= மரணம் என்பது என்ன?=
சாதாரணமாக நாம் மரணம் என்றால் உயிர் போச்சு, அது தான் மரணம் என்கிறோம் அல்லவா?.. ஆனால் உண்மையில் அது தானா மரணம் என்பதை சற்று சிந்தித்தால் தான் மரணமில்லா பெருவாழ்வு என்றால் என்ன ,எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல ஏன் எண்ணவேண்டும் என்பது புலனாகும்.
முப்பொருள் விளக்கத்தினாலேயே இவை சற்று விளங்கும், அதாவது ஆன்மா, உயிர், உடல்.. அல்லது உடல் பொருள் ஆவி என வழக்கத்தில் இருப்பது இவையே.. இவற்றில் உடல் என்பது உயிருடன் இருக்கும் போது வழங்கும் பெயர், உயிரற்று போனால் அதை சவம் என்கிறோம். இவையில் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது... உடலமில்லையெனில் உயிரில்லை, அதுபோல உயிரில்லையெனில் உடலமில்லை.. இவை பரஸ்பர பூரணங்கள்... இவை இரண்டுமில்லையெனில் ஆன்மா விளங்காது.. ஆன்மா உயிர்சார்ந்த உடலத்துடன் விளக்குவதை வாழ்வு எனவும் , ஆன்மா உயிர் உடல் தவிர்ப்பதை சாவு என்றும் வழங்கலாம்.
ஒருவன் பசியோடு அதிக காலம் இருக்கமுடியாது, அவன் செத்து விடுகிறான் அல்லவா, ஏன் பசியினால் அவனுக்கு ஜீவஹானி நேரிடுகிறது என்பதை சற்று பார்ப்போம். அவன் தன்னுக்குள்ளேயே ஜீவனை கொண்டிருக்கிறான் எனில் அவன் மரித்து போகமாட்டானே அல்லவா... அப்படியெனில் ஜீவன் என்பது அவனுக்கு ஊட்டப்படுகிறது எனவல்லவா பொருள் கொள்ளவேண்டும், அல்லவா?... அப்படி அவனுக்கு ஜீவன் ஊட்டப்படாமல் அதிககாலம் அவனால் ஜீவித்திருக்கமுடியாது. அப்படி இருப்பில் அவன் சாவை சந்திக்கிறான். அதாவது ஜீவன் பிரகாசிக்கிறதும் பிரகாசம் குறைவதுமாக இருக்கிறது என தெரிகிறதல்லவா?.. ஆகாரம் உட்கொள்ள ஜீவகலை பிரகாசித்து விருத்தியுண்டாகிறது, ஆகாரம் கொள்ளாவிடில் ஜீவகலை பிரகாசம் குன்றி மரணம் நேரிடுகிறது... இதனால் தெரிந்துகொள்ளப்படவேண்டியது ஜீவகளையானது ஆகாரம் மூலம் உடலத்துக்குள் ஊட்டப்படுகிறது என்பதாகுமல்லவா?...
உயிருடன் வழங்கும் எவ்வுடலும் ஆகாரம் கொள்வதை தவிர்க்கமுடியாது அல்லவா... அது போல எவ்வுயிருக்கும் ஆகாரம் முதன்மையாக வழங்கப்படுவது எதனால் என ஆராய்ந்தால் அது தாவரங்களே முதன்மையானது. எந்த ஒரு மாமிச உடலும் உருவாக தாவரங்களே ஆகாரமாக அமைகிறது. இவ்வண்ணம் உயிர்குலங்களும் பயிர்குலங்களும் பின்னி பிணைந்து இருப்பதை பிரபஞ்ச இயற்கை என்கிறோம்.. இதை இயற்கை உண்மை என்கின்றனர் ஆன்றோர்கள்.
இங்ஙனம் இயங்கும் உயிருடலை ஆன்மா கருவியாக கொண்டு இயங்குகிறது என ஊகிக்கமுடிகிறதல்லவா... எப்போது ஆன்மாவானது உயிருடலத்தை விட்டு அகலுகிறதோ அதுவே மரணம்... அல்லாது ஆன்மாவையும் உடலையும் விட்டு உயிர் பிரிவதுவல்ல. உயிர் உடலையும் ஆன்மாவையும் விட்டு போகிறது எனில் உடலும் ஆன்மாவும் சேர்ந்து இருக்கவேண்டும், அப்படி சேர்ந்து இருப்பதை காணமுடிவதில்லை. உயிரானது ஆன்மாவின் ஊடாக வந்ததுவோ வருவதுவோ கிடையாது, உயிரானது அன்னத்தினால் வருவது, அது பிரகாசிக்கவோ, பிரகாசம் குன்றவோ செய்யும் குணமுடையது... கருவில் அமியும் பிண்டத்தை கூட அன்னமாகிய உயிரே வளர்க்கிறது, அன்னமில்லையெனில் அந்த கருவும் ஜீவிக்காது, செத்துவிடும்... ஆகையினால் உயிர் ஆன்மாவுடன் வருவதுவல்ல என தீர்மானிக்கலாம்.
உயிரும் அதனால் அமையும் உடலமும் பிரபஞ்ச இயற்கை, அதாவது இயற்கை உண்மை... பிரபஞ்சத்தின் அனைத்து உயிர் உடலங்களும் ஒரு ஜீவனில் இருந்து உற்பத்தி, அதை அறிந்தவன் ஞானி.நம்முடைய உடல் நாளை மரத்துக்கு உணவு, மரம் இன்று நமக்கு உணவு... மரம் மிருகங்களுக்கு உணவு மிருகங்கள் மரத்துக்கும் மனிதனுக்கும் உணவு.. இவ்வண்ணம் அந்த அன்னமானது அழிவின்றி சுழன்றுகொண்டே இருக்கின்றது. இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் இருந்து ஒரு மூலஅணு கூட கூடவோ குறையவோ செய்யாது ஒரு பொழுதும், அவை சமநிலையில் தான் இருக்கும் எப்போதும்.பிரபஞ்சத்தின் எடையும் நிறையும் ஒருபோதும் கூடவோ குறையவோ செய்யாது... ஆகத்தொகை சமமாக எப்போதும் இருக்கும் விதமாக இயற்கை உண்மை இருக்கின்றது.
எல்லா உயிர்கலையும் தன்னுயிர் போல எண்ணுவது இங்கு எப்படி சாத்தியம் என்பதின் நுணுக்கம் அதுவே.எல்லா ஜீவன்களிலும் நிரைந்திருக்க போகின்றேன் என்பதன் பொருள், எல்லா ஜீவன்களிலும் சமமாக எல்லா பொழுதும் விளங்க போகின்றேன் என்பதாகும். இதன் விரிவு அனந்தம்.
சற்று சிந்திப்போம், நன்றி, வணக்கம்
No comments:
Post a Comment