மனித பிறப்பு போன்று எண்ணமற்ற பிரபஞ்ச பரிணாமங்களில் இந்த ’பூ’ உலகு அருமையானது, விடுதலைக்கு ஏற்ப ஒருங்கே அமையபெற்றது.இதில் வந்து கருக்கொண்டவன் பூத்து மலராமல் போனால், இனி என்று வாய்க்கபெறும் இப்படியொரு பிறப்பு
====================================
செபம் தபம் தானம் எல்லாம் அதற்க்கான படித்துறைகள் தாம், கொஞ்சம் கொஞ்சமாக அறிவின் உச்சத்தை தொட மவுனம் பூக்கிறது
===================================
செத்து போகிறதை நாடணுமா சாகாமல் இருக்கிறதை நாடணுமா?
வள்ளலார் சொல்லுவதில் இருந்து, "சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும்”.
சாமானியமானதும் சிரசில் இருப்பதுமான சாகாத ஜீவன் மேலானதா அல்லது விசேஷமானதுவும் கண்டத்தில் இருப்பதுவுமான சாகும் தன்மை கொண்ட ஜீவன் மேலானதுவா?. சாமானியம் மேலானதா அல்லது விசேஷம் மேலானதா?
..எதை நாடி பிரயானம் பண்ணனுமாம்
உடலிருக்கும், உணர்விருக்கும், மன்மிருக்கும், உயிரிருக்கும் ஆனால் ”தான்” இருக்காது, நனொன்றில்லை, நீயொன்றிலை, நாந்தான் எனவொன்றிலை, நீவேறென்றிலை..அந்தபடியான போதம் ஒன்றுமிலையான நிலை
====================================
மோசே கடலை பிளந்து போனதுபோல்..மாயகடலை பிளக்க கோடரிவாள் இப்போ அனைவருக்கும் தேவை.அதற்க்கு செய்யவேண்டியது அட்சர அப்யாசமே தான்.பட்டி தொட்டி ஏல்லாம் தமிழ் மெய்ஞான மணம் வீசணும்.அ-ஆ-னா என சத்தம் முழங்கணும்..ஓதி ஓதி தான் தெளியணும்..ன்கர மெய் வரைக்கும் சத்தம் பிளக்கணும். வேற மெய்வழி என ஒண்ணும் இல்லை.
====================================
தூங்குறோம்..அப்போது உலகத்தை அறியவில்லை...ஆனால் உலகம் இருந்தது தான்..... விழிக்கிறோம்..அறிவு வருகிறது...அப்படி உலகமும் வருகிறது.அறிவானது எங்கும் போய்விடவில்லை,ஆனால் அது அறிவற்ற தன்மையில் இருந்ததனால் உலகத்தை அறியவில்லை,பிறவிகளை அறியவில்லை.அவ்வண்ணம் அறிவின் மலர்ந்த சொரூபம் மனிததூலம்
===================================
என்னிலே இருந்ததொன்றை யானறிந்ததிலையெ என்னிலே இருந்ததொன்றை யானறிந்து கொண்டபின் என்னிலே இருந்ததொன்றும் யானுமாகி நின்றனே எனும் பாடல் தான் நினைவுக்கு வருகிற்து.இந்த பாடலில் சொல்லியிருக்கின்ர அந்த பொருள் எதுவென்று உலகம் முழுக்க அலைஞ்சாலும் கிடைக்காது.காட்டித்தருபவர் காட்டித்தந்தால் நிமிட நேரத்தில் முடிந்துவிடும்.ஒரு க்ஷ்ன நேரம் தான், ரெம்ப நேரம் ஒண்ணும் இல்ல....நமுக்கு ரெம்ப பக்கத்துல இருக்கும் அந்த பொருள் , அறிவுக்கு வரும் முன் ரெம்ப ரெம்ப தொலைவாக இருக்கும்
===================================
ஆதியில் கடவுளை யாரும் அறிந்திருக்கவில்லை,ஏனெனில் அவரை அறிவிக்க யாரும் அவரை தெரிந்திருக்கவில்லை,அங்ஙனம் அறியாமையே இருந்தது.அந்த அறியாமையே அறிவுக்கு தூண்டுகோலாய் மலர்ந்தது.அறியாமையே யாரும் அறியாவண்ணம் காரிருட்கோளமாய் எல்லையற்ற இருட்பிழம்பாய் வியாபித்திருந்தது.அங்ஙனம் இருந்த இருளுக்கு ‘கு’ என பெயர். அவ்விருளில் நின்று முதன்முதலாய் இறைவனே அறிவாக விரிந்தான்.அவனையே ‘ரு’ என சொல்லப்பட்டான்.குரு வாழ்க குருவே சரணம்.
===================================
தமைநோக்கும் வல்லபர்க்கு யெல்லாம் சொல்வேன்
தாது உயிர் நின்றவிடம் மனிதருக்கே
உமைநோக்க நெற்றியடி புருவ மத்தி
ஊசிமுனை மூக்கினடி மத்தியாமே
-- காகபுசுண்டர் பெருநூல் காவியம் 102
தமை நோக்கும் வல்லபம்” என்பது முதல் தகவல், ”தாது உயிர் நின்ற இடம்” இரண்டாவது தகவல் சாமீ. நல்லா பாருங்க சாமீ...இதுல தமை நோக்கும் இடம்,அதாவது ”உமை நோக்க” வகுத்த இடம் தான் நெற்றியடி புருவமத்தி சாமியோவ். இரண்டாவது தாது உயிர் நின்ற இடம்,அந்த இடம் தான் ஊசிமுனை. ஊசிமுனை மூக்கினடி மத்தி சாமியோவ். நா சொல்லல ..காகபுசுண்டர் சொல்றார் சாமியோவ்
===================================
4000 கோடியா 4000 லட்சம் கோடியா அல்லது 4000 கோடி கோடியா ஆகிவிட்டது உலகம் உருவாகி... அதோ இது உருவாகாமல் நிலை கொண்டுள்ளதோ.... உயிரானது என்று தோன்றியதோ அல்லது தோன்றாமலே நிலை கொண்டுள்ளதோ.....அதை தெரிந்தவனே கூறவேண்டும்...அதை உணர்ந்தவனே சொல்லவேண்டும்...அவனே மகா குரு...அவனே அன்றும் இன்றும் என்றும் நிலை கொண்டுள்ளான்... அவனை அறிவதே அறிவு....அவனே தட்சிணாமூர்தியும் ஆதிகிறிஸ்துவும்
===================================
இல் எனும் எழுத்ததை பற்றி-இரு வாசலை பூட்டிஅடைத்துப்பிடித்து-கொல்லந்துருத்தி கொண்டூதி-கோலமாய்மூலகுகயை எழுப்பி-வில்லின்மேல் ஞாணம்பை ஏற்றிவெகுவேகமாய் ஒன்பதுவாசல் அடைத்து-அல்ஹம்துலில் லொன்றாகி நின்றநந்தமாதியை நன்றாககண்டுகொண்டேனே.
===================================
கண்ணு மாட்டினதுஇல்லே....எனக்கு இயற்கை கொடுத்தவரபிரசாதம் அது...பார்வை எப்பவும் ஒருகண்ணுலத்தன் இருக்கும்..மறு கண்பார்க்காது...வலது கண் பார்க்கிறப்பஇடது கண் பார்க்காது..இடது கண்பார்க்கிறப்ப வலது கண் பார்க்காது
===================================
நான் இங்கு இல்லை’ எனும் பிரக்ஜை ஊன்ற அது ஞானத்துக்கு இட்டுச்செல்லும்.கர்மங்கள் பலனற்று போகும். ‘நான்’ என்பதில் தான் கர்மங்கள் பலன் பெறுகின்றன
===================================
செபம் தபம் தானம் எல்லாம் அதற்க்கான படித்துறைகள் தாம், கொஞ்சம் கொஞ்சமாக அறிவின் உச்சத்தை தொட மவுனம் பூக்கிறது
===================================
உடலிருக்கும், உணர்விருக்கும், மன்மிருக்கும், உயிரிருக்கும் ஆனால் ”தான்” இருக்காது, நனொன்றில்லை, நீயொன்றிலை, நாந்தான் எனவொன்றிலை, நீவேறென்றிலை..அந்தபடியான போதம் ஒன்றுமிலையான நிலை
==================================
மோசே கடலை பிளந்து போனதுபோல்..மாயகடலை பிளக்க கோடரிவாள் இப்போ அனைவருக்கும் தேவை.அதற்க்கு செய்யவேண்டியது அட்சர அப்யாசமே தான்.பட்டி தொட்டி ஏல்லாம் தமிழ் மெய்ஞான மணம் வீசணும்.அ-ஆ-னா என சத்தம் முழங்கணும்..ஓதி ஓதி தான் தெளியணும்..ன்கர மெய் வரைக்கும் சத்தம் பிளக்கணும். வேற மெய்வழி என ஒண்ணும் இல்லை.
===================================
இல் எனும் எழுத்ததை பற்றி-இரு வாசலை பூட்டிஅடைத்துப்பிடித்து-கொல்லந்துருத்தி கொண்டூதி-கோலமாய்மூலகுகயை எழுப்பி-வில்லின்மேல் ஞாணம்பை ஏற்றிவெகுவேகமாய் ஒன்பதுவாசல் அடைத்து-அல்ஹம்துலில் லொன்றாகி நின்றநந்தமாதியை நன்றாககண்டுகொண்டேனே.
===================================
அஞ்சும் அடக்கடகென்பர்அறிவிலர் அஞ்சும் அடங்கில்அசேதனமாமென்றிட்டு அஞ்சும் அடக்காஅறிவறிந்தேனே....இது மூலர் பிதற்றல்
==================================
ஞானம் என்பது வடமொழிகையாளல், தமிழ் மொழியில் அது அறிவுஎன கையாளுகிறோம்.இன்னும் அதைசிற்றறிவு எனவும் பேரறிவு எனவும்பிரித்து கொள்கிறோம், எங்ஙனமாயினும்ஞானம் என்பதின் தமிழ் சொல் அறிவுஎன்பதே தான்.வேறு சொல் இல்லை.
===================================
மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர, தியான சம்பிரதாயங்கள்...
பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...
முடிவு ஒன்றே... வழிமுறை வேறு வேறு....
சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்...
===================================
எதுவொன்று தூல உடலமாக மலர்ந்துள்ளதோ அதுவே சிவரூபம் என அறிவாயாக, அத்தூலத்துடன் அத்வீதமாக இயங்கியிருப்பதுவோ அதன் சக்தி சீவரூபமென அறிவாயாக, இவை இரண்டினும் "நான்" என மதித்திருக்கும் நீயோ மூடனே என அறிவாயாக.
+++ரியான் அத்வைத பாடம்
====================================
வைத்தியனும் "மருந்து" குடுப்பான், ஆசிரியனும் "மருந்து" குடுப்பான், மந்திரவாதியும் "மருந்து" குடுப்பான். பெயர் என்னமோ ஒண்ணு தான், ஆனால் ஒவ்வொருவனும் குடுக்கிறது ஒவ்வொண்ணு போல, தியானம் என்பது யோகிக்கு ஒண்ணு, ஞானிக்கு ஒண்ணு, சித்தனுக்கு ஒண்ணு முக்தனுக்கு ஒண்ணு அடிநிலை சாதகனுக்கு ஒண்ணு என பொருள்படும்.
--❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
===================================
விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே
===================================
உண்மையான சீடனுக்கு தகுந்த குணநலன்கள் கொண்ட பிற்பாடு அல்லவா உண்மையான குருவை அடையாளம் காண்பது எவ்விதம் என விழையவேண்டும் அல்லவா
தூலமான உடலை கண்டு என்ன பிரயோசனம் ஐயா...அறிவான உருவை அல்லவா அறிதல் நலம்.அது எங்கிருந்தால் என்ன...விருந்து சாப்பிட்டால் போதும் அல்லவா?
சாந்து உண்டாகட்டும் ஜீ..மனம் அமைதி பெறட்டும்....அதிக ஆவல் கொண்டால் மனம் அமிதியை இழந்துவிடும்...ஆவலே வினையாகி விடும்..காமம் தலைகேறினவனுக்கும் கோபம் கொண்டவனுக்கும் அதிக ஆவல் இருப்பவனுக்கும் அறிவு வேலை செய்யாது. நடுநிலையே ஞானத்துக்கு அடித்தளம்
===================================
செத்து போகிறதை நாடணுமா சாகாமல் இருக்கிறதை நாடணுமா?
வள்ளலார் சொல்லுவதில் இருந்து, "சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும்”.
சாமானியமானதும் சிரசில் இருப்பதுமான சாகாத ஜீவன் மேலானதா அல்லது விசேஷமானதுவும் கண்டத்தில் இருப்பதுவுமான சாகும் தன்மை கொண்ட ஜீவன் மேலானதுவா?. சாமானியம் மேலானதா அல்லது விசேஷம் மேலானதா?
..எதை நாடி பிரயானம் பண்ணனுமாம்
==================================
ஆவியில் எளிமையானவர்கள் பாக்கியமானவர்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது...இது தான் “இடுக்கமான வாசல் வழியாக நுழைஞ்ச்ய் போகிறதுக்கு “சின்னதாக” மாறும் முறை...
வாசல் வழியாக ஒருசிலர் தான் நுழைஞ்சு போவார்கள்...”பெருசா” வெச்சுகிட்டு இருக்கிறவன் ஒருத்தனும் இந்த வாசலை கடந்து போகமாட்டான்... பரலோகத்திற்க்கு செல்ல இது தான் வாசலாக இருக்கிறது. இந்த வாசலை விடுத்து மற்றொரு வாசல் வழியாக நுழைகிறவனை கிறிஸ்த்து அருமையான பெயரால் அழைக்கிறார். திருடர்கள் மட்டுந்தான் நேரான வாசலை விடுத்து கொல்லைபுற வாசல் வழியாக நுழைவார்கள் என
===================================
ஆதியின்றி அந்தமின்றி அருளு வந்துதித்ததோ
நீதியின்றி நிறமுமின்றி நிர்மலமும் கதிச்சதோ
வேதமின்றி விறகுமின்றி நீரதுவும் கொதிச்சதோ
பூதமஞ்சினும் புகுந்த கொள்ளி பூசையதுவும் கொண்டதோ.
~~~ ரியான் பஞ்சவர்ணகிளி
===================================
No comments:
Post a Comment