வாலறிவும் தலையறிவும்
நாம பல இடங்களில் ‘வாலறிவு,வாலறிவன்” எனும் வார்த்தைகளை பார்த்திருக்கிறோம்,அதன் விளக்கங்களையும் பார்த்திருக்கிறோம்,ஆனால் வாலும் தலையும் அறியாமல் இருக்கிறோம்.இது ஒரு உருவகம்,ஞான உருவகம்,சில விஷயங்களை சூட்சுமமாக சித்தரிக்கும் முறை,அதாவது ஃபார்முலா மாதிரி அல்லது குறியீடு மாதிரி. அந்தந்த குறியீடு அந்தந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் தெரியும், எது எதை குறிப்பிடுகிறது என்பது,அதன் விளக்கம் இன்னது என்பது.தெரியாதவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியவராது.அது போலத்தான் குண்டலினீ என்பதும். நம்ம மக்கள் ஏதோ பாம்பு சுருண்டு படுத்திருக்கிறது மாதிரி கற்பனை பண்ணிக்கொள்வார்கள்,கதையும் விடுவார்கள்.மனிதர்களுக்கு அருளப்பட்டிருக்கும் அற்புத தனித்தன்மை என்பது ஓசை ஒலிநய பாஷை கையாளும் தன்மை.இந்த அறிவு வாக்கறிவு எனப்படுகிரது. பரை விரித்த கோலம், ஏராளமான புள்ளிகள் போட்ட அற்புதக்கோலம்.ஒவ்வொரு கோலமும் ஒவ்வொரு பாஷைகள் போல போட்டு வைத்துள்ளனர் முன்னோர்கள்.ஒவ்வொரு கோலத்துக்கும் ஒரு வித தன்மை உள்ளர்த்தம் கூட இருக்கும், உருவகம் இருக்கும்.நம்மில் இயங்கும் ஆற்றல்,பிராணசக்தியின் வெளிப்பாடு பல வித கோணங்களில் இருக்கின்றது.அவற்றில் முக்கியமானது பேச்சும் மூச்சும் தான்.மூச்சு தலை என்றால் பேச்சு வால்.மூச்சின் எழுத்து தான் தலையெழுத்து என்பது,பேச்சின் எழுத்து வாலெழுத்து.மூச்சு சிவம் என்றால் பேச்சு சக்தி, மூச்சு பேசா எழுத்து என்றால் பேச்சு பேசும் எழுத்து.இந்த பேச்சு மூச்சினுள் ஒடுங்கி நிற்கின்றது.அதாவது குண்டலினீ தன் வாலை வாயினுள் கவ்விகொண்டு துயில்கிறது என கற்பனை உருவகம்.
பிராணாயாமம் முதலான சம்பிரதாயங்களினூடே எவ்வண்ணம் குண்டலினீ சக்தியை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோமோ அவ்வண்ணம் மற்றொரு முறை தான் பேச்சு சக்தியை கொண்டு உணர்வு நிலைக்கு மேலேறும் முறையும்.இதை ஓதி ஓதி உணர்தல்,ஓதாதுணர்தல் என வகைபடுத்துவர் ஞானியர்கள்.பேச்சின் சூட்சும அறிவு நிலைக்கு பரையறிவு அல்லது வாலறிவு என்பர்.பர வித்தை என்பதும் இதை கொண்டு இயற்றப்படும் சம்பிரதாயம்தான்.இவ்வண்ணம் பிராணனுக்கும் பேச்சுக்க்கும் மையமாக திகழ்வது ஒரு அமானித விந்துநிலை. அதற்க்கு தான் வித்யா தத்துவம் என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. எழுநிலை சூட்சுமம் அது,அதில் இருந்து கிளம்புவதால்,அமிர்த விந்துவுக்கு எழுத்து என பெயர் வைக்கபட்டிருக்கின்றது.அட்சர சொரூபமாக வாலறிவாக விளங்குவதால் சித்சொரூப சக்திக்கு வாலை என பெயர்.அதாவது அமிர்த சொரூபமாக சதா வடிந்து கொண்டிருப்பவள்,அமிர்த பாஷிணி.அதி சூட்சுமத்துக்கு செல்லாமல் சற்று குறுக்கி கொண்டமைக்கு மன்னிக்கவும்
No comments:
Post a Comment