குரு விசுவாசம் - குரு துரோகம்.
=============================குரு காட்டிய வழியில் சரியாக நடந்து அவர் அடைந்த வெற்றிகளைத் தானும் அடைவது குருவிசுவாசம்.
குரு காட்டிய வழியில் ஒழுங்காய் நடக்காமல் குரு அடைந்த வெற்றிகளைத் தான் அடையாமல் போவதே குரு துரோகம்.
ஆனால் மக்கள் இந்த வார்த்தைகளுக்கு வைத்திருக்கும் அர்த்தம் இவை அல்ல. குருவின் மீது அன்போடும் பக்தியோடும் இருந்தால் குருவிசுவாசம். அத்தகைய பக்தியும் பணிவும் இல்லாவிட்டால் குரு துரோகம் என்று நினைத்துக்கொண்டுள்ளார்கள்.
உண்மையான குரு சீடன் தான் காட்டிய வழியில் நடக்கிறானா என்பதில் மட்டுமே கவனமாக இருப்பார். போலி குருமார்கள் தான் சீடனின் வணக்கத்தையும் பாத பூஜையையும் இதர கோமாளித்தனமான சடங்குகளையும் விரும்புவார்கள்
No comments:
Post a Comment