் என்பதில் ஐய்யமில்லை.


பிறப்பிலேயே உலக விஷயங்களில் வேட்க்கையற்று இவற்றை கடந்த எதையோ சாதிக்க வேண்டும் எனும் உந்துதலோடு பிறப்பவன், எதனையும் பொருட்படுத்தாது இளம் பிராயத்திலேயே மூகனாக ஏகனாக எதையோ தேடிகொண்டிருக்கும் தன்மை பொருந்தியவனாக ஒன்றிலும் பற்றில்லாதவனாக வேட்கை மிகுந்தவனாக திரிவான், காய்ந்த சருகு போல....குருவின் திருவுரு தரிசித்த மத்திரத்தாலேயே அவனில் ஆனந்தம் அணை உடைந்தாற்போல் குதூகலிக்கும்,ஏன் என்றோ எதற்க்கு என்றோ அவனையும் அறியாமல் எழும் எழுச்சி அது.அவனுக்கு கேள்வி என கேட்க்க ஒன்றுமில்லாமல் இருக்கும்...சந்தேகம் என ஒன்று அவன் மனதில் கூட துளிர் விடாதிருக்கும்..ஏதோ ஜென்மத்து உறவு போல குருவிடம் பழகுவான்.. ஒன்றையும் கேட்டு பெற்றுகொள்ள வேண்டும் எனும் சிந்தை கூட அவனிடம் இருக்காது... குருவுக்கு தெரியும், எப்போது எதை எவ்வண்ணம் கொடுக்கவேண்டும் என நிதர்சித்திருப்பான்...அவனுக்கு என தேவை ஒன்று இருக்காது, சேலையும் நூலும் போல குருவிடம் இருப்பான்...பூரண சரணாகதியுடையவனாயிருப்பான். குரு ஒன்றை சூசகமாக சொன்னால் கூட பஞ்சை போல பற்றிகொள்ளும் திறம் கொண்டவனாயிருப்பான். இவன் உத்தம பாத்திரம்

தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம்

 தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம்



ஆதியே துணை.. குரு வாஅழ்க குருவே துணை.. தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம் என்ன என்பதை உணரும் தருணம் வாய்த்த முகூர்தம் கிடைத்தது என்பது மகிழ்ச்சியான நிகழ்வே தான். சுத்தமான பாத்திரம் முன்னால் நீட்டப்படும் போது ஈயாது முகம்திருப்புதல் நன்றல்லவே..ஆதலின் ஈந்து விட்டேன்..ஈன்று விட்டேன்..அந்த ஆறாவது அறிவினை..பெற்றவர் பேறு கொண்டவர் என்பதில் மாற்று கருத்தில்லை....எண்ணிலிகோடி சென்மங்களின் பிறவி பலனென்பதில் ஐயமுமில்லை...நமசிவாயம் வாஅழ்க..நாதன் தாள் வாஅழ்க..இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாஅழ்க. வாஅழ்க குருவடி வாஅழ்க வாஅழ்கவே.

அலீஃப்

 ==அலீஃப்===

செம்மை னல னேர் வழியை ஒரு தேவேசரின் திருவாய் மூலம் வெளியாக்குவதுவே ‘வஹது’.உன் செவி வாயிலாக அத் தேவ ஆசரியர் உனக்கு ஒலி வீட்டமுதை ஊட்டுகின்றார்.சிபத்துக்கள்-வித்தியா தத்துவங்கள்-ஏழும் பிரயோஜன அளவில் ஏழு ஒலி வீடுகளாக இருக்கின்றன.அந்த அருந்தலத்திலிருந்து எடுத்து அளத்தலே அறிவாகார தேவ வர்ஷிப்பாகும். அவர்கள் அது னேரம் தன் சப்தமாகிய உயிரை உனக்கு செலவிடுகிறார்கள்.அப்போது அந்த தேவ அமுதை ஆர்வத்துடன் உண்ணாதுவிட்டால் னீ கெடுவதோடு,அவர்களை ஏமாற்றிய பாவமும் உன் தலையில் வந்து விழும்.உன் ஜீவனில் உள்ள சர்வ மாசுக்களையும் ஒழிப்பதே செவி உணவு.அருளமுதமாகிய தெய்வ மருந்து உண்டால் தான்,உன் ஜீவனில் கப்பியுள்ள அழிகரு வழிவரு பிறவிமாசு ஒழியும்.


-=சித்திரசபை வாழ் வள்ளல் சாலை ஆண்டவர் அவர்கள்

ஆதி அமலாண்மை

 ஆதி அமலாண்மை



மனுத்தூலத்தில் இவ்வளவு வல்லபங்கள் இருந்தும் இருந்தும் அவற்றை கைபோட்டவர்கள் நாம் ஒருவர் தாம். ”முகாரவிந்த பேத விந்து நாதாதி இன்பனுச் சூடாகர சப்த சப்தாதிய சாயல்களும்” என்று நாம் ஆதிமான்மியத்தில் கூறியிருக்கிறோமே. அதன்படி இந்த மனித குலம் ஒரே அச்சிலிருந்து உண்டாகியிருந்தாலும்-ஒருவருக்கு தரப்பெற்றுள்ள கருவிகளனைத்தும் மற்ற எல்லோருக்கும் தரபெற்றிருந்தாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள்? ஆளுக்கு ஆள் வித்தியாசம் இருக்கிறதே-கண் காது மூக்கு முதலியன எல்லாம் ஒன்று போலவே தேகத்தில் முகம் என்ற ஒரே எல்லையில் அமைக்கபெற்றிருந்தாலும், அந்த முகத்தில் எத்தனை சாயல்கள்,எத்தனை பேதங்கள் இருக்கின்றன. சப்த குறியை எடுத்துகொண்டால் எல்லோரிடமும் அதை உண்டாக்குவது ஒரே கருவி தான், ஒரே அமைப்புதாநப்படி இருந்தாலும் தொனி ஆளுக்கு ஆள் வேறு வேறாயிருக்கிறது-இத்தனை முகாரவிந்த பேதங்களும், சப்த சப்தாதிய சாயல்களும் மனித ரூபத்தின் உள்ளே அமர்ந்து ஆட்சி புரிந்து கொண்டிருக்கிற அந்த தேவ சுவிட்சின் அகம் புற கிரண வீச்சுக்களே ஆகும். அத்தகைய அமலாண்மை ஆதியை, பிணை நிகரில்லா பெருவான் கடையை மனித உடல் பெற்ற ஒருவன்,இந்த உடல் இருக்கும் போதே கைபோடவில்லை என்றால் அவனை நாய் நரி என்று கூட வேதம் சொல்லும்-மலத்தில் புழுத்த ஒரு புழு என்று கூட சொல்ல ‘அது’ சம்மதிக்காது

==யுகவான் சாலை ஆண்டவர்கள்.

அட்சர குரு

அட்சர குரு

தூக்குங் காபுஹே துடரு மேயுமைன்
சுழியுஞ் சாத்துக்குள்ளே யாகுமே
பார்க்கு மலிபுலாமீம் ஹேயுந் தவுசில்நிற்கப்
பழக்க மலிபுலாமீ மாகுமே
காக்குந் தேயும்ஹேயுங் கருதுங்கமலஹூவும் கருவு
மெழுத்தைக்காணு முனக்குள்ளே
ஆக்குஞ் சகலகுரு காபும் நூனுக் குள்ளே
யடங்குந் தமிழரட்சரக் குருவும்பார்.

===பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்

உணவுத்தேவரும்- பசிக்காலனும்

 உணவுத்தேவரும்- பசிக்காலனும்


வள்ளலார் சீவகாருண்ய விளக்கத்தில் சொல்வதை பாருங்கள்---;சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது - அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது - அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது - அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன - மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது - சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது - பூதங்களெல்லாம் புழுங்குகின்றன - வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன - கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது - காது கும்மென்று செவிடுபடுகின்றது - நா உலர்ந்து வறளுகின்றது - நாசி குழைந்து அழல்கின்றது - தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது - கை கால் சோர்ந்து துவளுகின்றன - வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது - பற்கள் தளருகின்றன - மலசலவழி வெதும்புகின்றது - மேனி கருகுகின்றது - ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன - நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது - மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது - ஈரல் கரைகின்றது - இரத்தமும் சலமும் சுவறுகின்றன - மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது - வயிறு பகீரென்றெரிகின்றது - தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன - உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.


இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.


அப்படியெனில் இங்கு சற்று சத் விசாரம் பண்ணுவோம்== உணவை அளிக்கும் ஒருவரை தெய்வத்துக்கு ஒப்பாய் வள்லலார் கூறுகிறார் எனில், உயிரை ரெட்சிக்கும் உணவு எனும் அமிர்தத்தை எந்த தேவனுக்கு ஒப்பிடலாம்?, காலனை ஓட்டும் உணவு என்பதை என்னவென்று சொல்லவேண்டும்?, ஒரு பிடி உணவை கையில் எடுக்கும் போதே ,அல்லது உணவை காணும் போதே,உணவின் மணம் நுகரும்போதே அது கடவுள் அம்சம் என நினைக்க வேண்டாமா? உண்பதும் நுகர்வதும் கடவுள் அம்சத்தயே என நினைய வேண்டாமா? உணவை உண்ணும்போது அது கடவுளேதான் என நினைந்து வணங்கவேண்டாமா? அந்த உணவை உண்ணும்போது கிடைக்கும் திருப்தியின்பம் கடவுள் இன்பமென கருதவேண்டாமா? அந்த உணவை மெல்லும்போது உண்டாகும் ஆனந்தம் கடவுள் ஆனந்தம் என கொள்ளவேண்டாமா? அந்த கடவுள் அருள் நிறைந்த உணவே செரித்து சுத்த உஷ்ணமாகி கடவுள் அருளை வெளிப்படுத்துகின்றது என குதூகலிக்கவேண்டாமா? கடவுள் அருளாய் இந்த உலகத்தில் நிறைக்கப்பட்டுள்ள உணவு வகைகளை அவன் அருள் என அறிந்து வணக்குவோமாக, அவன் உயிர் என பாவிப்போமாக...அருளானது நம்மில் மென்மேலும் உணவாய் உட்செல்லட்டும், அந்தபடியே இவ்வுலகிலிள்ள ஏனைய உயிரினங்களையும் கடவுள் அருள் விளக்கமாகிய உணவை ஊட்டுவித்து சுத்த உஷ்ணத்தை அவர்களும் பெற்று கொள்ள செய்வோம், ஊண்பசியும் உயிர்பசியும் அகன்று ஆன்ம விளக்கம் மென்மேலும் உண்டாக உணவளிப்பீர்களாக விரைந்தே

லாமலிஃப்

 லாமலிஃப்



அந்த நாளையில் அஹ்மதை துதிக்குமுன் இறையோன் விந்தையாகிய லாமலிபு ஆனதை விரும்பி சிந்தையுற்றெழு மஹ்மூதை படைத்தனன் செல்வம் வந்தவாறதை கண்டே ஞானப்பூட்டினில் வகுப்பாம்.


கூசிய வாயு தன்னை குழி நூற்றம்பத்தஞ்சும் பேசிடும் ஞானம் கல்வி பிரித்திடும் வேத சாத்திரம் நேசியாம் நன்னூல் சின்னூல் நிகண்டு அகராதிஞானம் வாசி மேலுறைந்து வாங்கும் இறை அறிவு தானே.


மூலமாங் குழியில் நின்ற முனைசுழி அறிய வேண்டி சாலமாம் யோகம் ஞானம் சார்கலைக் கியானம் பாரில் ஏலவே அலிபில் நின்றும் எழுந்திடும் லாமை நோக்கி ஆலமே படைத்த துய்யோன் அரும்பொருள் எனக்கீந்தானே.

(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் ஞானப்பூட்டு

பிராணன் என்பது என்ன?

 பிராணன் என்பது என்ன?



மண்ணாகி மரமாகி பல்லுயிர் அரக்கராய் தேவராகி என பிறவிகள் பல பலவாக ஆன்மா புகுந்து மனிதனாக பிறக்கின்றான் என்பதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?.ஒவ்வொரு பிறவியிலும் பிறந்து இளைத்து கர்ம பலன்களின் தொகுப்பால் மனித தூலம் கிடைக்கபெறுகின்றது என்பதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?.


ஒவ்வொரு பிறவிகளும் பிறக்கும்போதும் அப்பிறவிகளிலெல்லாம் பிராணன் நசித்து மாயயாகி செத்து போகின்றனவா?.ஒவ்வொரு பிறவிகளிலும் பிராணன் நசித்துத்தான் ஜீவசாலங்கள் எல்லாம் நசித்து போகின்ரன எனில் அடுத்த பிறவியில் அதே ஆன்மாவுக்கு பிராணன் எங்கிருந்து கிடைக்கின்றது?.


தன்னிலிருந்து பிராணன் நசித்து அதோகதியாக போகமல் இருக்கவே சித்தவித்தை எனில் தானான ஆன்மா எதற்க்கு மாயை ஆக நசிக்க துவங்கியது?. அல்லது தானான ஆன்மா தன்னிலே இருந்து சதா நசிக்கும் தன்மை கொண்டது எனில் அப்புறம் தன்னிலே நசிக்காமல் ஊர்த்வகதியாக்கி கொண்ட பின் என்ன பலன்?..அந்த பிரானன் மீண்டும் முன்னம் இருந்தபடி நசித்து அதோகதியாக சலனமுறாது என்பதற்க்கு என்ன விளக்கம்?.


பல பல பிறவிகளை சித்தவேதம் ஒப்பு கொள்கின்றது எனில், முன்னம் பல கோடி சென்மங்களில் செய்த பாவ புண்ணிய சஞ்சித பிரார்த்வ ஆகமிக கர்மங்களின் தொகுப்பு ஜீவசமாதி ஆனவனுக்கு உள்ளிருக்குமா அல்லது அவையும் அற்றுவிடுமா?.


ஜீவசமாதி ஆனவனின் கதி என்ன?.அவனுக்கு மேல் பிறப்பு எதுவும் இல்லையா?அல்லது முன் பிறப்புகள் எல்லாம் இருந்ததில்லையா/..ஜீவசமாதி ஆனவர்களை எழுப்ப யாரோ வருவார்கள் என நம்பபடுகின்றதே, அதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?. அப்படி ஜீவசமாதி ஆனவர்களை எதற்க்கு எழுப்பவேண்டும்?.எழுப்பினவர்களின் கதி தான் என்ன?..ஜீவசமாதி தான் மோட்ச சூத்திரம் சொல்லும் மோட்சமா?


சற்று யாராவது விளக்கினால் நல்லது..புரிதல் அதிகமாகி ஆனந்தம் உண்டாக பிரயோஜனமாக இருக்கும்

ஓம்-னம” என அண்டமும் பிண்டமும் ஆச்சு

 ஓம்-னம” என அண்டமும் பிண்டமும் ஆச்சு.


ஆதியில் இருந்த பொருள் இரண்டாக பிரிந்தது “ஓம்-னம” என அண்டமும் பிண்டமும் ஆச்சு.

நம என்பதை நாம நமஸ்கரிக்கும் விதமாக புரிஞ்சுண்டிருக்கோம், ஆனா தத்வார்த்தம் என்பது வேறு. எப்படி பிரணவத்துக்கு தத்வார்த்தம் இருக்குதோ அது போல நமவுக்கும் இருக்குது. இவை இரண்டும் ஆதியானவையே.. சர்வ பிரபஞ்சமும் சர்வ ஆற்றல்கலும் இந்த நமவில் ஒடுக்கம் 

ஓம் என்பது ஆன்மீகம் எனில் நம என்பது பவுதீகம்.பிரபஞ்ச காரணீ, மாயாகாரணீ. கீதையில் கண்ணன் கூட மாயையின் தன்மையை அளக்கமுடியாது, அதை விவரிக்கமுடியாத தன்மை கொண்டது என்கிறார்.புரிந்துகொள்ளமுடியாதது மாயை.விசித்திரமானது, எல்லையில்லாதது.பிரணவத்தை போல

ஓம் என்பதில் ஒரு ஒடுக்கம் உள்ளது ஆனால் நமவுக்கு ஒடுக்கம் கிடையாது..சர்வ வியாபினி, சர்வ பஹிர் வியாப்தினி,சர்வ குருத்வாஹர்ஷிணி,சர்வ விக்‌ஷேபிணி என பலமுகம் 

நம என்பது காரியபடாமல் போனால் சித்தி பிராப்தி இல்லை.மாயா பந்திதமாகவே இருப்போம்

சிறு குழந்தைகல் மண்ணும் நீரும் கொண்டு தான் விளையாடுவார்கள், அதனால் இதை விளையாட்டு பொருள் என மறைப்பாக சொல்லுவார்கள், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்றால் அது இது தான் இறைவனும் மண்ணும் நீரும் கொண்டு படைத்தழித்து விளையாடுகின்ற பொருள் என சொல்லலாம்.சிருஷ்ட்டி சம்ஹாரம் போல 

ஓம் என்பது ஆன்மீகத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்றால் நம உடலை கற்பமாக்கும் செயல்திரம் கொண்டதுவாம் என சொல்லுகின்றனர் அறிந்தோர் சிலர்

உயிர் அனுபவம்

 உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்... அதற்க்கு மனம் தேவை இல்லை..... "ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?... அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது... அறிவானதே அந்தகாரத்தை ஊடுருவும் தன்மை கொண்டது... அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்... அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்....


எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..

நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது....

❣️ நன்றி: ரியான் அய்யா ❣️

மாறுநிலை

மாறுநிலை


ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை “த்ரஷ்ஹோல்ட்”,அதன் தமிழாக்கம் தான் மாறுநிலை என்பது.அதாவது ஒரு பொருள் அதன் தன்நிலையில் இருந்து மற்றோர் நிலைக்கு உருமாற்றம் பெற வேண்டும் எனில்; அதன் இருப்பின் பிணைப்பு அறுந்து போக வேண்டும் எனில்;அதன் ஆற்றல் தன்நிலை ஆற்றலில் இருந்து அதிகரித்து உச்சநிலை ஆற்றலை கடந்து போக வேண்டும்.ஆப்படி உச்சநிலை ஆற்றலை கடந்து போகும் எல்லைக்குத்தான் மாறுநிலை ஆற்றல் என பெயர்.


எல்லா பொருட்களும் தத்தமது பிணைப்பின் தன்மைக்கு தகுந்தபடி; பிணைப்பின் ஆற்றலுக்கு தகுந்தபடி; பிணைப்பின் வலிமைக்கு தகுந்தபடி; பிணைப்பின் கோணத்துக்கு தகுந்தபடி;பிணைப்பின் இயல்புக்கு தகுந்தபடி ஒவ்வோர் மாறுநிலை எல்லையை கொண்டிருக்கின்றன என புரியலாம்.மட்டுமல்ல, ஒவ்வோர் பொருளுக்கும் ஒவ்வோர் ஆற்றல் கொளும் தனித்திறமையும் இருக்கின்றன, சில பொருட்கள் அதிசீக்கிரம் ஆற்றல் கொளும், சில பொருட்கள் மிகவும் தாமதமாக ஆற்றல் கொளும், சில பொருட்கள் ஆற்றல் கொளும் அதே விகிதத்தில் ஆற்றலை இழக்கும் தன்மையையும் கொண்டிருக்கும்.இவை இரண்டின் தன்மையை பொறுத்து மாறுநிலை ஆற்றல்அமையும்.


அது போல எந்த பொருளுக்கு ஆற்றல் ஊட்டும் விதங்களும் விதவிதமாக அமையும், பலவித யுக்திகளால் பலவிதமாக ஆற்றல் ஊட்டமுடியும்,அது பொருளின் தன்மைக்கும் அதன் பிணைப்புக்கும் தக்கபடி அறிந்து செறிவூட்டப்படுகின்றது. மாசற்ற பொருட்கள் அதிசீக்கிரம் ஆற்றல் செறிவூட்டம் பெற தகுதியானவைகளாகவும், மாசு கலப்புள்ள பொருட்கள் அத்தன்மை குறைவு பட்டுள்ளனவாகவும் இருக்கும் என்பது இயற்கையே.


ஆகையினால் ஒரே யுக்தியினால் எல்லா பொருட்களும் ஆற்றல் ஊட்டம் பெற வாய்ப்பில்லை,ஒரு வேளை சில சமயங்களில் யதேச்சையாக அமையவும் வாய்ப்புண்டுதான்.ஒரே இனத்தை சார்ந்த இருவேறு பொருட்கள் கூட ஒரே வித ஆற்றல் ஊட்டம் பெற்றுக்கொள்ள சிலபோது வாய்ப்பு இருக்காது,எத்தனை ஆற்றல் செலுத்தினாலும் ஒன்று ஆற்றல் கொள்ளும் ஆனால் அதே இனத்தை சார்ந்த மற்றொன்று பெற்ற ஆற்றலை உடனடியாக இழந்து கொண்டும் இருக்கும்.


மனதின் ஆற்றல் ஊட்டமும் இவ்வண்னமே தான்,அதனாலே தான் ஒரே குருவின் கீழ் வித்தை கற்றவர்கல் அனைவரும் ஒரே போல ஆற்றல் பெறுவதில்லை,யதேச்சையாக சிலபேர் கொள்வதுமுண்டு. அதுபோல ஒரே வித யுக்தியை சிறந்த குருமார்கள் அனைவருக்கும் ஒருபோல பயில வழங்குவதுமில்லை.ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தந்த்தன்மையினை கொண்டவர்கள், தந்த்தன்மை கொண்ட மனநிலை ஆற்ரல் நிலை, கொள்நிலை,பிணைப்பிநிலை, இழப்புநிலை கொண்டவர்கல்.பிரபஞ்சத்தில் ஒன்ரை போல மற்றொன்று ஒரே விதமாக இருப்பதில்லை.ஒருபுளியமர இலையில் இருக்கும் ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு தன்மை அமைப்பு கொண்டவை.இயற்கையின் படைப்பில் அதிசயம் என்பது ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை.மணம் குனம் தன்மை வண்ணம் தோற்றம் அளவு என அனைத்தும் மாறுபாடு கொண்டவைகள் என்பது நுண்புல அறிவால் காணலாம்.ஆனால் மனம் இவற்றில் பிரமிப்புண்டு நிற்கின்ரது என்பதே உண்மை.


மனதை கடக்க வேண்டும் எனில், மனதில் பிணைப்பை அறுந்து போக செய்ய வேண்டுமெனில், அந்த மாறுநிலை ஆற்றல் எல்லைக்கு மனம் செல்ல வேண்டும். எப்போது மாறுநிலை எல்லையை மனம் கடக்கிரதோ அப்போது உருமாற்றம் சாத்தியமாகின்ரது.அது இன்றும் ஆகலாம்,நாளையும் ஆகலாம், எண்ணற்ற கோடி கற்பாந்தங்களும் ஆகலாம், ஒரு நொடி பொழுதிலும் ஆகலாம்,....கடந்து போங்கள்

ஸ்ரீலஸ்ரீ

 ஸ்ரீலஸ்ரீ

ஸ்ரீலஸ்ரீ - śrīlaśrī - ശ്രീലശ്രീ - శ్రీలశ్రీ - ಶ್ರೀಲಶ್ರೀ - श्रीलश्री - zrIlazrI”



இதன் பொருள் என்னவாம்

எப்போதும் ஸ்ரீ என்பது ஹ்ரீம் கடந்து விளங்கும் தன்மையது, கீழ்நிலை சக்கரங்களில் இருக்க வாய்ப்பில்லையல்லவா, ஹ்ரீம் கூட பரசிவாந்த நிலைக்கு வியாப்தி கொண்டது என பாஸ்கராச்சார்யாள் விளக்குகின்றார்.அப்போது நிச்சயமாக ஸ்ரீஇ அது கடந்து விளங்குவதாகத்தான் தோன்றுகின்றதல்லவா

சுவாதிஷ்ட்டானம் எல்லாம் மூலகூடம் எனும் எல்லையில் ஐம் எனும் பீஜத்தின் வியாப்தியில் வருகின்ரது.திரிகூடத்தின் முதல் நிலை

ஐங்கார ஹ்ரீங்கார ரஹஸ்ய யுக்த ஸ்ரீங்கார கூடார்த்த மஹா விபூத்ய ஓங்கார மர்ம ப்ரதீபாதினியாம் மம குரவே தட்ஷணாமூர்த்தயே நமோ நம: என ஒரு குரு ஸ்லோகம் கூட உண்டு.இதன் விளக்கத்துக்கு மெருகூட்ட.

நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டு

 நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டு

நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டு

உயரெழா வாயுவை உள்ளேஅடக்கி

துயரற நாடியே தூங்க வல்லார்க்கு

பயனிது காயம் பயமில்லை தானே

கோணா மனதை குறிகொண்டு கீழ்கட்டி வீணாதண்டோட வெளியுர தானோக்கி காணாக்கண் கேளாசெவியென்றிருப்போர்க்கு வாழ்நாள் அடைக்கும் வழியிதுவாமே

நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை தேட்டமுமில்லை சிவனவனாமே’

தன் முனைப்பு விடைபெற வேண்டும்

 தன் முனைப்பு விடைபெற வேண்டும்.


விரலை பிடித்துகொண்டே அடம்பிடிக்கும் குழந்தையிடம் இருந்து விடுவித்து கொள்ளாமல் இயைந்து இருப்பதுபோல இவ்வுலகில் இருந்து தன் முனைப்பு விடைபெற வேண்டும்.


அடுத்து பிறக்க மாட்டேன், இதோடு என் சோலி முடிஞ்சுது என நினைப்பவன் மரணத்தை பயப்படுகிறான்... வாழ்வு முடிவதில்லை, கர்மம் தொடரும் என உணர்ந்தவன் சத் கர்மங்களில் ஊறி நனைகிறான்,,, மரணத்தை வாழ்வின் ஒரு அங்கம் என கண்டு மனநிறைவோடு சந்தோஷமாக இறை சரணாகதியுடன் ஆனந்தமாக மரணத்தை கைகூப்பி வணங்குகின்றான், ஆம் மரணம் அவனுக்கு தேவை... அதற்க்கும் நன்றி செலுத்துகின்றான், அவன் பரிணாம மேம்படுதல் மரணத்துக்கு அப்பால் நிலைகொண்டுள்ளது என அவன் அறிந்திருக்கிறான். அவன் பிரணவத்தை மனதில் நிறுத்தி அக்கரைக்கு பிரயாணப்படுகிறான், அடுத்த கர்ம பூமிக்கு..அவனை வளப்படுத்திக்கொள்ள

 அவர்களுக்கு அவர்கள் முறை, நமுக்கு நமது முறை...முக்திக்கு பொருள் பல சம்பிரதாயங்களில் பலதாக சொல்லப்படுகிரது.முக்தி என்றால் என்ன என்பதையும் அதன் வகைவேறுபாடுகளையும் தரம் திரித்து ஞானகோவையில் விளக்கப்பட்டுள்ளது காணலாம்

ஓளி காண்பது தான் முக்தி என்பார் சிலர் உளர்,காயம் கனகமாவது தான் முக்தி என்பார் சிலர், இந்திரிய அடக்கம் முக்தி என்பார் சிலர், மனோலயம் முக்தி என்பார் சிலர்,பிரான அடக்கம் தான் முக்தி என்பார் சிலர், அட்டமா சித்தி கொளல் முக்தி என்பார் சிலர், பரதேவதை தரிசனம் முக்தி என்பார் சிலர், மரணமில்லாதிருத்தல் முக்தி என்பார் சிலர், தானம் முக்தி என்பார் சிலர், கர்மம் முடிவு முக்தி என்பார் சிலர்...இப்படி அனேகம் கலைஞானங்கள் அடைதல் முக்தி என்பாருமுளர். எது முக்தி என திரிதறிதல் விஞ்ஞானகலர் இயல்பு

இல்லாத ஆன்மாவுக்கு ஊட்டுகிற எண்ணமே பொய்..அடிக்கிற காற்றுக்கு ஆடுர தூசிக்கு யார் ஊட்டணும்

ஆன்மா

 ஆன்மாவே ரெண்டாகி மனம் என திரிகிறது.. உண்மையில் மனமே ஆன்மா.. மனமில்லையெனில் ஆன்மா என தனியாக ஒன்றுமில்ல்லை... ஆன்மாவும் மனமும் ரெண்டாக பிளவு பட்டிருப்பதே ஆன்மாவும் மனமும் இரண்டு என பேதலிக்க வைக்கிறது


நான் நான் என ஆன்மாவை சுட்டி காட்டிகொண்டிருப்பதே மனம் தான்.. அது தன்னையே தான் என சுட்டிகாட்டுகிறது... வேறு அதை விட்டு பின்னமாக இருக்ககூடிய வேறொரு பொருளை அல்ல... மனமே மனத்தை சுட்டிகாட்டி இது ஆன்மா என மலைக்க வைக்கிறது

பார்ப்பவனும் நானே.. அதை பார்க்க வைப்பவனும் நானே.. இது தான் நிலை.... இது மயக்கம்

இவை ரெண்டுமாக இருப்பது மனம் எனும் ஆன்மாவே தான்

புற உலக காட்சியை கண்னை கட்டியும் நிறுத்தலாம்... புற உலக கேள்வியை காதை பொத்தியும் நிறுத்தலாம்... ஆனால் மனம் ???

தான் தான் மனமாகவும் ஆன்மாகவும் இருக்கிறேன் என மனம் உனராது... மனம் உணராது என்றால் ஆன்மாவும் உணராது

மனமே கற்பனை கட்டிகொண்டு உலகை ருசிக்கிறது...அதுவே அதை பலனையும் அனுபவிக்கிறது....எது வரை?..ரெண்டாக இருக்கும் வரை இது தொடரும்

அந்த ‘நான்” எனும் ஆன்மா மனதினால் நிலை பெறுகிறது

இப்படி மனம் வேறு ஆன்மா வேறு என நில்லாதிருப்பது அத்வைதம்

அப்போது ஆன்மா பிரம்மம் எனவும், மனம் மாயை எனவும் பகுக்கபடுகிறது

இதையே மாயை அகலுதல்...அல்லது மாயை லயிப்பது என்றார்கள்...தானாக பிளவு பட்டிருந்த மனமே ஆன்மாவாக ஒன்றாகிறது.

ஆன்மா ஆன்மாவாகவே எக்காலமும் சுழன்றுகொண்டிருக்கும்...மனமும் எக்காலத்துக்கும் மனமாக ஆன்மாவிடம் ஒட்டி அனுபவிப்பித்து கொண்டிருக்கும்

பகவான் என்பதும் மனதின் வேலையே தான்...தன்னில் இருந்து பிறிதாக ஒரு பகவானும் இல்லை

பகவான் என்பது துணைக்கு ஒரு ஆளை மனமே செய்யும் ஏற்பாடு தான்

மனம் பக்தியில் முதிர்ந்து சித்தியில் சிறந்து விடினும் மயக்கம் மாறா....ஏனெனில் பக்தியெலாம் சித்தியெலாம் மனத்தின் மயக்கமே தாம்....பக்தி முற்றி பழுத்து கனிந்து விடும் தருணம் வரைக்கும் மனத்தின் மயக்கம் இருக்கும் தொடர்வுறாது நிற்க்கும். பிற்பாடு தான் மனம் தன்னையே மாய்க்கும் தருனம் வரும்...அப்போது தான் “உன்னுடைய்ம் உன் உயிரையும் எனக்கு தந்தாய்..என்னுடலையும் என்னுயிரையும் நீ கொண்டாய்” என்பது மலரும்..மனம் ரெண்டற்று பக்தனும் பரமனும் ஒன்றாவர்...உடலும் ஒன்றாகி உயிரும் ஒன்றாகும்....அது கடைசி நிலை...மனம் ரெண்டற்று போனபின்னர் நிகழ்வது....அது வரை கற்பனை தான்...மனத்தின் மாபெரும் கற்பனை....பக்தெனும் பரமனும் இணைந்து விட்ட பிறகு பக்தி என்பது பயனற்று போய்விடும்....

நன்றி: திரு. ரியான் அய்யா

===================================

ஆத்மா என்னப்பெற்றது இந்த பொய்த்தூலம் கடந்த ஜீவதேகத்திற்கு அப்பாலுள்ள காரண தேகதிலுள்ள ஒரு பொருள்.

தூல தேகத்திலுள்ளவர்களுக்கு செவிப்புலனில் அறிவிக்கிறதென்றால், ஜீவதேகத்திலுள்ள இருட்கோலமாக இருக்கும் “ அசைவற்ற னினைவை” அசைவிற்கு கொண்டு வரும் பொருளே ஆத்மா. 
அதன் வல்லபம் கூறவென்றால் நூறு நூற்றைம்பது ஆண்டுகாலம் ஒருவன் உயிரோடு இருந்தாலும் அவன் உடலை நாற்றத்திற்க்கு விடாமல் பிடித்து வைத்திருக்கிறது , காரண தேகத்தில் நின்று நிலவும் அந்த ஆத்மாதான்

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

 இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

நிலையானது எது?. எது தான் நிலையானதாக இருக்கமுடியும்? நிலையற்ற ஒன்று எவ்விதம் ஆனந்தமாக அமையும்? நிலையற்ற எது தான் மெய்யென அறுதியிட முடியும்?இல்லையே அல்லவா?..?..?....


இங்கிருக்கிறவன் அங்கு சென்றால் சந்தோஷம் கிடைக்கும் என நினைக்கிறான், உடையில்லாதவன் உடை இருந்தால் சந்தோஷம் என நினைக்கிறான், உடை இருக்கிறவன் வீடு இருந்தால் சந்தோஷம் என நினைக்கிறான்...இவ்விதம் மனிதன் ஒன்றிலும் பூரண சந்தோஷத்தில் நிலைப்பதில்லை.ஆசை அவனை அலைக்கழிக்கிறது, ஒன்று விட்டு மற்றொன்று என அவன் காலம் பூராவும் நித்தியமான சந்தோஷத்துக்கு என பிரயாணம் பண்ணிகொண்டே இருக்கிறான்.


உலகத்தில் வந்து பிறக்காத ஆன்மாக்களுக்கு உடல் கிடைக்காத துக்கம், அவை ஒரு வாய்ப்புக்காக எண்ணற்ற கோடி கற்பாந்தங்களாக காத்து கிடக்கின்றன, ஒன்றுமே அறியாத, அறிய அறிபுலம் இல்லாத காரிருட்கூட்டத்து கருமை செறிபுலத்தே அவை புழுங்கி மழுங்குகின்றன, மக்கி மருண்டு திகைக்கின்றன,என்று தான் விட்இவு காலம் என விம்முகின்றன..விம்மவும் அறியா மட்கியநிலை...


தேவாதி கூட்டம் என ஒரு விதம், மற்றோர் உலகத்தோர்கள் கூட்டம் என மற்றோர் வகை, இங்ஙனம் எண்ணற்ற பிரபஞ்ச கூட்டத்தே விரிந்த தொகுப்புகளுக்கு இடையே பல்லுயிர்கள் கூட்டங்கள், எந்த விடிவுமின்றி சதா அலைந்து தவழ்கின்றன.எங்குமே இதற்க்கு விடிவு காலம், முடிவு காலம் என ஒருநாளும் இருந்ததில்லை. பல்லுடலங்கலில் புகுந்தாயிற்று, கர்மங்கள் பலகோடி நிறைந்தாயிற்று...எது தான் இவற்றிற்க்கு புகும் சரணாலயம்?


தூல உலகத்தில் வந்து பிறந்தவன் இதை நித்தியம் என மருள்கின்றான், தனது தேவைக்கு என பொருள் கொள்கின்றான், தான், தனது சுற்றம் முற்றம் அயலார் என ஒரு வட்டம், வட்டத்துக்கு வெளியே கோட்டை என வகுத்து கொள்கிறான். இப்படி கிராமம் ஒரு கோட்டை, நகரம் ஒரு கோட்டை, நாடு ஒரு கோட்டை தேசம் ஒரு கோட்டை என பலவித பரிணாம கோட்டைகளில் அவன் சுற்றித்திருகிறான், பிரபஞ்சம் அவனுக்கு பெரிய கோட்டை.,எல்லையில்லா விரிந்த கோட்டை. இந்த கோட்டைகளில் உழலுகின்ரவன் கொஞ்சம் அறிவு வர இதற்க்கு அப்பால் உள்ளது மெய் என நினைகின்ரான்.பிரபஞ்சத்துக்கு வராதவன் பிரபஞ்சத்துக்கு வர எத்தனிப்பது போன்று, பிரபஞ்சத்தில் இங்கு இருப்பவன் பிரபஞ்சத்துக்கு அப்பால் போக எத்தனிக்கிறான், இது இவனது இயல்பு.அப்பால் இருப்பவை மெய்யான நித்தியம் என இவன் நினைத்து கொள்கிறான்.


செத்தவனை பார்த்து சாகாதவன் நகைக்கிறான்,சாகாதவனை பார்த்து செத்தவனும் நகைக்கிறான் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை. கடலின் ஆழம் கடலில் குதித்த பிறகே தான் தெரிய வரும்.செத்தவனுக்கு சாவு விடுதலை, சாகாதவன் உலகத்தில் மாட்டிகிட்டு முழிக்கிறதை செத்து உலகத்தில் இருந்து விடுதலை அடைந்தவனுக்கு நகைப்பாக இருக்க தவறில்லை. உண்மையில் அவனும் இவனும் ஒன்றே,ஒரே கதி தான். யாரும் எங்கும் எப்போதும் பூரன விடுதலையை பெறுவதில்லை.இவனுக்கு இது நிஜம், அவனுக்கு அது நிஜம்.இங்கே இருக்கிறவன் எதிர்பார்ப்பு அவனுக்கு ஒரு கற்பனை உலகத்தை வளர்க்கிரது, அழகான சொர்க்கம் என அவன் கற்பனையில் எண்ணி அதற்க்கு என பாடுபடுகிறான்.அழகான சொர்க்கத்தை அடைந்தவன் ஒரு கட்டத்தில் அதுவும் நிரந்தரம் இல்லை என உணர்கிறான், அதுவும் அழிந்து போககூடியது எனும் நிஜத்தை புரிகிறான்.அவனுக்கு அதை விட பெரிய கற்பனையாக ஒன்ரு இருக்கும், அதை நம்பி எதிர்பார்த்து தவம் கிடக்கிறான். இப்படி எல்லா கோட்டைகளும் பொய் கோட்டைகளே என அவன் அறிந்து உணர்ந்து கொள்ல எண்ணற்ற கோடி எண்ணிலடங்கா கோடி முடிந்தாலும் முடிவதில்லை , கற்பனைக்கு மேல் கற்பனை என அவன் சதா பிரயாணப்பட்டு கொண்டு தான் இருக்கிறான்.


மரணமில்லா பெருவாழ்வு என ஒரு கூட்டம், சொர்க்கத்தில் சகல சுக அமைப்புகளுடன் ஏராளமான வசதிகளுடன் சுவர்க்கத்து ரதிக்கொப்பான இளம் மங்கைகளுடனான வாழ்க்கை என ஒரு கூட்டம், சொர்க்கத்தில் நீண்ட காலம் உல்லாச வாழ்க்கை என ஒரு கூட்டம்....இப்படி அனேக வித கூட்டங்களுள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எல்லாம் கற்பனை கூட்டங்களே என அறிய காலம் வரும்.இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சையான கதை தான் எல்லாம். அனைத்தும் கற்பனை, அனைத்து வாழ்வுகளும் கற்பனை, ஒன்றும் நிரந்தரமில்லை, எல்லா தவமும் கற்பனையாக கற்பனை கனவுகளுக்காக கற்பனையாக காத்திருக்கும் வீண் கற்பனைக்கோலம்


குருவை நம்பும் வரை சாதனை இருக்கும்... இல்லாவிட்டால் சாதனை இருக்காது.... இதுவெல்லாம் மாயாஜாலமே... சாதனை என்பது மாயாஜாலமே... சாதனையே உண்மை என நாம் மாயாஜாலமாக நம்பிகொண்டிருக்கிறோம்... அதனால் நிகழ்வது மாபெரும் விபத்து என்பதை கவனிக்க தவறி விடுகிறோம். அது என்னவென்றால், எந்த ஒரு சாதனையும் அந்த சாதனை செய்பவரை வளர்த்தி கொண்டிருக்கும், பல அனுபவங்களை கொடுத்து கொண்டிருக்கும், பல சித்திகளை கொடுத்து கொண்டிருக்கும், பல அற்புத செயல்களை வழங்கி கொண்டிருக்கும்... சாதகன் இதில் கட்டுண்ண்டு மேலும் மேலும் சாதனைகளின் தீவிரத்தை கூட்டி கொண்டிருப்பான்.. அதுவே அவனுடைய லட்சியமாக இரவும் பகலுமாக பரிணமிக்கும்.... ஆனால் அவன் கவனிக்க தவறும் ஒரு விஷயம் என்பது அவன் செய்து கொண்டிருப்பது எல்லாம் மாயையின் கட்டுகளுக்குள்ளாகவே... அவன் தன்னை பிறரை விட நன்றாக சாதனை செய்பவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட அதிக சித்திகள் உடையவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட ஆற்றல் மிகுந்தவனாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ளுவான்,..

ஆனால் அவன் உணர்ந்து கொள்ளாத ஒன்று அவனிடம் மேருமலை விட அதிக உயரத்திலும், யானையை விட பெரிய பலத்திலும், சிங்கத்தை விட பெரிய ஆற்றலிலும் அவனிடம் வளர்ந்து அழிக்கமுடியாத அசுர பலத்துடன் கோட்டை கட்டி தகர்க்க முடியாதபடி உருக்கொண்டுவிட்ட “அவன்” அப்போது இருப்பான்.....

மாயாஜால உலகினில் தான் மருந்தும் இருக்கிறது , மறைந்து, அதை அறிந்து உணர்ந்து கொள்ளுபவன் அதன் மகத்துவத்தை அறிந்து உலகத்தை பார்ப்பான்.... உலகத்தி வேரறுத்து விட்டு எங்கும் ஓடி போகமாட்டான்..உலகம் அவனுக்காக, அவனை பக்குவபடுத்தி கொள்ள வழங்கபட்ட மாமருந்து என அறிவான்... அவனில் குடியிருக்கும் "அவனை" தகர்த்து விடக்கூடிய மகா சஞ்சீவினி என்பதை கண்டு கொள்வான்.

நன்றி : திரு. ரியான் ஐயா

Friday, November 4, 2022

அவதூதர்களும் அம்பரர்களும்

 அவதூதர்களும் அம்பரர்களும்

நாம சஹஜமாக பார்க்கும் ஒரு கூட்டம் மகான்கள் தான் அவதூதர்கள் என கருதி வணங்கி ஏதோ பெரிய மகாசித்தர்கள் என சொல்லி பூசித்து ஏவல் செய்து பணிவிடை காட்டி அவர்களையே சுற்றி திரிந்து கொண்டிருக்கிறோம், ஆலயங்கள் சமாதிகள் மணிமண்டபங்கள் என ஏராளமான வழிபாட்டு தலங்களை இவர்களின் அடக்கத்தலங்கலாக கட்டி பூசை புனஸ்காரங்கள் செய்தும் வருகின்றோம்.ஆனால் உண்மையில் இவர்கள் அவதூதர்களா என யாரும் கேள்வி எழுப்புவதில்லை.அசிங்கமாக கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிகொண்டிருக்கும் ஒருவனை நாலு பேர் சொல்லக்கேட்டு அவதூதர்கள் பதவி கொடுத்து வணங்கி நிற்கிறோம்..பைத்தியக்காரத்தனமாக தனக்குத்தானே அர்த்தமில்லாமல் புலம்பி திரிபவனையும் அவதூதர் என சொல்லி பல்லாக்கு கட்டி சுமந்து திரிகின்றோம். மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாக திரிபவனுக்கும் இவர்களுக்கும் என்ன தான் வித்யாசம் என கேட்டால் ஒன்றுமில்லை.உண்மையில் இவர்கள் அவதூதர்கள் இல்லை என்பதே உண்மை.


யாரும் நிரந்தரமாக அவதூதர்களாக இருப்பதில்லை, அப்படி நிரந்தரமான அவதூதர் எனும் பதவி யாருக்கும் இல்லை என்பதே இதன் நிதர்சனம். எல்லா ஞானிகளும் அவதூதர்கள் தான். ஞான அவத்தைகளில் ஒன்று தான் அவதூத அவத்தை.ஜாக்கிரத் அவத்தைக்கும் முழு தூக்கத்துக்கும் மத்தியில் சொப்பனாவத்தை என ஒன்று இருப்பது போல, எல்லா ஞானிகளும் இந்த அவதூத அவத்தையை கடக்காமல் ஞான நிலைக்கு வருவதில்லை.ஒவ்வொரு ஞானப்படிநிலைகளுக்கும் மத்தியில் இப்படியான அவதூத அவத்தைகள் இருக்கின்றன.அவரவர்கல் கடக்கும் படிநிலையை பொறுத்து இந்த அவதூத அவத்தையில் நீளமானது கூடுதலாகவும் குறைவாகவும் இருக்கும். நாற்பத்தெட்டு நிமிடம் முதல் நாற்பத்தெட்டு வருடம் வரைகும் இந்த அவதூத நிலை நீடிக்ககூடும்.இது ஒரு ‘கடவுநிலை’ அனுபூதியல்லாது நிரந்தரமான ஒன்று இல்லை. எல்லா ஞானவான்களும் இந்த கடவுநிலையின் ஊடாகவே கடந்து மேல் நிலைகளுக்கு வந்துள்ளனர். அப்படியெனில் இங்கே அவதூதர்கள் என நாம் கட்டி வைத்திருக்கும் கோட்டைகள் யாருடையது?. உண்மையில் உங்களுக்கு நீங்களே கேட்டு கொள்ளுங்கள்.பைத்தியங்கல் அவதூதர்கலாக இருப்பதில்லை, அவதுதர்கள் ஞானிகளாக மிளிர்வர் என்பதே உண்மை. நிரந்த பைத்தியத்துக்கு மருந்தில்லை, .அது ஞானியாக மலராது.

அவதூதர்கள். அவதூத அவத்தையில் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு உருமாற்றம் பெற்று செல்லுபவர்கள்.முதல் நிலையிலும் அவர்கள் தெளிந்தவர்களாகவே இருப்பார்கள்,அடுத்த நிலையிலும் தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள்.ஆனால் சொல்லப்படும் அவதூத அவத்தை என்பது ஒரு இண்டர்மிட்டண்ட் நிலையே ஒழிய நிரந்தர நிலை அல்லாமல் இருப்பதினால் அவர்களிடத்தில் பைத்தியம் குடி இருக்காது.ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் குடியேறும் போது உண்டாகும் ஒவ்வாமை போன்றதே அவர்களின் அவதூத நிலை.அவர்கள் செல்லும் பாதயை நிச்சயம் நன்றாக உணர்ந்திருப்பார்கள்,பாதை தவறி பிறழ மாட்டார்கள்.இந்த அவதூத நிலையிலும் கூட அவர்கள் மக்களை மேல்நிலைக்கு இட்டு செல்லும் உன்னத பணியை நிரைவேற்றுவார்கள், தன்னலம் கருதாமல் சதா சிவக்கலப்பிலேயே இருப்பார்கள்.பைத்தியம் என்பது தன்னிலை இழந்த தன்மை.அது தான் வித்யாசம்

வாசி

 வந்ததுவும் போனதுவும் வாசியாகும்

வந்ததுவும் போனதுவும் வாசியாகும்
வானில் வரும் ரவிமதியும் வாசியாகும்
சிந்தை தெளித்து இருப்பவனாம் அவனே சித்தன்
செகமெலாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன்
~வால்மீகி


வந்ததுவும் போனதும் எதுண்ணு கேட்டா உள்ள வருகிற மூச்சும் வெளிய போகிற மூச்சும்ண்ணு கதை அளப்பான், அவனை நம்பாதே.


வானில் வரும் ரவியும் மதியும் வாசியாகும்ண்ணா எப்படிண்ணு கேட்டா சூரியகலை சந்திரகலைண்ணும் கதை அளப்பான், இவனையும் நம்பாதே.


சிந்தை தெளிந்து இதன் தெளிவை அறிந்தவனே சித்தன்.


செகமெலாம் வாசி சிவம் என்றே அறிந்திருப்பான் அவன் சித்தன்

நெருப்பானது நீருக்குள் அமைக்க வைக்கபட்டது. அந்த நெருப்பானது கெட்டு விடில் மரணம்.இந்த உடலுக்கு ஆதாரமாக வந்த பொருள் சுக்கிலம் எனும் நீர்,அந்த சுக்கில துளியுளே நெருப்பான பிராணன் சிதைந்து வெளியேறி போகின்றது.இந்த இரண்டையும் ஆதாரமாக கொண்டு இயங்கும் யோகம் வாசியோகம்

அதாவது ‘வகாரம்” எனும் அமிர்த நீரினுள் ‘சிகாரம்’ எனும் பிராண நெருப்பை அடைத்து வைத்தல் வாசியோகம்

ஆதாம் திருவடி

 ====ஆதம் திருவடி====


முன் பதிவின் துடர்சியாக ஆதம் பாதம் பற்றி கொஞ்சம் நுணுக்கம் பார்ப்போம்.

சிருஷ்டிக்கு ஆதாரம் ஆண்-பெண் ஜோடி என்பது அனைவரும் அறிந்திருக்கின்றதே.கடுமுட்டை உருவாக்குதல் கருவை சுமத்தல் தாய்மை அடைதல்,பிறப்பு வழங்குதல்,பால் ஊட்டுதல்,வளர்த்தல் என பெண்ணிடத்தில் இவ்வளவும் அமைத்து வைக்க தெரிந்த கடவுளுக்கு பெண்ணிடத்திலேயே ஒரு சிறுதுளி சுக்கிலத்தை அமைத்து வைக்கத்தெரியாதா என்ன?

உலகத்தில் பிறக்கும் அனைத்து ஆண்-பெண் இனங்கள் தாயினிடத்தில் இருந்தே பிறப்பு கொள்கின்றன,தாயே தொப்புள்கொடி ஆதாரம்.தாயில் இருந்தே உடல் உருக்கொள்கின்றது.ஒரு சின்ன அணு மாத்திரமான கருமுட்டை வளர்ந்து தான் இவ்வளவு பெரிய உடல் மலர்ந்த்ருக்கின்றது.ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் தொப்புள் கொடி எச்சம் தவிர்க்கமுடியாத வடுவாக எஞ்சுகின்றது. இது பிறப்பின் அடையாளம்.இந்த தூலம் ஒரு பெண்ணிடத்தில் தான் உருவாகியிருக்கின்ரது என்பதற்க்கு சான்று.ஒருவன் தாயிடத்தில் பிறக்காமல் இருந்திருப்பானாகில், தாயின் கருமுட்டையில் இருந்து வராமல் இருந்திருப்பானாகில் நிச்சயம் அவனுக்கு தொப்புள்கொடி இருந்திருக்காது ,அதன் வடுவும் எஞ்சாது.

உலகத்து ஜீவன்கள் பெண்களில் இருந்து பிறக்கின்றது, இந்த பிரவி எனும் சக்கரம் பெண்ணில் இருந்து பிரகடமாக ஆரம்பமாகின்றது.தூலபிரபஞ்ச விரிவு.ஜீவர்களின் கர்ம வினையின் ஆக்கம் இங்கிருந்து துவங்குகின்ரது.அது முன்னோக்கி தன் பிரயாணத்தை இயக்குகின்றது..கர்ம வினையின் விரிவு நகரிகின்ரது மரனம் நோக்கி...மீண்டும் பிறப்பு...இதைத்தான் ஆதிசங்கரர் ”புனரபி ஜனனம் புனரபி மரணம்..புனரபி ஜனனீ ஜடரே சயனம்”என அருமையாக விளக்குகின்றார்.அதாவது மீண்டும் மீண்டும் பிறப்பு...மீண்டும் மீண்டும் இறப்பு..மீண்டும் மீண்டும் தாயின் கருவறையில் படுக்கை என பொருள்.ஏன் சங்கரர் தந்தையின் சுக்கிலத்தில் தங்குவதை விட்டு போயிருக்கின்றார் என்பதை கவனிக்கவும்.ஏன்?.அப்போது தாயின் கருவறையில் படுப்பதற்க்கு முன் இவன் தந்தையின் சுக்கிலத்தில் தங்கியிருக்க வேண்டுமல்லவா?.நாம் அப்படித்தானே எங்கும் சொல்லக்காண்கின்றோம் அல்லவா?.ஆனால் உண்மையில் அது அப்படி அல்ல என்பதே நுணுக்கம் அறிந்தவர் கண்ணோக்கு.நீ மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே தான் இருப்பாய்..தாயின் கருமுட்டைகள் வழியாக. எண்ணற்ற பிறவிகள் நீ உன் கர்மங்களினால் இந்த தாய் -சேய் உறவாக இங்கே பிறப்பாய்.தாயின் கருவறை சுழற்சியில் இருந்து உன்னால் விடுபட முடியாது, நீ மெய்யான ஞானத்தை அறிந்திராவிட்டால்....ஆதம் பாதம் எனும் உன்னத அறிவை அறியும் வரை தாயுடன் உன் உறவு தொடரும்..

ஜனனீ என்றால் உலகம் எனவும் பொருள் உண்டு,உலகத்தின் தாய் என்றும் பொருள் தான்.இது இருமையின் ஒரு முகம்.சிவ-சக்தியான உள்ளமையின் ஒரு முகம், அவள் ஜனனீ என இருக்கின்றாள்.ஐவரும் அவளில் இருந்து பிறந்து செயலாற்றுகின்றனர்.உலகம் நிலைகொள்கின்றது.இந்த இருமையின் மறு பக்கம், மற்றொரு கோனம் மற்றொரு பரிணாமம் தான் தந்தை, ஆதிபிதா, ஆண் தன்மையான ஆதார சுக்கிலம்.அதனுடன் உனது முக்தி நிலைகொண்டுள்ளது.தாய் வழி விட்டு தந்தை வழியை நீ அறிந்து கொள்ளும் போது, தாய் உன் தந்தையை அறியப்படுத்தும் போது, உன் தந்தை மடியில் தவழ ஆரம்பிக்கின்றாய். தந்தை உன்னை வளர்க்கின்றார்.ஞானத்தை புகட்டுகின்ரார், உன்னை அவரை போல நாதன் ஆக்கி உன்னதத்தில் வைக்கின்றார்.

”விந்துநிலை தனையறிந்து விந்தை கண்டால்
விதமான நாதமது குருவாய் போகும்
விதமான நாதமது குருவாய் போனால்
ஆதியந்தமான குரு நீயே ஆவாய்
சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா
சகலகலை ஞானமெல்லாம் இதற்க்கொவ்வாது
முந்தாநாள் இருவருமே கூடிசேர்ந்த
மூலமதை அறியாட்டால் மூலம் பாரே”

=அகத்தியர்.

"நீங்கள் மண்ணிலிருந்து வந்தவர்கள்,நான் மண்ணிலிருந்து வந்தவன் அல்ல.நான் என் பிதாவினிடத்தில் இருந்து வந்திருக்கிறேன்.நீங்கள் என் பிதாவை அறிந்திராதவராயிருகின்றபடியாலே என்னையும் அறியாமலிருக்கிறீர்கள்,பிதாவை நான் அறிந்திருக்கிறேன்,ஆகையினால் என்னை கனம் பண்ணுகின்ரார்”=கிறிஸ்த்து

ஆண்டவரே நீர் போகும் முன்னே உமது பிதாவை எனக்கு காட்டித்தாரும் என்றான். அவரோ அவனை நோக்கி, நீ இத்தனை காலம் என்ன்னோடிருந்தும் என்னை அறியாதிருக்கிறாயே. நானும் பிதாவும் ஒன்றாகவே இருக்கிறோம், நீ என்னை கண்டிருக்கிறாய், இருந்தும் பிதாவை காட்டித்தாரும் என்கிறாயே,

‘என்னை கண்டவன் என் பிதாவை கண்டிருக்கிறான்’ என்றார்.”

பிதாவும் பிதாவின் மடியிலிருக்கிற குமாரனும் ஒழிய வேறொருவனும் பிதாவை அறியான்” என ஒருவர் சொல்லி எனில் அதை மற்றொருவர் அந்த நிலையில் அடைந்தால் ஒழிய சொல்லமுடியாது. அதனாலேயே, “எனக்கு முன் வந்தவர்கள் திருடர்களும் கொள்ளைகாரர்களுமாயிருக்கிறார்கள்” என சொன்னார். ஆனால் இப்போது நானும் கூட சொல்லுகிறேன்”கிறிஸ்த்துவுக்கு பின் வந்த பலரும் கூட கள்ளரும் கொள்ளைகாரர்களுமாக இருக்கிறார்கள்”

."நீ" இருந்த்து நீ வந்தது தந்தை வழியன்று... தந்தை உனக்குள் உயிர்ப்பு ஊட்டினவன் தானே.. "நீ" முதலில் தாயின் அண்டத்தில் அல்லவா இருந்தாய்.. அல்லவோ.. அண்டமாகிய "நீ” தந்தையின் உயிர்ப்பால் உயிரடைந்தாய்.. உனக்குள் உயிர்ப்பு வந்த விதம் இது தானே..சின்னஞ்சிறு முட்டை உயிர்பின்றி அரும்ப, அதற்க்கு தந்தை உயிர்ப்பூட்ட அம்முட்டையாம் "நீ" நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த்தாய்..பிறந்தாய்..அம்முட்டையே இத்தூலமாய் "நீ”.

(மூலமதை அறியாட்டால் மூலம் பாரே)

நன்றி - அய்யா

எது சுழுமுனை

 எது சுழுமுனை


அடியேனுக்கு ஒரு கூமுட்டை குரு வாய்ச்சாரு..அசாதரணமான ஞானம் கொண்டவரு தானுங்கோ..ஆனா மக்களுக்கு தான் அவர் சொல்ற ஞானம் புரிய மாட்டேங்குது....அவர் சொல்றார் சுழுமுனைண்ணா ரெண்டு புருவத்தின் மத்தி இல்லைண்ணு..நான் என்ன செய்ய..ரெம்ப குழம்பி போயிட்டேன்...யப்பா இவர் கிட்ட இருந்தா நம்மல மொத்தமா குழப்பி விட்டிருவார்ண்ணு நெனச்சு அவரை விட்டுபுட்டு வந்துட்டேன்..


மனுஷன் சொல்றத பார்த்தா ஏதோ உண்மை இருக்கும்போலேண்ணு இப்ப உள்ளுக்குள்ளா ஒரே வருத்தமா இருக்கு..நான் என்ன செய்யணும் சொல்லுங்க மக்கா...சின்ன குழந்தைங்க இருக்காங்களே..பிறக்கிறப்ப அதுங்களுக்கு கண்ணு ரெண்டும் எங்கயோ நட்டுக்கிட்டு நிக்கும் பாருங்க, அது தான் சுழுமுனைண்ணு சொல்லி அடம்புடிச்சுகிட்டு இருப்பார்,குருவுக்கு நாம சொல்லிகுடுக்கமுடியுமா என்ன,’இல்ல ஓய்...சுழுமுனைண்ணா புருவமத்தி தான்..அப்படித்தான் எல்லா ஞானியர்களும் சொல்லியிருக்காங்கண்ணு?’


ஒரு பாடல் வேற அப்பப்ப பாடுவாரு..நில்லுங்க, அத பார்த்து எடுத்து போடுறேன், நீங்களே நிதானிச்சுக்கோங்க..அவர் சொன்னது மெய்யா அல்லது நான் சொன்னது மெய்யாண்ணு.....


“””வாறான பிரம்மத்தின் நடுவே மைந்தா
வந்ததடா ரவிமதியும் சுடர்மூன்றாகி
கூறாக பின்னியடா கீழேபாயும்
கூறுகிறேன் இருகண்ணில் ஒளிவைகேளு
வீறான அண்டவுச்சி முனைகம்பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுதுபோலே
நேரான இருகண்ணில் பின்னலாகி
நிச்சயமாய் ஒளிவாகி நிறைந்தார் பாரே.


பாரப்பா பரப்பிரம்ம ஒளிவினாலே
பத்தியே நரம்புவழி பாயும்போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவதாகி
அண்டமெல்லாம் ஏகமாய் தெரியலாச்சு
காரப்பா நரம்பென்ற விழுதுவட்டம்
கபாலத்தில் முக்கூறாய் சுழுனையாச்சு
வீறப்பா காதுக்கும் நாக்குக்கும்தான்
வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்ககேளே.


கேளப்பா மூலமடா லிங்கந்தன்னில்
கிருபையுடன் கண்ணுக்கு கீழ்மேலாக
நாளப்பா தமர்போல பிடரிமார்க்கம்
நன்றாக ஓடுமடா நரம்பினூடே
வாளப்பா அண்டமுட்டி உயரமைந்தா
வலுவாக முன்சொன்ன நரம்பினூடே
கேளப்பா சேர்ந்துமிக பின்னலாகி
சிறந்திடவே புருவமத்தி ஆகும்பாரே.


பாரடா புருவமத்தி யேதென்றாக்கால்
பரப்பிரம்மமானதொரு அண்டவுச்சி
நேரடா முன்சொன்ன நரம்புமத்தி
நிலைத்ததடா சுழினையென்று நினைவாய்பாரு
வீரடா அண்ணாக்கின் நேரேமைந்தா
மேவடா மனந்தனையும் செலுத்தும்போது
காரடா சுழுனையில் மனந்தான் பாய்ந்து
கலந்தைந்துபூதமும்தான் ஒன்றாய்போமே.


போமடா முன்சொன்ன நரம்பினூடே
பூரித்து ரவிமதியும் சுடர்தான் மூன்றும்
ஆமடா பின்னியுந்தான் கீழேபாரும்
அந்தரங்கந்தன்னை பார்க்க அடங்கிபோகும்
நாமடா வெளிதிறந்து சொல்லிவிட்டோம்
நாதாந்தபிரம்ம நாட்டந்தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்டவுச்சி
உறுதியுடன் சித்தமதை ஊணிப்பாரே.

~(காகபுசுண்டர் ஞானம் 80

மெய்பொருள் என்பது அழிவில்லாத பொருள், எக்காலத்திலும் அழியாத பொருள். அழிந்து போகிர எந்த பொருளும் மெய்பொருள் கிடையாது.அழிந்து போகிர பொருட்கலை தீட்சை பண்ணுபவன் குருட்டுகுரு என்பதில் சந்தேகமே கிடையாது. பீரப்பாவின் ஞானரெத்தின குரவஞ்சிக்கு 32க்கு போவோம்,”அன்றுமின்றுமழியாத பொருளென்னடி சிங்கீ-இரு கண்ணையும் மூட இருள் அழியா பொருள் சிங்கா”.இது தான் ரகசியம் பரிபாஷை ஒண்ணும் இல்லாத மெய்பொருள்பாடல்

102-பொல்லா குபிர்களும் வருங்குற்றமும் பொருந்தா பிணிதுன்பம் பலவாபத்தும் நில்லா வறுமையும் மனச்சலிப்பும் நினைப்பு மறப்பும் வந்தெய்திடாமல் எல்லா வினைகளும் முசீபத்தும் வந்தென்னை அணுகாமல் காத்தருள்வாய் அல்லா வுனை புகழ்ந்துன்னோடிரப்பேன் அடியேன் துஆப்பேறி டேற்றுவாயே” என்கின்ரார்.இதிலிருந்து ஞானபுகழ்ச்சி என்பது பீர் அப்பா அவரின் துக்கங்கலை, அவரின் வேண்டுதல்களை, அவரின் குறைகலை, விண்ணப்பங்கலையே குறித்து பாடுகின்ரார் என்பது தெளிவாகின்ரது அல்லவா?

இது போல அவரின் பிரவி குருட்டை தீர்த்து இரண்டு கண்களிலும் பார்வை மறைப்பை நீக்குவிக்குமாறு பாடுகின்ரார்.உங்களுக்கு இதை போதகம் பண்ணினவர் ஒன்றை சொல்லாமல் மற்றொன்ரை காட்டி திரித்து கூறியிருக்கின்ரார் போல. பிரப்பா பிரவிகுருடர் என்பதை உங்களுக்கு மறைத்து வைத்துவிட்டு, இந்த பாடல்கள் எல்லாம் நமது கண்களில் ஏதொ குருடான மறைப்பு இருக்கிரது போலவும், அந்த மறைப்பை மாற்றவே பீரப்பா இப்படி பாடல்கள் பாடியிருக்கிறார் போலவும் திரித்து கூறியிருக்கின்ரார்.அவ்வளவுதான் இதன் விஷயம். குருடன் பாடினான், அதை கேட்டு குருடு இல்லாதவ்னும் குருடனாக பாவித்து பாடுகின்ரான்

வள்ளலார் கிட்ட ஒரு பெந்தகோஸ்தே காரனை கொண்டு போனா அவன் உடனேயே “பாவியே மனந்திரும்பு, தெய்வராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது” என சொல்லுவான்.அது போலத்தான் நம்ம குருமார்கள் நிலையும். சும்மா இருக்கிறவனை போயி நீ பாவி என்பார்கள், உன் கண்ணில் பாவ மறைப்பு இருக்கிறது என்பார்கல், நீ மனந்திரும்பாமல் போனால் உனக்கு தெய்வராஜ்ஜியம் இல்லை என்பார்கல். ரெண்டு பேரும் ஒண்ணு தான் சொல்றாங்க.பெந்தகோஸ்தகாரன் ஒரு பாவமும் இல்லாதவனை போயி பாவி என சொல்லுவான்.குருட்டு குரு சும்மா இருக்கிற கண்ணுல பாவ மறைப்பு இருக்குண்ணு சொல்லுவான்.அவ்வளவுதான்.

பச்சைக்கிளியே பரந்தாமன் வாராரோ

 பச்சைக்கிளியே பரந்தாமன் வாராரோ


இச்சைக்கிருந்தும் இறையாசை இன்றேல் பச்சைக்கிருந்தும் பசிதாகம் வேண்டேல் உச்சிக்கிருந்தும் ஒருபோது உண்ணல் பச்சைக்கிளியே பரந்தாமன் வாராரோ.


சாதாரன மக்கள் ஆன்மீகம் என்பது சும்மா ஒரு பொழுதுபோக்காக ஆன்மார்த்தமாக வைத்துகொள்வது கிடையாது,எல்லாம் தெரிந்துகொள்வது அவ்வளவுதான் ,அல்லாது இந்த சென்மசாபல்யம் கிடைக்கவேண்டும் எனும் ஆழ்ந்த உணர்வு தோன்றுவது கிடையாது,ஆழத்தின் ஆழத்தில் பீறிட்டெழும் வெடிப்பு தான் ஆன்மீகத்தின் உச்சத்தை தொடும்,அடையத்துடிக்கும் ஏகாக்கிரதை,பந்தங்களின் மேல் விரக்தி, இது இரண்டும் சேர்ந்ததுதான் பக்தி எனப்படுகின்றது.சும்மா வெறும்பாட்டுக்கு நானும் ஆன்மீகவாதி தான்ணு இருக்கிற பலபேரை தெரியும்,அதன் விளைவாக எழுந்தபாடல் இது. இதன் விளக்கம் வருமாறு=”இச்சைக்கு என ஆன்மீகத்தை கொண்டு நடப்பர்,ஆனால் இறை ஆசை என்பது ஆழமாக இருக்காது,அன்பு பக்தி பெருக்கெடுத்து ஆற்றாத புண்ணைப்போன்று சதா ஆழ்மனதில் படர்ந்து ஒருவித ஏக்கத்தையும் துன்பத்தையும் வருத்தத்தையும் தராமல் இருப்பின்,பச்சையான துளசி இலையை பறித்து தின்று கொண்டு விரதம் இருப்பவர்கள் பலர்,அதுபோல பசி தாகத்தத்தை அடக்கி விரதம் இருப்பவர்கள் பலர்,உச்சிவேளையில் மட்டும் ஒருபோது சிறிது உணவு மட்டும் கொண்டு விரதம் இருப்பவர்கள் பலர்,இவ்வண்ணமான விரதங்களை கொண்டிருப்பவர்கள் பால் கருணைகொண்டு பச்சைமால் அருகில் உறையும் பச்சைகிளியான ஸ்ரீதேவியே பரந்தாமன் வருவாரோ?” என கேள்வியாக கேட்க்கபட்டுள்ளது

வாலறிவும் தலையறிவும்

 வாலறிவும் தலையறிவும்

நாம பல இடங்களில் ‘வாலறிவு,வாலறிவன்” எனும் வார்த்தைகளை பார்த்திருக்கிறோம்,அதன் விளக்கங்களையும் பார்த்திருக்கிறோம்,ஆனால் வாலும் தலையும் அறியாமல் இருக்கிறோம்.இது ஒரு உருவகம்,ஞான உருவகம்,சில விஷயங்களை சூட்சுமமாக சித்தரிக்கும் முறை,அதாவது ஃபார்முலா மாதிரி அல்லது குறியீடு மாதிரி. அந்தந்த குறியீடு அந்தந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் தெரியும், எது எதை குறிப்பிடுகிறது என்பது,அதன் விளக்கம் இன்னது என்பது.தெரியாதவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியவராது.அது போலத்தான் குண்டலினீ என்பதும். நம்ம மக்கள் ஏதோ பாம்பு சுருண்டு படுத்திருக்கிறது மாதிரி கற்பனை பண்ணிக்கொள்வார்கள்,கதையும் விடுவார்கள்.


மனிதர்களுக்கு அருளப்பட்டிருக்கும் அற்புத தனித்தன்மை என்பது ஓசை ஒலிநய பாஷை கையாளும் தன்மை.இந்த அறிவு வாக்கறிவு எனப்படுகிரது. பரை விரித்த கோலம், ஏராளமான புள்ளிகள் போட்ட அற்புதக்கோலம்.ஒவ்வொரு கோலமும் ஒவ்வொரு பாஷைகள் போல போட்டு வைத்துள்ளனர் முன்னோர்கள்.ஒவ்வொரு கோலத்துக்கும் ஒரு வித தன்மை உள்ளர்த்தம் கூட இருக்கும், உருவகம் இருக்கும்.நம்மில் இயங்கும் ஆற்றல்,பிராணசக்தியின் வெளிப்பாடு பல வித கோணங்களில் இருக்கின்றது.அவற்றில் முக்கியமானது பேச்சும் மூச்சும் தான்.மூச்சு தலை என்றால் பேச்சு வால்.மூச்சின் எழுத்து தான் தலையெழுத்து என்பது,பேச்சின் எழுத்து வாலெழுத்து.மூச்சு சிவம் என்றால் பேச்சு சக்தி, மூச்சு பேசா எழுத்து என்றால் பேச்சு பேசும் எழுத்து.இந்த பேச்சு மூச்சினுள் ஒடுங்கி நிற்கின்றது.அதாவது குண்டலினீ தன் வாலை வாயினுள் கவ்விகொண்டு துயில்கிறது என கற்பனை உருவகம்.


பிராணாயாமம் முதலான சம்பிரதாயங்களினூடே எவ்வண்ணம் குண்டலினீ சக்தியை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோமோ அவ்வண்ணம் மற்றொரு முறை தான் பேச்சு சக்தியை கொண்டு உணர்வு நிலைக்கு மேலேறும் முறையும்.இதை ஓதி ஓதி உணர்தல்,ஓதாதுணர்தல் என வகைபடுத்துவர் ஞானியர்கள்.பேச்சின் சூட்சும அறிவு நிலைக்கு பரையறிவு அல்லது வாலறிவு என்பர்.பர வித்தை என்பதும் இதை கொண்டு இயற்றப்படும் சம்பிரதாயம்தான்.இவ்வண்ணம் பிராணனுக்கும் பேச்சுக்க்கும் மையமாக திகழ்வது ஒரு அமானித விந்துநிலை. அதற்க்கு தான் வித்யா தத்துவம் என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. எழுநிலை சூட்சுமம் அது,அதில் இருந்து கிளம்புவதால்,அமிர்த விந்துவுக்கு எழுத்து என பெயர் வைக்கபட்டிருக்கின்றது.அட்சர சொரூபமாக வாலறிவாக விளங்குவதால் சித்சொரூப சக்திக்கு வாலை என பெயர்.அதாவது அமிர்த சொரூபமாக சதா வடிந்து கொண்டிருப்பவள்,அமிர்த பாஷிணி.அதி சூட்சுமத்துக்கு செல்லாமல் சற்று குறுக்கி கொண்டமைக்கு மன்னிக்கவும்

குஞ்சிதபாதம்

 ==================குஞ்சிதபாதம்====

ஆதமென்ன அவருடைய பாதமென்ன வென்றால் அறியாதபேர்களெல்லாம் அறியசொல்வேன் கேளும்-வேதமென்றும் ஆதமென்றும் விளம்புவதுமது தான் வெகுபலதாய் சமையுமுன்னே அஹதியத்தாயிருந்து -அதுதான் அஹதத்தென்று அனைத்தியுமுள்ளொடுக்கி அப்புறமும் வாகிதத்தாய் வானத்திலோ ஆதம்-வாகிதியாவதென்ன ஆதமுருவாச்சு வகைவகையாய் தலைமுறையாய் வந்ததந்த விந்து--அந்த விந்து ஆதமுதல் அணிய வந்ததாலே அதுதானே ஆதமது பாதமது நிஜமாம்-விந்தைபெறும் ஆதத்துட விந்து நிறம் வெள்ளை வெடித்து புகை காற்றாய் வெளியில் வருமூச்சாம்-மூச்சாகும் தம்மாஹூ முயிரு ஹயாத்தாகும்-முடியாத தம்மல்லவோ ஆதமென்று பேரு-ஆசரியம் மூச்சுக்கொரு ஆதாரம் அலிபு அந்தலிபு மூச்சுமல்ல ஆதத்துடபாதம்-அந்தலிபு நிலையறிந்து அதற்க்கு சுஜூதிட்டால் அதிகதவம் ஆதத்துட பாதமது நிஜமாம்.

(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்-பிஸ்மில் குறம்)====


ஆதமென்ன அவருடைய பாதமென்ன வென்றால் அறியாதபேர்களெல்லாம் அறியசொல்வேன் கேளும்-வேதமென்றும் ஆதமென்றும் விளம்புவதுமது தான் வெகுபலதாய் சமையுமுன்னே அஹதியத்தாயிருந்து -அதுதான் அஹதத்தென்று அனைத்தியுமுள்ளொடுக்கி அப்புறமும் வாகிதத்தாய் வானத்திலோ ஆதம்-வாகிதியாவதென்ன ஆதமுருவாச்சு வகைவகையாய் தலைமுறையாய் வந்ததந்த விந்து--அந்த விந்து ஆதமுதல் அணிய வந்ததாலே அதுதானே ஆதமது பாதமது நிஜமாம்-விந்தைபெறும் ஆதத்துட விந்து நிறம் வெள்ளை வெடித்து புகை காற்றாய் வெளியில் வருமூச்சாம்-மூச்சாகும் தம்மாஹூ முயிரு ஹயாத்தாகும்-முடியாத தம்மல்லவோ ஆதமென்று பேரு-ஆசரியம் மூச்சுக்கொரு ஆதாரம் அலிபு அந்தலிபு மூச்சுமல்ல ஆதத்துடபாதம்-அந்தலிபு நிலையறிந்து அதற்க்கு சுஜூதிட்டால் அதிகதவம் ஆதத்துட பாதமது நிஜமாம்.

(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்-பிஸ்மில் குறம்)====


ஆதமென்ன அவருடைய பாதமென்ன வென்றால் அறியாதபேர்களெல்லாம் அறியசொல்வேன் கேளும்-வேதமென்றும் ஆதமென்றும் விளம்புவதுமது தான் வெகுபலதாய் சமையுமுன்னே அஹதியத்தாயிருந்து -அதுதான் அஹதத்தென்று அனைத்தியுமுள்ளொடுக்கி அப்புறமும் வாகிதத்தாய் வானத்திலோ ஆதம்-வாகிதியாவதென்ன ஆதமுருவாச்சு வகைவகையாய் தலைமுறையாய் வந்ததந்த விந்து--அந்த விந்து ஆதமுதல் அணிய வந்ததாலே அதுதானே ஆதமது பாதமது நிஜமாம்-விந்தைபெறும் ஆதத்துட விந்து நிறம் வெள்ளை வெடித்து புகை காற்றாய் வெளியில் வருமூச்சாம்-மூச்சாகும் தம்மாஹூ முயிரு ஹயாத்தாகும்-முடியாத தம்மல்லவோ ஆதமென்று பேரு-ஆசரியம் மூச்சுக்கொரு ஆதாரம் அலிபு அந்தலிபு மூச்சுமல்ல ஆதத்துடபாதம்-அந்தலிபு நிலையறிந்து அதற்க்கு சுஜூதிட்டால் அதிகதவம் ஆதத்துட பாதமது நிஜமாம்.

(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்-பிஸ்மில் குறம்)

தன்னையறிய மனம் இல்லாமலோ, செயலற்று போக வேண்டுமா?

 === தன்னையறிய மனம் இல்லாமலோ, செயலற்று போக வேண்டுமா? ===


உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்... அதற்க்கு மனம் தேவை இல்லை..... ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?...
அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது...

அறிவானதே அந்தகாரத்தை ஊடுருவும் தன்மை கொண்டது... அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்... அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்.... எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது....

பிராணாயாமங்கள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகள், மெய்யறிவு என்பது பஞ்ச இந்திரியம் கடந்த அறிவு. சாதாரண உபதேச சாதனைகள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகளே. இவை கறிக்கு ஆகாது.

இந்திரியங்கள் வழி பிரயாணம் செய்தால் மனத்தை அடைவீர்கள், பிராண அபானன் வழி சென்றீர்களானால் சுழுமுனையை அடைவீர்கள்.. ஆனால் ஜீவவாசலை அடைய முடியாது ஜீவனுக்கு போகும் வாசல் ரொம்ப ரொம்ப சின்னது. அதாவது சின்னது என்றால் பொருள் ரொம்ப நுணுக்கமானது என்பதாகும். அறிவுக்கு வருவது ரொம்ப அரிது. குருவே சரணம்.

வித்தியா தத்துவத்தை தான் அறிவு என்கின்றனர்..... ஆனால் அந்த அறிவு நமக்கு காரியப்படாமல் உள்ளது , அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கிறோம்... அந்த அறிவினாலேயே ஆன்மாவை அறியகூடும்.. அல்லாது மனமோ, பிரானனோ ஆன்மாவை சென்று அடையாது... அதனாலேயே அறிவு விளக்கம் பெறவேண்டும் என வள்ளலாரும் சொல்லுகின்றார்

அறிவு என்பது சற்குருபிரான் தயவால் கிடைப்பது என்பது நிச்சயம்..ஆனால் அது அவரால் நிகழ்வது இல்லை...சீடனின் ஆழ்ந்து செல்லும் திறத்தால் நிகழ்கிறது...தூங்குற சீடனுக்கு சித்தர் குருவாகி வந்தாலும் பயனொன்றுமில்லை.

--❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

நாயோட்டி மந்திரம்

 பரம்பரை பரம்பரையாக பல குருமார்களும் மிக ரகசியமாக இந்த நாயோட்டி மந்திரம் என்பதை பெரும் பாதுகாக்கபட்ட பொக்கிஷமாகவே வைத்திருந்தனர்.ஆனால் பலகாலம் அடி பணிந்து பின் துடர்ந்து செலவிட்டு கடைசியில் கிடைக்கிறதென்னவோ “சி” எனும் மந்திரம் தான்.இதை பலபேரும் சொல்ல கேட்டிருக்கேன்.உண்மையில் இவர்கள் “நாயோட்டி” மந்திரம் அறிந்தவர்கள் அல்ல.இவர்கள் சொல்லும் நியாயம் "சீ” என நாயை ஓட்டுகின்றார்களாம். அதனாலத்தான் இது நாயோட்டி மந்திரமாம்.என்னா ஒரு -----த்தனமான கற்பனை. விஷயம் கிடப்பது எங்கே? இவர்கள் சொல்லுவது எங்கே?..இதுவா நமனை ஓட்டும் மந்திரம்


 பஞ்ச பூத கலப்பான உடலில் அமுதம் சதா சிந்திகிட்டு தான் இருக்கு....நாம தான் தெரியம இருக்கோம்.பாடுபட தேவையில்லை..எல்லாம் “முடிச்சு’ தான் வெச்சிருக்கு பத்துமாசமான கற்பக நிலையில் எல்லாம் அமைக்கவேண்டிய முறையில் அமைத்துத்தான் இந்த ‘காயாபுரி கோட்டை’ கட்டி வெச்சிருக்கு.ஒண்ணும் பிரிக்கவும் வேணாம் சேர்க்கவும் வேணாம்.அமுதை எங்கிருந்து சதா சிந்திகிட்டு இருக்குண்ணு மட்டும் புரிஞ்சா பொதும்

பரதம் எனும் சுக்கில ரசமும் கெந்தியெனும் கருவண்டமும் சேர்ந்து உருவான பிண்டம் பத்துமாதம் கரு உலையில் வெந்து உருவாகி அண்ட பிண்டமாக முடிந்து பிரந்திருக்கிரது.அதனுள் சேர்க்க வேண்டியது எல்லாம் அருமையாக சேர்த்து உருக்கி அமைக்கபட்டுள்லது. சிந்தி போகிற அமுதை சிந்தாமல் அருந்தினால் சிந்தாமணியில் கற்பகாலம் வாழலாம்.

ஒவ்வொரு நொடியில்

 ஒவ்வொரு நொடியும் உடல் மாறுகிறது, ஒவ்வொரு நொடியும் அணுக்கள் மாறுகின்ரன, ஒவ்வொரு நொடியும் தளர்ச்சி உண்டாகின்ரது, ஒவ்வொரு நொடியும் மனம் மாறுபடுகின்ரது, ஒவ்வொரு நொடியும் மனம் தளர்ச்சியுறுகின்றது, ஒவ்வொரு நொடியும் உயிர் மாறுகின்றது, ஒவ்வொரு நொடியும் உயிர் தலர்சியுறுகின்றது, இது நியதி. தலர்ச்சியுறும் அனைத்தும் ஒருநால் சாவும்


வலர்ந்து தேயும் வாழ்க்கையில் நலம் என ஒன்றில்லை,அனித்திய நலத்தையே நலம் என நம்பியிருக்கின்றோம். இது அறிவின் தளர்ச்சி, இந்த அறிவும் சாவும்

கர்மாவே காரணி எனும் அறிவு மலர மனம் மணக்கும், அதனுட் அகந்தைக்கு அழிவு வர ஆரம்பிக்கும். பொய்யான கர்வம் போய் தொலையும், கெட்ட நாற்றம் அகல அறிவு மனக்கும். அறிவு மனக்க ஆணவம் அகலும், ஆணவம் அகல ஞானம் தென்படும். ஞனத்தில் ஊன்ற விடுதலை சித்தியாகும்

 முதுமை பிணி மரணம் என்பவை ‘நான்’ எனக்குத்தான் நிகழ்கின்றன என வருத்தமுற்றேன், இல்லை இங்கு ‘நான்’ இருக்கவேயில்லை, அப்புறம் இவை எனக்கு எங்ஙனம் வரும் என தெளிவுற்றேன், இவை ‘என்னை’ பற்றியிருக்கவில்லை, ‘நான்’ தான் இவைகலை பற்றியிருக்கின்றேன் என அறிவறிந்தார், விடுதலை அடைந்தார்

ஜென்மங்கள் என்பது க்‌ஷண நேரத்தில் நடக்கும் சிலது, சிலது எப்ப நடக்கும்ண்ணு சொல்லவே முடியாது, அதன் பரிணாமம் அப்படியானது.ஏனெனில் அடுத்த சென்மம் என்பது இவ்வுலகில் மட்டுமல்ல நடப்பது, இவ்வுலகை போன்ற 80 ஆயிரம் கோடி பரினாமங்கலை கொண்ட புதியதோர் உலகிலுல் கூட நடக்கலாம். இப்பிரபஞ்சமனைத்தும் அந்த பரிணாமங்களில் ஒன்ரே

.மரணம் என்பது எப்படி உறுதியானதோ, அப்படி விடுதலையும் உறுதியானதே. பிறந்தவன் மரணித்தாக வேண்டும், அதுபோல சுழலில் சிக்கியவனும் கரையடைந்தாகவேண்டும். இது முற்றான நியதி

அடுத்த சென்மத்துக்கு விதை என்பது இச்சென்மத்து கர்ம பலன்களே, கர்ம பலன்களில் இருந்து தப்பிப்பது என்பது எளிதல்லவே.அதற்க்கு உகந்ததாகவும், மெருகூட்டவும் மட்டும் சொல்லப்படா உபதிகள் பல. அவற்றில் ஒன்று தான் நிஷ்காம கர்மம், சேவை மனோபாவம், தானம் தயவு உதவிதல் ஜீவகாருண்யம் என பல வகை.இறை வழிபாடும் இதற்க்காகவே செய்விக்கபட்டது, அல்லாது இறைவனை அடைவதற்க்கு அல்ல

 விக்ரக வழிபாடு முதல் தபசெபங்கள் அனைத்தும் உபாதிகளே, மனதை செம்மையாக்கும் பணிகளே அவை செய்கின்றன. சூட்சுமம் அறிந்து செயல்பட கர்ம விடுதலை நிகழ்கின்றது. தன்னலமற்ற குணம் வலர்து பூத்து காய்த்து தன்னை இழக்கும் போது ஞானம் மிளிர்கின்ரது, விடுதலை சித்திக்கின்றது.

ஆனால் இவனின் மூடபுத்தி பலபல கர்மங்களை செய்யவே இவனை தூண்டும், அப்படி கர்மங்களிலேயே மீண்டும் மீண்டும் அகப்பட்டு என்று தான் கிடைக்கும் விடுதலை என ஏங்கி ஏங்கி சென்மங்கள் பல புகுந்து கொண்டிருப்பான், கர்மங்கள் சம்பாதித்துகொண்டுமிருப்பான்.விடுதலை என்பது அசாத்தியமாக அவனுக்கு தோன்றும். மாயவலைக்குள் சிக்கி தவித்து தவித்து கர்மபலன்களால் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேயிருப்பான்

மனித பிறப்பு போன்று எண்ணமற்ற பிரபஞ்ச பரிணாமங்களில் இந்த ’பூ’ உலகு அருமையானது, விடுதலைக்கு ஏற்ப ஒருங்கே அமையபெற்றது.இதில் வந்து கருக்கொண்டவன் பூத்து மலராமல் போனால், இனி என்று வாய்க்கபெறும் இப்படியொரு பிறப்புவாய்க்குமா வாய்க்காதா என்பது நாம் செய்யும் கர்மாவின் பலனை பொறுத்தது, வாய்க்கலாம் அல்லது வாய்க்காமல் மற்றொரு கோணத்தில் மற்றொரு பரிணாமத்தில் மற்றிரு உலகினில் பிறக்கலாம்

நான் இங்கு இல்லை’ எனும் பிரக்ஜை ஊன்ற அது ஞானத்துக்கு இட்டுச்செல்லும்.கர்மங்கள் பலனற்று போகும். ‘நான்’ என்பதில் தான் கர்மங்கள் பலன் பெறுகின்றன


 செபம் தபம் தானம் எல்லாம் அதற்க்கான படித்துறைகள் தாம், கொஞ்சம் கொஞ்சமாக அறிவின் உச்சத்தை தொட மவுனம் பூக்கிறதுஉடலிருக்கும், உணர்விருக்கும், மனமிருக்கும், உயிரிருக்கும் ஆனால் ”தான்” இருக்காது, நனொன்றில்லை, நீயொன்றில்லை, நாந்தான் எனவொன்றில்லை, நீவேறென்றிர்லை..அந்தபடியான போதம் ஒன்றுமில்லையான நிலை

விடுதலை என்பது சிறை என்பதின் மறுபுறம். ஒருவன் விடுதலை அடைகிறான் எனில் அவன் அதுகாறும் சிறைவயப்பட்டிருப்பான் என்பது திண்ணம். விடுதலையை இது விடுதலை தானா என அறிந்து கொள்ளுவது அதன் விடுதலையின் தன்மையினாலே தான், ஏனெனில் அங்கு அவன் அதுகாறும் அனுபவித்த சிறை அனுபவம் முற்றிலும் நீங்கியிருக்கும்விடுதலை என்பது

விடுதலை ஆனவர்களின் உணர்வுநிலை அன்று. அவர்களுக்கு விடுதலை எனும் உணர்வு இருக்காது.சிறை எனும் உணர்வும் இருக்காது.இவை இரண்டும் அற்ற நிலை.

நான் விடுதலை ஆகிவிட்டேன் எனும் உணர்வு வந்தால் அவன் மீண்டும் சிறைக்குள் வந்துவிடுவான்.

எனக்கு விடுதலை கிடைத்து விட்டது எனும் உணர்வு அவனில் எழுந்தால் அக்கனமே அவன் சிறைவயப்பட்டுவிடுவான்.அவ்வளவு நுணுக்கமானது இதன் தன்மைஅந்த கணநேர சிறைவாசம் அவனை மென்மேலும் ஆயிரம்கோடி கற்பாந்தங்கள் சிறைவாசத்துக்குள் புகுத்திவிடும்

ஆயிரம் ஜாடி நறுமணம் கமழும் வாசனைதிரவியத்தை பூசினாலும், அரை நிமிடம் நரகலில் படுத்தால் நரகலின் வாசம் தான் எஞ்சும்

நன்றி
அண்ணன் ரியான் அவர்கள்
சத்விசாரத்தின் தொகுப்பு

அவசியம்

 நமக்கு உறக்கம் வருகிறது, பயம் உண்டாகிறது, சந்தோசம் பொங்குகிறது, இவையெல்லாம் நமக்குள்ளே இருந்து தான் உண்டாகின்றன.


விழிப்பு, மயக்கம், தைரியம், கோபம், சாந்தம், இரக்கம், நமக்குள் எந்த எந்த எல்லைகளில் இருந்து உண்டாகின்றன?

மனிதர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை இவை.

தன்  வீட்டிற்குள் உள்ள பொருளை, காலமெல்லாம் தான் தெரிந்துகொள்ளாமலும், தேடாமலும், இருந்துவிட்டு கடைசியில் கலவுபோகக் கொடுத்தவனைப் போல இவனது வயசும் போய் சாவும் வந்து விடுகிறது. 

தனக்குள் சாவுப் பாதை எங்கே? சாயுச்சிய பாதை எங்கே? அவை தங்கும்தலம் எது எது? என்று இப்போதே காண வேண்டாமா? இவை எல்லாம் அறியத்தானே சர்வேஸ்வரன் இந்த அருமையான தூலத்தையும் அறிவையும் தந்தது?

இதை தெரிந்து கொள்ள தன முயற்சியால் முடியுமா என்றால் முடியாது என்றும்? அதற்கு ஒரு சத்திய நித்திய ஆசான் அவர்கள் துணை வேண்டும் என்று சொல்கிறார்கள். 

அந்த நித்திய ஆசான் யாரோ?

முஹம்-மூன்று

 முஹம்-மூன்று


கண்ணாடியில பார்த்தா கடவுள் காட்சி தருவாரா?, தருவார் என்கிறது சாட்சியங்கள்.இங்க பலபேரு கண்ணாடி முன்னால் நின்னுகிட்டு குத்துவிளக்கு ஏற்றி வெச்சுகிட்டு கடவுளை காண காத்திருப்பதுவும் காண்கிறோம்.ஏராளம் ஆலயங்களில் கூட கண்ணாடியே பிரதிட்டை செய்யபட்டிருப்பதையும் காணலாம்.இவையெல்லாம் எதை குறிப்பிடுகின்றதுவாம்?வள்ளலார் கூட கண்ணாடியில் முருகபெருமானை தரிசித்ததாக சொல்லபடுகின்றதல்லவா?.

தியானம் செய்யவேண்டுமெனில் அருவமாக செய்யகூடாது, உருவமாகவே செய்யவேண்டும் என்பது வள்ளலார் வரையறை.கூடவே அவர்,”பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் பார்க்கபடும் பொருளும் கெடுவது அதீதம்” என்கின்றார்.இங்கே இந்த பார்க்கபடும் பொருள் என்பது உலக பொருட்களா,உலக காட்சிகளா? அல்லது எதாவது உருவமா? எனில் வள்ளலார் உருவ வழிபாட்டையே முன்னிறுத்துகின்றார் என சொல்லிவிடலாம் அல்லவா?.உருவம் கரைந்து அருவமாகும் என தொடர்ந்து அவர் சொல்லிவதில் இருந்து முதலில் உருவ வழிபாடு செய்யலாம் என சொல்லிவிடலாம் அல்லவா?.உண்மை என்ன?.
இங்கே பலபேர் வள்ளலார் சொல்லும் பார்க்கபடும் பொருள் என்பது கண்ணாடியின் முன் நின்று பார்க்கும் போது தெரியும் நமது கண்மணியையே என்கின்றனர்.இந்த கூமுட்டைகள் என்று தான் முகத்தை பார்க்க கற்றுகொள்ள போகின்றனரோ தெரியவில்லை.அகத்தின் அழகை என்று தான் முகத்தில் காண போகின்றனரோ என்னமோ?.

’முகத்துக் கண்ணை முறுக்கி திருத்தியே அகத்துக் கண்ணை அறுத்து பிளந்து பின் வகுத்த ஜோதி மணிவிளக்கென்னுளே தொகுத்து பார்க்க சுகம் பெற்றாய் நெஞ்சமே”=பீர் முஹம் அது.

சகஜ பழக்கம்

 சாக பழகுவதே சகஜ நிட்டை...சாகாத கால் பிடித்து செத்து செத்து சாகாதிருப்பது சகஜ நிட்டை.


சித்தர்களை அசுத்த மாயாகாரிகள் என வள்ளலார் சொல்லுவது உண்மையே...ஏனெனில் அவர்கல் சுத்த வித்தையை அறியாதவர்கள்...அதையே வித்த்யா தத்துவம் எனவும் அமானிதம் எனவும் புகலுவர்கள்...அதற்க்கு மேம்பட்டது அருள் நிலை, அதற்க்கும் மேம்பட்டது சத்திய நிலை.ஏசு பிரான் அடைந்தது சத்திய நிலை, வள்ளலார் அடைந்தது அருள் நிலை.....சன்மார்க்கம் என்பது சுத்த வித்தை நிலை.....சுத்த சன்மார்க்கம் அருள் நிலை....சித்தர்கள் நிலை அதற்க்கும் கீழான அசுத்த மாயாகாரிய நிலை, அதனாலேயே அவர்களுடைய நூல்களில் சன்மார்க்க விரோதமான பலதும் காண கூடும்

சித்தர்கள் நூல்களில் உயிர்கொலை இருக்கும், மாமிச மருந்துகள் சொல்லபட்டிருக்கும், துர் மந்திரவாதங்கல் ஓட்டியம் சல்லியம் எனும் மாரன காரியங்கள் சொல்லபட்டிருக்கும்...இப்படியுள்ள பொருள்கல் எப்போதும் சுத்த வித்தியா நிலைகளில் வராது

.அருள் நிலை சாதனைகள் என்பது மூக்கின் ஊடே சரிக்கும் வாயுவினை கொண்டோ, கன்களில் ஒளிரும் ஜீவ கலைகலைகொண்டோ ஏனைய ஆதார சக்கர அனுஷ்ட்டான அனுபவ அனுபோக சாத்திய நிலைகளில் ம்யற்ச்சிகளினால் வருவது இல்லை. வெளிமுயற்ச்சியின்றி அருள்நிலை சாதனைகலெனும் ஆன்ம சாதனைகலால் வருவதாகும்.....அதற்க்கு “அறிவே ஆதாரம்”...வேறு புற கருவிகளோ கரணங்களோ தேவை இல்லை.

வள்ளலார் ஒரு ‘வல்லவனை’ குறிப்பிட்டுள்ளார்...அவன் பூட்டிய பூட்டை யாரும் திறக்க வரவில்லை என கூறுகிறார் என்பதை கவனிக்கவும்.....வள்ளலார் முன்னேறியது அருள் மார்க்கம்...கிறிஸ்து அடைந்தது சத்திய மார்க்கம்...இது தான் வேறுபாடு

வள்ளலார் அருளே வடிவமானவர் கிறிஸ்து சத்தியமே வடிவானவர்...அதனாலேயே பைபிள் “ அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மிடையே வாசம் பண்ணினார் “ என்கிறது

சன்மார்க்கத்திற்க்கு சாதனையாக இருப்பது கருனை எனும் தயவு....கிறிஸ்துவுக்கு சாதனையாக இருந்தது சத்தியம் எனும் வார்த்தை

 மந்திரமோ, முத்திரையோ, வாசியோ, தாரனையோ, தியானமோ முக்கியத்துவமாக அருள்நிலை சத்திய நிலைகளில் கிடையாது...அதனாலேயே வள்ளலார் கூட தியானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை

ஆமா...அது அப்படித்தான்....ஏனெனில் சிவானந்த பரமஹம்சரை போன்று வேறு யாராலும் “தாமரை நூல் “போன்று கதியெடுக்க கற்று கொடுக்கபடுவதில்லை

கொடுப்பார்கல்..எப்படியென்றால் மரம் அறுப்பதை போன்று...வயற்று பகுதியோ ஏனைய அவயங்களோ எந்த விதமான சலனமும் இன்றி...தாமரை நூல் போன்று....நெஞ்சம் குழியிலோ தொண்டை குழியிலோ சின்ன துள்ளல் மாத்திரமாக கதியெடுக்க வேண்டுமெனில் ஒரு தடவை கூட உபதேசம் பெற வேண்டியதேயாம்

நூறு வருடம் விடாமுயற்ச்சியுடன் மரம் அறுத்தாலும் “ஒடுக்கம்” நேராது...”ஒடுக்கம்” என்பது நுணுக்கமான ஒரு விஷயம்...அது தெரிந்தாலே வாசி வசமாகும்...அடங்கும்....நிமிடத்திற்க்கு நிமிடம் அடங்கி உடம்பு வியர்க்கும்....15 நிமிட நேரத்தில் வியர்வை வரும்

உயிர் மேல் தூக்கும்...பாதத்தில் இருந்து...பாம்பை கண்டவுடன் உயிர் சடாரென மேல் நோக்கி கிளம்புவதை போன்று உயிர் உள் வலியும் இதுவே “ஊர்த்துவ கதி

பழைய வித்த்யார்த்திகளுக்கு கண்ட பூட்டு தெரியும்...புது தலை முறைக்கு கண்டபூட்டு கிடைக்கபெறவில்லை....அதனால் மேலும் கீழும் என்பது மட்டும் செய்வார்கள்...நுணுக்கம் தெரியாது....யாராவது இருந்தால் அதை சென்ரு பெற்ரு கொள்ள நலமாயிருக்கும்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை----இது வள்ளுவர் கூற்று,.இதில் “செவிச்செல்வம்” என்பது ஒரு மாபெரும் சாதனை விஷயம்......எல்லாவற்றையும் விட இதை பெற்றுகொண்டவர் புண்ணியவன்

சித்தவித்தையும் செவி வழியாக உபதேசிக்கபடுவதேயாம்...அனால் அதன் உண்மை தன்மையினை வித்தியார்த்திகள் எல்லோரும் அறிந்திலர்...அறிபவர் ஒரு சிலரே....அவர்கள் மட்டும் புண்ணியவான்கள் என சுருங்க சொல்லலாம் 

கிரியை பண்ணுவதோ சித்த வித்தை பண்ணுவதோ விஷயம் அல்ல,, நிங்கள் பண்ணலாம் அல்லது பண்ணாமல் இருக்கலாம்....நம்பிக்கை இல்லாமல் இவையெல்லாம் பண்ணி பிரயோஜனம் என்ன?...பண்னுவது நம்பிக்கையுடன் இருப்பில் எல்லாம் நலமே....ஒரு சிறுகல்லை கடவுளால் ரொட்டி ஆக்கமுடியும் என கிறிஸ்து நம்பினார்...அந்த நம்பிக்கை நமக்கு இல்லாமல் கடவுள் நம்பிக்கை இருந்து பயன் என்ன?

 கடவுளை நம்புவதே ஒரு சாதனை சங்கதி....அதை விடுத்து கடவுள் நேரில் இருந்திருந்தால் எவனாவது நம்புவானா/..இல்லை....இதோ நாம் செய்துகொண்டிருக்கும் அனைத்து கிரியா ..இதர வித்தைகள் அனைத்தும் எட்ட முடியாத விதத்தில் இருக்கும் அனந்த சம்பூரன ஆதி தேவனை எட்டுவதற்க்கு எனும் நம்பிக்கையிலே செய்ய்ப்படுகின்றன...ஆனால் உண்மை என்பது இவற்றால் எட்டமுடியாத நிலையிலேயே அப்போதும் இறை உள்ளது என்பதுவே...அதற்க்கே இந்த நம்பிக்கை

இந்த மூணும் இகத்தில் இல்லாத விஷயங்கள்...சத் விசாரம் என்ன என்பது தெரிந்தால் இது மூன்றும் தெரிந்தாகி விட்டது. சத் என்பது சத்தியத்தை குறிக்கிறது....அதையே தேட வேண்டும்...அதையே கேட்க்கவேண்டும்...அதையே திறக்க வேண்டும்

சித்த வித்தை வாங்கும் போது வாங்குபவனுக்கும் கொடுப்பவனுக்கும் இடையில் ஒரு விளைக்கை கொளுத்தி வைப்பாங்க...உண்மையில் சித்தவித்தைக்கும் அந்த விளக்கிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது....அது ஒரு “சாட்சி”...அப்படி “நிரபராதியாகிய சாட்சியை” வைத்து வித்தை கொடுப்பார்கள்...அதை “சத்தியம்” என கூறுவார்கள்...ஆனால் வித்தை வாங்கிய பிற்பாடு வாழ்க்கையில் ஒரு வேளைகூட அந்த “சாட்சி”யாக இருக்கின்ற விளக்கை யாரும் கவனிப்பதில்லை. அந்த சாட்சியை மறந்து விடுகின்றனர்...அதையே நாம் கடவுள் என்கிறோம்...வித்யார்த்திகள் “நிபராதியான ஆத்மா” என்பார்கள்..ரெண்டும் ஒன்றுதான்சாட்சியை மறந்து விடவேண்டாம் என்பதே என் எளிமையான வேண்டுகோள்...வித்தை எதுவாக இருப்பினும் செய்யுங்கள்...நிரபராதியான சாட்சி உங்கள் அருகில் “சத்தியமாக” இருப்பதை மற்ந்து விட்டால் வித்தையினால் பலன் இல்லைஇதையே கிறிஸ்து “ரெண்டு பேர்கலது சாட்சி” மெய்யென்று சொல்லி இருக்கிறதே...”நானும் என் பிதாவுமாக இருக்கிறோம்”..ஆதலால் என் சாட்சி மெய்யானது சத்தியமானது என சொல்லுகிறார்...இதை புரிவது என்பது மிக கடினமான ஆன்ம சாதனை மனம் வாக்கு காயம் இவை மூன்றிலும் “சாட்சியை” கொண்டு வருவதே “உண்மை சித்த வித்தை”...அது வராமல் சும்மா மூச்சு பயிற்ச்சி என மட்டுமே நடைமுறை வித்தை கருதப்படும்...அதில் சாட்சி இல்லை...சத்தியம் இல்லை.. செத்த வித்தையாக இருக்கும்....நிரபராதியான ஆத்மா இருக்காது....புரிகிறவர்களுக்கு புரியட்டும்

இந்த நிரபராதியான ஆத்மாவையே “ஈஸ்வரன்’ என அழைக்கிறார்கள்...ஆனால் வருத்தத்துடன் சொல்லிகொள்வதென்னவென்றால் ஜீவனே தான் ஈஸ்வரன் என தவறாக கொள்கின்றனர்...அதனால் அகங்காரம் பெருகுகிறது.. ஜீவனே தான் ஈஸ்வரன் எனில் அங்கு ஜீவேஸ்வர ஐக்கியம் என எப்படி வரும்?...ஐக்கியம் என்பது இரு வெவ்வேறு பொருள்களின் சங்கமம். அல்லாது ஒரு பொருள் உருமாறி மற்றொன்றாக தோற்ற,ம் பெறுவதுவல்லவே

சாட்சியை கொள்வது சித்தவித்தையின் ஒரு அங்கமே...அதை மறுக்கமுடியாது...வாழ்நாள் முழுதும் சாட்சியில்லாமல் கட்டலை இல்லை...கட்டலை இல்லாமல் உபதேசம் இல்லை.....ஆதலால் “சாட்சியை” இதுவரை கருத்தில் கொள்ளவில்லையெனில் இனி முதல் கொள்ள அன்போடு அழைக்கிறேன் சகோதரமே

 வித்தையும் , சாட்சியும் சதா உறவோடு இருக்க பழகவேண்டும்....என்பதே கட்டலைகளில் பிரதானமாக இருக்கிறது அதையே நாம் வித்யார்த்திகள் சத்தியம் என சொல்லி ஏற்றுகொண்டுள்ளோம்...அதை மறக்கவும் முடியாது , மறுக்கவும் முடியாது....புரிதல் இல்லாமல் போவது ஆன்ம விளக்கம் தடைபடுவதாலே...அது “சாட்சியை கொண்டு வரும் போது விளக்கமடையும்...ஏனெனில் சாட்சி என்பது விளக்காகும்...அது விளக்கும் தன்மை உடையது...உண்மை 

வெளியே இருப்பவை வெளியே இருப்பவை அல்லவே...அவை உள்ளின் பிரதிபலிப்பே...உள்ளின் புர தோற்றமே..உள் என்பதுவே வெளியாக பரினமித்துள்லது...உள் என்பது வெளியின் மறு புறம்...வெளி என்பது இருக்கும் வரை உள் என்பது இருக்கும்...இது ரெண்டும் அற்றதே சாட்சி...எனும் அத்வைதம்...ரெண்டற்ற தன்மை

நாம்’ நம்மை அறியும் வரை வெளி இருக்கும்...அறிந்தால் வெளி இல்லை...அதுவரைக்கும் ..நாம் நாமல்லவே...அப்போது சட்சி இருக்கத்தானே வேண்டும்...நாம் தான் எல்லாம் எனில் வித்தை எதற்க்கு

அப்போது “சாட்சியான ஆதமா “ வேண்டாம் என்கிறீர்களா?..ஐம்புலன்களின் சாட்சியான மனமே தான் ஐந்து திரி விளக்கு என்கிரீர்களா? ...இது யார் கொடுத்த விலக்கம் ஐயா/..சற்று தெரிந்து கொள்ளலாமா?......சத்திய வாசகம் சொல்லும் போது மட்டும் நிரபராதியான ஆத்மாவை சாட்சியாக கொண்டு வித்தையை பெற்ற பிறகு அந்த சாட்சியான ஆத்மா வேண்டாம் என்கிறீர்களே...இது யாருடைய கட்டளை என்பதனை அறிந்து கொள்ளலாமா

தோன்றி மறையும் மனம் எப்போது சாட்சியானது/. ஐம்புலன்களுக்கு சாட்சியான மனம் தான் ஐந்து திரி விளக்கு என யார் விளக்கம் கொடுத்தது?.. தூக்கத்தில் மனம் இருப்பதில்லையே ..அப்போது ஜீவனுக்கு சட்சி யாது?...மனமும் இந்திரியங்களும் தனித்து இயங்கும் தன்மை பெற்றதில்லையே...அது எப்படி சாடசியாக பரிணமித்தது 

கடவுளே.... .@@@@@ !!!!!! அறிவுண்ணு ஒண்ணு இல்லாம ஐம்புலன்களால் ஆவதென்ன யாசகன்? ஜடமான பிரபஞ்ச பொருளும் சித்தான நாமும் வேறல்ல என்கிறீர்கள்...உங்கள.

சொல்லி வாரத பாத்தா வெளிச்சத்தில் இருந்து தான் இருள் உண்டாச்சுண்ணு சொல்லுவீங்க போல...  யாசகன் நிச்சயம் அப்படி இருக்காதல்லவா?...இப்புவி என்பது மாயா சொரூபம்..அப்படியென்றால் மாயா சொரூபம் நாம் தான் என்றாகி விடுகிறதல்லவா?

தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை====அப்படியெனில் இங்கு “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் “ என குறிப்பிடுவது எதை ஐயா?

மஹாமந்திரம் எதர்க்கு கொடுக்கபட்டுள்ளது?...தயவு தான் சாதனம் எனில் மந்திரம் எதற்க்கு? அதுவும் மஹா மந்திரம் என சொல்லபட்டுள்ளது?...ஏன் “தயவு” என மட்டும் சொன்னால் மக்களுக்கு புரியாதா என்ன?..எதற்க்கு நீண்ட ஒரு மந்திரம்

கருணை எனும் தயவினால் சுத்த உஷ்ணம் பெருகாதல்லவா?..அதுக்கு சத் விசாரம் தான் காரியமாக இருக்கிறது...ஆனால் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் தான் சத்விசாரம் என கருதப்படுகிறது...இவற்றில் இவ்விரண்டு விசாரங்களுமே அபர விசாரங்களெயாம்...அதாவது இகலோக விசாரங்கலே...அப்படியாயின் அண்ட பிண்ட விசாரத்தினால் சுத்த உஷ்ணம் வராது என தெளிகிரது....அப்படியெனில் பரவிசாரம் செய்வது எப்படி

சுத்த உஷ்ணம் என்பது நாடிகளின் சமநிலையினால் வருவது என எந்த அனுமானத்தால் எடுத்துகொள்ளுவது?...சத் விசாரத்தினால் வருமென்றல்லவா பெருமானார் சொல்லுகிறார்?...அமுதம் என்பது விசாரமல்ல அல்லவா?



விஜயகுமார் சு இறயின் நாவாவளிகளை காதில் உள்வாங்கும் போதும் அதுகுறித்து எழும் சிந்தனைகள் விளைவால் அறிவு விலாசமாகி தன்னையும் தன்னை சுற்றி உல்ல பொருள்களை விசாரித்து அறிந்து ,இந்த படைப்புக்கு காரணமான பரத்தை விசாரித்து விளங்குவதாக இருக்கலாம் ஐயா





Hseija Ed Rian ஆகாயமும் நட்சத்திரங்களும்...சூரியனும் கோள்களும் எல்லாம் இகலோகத்தை சார்ந்ததே அல்லவா?...பரம் என்பது பரலோகத்தை சார்ந்ததுவல்லவா? சு...ஐயா சொல்வது விஷயம் உள்ளது


 ”தயவு எனும் கருணையே என்னை தூக்கிவிட்டது”...தூக்கிவிட்டது என சொல்லுவது ஏன் எனில் வேறு ஏதோ சாதனை சம்பிரதாயம் பெருமானாரால் செய்யப்பட்டுள்ளது...அந்த சம்பிரதாயம் உயர் நிலைகளில் அடைய தயவு தூக்கிவிடும் சாதனமாக இருந்தது, இருக்கிறது....அப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும்...அந்த சாதனை என்பது “சத் விசாரம்” எனும் சாதனையேயாகும்.....துரதிஷ்ட்டமாக நாம் இது வரை கேட்டுரிக்கிர சாதனைகள் சத்விசாரம் அல்ல...அவை அண்டவிசாரமும் பிண்ட விசாரமும் மட்டுமேயாகும்...உண்மை சத்விசாரத்தை செயல்படுத்தும் போது தயவு எனும் இயல்பானது “தூக்கி விடும்...அதாவது சாதனை மலரசெய்யும்
அதனாலேயே ஜீவகாருண்யமும் சத்விசாரமும் சேர்த்தே வைக்கபட்டிருக்கின்றன....சத்விசாரம் இல்லத ஜீவகாருண்யம் பூரணமல்ல...அதுபோல ஜீவகாருண்யம் இல்லாத சத்விசாரம் பூரணப்படாது...இவை ரெண்டும் சேர்ந்தே இருக்கின்றன

நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்

 இங்கு “ஸ்தோத்தரித்தும் உண்மை விளங்க வேண்டுமென தெய்வத்தை நினைந்தும் நமது குறையை ஊன்றியும் இடைவிடாது இருத்தலே” சத்விசாரம் என கொள்ளபடுகிறதுதோத்தரிப்பது என்பது ஜெபிப்பது கிடையாது...இரண்டும் ஒனென நினைந்து கொண்டுள்ளனர்...அப்படி கொள்ளலாகாது.....தோத்தரிப்பதினால் “திருச்செவியேற்றம் “ நடக்கிறது......அதாவது இறைவனின் காதுகளுக்கு எட்டசெய்வதே தோத்திரம்....சதா இறைவனின் திருசெவிக்கு எட்டும் விதம் “ இருப்பதையே தோத்திரம் என்கின்றனர்....அதையே பெருமானாரும் ... “உன் திருசெவிக்கு “ கேட்க்கிறதா..எட்டுகிரதா எனவெல்லாம் வினவுகிரார்



Hseija Ed Rian ”திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்......நாம் வீட்டில் “திரு விளக்கு “ வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?...





Hseija Ed Rian “திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது....அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும் , என்பது பொருள்





Hseija Ed Rian திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது...அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார்.





Hseija Ed Rian அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம்.கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு “திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள்





Hseija Ed Rian இங்கு நான் கூறும் விஷயங்கலை வாசிப்பவர்கல் ஆழமாக விசாரணை செய்தாலொழிய சொல்லுவது விளங்காது...தயவு செய்து ஆழமாக செல்ல வேண்டுகிரேன்...மற்றவர்களுக்கு இது பிரயோசனமற்றது





Hseija Ed Rian இப்படி “தோத்திரமானது திருச்செவிக்கு கேட்க்க செய்வதே” சாதனை....சுருங்க சொல்லின், திருவிளக்கானது ஆரம்பகால சாதகர்களுக்கு புரிதல் உண்டாகும் பொருட்டு வைக்கபட்டிருப்பதேயாகும்.... கொஞ்சம் தேறினவர்கள் “உண்மை திரு” எனும் இறை அறிவானது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், நாம் பேசும் விஷயங்கள் அனைத்தையும், நாம் என அனைத்தையும் அறிபவனாக இருக்கிறான் என்பதேயாகும். இதனையே “திருவிளங்குதல்” என்பார்கள்...





Hseija Ed Rian அப்படி நாம் தோத்தரிப்பது திருச்செவிக்கு ஏறும் படியாக , நாம் சொல்லுவதை “அவர்” கேட்க்கின்றார் எனும் “உண்மை நிலை” உடையவர்களுக்கு “அருள் விளக்கம்” உண்டாகும்





Hseija Ed Rian அப்படி நாம் சொல்லி கேட்கின்றவரிடம் அன்பு மலர்கிறது...எப்போதும் நம் சொல்லுவதை கேட்கின்றவராக அவர் இருக்கிறார் என்பதனை உணரும் போது அந்த அன்பு மேலும் மலர்கிறது.....இதை தான் “தெய்வத்தை கண்டாலொழிய தெய்வத்தின் மேல் அன்பு வராது” என பெருமானார் சொல்லுகிரார்





Hseija Ed Rian கடவுள்”இயற்க்கை உண்மையாக” இருக்கின்றார்...ஆதலினால் அவரிடம் “இயற்கை உண்மை அன்பு வைத்தல் அவசியம்”.....





Muthu Kumar ஐயா, எல்லாவற்றையும் அறியும் அதற்கு நம் தோத்திரம் கேட்காமலா போய்விடும். //"அவர்" கேட்கின்றார் எனும் "உண்மை நிலை" உடையவர்களுக்கு// தயைகூர்ந்து மேலும் விளக்குங்கள்





Hseija Ed Rian இதையே, இப்படி “திரு விளங்குதலையே” “பெரும் திறவுகோல்”...என்கிறார் பெருமானார்.....அதை எட்டும் இரண்டு கூட அறிந்து கொள்ள இயலாத நாயிற்கடையேனாகிய தன்னிடம் இறைவன் தந்தனம் என்கிறார்...இது அவருடைய அடிமைபேறு என்பதனை சுட்டுகிறார்....இதை பக்குவம் இல்லாதவர் எட்டும் இரண்டும் தான் பெரும் திறவுகோல் என வள்ளலார் சொல்லி இருப்பதாக பொருள் கொள்கின்றனர்





Hseija Ed Rian உண்மை அவர் எல்லாம் கேட்ப்பவராக இருக்கிறார் என்பது உண்மை....நம் தோத்திரம் கேட்க்கும் என்பதில் ஐயம் இல்லை....ஆனாஅல் அவர் கேட்க்கிறார் என நாம் உணர்தலே ஆரம்பம்....அந்த உணர்தல் நமக்கு வரவேண்டும்...அவர் பார்க்கிறார் என உணர வேண்டும்...அவர் கேட்க்கிறார் என உணர வேண்டும்.....இதனையே “வெளிச்சத்திற்க்கு வருதல்” எனபடுகிறது....ஏனையவை இருளில் செய்யபடுபவை





Hseija Ed Rian நாம் ஜெபிப்பதும் அவர் காண்கிறார் , அவர் கேட்க்கிரார் எனும் உனருதல் வரும் போது அது ஆன்ம உணர்தல