Friday, November 4, 2022

அறிவறி பாடம்

 அறிவறி பாடம்






பாடம் -1

இந்த யுகமுடிவு நாளையிலே வருகிற மனுக்கள் எக்குலத்தவராயினும் எம்மொழியினவராயினும் கடைத்தேற வேண்டுமென்றால் கட்டாயம் தமிழை கற்றாக வேண்டும் என்று ஞானகுபேர பேரருள் தேரையர் கால கணக்கறிந்து வலியுறித்தியுள்ளார்கள்.


ஆச்சப்பா தமிழினுட பெருமை கேளு
அப்பனே அகத்தியர்தான் நின்றாரப்பா
வாச்சப்பா வடுகருக்கும் ஆகும் பாரு
வகையான பிராமணர்க்கும் ஆகும் பாரு
காச்சப்பா கன்னடியர்காகும் பாரு
கலையான குச்சலியர்க் காகும் பாரு
மாச்சப்பா மராஷ்டருக்கும் ஆகும்பாரு
மறையான மிலேச்சருக்கும் ஆகும்பாரு


பாரப்பா அனைவருக்கும் வேணும்வேணும்
பாங்கான க்‌ஷத்திரியர்க்கு வேணும் வேணும்
நேரப்பா வைசியர்க்கு வேணும் வேணும்
நிலையான சூத்திரர்க்கு வேணும் வேணும்
தேரப்பா துலுக்கருக்கு வேணும் வேணும்
தெளிவான கலிங்கருக்கு வேணும் வேணும்
ஏரப்பா எடுத்திருக்கும் அண்டத்தோர்க்கும்
இயலான தமிழதுதான் வேணும் பாரே.


பாடம் -2

ஆண்டவர்கள்-; அறிவறி பாடம் முதலிலிருந்து சொல்லுங்க.
மேய்வழி வரதராஜ அனந்தர்-;ஆதி துணை ,ஆதியே துணை ,ஆதியை அறிய குருவே துணை என்று ஓத ஆரம்பிக்க...


ஆண்டவர்கள்-;அதை நாம் சொல்ல சொல்லவில்லை,முதல் முதலில் திண்ணை பள்ளிகூடத்தில் நீ படித்தாயே,அதை சொல்லு...


மெய்வழி வரதராஜ அனந்தர்-;அ ஆ னா ,ஆ வன் னா, இ ஈ னா, ஈ என் னா.......


ஆண்டவர்கள்-;என்ன! எல்லாம் “னான்..னான்..” என்று சொல்லுகிறாயே.ஆகவே எல்லா அக்‌ஷரங்களும் னீ தானா?(கேட்டறியாத இந்த அற்புத விளக்க உதயத்தை கேட்டு சபையோர் ஆச்சரியத்தில் மூழ்கி நிற்க)


ஆண்டவர்கள்-; அட்சரங்களின் உதயம்.இருப்பிடம் ஆகிய அனைத்தும் மனிதன் தான் என்பதை நம் தமிழில் உள்ள அறிவுஅறிபாடம் நமக்கு உணர்த்துகின்றதல்லவா?. என்ன ஆச்சரியம்! தமிழ் அட்சரங்களின் உச்சரிப்பை எவ்வளவு பொருள் நிறைத்து, என்ன உயர் அறிவை களஞ்சியமாகவாக்கி அமைத்திருக்கிறார்கல் என்று பார். இதுகாலம் வரைக்கும் இந்த நுண்ணிய நுணுகிய மதினிறை விடிவு வெளியாக்கப் பெறவில்லை.


“அச்சரமனைத்துமினும் கோடிபல பாஷை மெச்சுமதனுச்சனிலை மேனகையனைத்தும் இச்சைபிறங்ஙீட்டு திருச்சாலையிலலாது பொச்சையுல கோர்க்கது புறம்புமுதுகாமே”

என்ற செய்யுளை சபையோர் பாடி தோத்தரித்து மகிழ்ந்தார்கள்.


பாடம் -3

ஆண்டவர்கள்-; ஞானம் என்பது இன்ன செயல் என்று இன்று நாம் வெளியாக்க போகின்றோம்.ஒரு சாமானை உறை போட்டு மூடியிருந்தால் அது என்ன சாமான்,என்ன வர்ணம்,என்னத்திற்க்காகும்,என்ன மதிப்புடையது என்று விளக்கமாக கண்டறிய முடியுமா?முடியாது.அதை மூடியிருக்கும் மறைப்பை கிழித்து நீக்கிவிட்டு அது இன்னதென்று அதைப்பற்றி நன்றாக அறிந்துள்ளவர்கள் எடுத்து காட்டி பேசினால்தானே,உள்ளிருக்கும் பொருளின் முழுவிவரமும் தெரியும்.அதேபோல,ஞானம் என்ற சொல்லில் ஒரு உன்னத உள்ளமைச் செயலானது மறைத்து வைக்க பெற்றுள்ளது.அதை விண்டு வெளியாக்கினால்தான் தெரியும்.


ஞானம்=ஞா+னம்;அதாவது “னான்..னாம்” என்று ஆகிகொள்ளுவது.இதுவே வேதத்தின் உட்பொருள்.”னான்..னான்” என்று உன்னுள் இருந்து சதா சொல்லிகொண்டிருக்கும் வஸ்து,”வந்த வேதமாக” திருவுரு தாங்கி,முன்னிலை குருவாக வெளியாகினின்று தன்னை அறிவிக்க,அதாவது உன்னுள் அறியபடாததாய் இருக்கும் ஆத்மாவே குருவுருவாகவந்து தன்னை அறிவிக்க,உன்னை நீ அறிகிறாய்.அதோடு காலமெல்லாம் ஓட்டி பழகி அறிவு விளைவேற்றம் ஏற ஏற,’னான் னாமாகுதல்” கைவரவாகும்.அதனால் மெய் அறிவு சித்திக்கும்.


பாடம் -4

உன் உன்னதமாகிய நினைவில்”னாம்” இல்லை என்றால் கடைசியில் எமன் தான் அங்கு வருவான்.எமனுக்கு நடுவன் என்று ஒரு பெயர் உண்டு,னடு என்றால் மையம்.அதாவது இந்த பக்கமோ அந்த பக்கமோ சாயாத நீதி எல்லை.ஆகையால் என உஜாரோடு,ஆசான்பால் அன்புமறவாத நினைவில் “இந்த மெய்யின்பால்” ஓட்டி நீ நடந்து வரவேண்டும் என்று எண்ணிப்பார்.இந்த ஜாக்கிரதை சதா உன்னிடம் இருக்கவேண்டும்.


அன்பானவர்களே, சற்று கூர்ந்து கோர்வையாக்கி “மெய்நிலை” அறிவீர்களாக.புரியாதவர்கல் புரிந்தவர்களை நாடுவீர்களாக. அடியேனின் “ஆதிமெய் உதயபூரண வேதம்” எனும் நூல் கிடைக்கபெற நாடுங்கள்.கீழே குறிக்கபடும் நபர்களை அன்புடன் கேளுங்கள்,இலவசமாக பெற்றோம்..இலவசமாக பெற்றுகொள்ளுங்கள்

No comments:

Post a Comment