மாறுநிலை
ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை “த்ரஷ்ஹோல்ட்”,அதன் தமிழாக்கம் தான் மாறுநிலை என்பது.அதாவது ஒரு பொருள் அதன் தன்நிலையில் இருந்து மற்றோர் நிலைக்கு உருமாற்றம் பெற வேண்டும் எனில்; அதன் இருப்பின் பிணைப்பு அறுந்து போக வேண்டும் எனில்;அதன் ஆற்றல் தன்நிலை ஆற்றலில் இருந்து அதிகரித்து உச்சநிலை ஆற்றலை கடந்து போக வேண்டும்.ஆப்படி உச்சநிலை ஆற்றலை கடந்து போகும் எல்லைக்குத்தான் மாறுநிலை ஆற்றல் என பெயர்.
எல்லா பொருட்களும் தத்தமது பிணைப்பின் தன்மைக்கு தகுந்தபடி; பிணைப்பின் ஆற்றலுக்கு தகுந்தபடி; பிணைப்பின் வலிமைக்கு தகுந்தபடி; பிணைப்பின் கோணத்துக்கு தகுந்தபடி;பிணைப்பின் இயல்புக்கு தகுந்தபடி ஒவ்வோர் மாறுநிலை எல்லையை கொண்டிருக்கின்றன என புரியலாம்.மட்டுமல்ல, ஒவ்வோர் பொருளுக்கும் ஒவ்வோர் ஆற்றல் கொளும் தனித்திறமையும் இருக்கின்றன, சில பொருட்கள் அதிசீக்கிரம் ஆற்றல் கொளும், சில பொருட்கள் மிகவும் தாமதமாக ஆற்றல் கொளும், சில பொருட்கள் ஆற்றல் கொளும் அதே விகிதத்தில் ஆற்றலை இழக்கும் தன்மையையும் கொண்டிருக்கும்.இவை இரண்டின் தன்மையை பொறுத்து மாறுநிலை ஆற்றல்அமையும்.
அது போல எந்த பொருளுக்கு ஆற்றல் ஊட்டும் விதங்களும் விதவிதமாக அமையும், பலவித யுக்திகளால் பலவிதமாக ஆற்றல் ஊட்டமுடியும்,அது பொருளின் தன்மைக்கும் அதன் பிணைப்புக்கும் தக்கபடி அறிந்து செறிவூட்டப்படுகின்றது. மாசற்ற பொருட்கள் அதிசீக்கிரம் ஆற்றல் செறிவூட்டம் பெற தகுதியானவைகளாகவும், மாசு கலப்புள்ள பொருட்கள் அத்தன்மை குறைவு பட்டுள்ளனவாகவும் இருக்கும் என்பது இயற்கையே.
ஆகையினால் ஒரே யுக்தியினால் எல்லா பொருட்களும் ஆற்றல் ஊட்டம் பெற வாய்ப்பில்லை,ஒரு வேளை சில சமயங்களில் யதேச்சையாக அமையவும் வாய்ப்புண்டுதான்.ஒரே இனத்தை சார்ந்த இருவேறு பொருட்கள் கூட ஒரே வித ஆற்றல் ஊட்டம் பெற்றுக்கொள்ள சிலபோது வாய்ப்பு இருக்காது,எத்தனை ஆற்றல் செலுத்தினாலும் ஒன்று ஆற்றல் கொள்ளும் ஆனால் அதே இனத்தை சார்ந்த மற்றொன்று பெற்ற ஆற்றலை உடனடியாக இழந்து கொண்டும் இருக்கும்.
மனதின் ஆற்றல் ஊட்டமும் இவ்வண்னமே தான்,அதனாலே தான் ஒரே குருவின் கீழ் வித்தை கற்றவர்கல் அனைவரும் ஒரே போல ஆற்றல் பெறுவதில்லை,யதேச்சையாக சிலபேர் கொள்வதுமுண்டு. அதுபோல ஒரே வித யுக்தியை சிறந்த குருமார்கள் அனைவருக்கும் ஒருபோல பயில வழங்குவதுமில்லை.ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தந்த்தன்மையினை கொண்டவர்கள், தந்த்தன்மை கொண்ட மனநிலை ஆற்ரல் நிலை, கொள்நிலை,பிணைப்பிநிலை, இழப்புநிலை கொண்டவர்கல்.பிரபஞ்சத்தில் ஒன்ரை போல மற்றொன்று ஒரே விதமாக இருப்பதில்லை.ஒருபுளியமர இலையில் இருக்கும் ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு தன்மை அமைப்பு கொண்டவை.இயற்கையின் படைப்பில் அதிசயம் என்பது ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை.மணம் குனம் தன்மை வண்ணம் தோற்றம் அளவு என அனைத்தும் மாறுபாடு கொண்டவைகள் என்பது நுண்புல அறிவால் காணலாம்.ஆனால் மனம் இவற்றில் பிரமிப்புண்டு நிற்கின்ரது என்பதே உண்மை.
மனதை கடக்க வேண்டும் எனில், மனதில் பிணைப்பை அறுந்து போக செய்ய வேண்டுமெனில், அந்த மாறுநிலை ஆற்றல் எல்லைக்கு மனம் செல்ல வேண்டும். எப்போது மாறுநிலை எல்லையை மனம் கடக்கிரதோ அப்போது உருமாற்றம் சாத்தியமாகின்ரது.அது இன்றும் ஆகலாம்,நாளையும் ஆகலாம், எண்ணற்ற கோடி கற்பாந்தங்களும் ஆகலாம், ஒரு நொடி பொழுதிலும் ஆகலாம்,....கடந்து போங்கள்
Saturday, November 5, 2022
மாறுநிலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment