Saturday, November 19, 2022

Brihadarnyaga upanishad

 https://www.poornalayam.org/classes-recorded/upanishads/brhadaranyaka-upanishad/

கல்லுப்பும் கடலுப்பும்

 பூமியில் இருக்கும் கல்லுப்புக்கு கடலுப்பை அறிந்து கொள்ள ஆசையாம்.கடலுப்பு எத்தகையது என்ன ருசி எனவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு நாள் கல்லுப்பு கடலை நோக்கி பிரயாணம் ஆரம்பித்தது, கடலுப்பை அறிந்து கொள்ள.கடலை நெருங்கி நெருங்கி கடலில் அமிழ்ந்து கடலாகவே போனது, அங்கே கல்லுப்பு என தனித்த ஒன்று இருக்கவில்லை. சகுண பிரம்மம் உலகில் இருக்குமட்டும் அவ்வண்ணம் அழைக்கப்படுகின்றது.நிர்குண பிரம்மமோ எக்காலத்திலும் உலகால் அறிந்து கொள்ளப்பட கூடாததாயும் இருக்கின்றது.

Thursday, November 17, 2022

கும்மிருட்டு

 கும்மிருட்டு என சொல்றோம் சகஜமாக, ஆனால் கும் என்றால் என்ன என்று தெரியாது. கும் என்பதில் வரும் 'கு' வும், குரு என்பதில் வரும் 'கு' வும் ஒன்று, ஆனால் அது குருவி என்பதில் வரும் 'கு' அல்ல. வடமொழி  "கு".

அப்படி "கும்" என்பது அறிய முடியாத, அறிவுக்கு எட்டாத, மிக ஆழமான, புலன்களுக்கு அகப்படாத என பொருள்படும். பிரம்மவும் இப்படியே. இதையே நிர்குணம் என்றனர். புலன்களுக்கு எட்டாத ஒன்றை தியானிப்பது எப்படியாம்?.  மனதுக்கும் இந்திரியங்களுக்கும் அகப்படாமல் இருக்கும் பொருள் என்பதால் மனம் அதை இருள் என கொள்கின்றது. எப்படி நுணுகினும் மனம் அதை அறியாது அறிய இயலாது.ஆகையினால் மனதுக்கு அது எப்போதும் இருள் உருவமாக கொள்ளபடுகின்றது.

ஒளியானது இருளான பொருளை விளக்கவே தேவை, அல்லாது விளங்கும் பொருளுக்கு தேவையில்லை. அது போலவே,இருளாக மனதுக்கு விளங்கா நின்ற பிரம்ம வஸ்துவை விளக்கமுற செய்யவே  பிரகாசமான 'ரு' எனும் விளக்காக ஸகுண பிரம்ம ஸ்வரூப "கு" விளங்குகின்றார்.


ஸகுண நிர்குணங்கள்

 சதுர் வாக்கியங்களால் சுட்டி காட்டப்படும் பிரம்ம சொரூபத்தை ஸகுணம் என்றும் நிர்குணம் என்றும் இரண்டாக பிரித்து குறிப்பிட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். பிரம்மம் என்றாலே பிளவுபடாத ஏக ஸவரூபமானது என சொல்பவர்களே தான் இப்படி இரண்டாக பிரித்து பிரம்ம வியாக்யானம் சொல்பவர்களும் என்பது முரண்பாடு என தோன்றவில்லையா?

தெளிவு வராத மக்கள் இந்த கோட்பாடு விளங்காமல் அத்வைதமான பிரம்மம் எப்படி ஸகுண நிர்குணமாயிற்று என கேட்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் வேதாந்திகள் முழிப்பதை காண்கிறோம்.

உண்மையில் பிரம்மம் நிர்குணமானதா எனக்கூட நிர்ணயம் பண்ண கூடாதது."அது" என சொல்லலாமே ஒழிய "அது" எத்தகையது என சொல்லக்கூடாதது.ஏனெனில் அது இவ்வுலக புலன்களுக்கு எள்ளளவும் எட்டப்படாதது.எக்காலத்தும் எவ்விடத்தும் எத்தன்மையிலும் எத்தன்மையினும் எட்டக்கூடாதது. அது ஒருபோதும் ஸகுணமானதுவும் இல்லை ஸகுணமாக மலர்வதும் இல்லை."அது அதுவாகவே அதன் ஸ்வரூபம்."

அப்படியெனில் சகுணப்பிரம்மம் என்பது எது? அது ஜீவப்பிரம்மம்.அதாவது பிரம்மஸ்வரூபத்தை அறிந்த குணங்களொடு கூடிய ஜீவன். பரமோன்னதமான அறிவை கொண்ட ஞானி. அந்த ஞானி தான் சகுண பிரம்மம். அதனாலேயே குரு சாட்சாத் பரப்பிரம்மம் என்றார்கள்.அவர் சித்தம் ப்ரம்ம ப்ரக்ஞானமாக பிரகாசிக்க கூடியது.குணங்களொடு கூடியிருப்பினும் தூலமான உடலத்தில் உலாவினும் அவர் சித்தம் பரமமான ஞானத்தில் நிலை கொள்கின்றது.

Wednesday, November 16, 2022

பிரம்ம தேசம்

 பூர் புவ ஸுவ எனும் பாதாளம் பூமி சுவர்க்கம் என இம்மூன்றுக்கும் அல்லாது மூன்றையும் கடந்து மூன்றையும் ஊடுருவி மூன்றினிலும் ஏகமாக விளங்கா நின்ற பிரம்மமே மெய். அருகாமைக்கு மிக அருகாமையாக தொலைவுக்கு மிகத்தொலைவாக அனைத்தையும்  பற்றாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தேசம் நிறை பரதேசி.

Tuesday, November 15, 2022

மரணம் என்பது என்ன?

 ====மரணம் என்பது என்ன?======


சாதாரணமாக நாம் மரணம் என்றால் உயிர் போச்சு, அது தான் மரணம் என்கிறோம் அல்லவா?.. ஆனால் உண்மையில் அது தானா மரணம் என்பதை சற்று சிந்தித்தால் தான் மரணமில்லா பெருவாழ்வு என்றால் என்ன, எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல ஏன் எண்ணவேண்டும் என்பது புலனாகும்.

முப்பொருள் விளக்கத்தினாலேயே இவை சற்று விளங்கும், அதாவது ஆன்மா, உயிர், உடல்.. அல்லது உடல் பொருள் ஆவி என வழக்கத்தில் இருப்பது இவையே.. இவற்றில் உடல் என்பது உயிருடன் இருக்கும் போது வழங்கும் பெயர், உயிரற்று போனால் அதை சவம் என்கிறோம். இவையில் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது... உடலமில்லையெனில் உயிரில்லை, அதுபோல உயிரில்லையெனில் உடலமில்லை.. இவை பரஸ்பர பூரணங்கள்... இவை இரண்டுமில்லையெனில் ஆன்மா விளங்காது.. ஆன்மா உயிர்சார்ந்த உடலத்துடன் விளக்குவதை வாழ்வு எனவும் , ஆன்மா உயிர் உடல் தவிர்ப்பதை சாவு என்றும் வழங்கலாம்.

ஒருவன் பசியோடு அதிக காலம் இருக்கமுடியாது, அவன் செத்து விடுகிறான் அல்லவா, ஏன் பசியினால் அவனுக்கு ஜீவஹானி நேரிடுகிறது என்பதை சற்று பார்ப்போம். அவன் தன்னுக்குள்ளேயே ஜீவனை கொண்டிருக்கிறான் எனில் அவன் மரித்து போகமாட்டானே அல்லவா... அப்படியெனில் ஜீவன் என்பது அவனுக்கு ஊட்டப்படுகிறது எனவல்லவா பொருள் கொள்ளவேண்டும், அல்லவா?... அப்படி அவனுக்கு ஜீவன் ஊட்டப்படாமல் அதிககாலம் அவனால் ஜீவித்திருக்கமுடியாது. அப்படி இருப்பில் அவன் சாவை சந்திக்கிறான். அதாவது ஜீவன் பிரகாசிக்கிறதும் பிரகாசம் குறைவதுமாக இருக்கிறது என தெரிகிறதல்லவா?.. ஆகாரம் உட்கொள்ள ஜீவகலை பிரகாசித்து விருத்தியுண்டாகிறது, ஆகாரம் கொள்ளாவிடில் ஜீவகலை பிரகாசம் குன்றி மரணம் நேரிடுகிறது... இதனால் தெரிந்துகொள்ளப்படவேண்டியது ஜீவகளையானது ஆகாரம் மூலம் உடலத்துக்குள் ஊட்டப்படுகிறது என்பதாகுமல்லவா?...

உயிருடன் வழங்கும் எவ்வுடலும் ஆகாரம் கொள்வதை தவிர்க்கமுடியாது அல்லவா... அது போல எவ்வுயிருக்கும் ஆகாரம் முதன்மையாக வழங்கப்படுவது எதனால் என ஆராய்ந்தால் அது தாவரங்களே முதன்மையானது. எந்த ஒரு மாமிச உடலும் உருவாக தாவரங்களே ஆகாரமாக அமைகிறது. இவ்வண்ணம் உயிர்குலங்களும் பயிர்குலங்களும் பின்னி பிணைந்து இருப்பதை பிரபஞ்ச இயற்கை என்கிறோம்.. இதை இயற்கை உண்மை என்கின்றனர் ஆன்றோர்கள்.

இங்ஙனம் இயங்கும் உயிருடலை ஆன்மா கருவியாக கொண்டு இயங்குகிறது என ஊகிக்கமுடிகிறதல்லவா... எப்போது ஆன்மாவானது உயிருடலத்தை விட்டு அகலுகிறதோ அதுவே மரணம்... அல்லாது ஆன்மாவையும் உடலையும் விட்டு உயிர் பிரிவதுவல்ல. உயிர் உடலையும் ஆன்மாவையும் விட்டு போகிறது எனில் உடலும் ஆன்மாவும் சேர்ந்து இருக்கவேண்டும், அப்படி சேர்ந்து இருப்பதை காணமுடிவதில்லை. உயிரானது ஆன்மாவின் ஊடாக வந்ததுவோ வருவதுவோ கிடையாது, உயிரானது அன்னத்தினால் வருவது, அது பிரகாசிக்கவோ, பிரகாசம் குன்றவோ செய்யும் குணமுடையது... கருவில் அமியும் பிண்டத்தை கூட அன்னமாகிய உயிரே வளர்க்கிறது, அன்னமில்லையெனில் அந்த கருவும் ஜீவிக்காது, செத்துவிடும்... ஆகையினால் உயிர் ஆன்மாவுடன் வருவதுவல்ல என தீர்மானிக்கலாம்.

உயிரும் அதனால் அமையும் உடலமும் பிரபஞ்ச இயற்கை, அதாவது இயற்கை உண்மை... பிரபஞ்சத்தின் அனைத்து உயிர் உடலங்களும் ஒரு ஜீவனில் இருந்து உற்பத்தி, அதை அறிந்தவன் ஞானி.நம்முடைய உடல் நாளை மரத்துக்கு உணவு, மரம் இன்று நமக்கு உணவு... மரம் மிருகங்களுக்கு உணவு மிருகங்கள் மரத்துக்கும் மனிதனுக்கும் உணவு.. இவ்வண்ணம் அந்த அன்னமானது அழிவின்றி சுழன்றுகொண்டே இருக்கின்றது. இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் இருந்து ஒரு மூலஅணு கூட கூடவோ குறையவோ செய்யாது ஒரு பொழுதும், அவை சமநிலையில் தான் இருக்கும் எப்போதும்.பிரபஞ்சத்தின் எடையும் நிறையும் ஒருபோதும் கூடவோ குறையவோ செய்யாது... ஆகத்தொகை சமமாக எப்போதும் இருக்கும் விதமாக இயற்கை உண்மை இருக்கின்றது.

எல்லா உயிர்கலையும் தன்னுயிர் போல எண்ணுவது இங்கு எப்படி சாத்தியம் என்பதின் நுணுக்கம் அதுவே.எல்லா ஜீவன்களிலும் நிரைந்திருக்க போகின்றேன் என்பதன் பொருள், எல்லா ஜீவன்களிலும் சமமாக எல்லா பொழுதும் விளங்க போகின்றேன் என்பதாகும். இதன் விரிவு அனந்தம்.

சற்று சிந்திப்போம், நன்றி, வணக்கம்

----- தொடரும்

நன்றி:

❣️ திரு. ரியான் அய்யா ❣️

தொடர்ச்சி.....

உலகம் ஆதியில் வெறுமனே தான் இருந்தது... ஆக்ஸிஜனும் இல்லை கார்பண்டை ஆக்ஸைடும்... நைட்ரஜன் மற்றும் அனேகம் வாயுக்கள் இருந்தன... தாவரங்கள் தான் ஆதி உயிர்.. அவை கார்பன்டை ஆக்சைடை கொண்டு வாயு மண்டலத்தில் ஆக்ஸிஜன் பெருக்கி தெவையான அளவு ஆக்சிஜன் பெருகி விட்ட பின்னரே ஏனைய உயிர் வகைகள் தோன்ற ஆரம்பித்தன... தாவரங்கள் தாம் மழையையும் உருவாக்கின...

மனித கருவை படைத்த இறைவன் முன்னரே தாவரங்களை தயவாக கொண்டு மனித கரு வளரவே அமைத்தான்.... தாவரங்கள் இல்லையெனில் எந்த உயிர் இனங்களும் இபூமுகத்தில் இல்லை... மழை இல்லை ஆக்ஸிஜன் இல்லை.... சின்ன அனு உயிர்கள் கூட இருக்காது...

நாம் உயிருடன் இருக்கின்றோம், நமக்கு ஆதாரமானதுவோ நமது பிதா மாதாக்களின் கருசுக்கிலங்கள் இருக்கின்றன.. அவை இல்லையெனில் நாம் இல்லை.. அது போல நமது பிள்ளைகளுக்கு ஆணும் பெண்ணுமாகிய நாம் ஆதாரமாக இருக்கின்றோம்... அப்படி உயிர்கொடியானது ஆதிமுதல் படர்ந்து விரிந்து பூத்து காய்த்துகொண்டே இருக்கின்றது... ஆனால் அந்த கொடியினை காண்பவர் எவரோ அவன் சித்தன்.

உயிர்கொடியானது தான் மட்டும் தன்னுக்குளே வளர்ந்து பூத்து காய்க்கவேண்டுமெனில் ஆதிமுதல் பயிர்கொடியும் உயிர்கொடியுடன் கூடவே வளர்ந்து கொண்டே இருந்திருக்கவேண்டும்... பயிர்கொடி இல்லையெனில் இந்த உலகில் உயிர்கொடியானது இந்த அளவுக்கு படர்ந்து பூத்து காய்த்து வளர்ந்து இருக்காது... உயிர்கொடி மடிந்து போயிருக்கும்... ஆக உயிர்கொடியானது உயிருடன் எக்காலமும் வாழ்ந்திருக்கவே பயிர்கொடியானதும் கூடவே பூத்து காய்த்து வளர்ந்துகொண்டிருக்கிறது... நமக்காக நமது சந்ததிக்காக அவை நம்முடன் வளர்ந்து பூத்து காய்த்து நமக்கு உணவாகி நமக்கு வாழ்வாதரமாகி செழிப்பிக்கின்றது... அந்த பயிர்கொடியும் நம்மை போன்றே ஆதி முதல் அனாதி இறைவனின் சூட்சுமத்தை சுமந்துகொண்டு நம்முடன் வாழ்கின்றது... ஆனால் நாம் அதை அறியாமலிருக்கின்றோம்...

ஜீவ விருட்சத்தின் சூட்சுமங்களை பேசிகொண்டிருக்கிறோம்.. இதை கேட்டவர் கண்டவர் பாக்கியவான்கள் என எழுதபட்டிருந்தது அனாதி காலம் முன்பு... அழிந்து போன அறிவுகள் உயிர்பெறும் காலம் வர இறைவனை போற்றுவோமாக... செத்தவைகள் எல்லாம் உயிர்பெறுமாகட்டும்... செத்தவர்கள் கூடவே உயிர் பெற்று எழும்பட்டும்...

நன்றி:
❣️திரு. ரியான் அய்யா❣️

அவ்வெனும் எழுத்தினால்

   அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு மாகினாய்

உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும்உவ்வு மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே

உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே
கருத்தரிப் பதற்குமுன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே

 சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலேஅச்சமற்ற சவ்வுளே அரியரன் அயனுமாய்
உச்சரிக்கு மந்திரம் உண்மையே சிவாயமே

உயிரிருந்தது எவ்விடம் உடம்பெடுத்த தின்முனம்
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையு ம்ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம் பெடுத்த உண்மைஞானி சொல்லடா

உருத்தரிப்ப தற்குமுன் னுயிர்புகுந்து நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயமென்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம்
குருத்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடுங் குருக்களே



 

வெட்டவெளி

 வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்கு பட்டயம் ஏதுக்கடீ-குதம்பாய் பட்டயம் ஏதுக்கடீ


தான்’ அற்றிடத்தில் குணம் இல்லை ..குணத்திற்க்கு ஆதாரம் ’தான்’ அன்றி வேறில்லை.’தானாகி தன்மயமாய்’ இருப்பது கூட மூடத்தனமே.’தான்’ அற்றவனே தலைவன்’

தன்னை’ இழப்பது வித்தையின் சொருபம், அதைத்தான் யுக்தி எனவும், உளவு எனவும், தந்திரம் எனவும் புகல்வர் மெய்ஞானியர்.’தன்னை ‘இழப்பது தான் குருமொழி,மவுனமான பாஷை

தன்னை அறியாமல் தவிக்கும் மாக்களுக்கு தன்னை காட்டி,தன் சொருபம் காட்டி, தன் தன் மாயையின் அடையாலம் காட்டி, தன்னை இழக்கும் தவம் காட்டி, அறிவிக்க செய்தலே உபதேசம். அல்லாது வாயாலே முணுமுணுக்கும் மந்திரமோ, கழுத்தையும் நெஞ்சையும் நிமிர்த்தி இருந்து கொண்டு மூச்சை பிடிக்கும் செயலோ, கண்ணை உருட்டி விழித்து கொண்டு மேலேயும் கீழேயும் உற்று பார்த்து பரிதவிப்பதோ மாத்திரை பிரமானம் காட்டி அங்க நியாச மணி மந்திர அவௌடதங்கலை காட்டி தீபதூபம் போடுவது அல்ல

தன்னை காண ,தன் நிலை காண மட்டுமே தான் பொய் என தெரியும், பொய் என திரியும், அவ்வண்ணம் பொய்யை மெய்யென்று கொண்டு திரியும் மயக்கம் பிரியும். மயக்கம் பிரிய வெளி புரியும்

நன்றி
திரு ரியான் அவர்கள்

சூட்சும தேகம்

 ==== சூட்சும தேகம் =====


சூட்சுமத்துள் ஆண் எது? பெண் எது? என அறிந்துகொள்ளும் ஆவலே "காமம்" என படுகிறது... ஆனால் அதுமறைந்து வெளிதூலத்தில் ஆண் பெண்ணை அறியவும் பெண் ஆணை அறியவும் முற்படுவது காமம் என ஆயிற்று.

வெளிதூலத்தில் அறியமுற்பட "சிருஷ்டி" பரிணமிக்கிறது.. உட்சூட்சுமத்துள் அறியமுற்பட "முக்தி" பரிணமிக்கிறது

இது ரெண்டும்... வெளியும் உள்ளும் ஒன்றாகவே இருக்கின்றன..பிரித்தறிவது ஞானம்

பிறப்பு என்பது யோனி வழி என்பது சாமான்யம், ஆனால் முதற் பிறப்பு எது வழி என்பது விசேஷம்.

அது தெரியாமல் "பிறப்பறுப்பது" தான் எங்ஙனம் முக்தியும் எங்ஙனம்?

முதற்முதல் மனிதனுக்கு தொப்புள்கொடி இருந்திருக்குமா... அவனா அது அல்லது அவளா.. எது முதல் என அறிந்துகொண்டால் அல்லவா பிறவியின் சூட்சுமம் தெரியவரும்... ஏன் பிறந்தோம்? எங்ஙனம் வாழ்வு உண்டாயிற்று? .... அடுத்து தானே இதில் இருந்து ஆகவேண்டிய விடுதலை எப்படி என சிந்திக்க வேண்டியிருக்கிறது?..அல்லவா.

சூட்சும சரீரம் என்பது பஞ்சபூத சேர்க்கையினால் ஆனது அல்ல.. சப்த மய கோசரம்.. அதை அடைய மனம் இருக்கிற ட்ராக் விட்டு அடுத்த மேன்நிலை ட்ராக்குக்கு வரவேண்டும்....

பாருங்க..நம்ம வீட்டுக்குள்ளேயே, நம்ம ரூமிலேயே, நம்ம பக்கத்திலேயே நம்ம கூடவே இருக்கிற மனைவிக்கு யாராச்சும் போன் பண்னி கூப்பிட்டு பேசுவாங்களா?! ..இல்லையே!.  அது போல அதே மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கிற சமயம், அவங்க நம்ம கூடவே  பக்கதுல இருக்கிறப்ப  பேசின மாதிரி பேசுவோமா?! ... அப்படி பேசினா அவங்களுக்கு கேட்க்குமா... இல்லையே... ஏதாவது ஒரு மொபைல் போன் வெச்சு தானே பேசுவோம்,அல்லவா?. அது போலத்தான் கதை.  

மற்றொரிடத்தில் பைபிளில் மற்றொரு வசனம் வரும்.. "அதிக சத்தமாக இவர்கள் செய்கின்ற பிரார்த்தனைகள் விண்ணப்பங்கள் பரமண்டலத்தில் கேட்கும் என இவர்கள் நம்புகிறார்கள்" என.

--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

ஆதிமறை

 ====ஆதிமறை===


இலங்கையில் இருக்கிற ஒரு மலை உச்சி மேல ஆதம் குகை இருக்கிறது.இங்க தான் உலகத்தில் ஆதம் நபியவர்கள் முதன்முதலாக சுவர்க்கத்தில் இருந்து பூவுலகில் கால் பதித்த இடம்ண்ணு நம்பிக்கை. அங்க இருக்கிற ஆதம் பாதத்தை எல்லா மதநம்பிக்கை கொண்டவர்களும் வணங்குகின்றனர், இந்துக்கள் சிவனடி பாதம்ண்ணும், புத்தமதத்தினர் ஆதி புத்தர்ண்ணும் நம்பி அதை சொந்தம் கொண்டாடிகிட்டு இருக்காங்க.இசுலாமியர் தங்களுடைய மத நம்பிக்கைபடி தக்க மரியாதை வழங்குகின்றனர் இந்த ஆதம் பாதத்துக்கு.

ஆனால் குறானிலோ அதன் ஹதீஸுகளிலோ இந்த ஆதம் பாத ரகசிய மறை என்னவெனவோ அதன் குறிப்பீடுகளோ இருக்காது.சூஃபி ஞானிகள் மட்டுமே இப்படியொரு மறை ரகசியத்தை கொண்டுள்ளனர்.அதிலும் எல்லா சூஃபி ஞானியர்களும் இதன் பொருளை உணர்ந்தவர்களில்லை. அனேகம் இசுலாமிய ஞானிகள் நம் நாட்டிலும் மற்று அனேக வெளி நாட்டிலும் அவதாரம் செய்திருக்கின்றனர்.பெரும் உன்னதமான ஞானநிலைகளில் சென்று உயர்ந்தவர்கள் கூட இருக்கின்றனர், ஆனால் அவர்கள் காதுக்கு கூட எட்டினதில்லை இந்த ஆதம் பாதம் எனும் மாகா ரகசிய பொக்கிஷம்.

பல ஞானியர்களும் இப்படி ஒரு மறைரகசியத்தை கேட்டிருக்கின்றனர், ஆனால் அதன் தன்மை என்னது, அதன் பொருள் இன்னது என தெரிந்து கொள்ள வாழ்நாள் முழுதும் ஆவலிலே தான் இருந்து மறைந்துள்ளனர்.ஏனெனில் இதன் மறை ரகசியம் நூல்கல் சொல்லப்படவில்லை,தெரிந்தவர்களோ அதை வெளியில் சொல்ல தயங்கின காரணத்தால் ஒரு குறிப்பிட்ட வழித்தோன்றலில் மட்டும் இது ஒதுங்கி கொண்டது.

இசுலாமிய கோட்பாட்டின் படி சைத்தானுக்கு தெரியாத வித்தைகள் ஒன்றும் இல்லை, முஹம்மது றசூல் அவர்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதெல்லாம் சைத்தானுக்கும் தெரியும்.றசூல் என இங்கு நான் சொல்லுவது பூவுலகி பிறந்த ஒரு தூலதேக நபரை அல்ல.நபி என்பது வேறு றசூல் என்பது வேறு.றசூல் என்பது அல்லாஹ்வின் ஸூறத்தானது.அதன் ரகசிய பொருலாவது ‘அர்’ எனும் தாத்தை கொண்டது.அது போல அல்லாஹ்வின் தாத் என ஒன்றுள்ளது அதுவே ஆதம் பாதம் என்பது.

இறைவன் ஆதம் எனும் முதல் மனித உருவத்தை முதலில் சூட்சுமமாகவே படைத்தான்,ப்ரோட்டோடைப் என ஆங்கிலத்தில் சொல்லுவோமே, அது போல, முதல் டிஸைனிங். அப்படியான டிஸைனிங் உருவத்துக்கு தூலதேக உருவாக்கம் கொடுத்ததையே மண்ணிலிருந்து ஆதத்தை உருவாக்கியதாக சொல்லியிருக்கிறார்கள். சூட்சுமமான அந்த ஆதம் டிஸைனிங் ஆன உருவத்துள் இறைவன் தன்னுடைய தாத்தை மறைத்து வைத்தான்.

அப்படி ஆதம் முதல் தொடங்கி தலைமுறை தலைமுறையாக இறைவனுடைய உள்ளமை தாத்தானது மனுக்குலத்தில் வந்து கொண்டே இருக்கின்றது.இவ்வண்ணம் இறை தாத்தானதை ஆதத்தினுட் ஒளிப்பித்து வைத்து விட்டு இறைவன் எல்லா தேவர் குழாங்களுடனும் கட்டளை பிறப்பித்தானாம், ”நீங்கள் ஆதத்தை பணிந்து கொள்ளுங்கள்”,என.அனைவரும் ஆதத்தை பணிந்தார்களாம், சைத்தான் ஒழிய.வேணும்ண்ணா சைத்தான் இறைவனையும் றசூலையும் பணிவானாம், ஆனால் ஆதத்தை மட்டும் பணிய மாட்டானாம்.அதனால் ஆதம் மட்டும் சைத்தான் பணியாத பொருளாயிற்று.

அவ்வண்ணமான இறை தாத்தான ஆதம் பாதத்தையே சூஃபிஸம் உன்னதங்களில் உன்னதமான ஞானமாக மறைத்து கொண்டுள்ளது.ஆகையினால் ஏழு வானங்களுக்கு அப்பால் அர்ஷு குற்ஷு கடந்து சென்றாலும் உங்களால் இரைவனின் உள்ளமை தாத்தை காண இயலாது, மனிதரின் உள்ளமை இருதயத்திலன்றி.

உச்சி தனிலிருந்து உருவாகி

 உச்சி தனிலிருந்து உருவாகி


உச்சி தனிலிருந்து உருவாகி அலிபாகியே நடுவே பச்சி தனில் தரித்து பலமாகவே இல் என்றிருந்துகொண்டு வெச்சிதனை கடந்து இல்லல்லாஹூ என எழும்பி நின்று அச்சரமானதுவை அருளாக தரும் திருக்கையிதுவே 

           ~(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்-ஞானக்குறம்

அட்சரகுரு

 அட்சரகுரு

 

தூக்குங் காபுஹே துடரு மேயுமைன்
சுழியுஞ் சாத்துக்குள்ளே யாகுமே
பார்க்கு #மலிபுலாமீம் ஹேயுந் தவுசில்நிற்கப்
பழக்க #மலிபுலாமீ மாகுமே
காக்குந் தேயும்ஹேயுங் கருதுங்கமலஹூவும் கருவு மெழுத்தைக்காணு முனக்குள்ளே
ஆக்குஞ் சகலகுரு காபும் நூனுக் குள்ளே
யடங்குந் தமிழரட்சரக் குருவும்பார்.

===#பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்

மூக்கின் நூனியது

 குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.


பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.

அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.

சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும். இதையே "சுழி எனும் உட்புகும் வாசல்."

அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன. சீனாவின் "லாவோட்சூ" எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும்.


அவர்கள்ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,

அது ஒன்று போக்கு எனவும், ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும், விஷமும் எனலாம்.

இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர், ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.

சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும், வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது.

அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது. அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்

சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை, தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.

ஒரு சுற்று என்பது ஒரு போக்கு = ஒரு வரத்து சேர்ந்தது. அப்படி ஏழு நாளைக்கு, வாரத்திற்க்கு மூன்றரை போக்கும், மூன்றரை வரத்தும் இருக்கும். மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம்.

இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் "நடு மய்யத்தில்" கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன, அதையே "சுழிமுனை நாடி" என்பார்கள்.

அந்த நாடியானது மூலம் முதல், உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும். சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள், ஆனால் அப்படி அல்ல.

மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது.

இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும். அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி., சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்

ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன. அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர்,

புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம். ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும்.

எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும், ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.

இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது. அதாவது "புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்

இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.

மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம்.

மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.

அப்படி சாதனை செய்வதினால் "மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.



 ஒண்ணு முதுகெலிம்பின் அடிமுதல் மேலோட்டமாக வெளிமுகமாக அமைந்திருக்கும் நாடி, மேலாக கழுத்து பிடரி, பிந்தலை, உச்சி, நெற்றி, என கீழிறங்கி நாசி, நாசிக்கு கீழ் மேலுதடு வந்து உள்முகமாக கீழிறங்கும். எப்படி கீழிறங்கும் என்பது சூட்சுமம், நூல்களில் சொல்லப்படாதது.

இரண்டாவது நாடி மேலிருந்து முன்பக்கமாக கிழிறங்கி கீழுதடு, கண்டம், நெஞ்சு, நாபி, குறி என கீழ் சென்று உள்முகமாக மேலேறும். இதுவும் எங்ஙனம் மேலேறும் என்பதும் சூட்சுமம்.

இந்த இரண்டு சுழற்சிகளை தான் இரண்டு சுற்றுவட்டம் குறிக்கிறது. மேலும் கீழும் இரண்டு புள்ளிகளும் மையமாக இருக்கும்.

~ ❣️திரு. ரியான் ஐயா அவர்கள்

லாமலிஃப்

 லாமலிஃப்


அந்த நாளையில் அஹ்மதை துதிக்குமுன் இறையோன் விந்தையாகிய லாமலிபு ஆனதை விரும்பி சிந்தையுற்றெழு மஹ்மூதை படைத்தனன் செல்வம் வந்தவாறதை கண்டே ஞானப்பூட்டினில் வகுப்பாம்.

கூசிய வாயு தன்னை குழி நூற்றம்பத்தஞ்சும் பேசிடும் ஞானம் கல்வி பிரித்திடும் வேத சாத்திரம் நேசியாம் நன்னூல் சின்னூல் நிகண்டு அகராதிஞானம் வாசி மேலுறைந்து வாங்கும் இறை அறிவு தானே.

மூலமாங் குழியில் நின்ற முனைசுழி அறிய வேண்டி சாலமாம் யோகம் ஞானம் சார்கலைக் கியானம் பாரில் ஏலவே #அலிபில் நின்றும் எழுந்திடும் லாமை நோக்கி ஆலமே படைத்த துய்யோன் அரும்பொருள் எனக்கீந்தானே.

(#பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் ஞானப்பூட்டு)

அலிஃப்

 அரபியில அலிஃப் அட்சரத்தை கொண்டு வார்த்தைகள் துவங்காது., அதனால் அலிபுக்கு முன்னால் ஹம்ச போட்டு துவங்குவார்கள். தமிழ்ல ராமன் என துவங்காமல் இராமன் என்று இ சேர்ப்பது போன்றது. இலக்கண சுத்தம்.


இந்த அலிபுக்கு முன் ஒரு ‘னுக்கத்’ உண்டு...அது தான் நாம் உண்மையில் அறியவேண்டியது.

தெய்வத் திருவாக்கியம்

.                        ●

           *ஆதியே துணை*

*தெய்வத் திருவாக்கியம் :-*

திருமெய்ஞ்ஞான அருளமுதம்
வாக்கியம்  

ஈசன் உன்னுள் பரிசுத்தமான - மாசு மருவு இல்லாத இடத்தில் குடிகொண்டிருக்கிறானல்லவா? ஆகையால் அவனை - ஈசனைப் பற்றியே உன் செவிகள் சுவைத்துக் களிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஈசன் சக்தி உன் ஜீவனில் வளர்ச்சி அடைந்நு பிரகாசிக்கும். னீயும் ஈசனை அடைவாய். இல்லாவிட்டால், செவி உணவு பருகாவிட்டால் - எமனிடம் தான் னீ தள்ளப்படுவாய்.

அதுவுமன்றி னீ செவி உணவு பருகப்பருக ஈசனுடைய அனுக்கிரகம் கிட்டும். அப்படி ஈசனுடைய அனுக்கிரகம் கிட்டக்கிட்ட - உன் மூச்சு துண்டாடுவது னிறுத்தப்பெற்று உன் சுவாசம் வெளியே போகாமல் தங்ஙும்.

சதா ஈசன் சுவையையே செவிகளுக்கு விருந்நளித்து வந்நால் - சுவாசம் கட்டுப்பட்டு, னிஷ்டைக்கும். தவத்திற்கும் வழி பிறக்கும் . இது உன் ஆசான் தயவால்தான் னடக்க வேண்டும். அவர்களுடைய அன்பைப் பெற்று - உன் பக்கம் அவர்கள் அன்பைப் பாயும் படி செய்து கொள்ள வேண்டும்.

பீருமுஹ்ம்மது

 ”ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன்”...   இது தான் மறையான மறையான அறுநான்கில் ஓரெழுத்து.


பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும்

                              ~ (#பீருமுஹ்ம்மது #ஒலியுல்லாஹ்)

இரண்டு லாம் ஒரு அலிபு சேர்ந்து வரும் முறை அது.

ஒரு அலிபு, அதன் இரு புறமும் இரு லாம் சேர்ந்து வரும் அமைப்பு...

சதா நம்மோடு இயங்கி நிற்க்கும் உயிர்நிலை, ஆனால் நம் அறிவுக்கு வராமல் இருக்கின்றது. ரொம்ப பக்கத்துல தான் இருக்கு ஆனால் கோடி சென்மம் பிறந்தாலும் ஒருவர் காட்டிகொடுக்காமல் அறிவுக்கு வராது என்பது தான் உண்மை

"மூச்சினோடியங்கி நிற்கும் முடிவிலா பொருளை நோக்கி....” என்ற நான்கு வரிகள். இது தெளிவான விஷயம். மூச்சுக்கும் பேச்சுக்கும் ஆதாரமாக நிற்க்கும் உயிர்நிலை தான் அது.

❤️ திரு. #ரியான் ஐயா அவர்கள் ❤️

சத்திய அருள் விண்ணப்பம்

 ******சத்திய அருள் விண்ணப்பம்*******


என்னுடை இறையே, என்னுடை அன்பினுள் அன்பாய் மலர்ந்த வள்ளலே, கருணையே உடலாய் அருளே உயிராய் தயவே மூச்சாய் அங்கிங்கெனாதபடி அங்குமிங்கும் விளங்கும் தாயே, தாயினும் மேலாம் தயவுடைய தயாபரனே, நான் ஒன்று கேட்க தயை புரிவாய் என் புண்ணியனே???/

எங்கெங்கிருப்பினும் என்னென்ன கேட்ப்பினும் அங்கெங்கிருப்ப அவ்வண்ணம் அருள் புரிவோய் தகயோய் எந்னன்று அறிந்து ,அந்னன்று புரியும் வள்ளாலே, நான் கேட்க ஒன்றுமிலையே, கேட்கும் முன்னே அதை நீ அறிந்திருக்கின்றாய் என அறிவோடு அறிந்திருப்பினும் கேட்க துணிகின்றேன் பொறுத்தருள்வாய் மாநிதியே...

எனக்கென வேண்டுவதொன்றிலையே, கேட்கில் இக்குலத்து மானிடரெலாம் உய்யவே கேட்கின்றேன், தந்தையே நின் அருளின்றி எங்ஙனம் இவர் உனை அடைவர்?, நின் தயவின்றி எங்ஙனம் இக்குலம் உனை பெறுவர்?,இத்தகை அறிவே உனை நோக்கி கைதூக்கி விண்ணப்பிக்கின்றது அண்ணலே ஆருயிரே....

காட்டாற்று வெள்ளம் போல் கருமங்கள் கரும வினை தொகுப்புகள், நட்டாற்றில் தவிக்கின்றேன் பெருந்தகையோய், துணையென பற்ற துரும்பதுவும் உதவாதென்றறிவோடறிந்திருக்கின்றேன் தந்தையே, ஆதலாய் சுற்றும் சுழன்று செல்லும் மாயை மயக்கங்களை பற்றாமலே பார்த்திருக்கின்றேன், நிச்சயம் நான் அறிவேன் நீயெனை கைவிடாய்...

எங்கிலும் ஒன்று கேட்க துணிகின்றேன் எந்தையே செவி கேட்ப்பாய்,எத்தனை எத்தனை பேர் முன்னும் பின்னுமாக அடித்துசெல்லபடுகின்றனர், மாபயங்கராமாய் மாயைவெள்ளம் கொடூரமாய் பாய்ந்தோடிகொண்டிருக்கின்றதே..எந்தாய் என்னசெய்வேன் என் குலத்து மக்களெலாம் வீணாய் இறந்துபோகின்றனரே, என் செய்வேன் எந்தாய் ஏதும் அறிந்திலேன் ஏதும் முயன்றிலேன், ஏதும் துணிந்திலேன், ஏதும் வகையிலேன், நீயொன்றே துணையென்றரிந்தேன், துணையோய் தனியனே துணை செய்வாயே..

எத்தனை மாகோடி பாவங்கள் செய்திருப்பினும் எந்தையே அவர்கள் என் உயிர் குலங்கள், என் பிறப்புகள் பலகோடி பிறப்புகளில் எனக்கு உறவு முறைகள், எனக்கு தந்தையாய் சுமந்தவர்கள், என் தாயாய் இருந்து அன்பை பொழிந்தவர்கள், என் உடன் பிறப்புகளாய் இருந்து களித்து பிரிந்தவர்கள், என்னுயிர் நண்பர்களாக வாழ்ந்தவர்கள், என் உயிர் முறைகள் என் உறவு முறைகள், எந்தையே நான் இதை அறிவால் அறிந்து இறைஞ்சுகின்றேன், அவர்களிடமும் உன் பேரருட்கருணை திறன் செலுத்துவாயாக..

என்னிலே எனக்காய் தவம் செய்யில் என்னிறையே என்னிலே ஆணவ மூலவேர் மீண்டும் முளைக்கும் எனவறிந்தே நான் இங்ஙனம் விண்ணப்பிக்கின்றேன், எனக்காய் தவம் ஒன்றும் வேண்டாவே, எனக்காய் பலன் ஒன்றும் வேண்டாவே, என்னிலே தவம் எலாம் என்னிலே தவபலனெல்லாம் எல்லோருர்க்கும் வழங்குகின்றேன் இன்னிறையே, எனெக்கென ஒன்றும் வேண்டாவே, முக்தியும் வேண்டில் அது எல்லோருக்குமே அருள் செய்வாயே...காதுகொடுத்து கேட்கும் என்னிறையே நீயே கேட்கின்றாய்..நீயே அருள் புரிகின்றோய், நீயே தகையோய்..உனையே நம்பி விண்ணப்பிக்கின்றேன்...அருள் காக்கின்றேன்..காக்கின்றேன்..காக்கின்றேன்...என் அழுகை கண்ணீர் ஆற்றோடு கலந்து செல்லாத படி காத்தருள்வாய்..காத்தருள்வாய்..காத்தருள்வாய்....

பீர்

 =====பீர்====


‘சுகமுறும் பேயோடு அலிபு சென்றொரு சுழி அறிந்துயர் துளியொடு அகமுறும் கடலதில் வலம்புரி தனில் அடைந்தொரு தரளமாய் அஹ்மதின்னிரு பதம் என் அன்புற மனம் மகிழ்ந்து உன்னோடு இரந்த நான் முகம் மலர்ந்தெனை முடுகி வந்து உயர் முறைமை தந்தருள் முதல்வனே=பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்.

அன்றொரு நாள் சொல்லெணா அனேகம் கோடி காலம் முன் றஹ்மத் எனும் பெருங்கடல் ஹயாத்துல் கைபார் என பெயர் கொள்ளுமுன்  ஆத்தும மர்ம ஜலக்கடலாக நிறை கொண்டிருந்தது, அது இது என சொல்லெணா பரப்புடன் நிறை விரிந்து பரந்துள்.

அன்று ஆங்கு, “பே”யெனும் ஓர் சொல் உயர்ந்து அலிபை கொண்டுயர்ந்து  உயர் “றே’ எனும் சொல்லை சார்ந்து கண்மணியாம் வலம்புரி ‘மீம்” எனும் சொல்லுக்குள்ளாய் அமர்ந்து அஹ்மது முஹம்மதுவாய் மலர்ந்து ”பீர்முஹம்மது” என பெயர் கொண்டது.

”பே” எனும் சொல் அரபு சொல்லாதிக்கத்துக்கு அப்பாற்பட்டு பெர்சிய நாட்டு சொல்லாதிக்கத்துக்குட் பட்டதாகும்.(peer).

Monday, November 14, 2022

பாவ புண்ணியங்கள்

 உலகில் எது பாவம் எது புண்ணியம் என கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை தருவார்கள்.ஆனால் ஞானிகளோ திடசித்தமாக ஒரேயொரு பதிலை தான் தருவார்கள்.

கர்மங்களினால் உருவாகும் பலன்களை பாவ பலன் புண்ணிய பலன் என சொல்லப்படுவதில்லை.அவை கர்ம பலன்கள் மட்டுமே.அனைத்து கர்மங்களுக்கும் பலன் உண்டு அவ்வளவே.

 தூங்குவது என்பது ஒரு கர்மம்,அதன் பலன் புண்ணியமானதா பாவமானதா எனக்கேட்டால் நம்மை பைத்தியம் என்பார்கள்.நீராடுவது ஒரு கர்மம்,அது புண்ணியபா பாவமா எனக்கேட்டால் நம்மை மேலும் கீழுமாக பார்பார்கள்.ஆனால் அங்கு கர்மபலன் என ஒன்று இருக்கிறது. 

இப்படியாக அனைத்து அன்றாட செயல்களுக்கும் அதன் பலன் என ஒன்று இருக்கும் என்பது நிச்சயம்.ஆனால் பாவம் புண்ணியம் என்பது கர்மத்தினால் விளைவது அல்ல.அது கர்மவும் அல்ல.

பாவம் புண்ணியம் என்பவை சகஜமான மனிதர்கள் மிருகங்கள் என உயிரினங்கள் ஆற்றும் செயலல்ல. பாவம் புண்ணியம் என்பது எவனொருவன் தன்னை உய்விக்க கொண்டானோ அவனை உள்ளத்தால் கொளும் வஞ்சமும் வஞ்சமின்மையும் ஆம்.

அதனாலேயே "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என சொல்லப்பட்டது.

மாயை

 நீயும் தான் சாகத்தான் போறே..நானும் சாகத்தான் போறேன். செத்த பின் உன் உடம்பில் கற்பூர வாசனை வந்து தான் என்ன பிரயோசனம் அல்லது உடம்பு கனகமயமாகினும் தான் என்ன பிரயோசனம்? உன் ஆன்மா இருளை விடுத்து ஒளியை அடையுமா தான் என்ன? உயிரோடு இருக்கையில் ஒளியை அடையாத ஆன்மா செத்த பின் அடையும் என சொல்வதை விட பெரிய கூமுட்டைதனம் என்ன தான் இருக்கிறது?

ஆன்மா எங்கே இருக்கிறது என தெரியாதவன் ஆன்மா எங்கே போகிறது என தெரியவா போகின்றான்? மீனில்லா குளத்தில் தூண்டில் போட்டு என்ன பிரயோசனம்? முதலில் ஆன்மா என்றால் என்னவென தெரிந்து கொண்டவனல்லவோ அதை ரட்சிப்புக்கு கொண்டு செல்ல முடியும் அல்லவா?. ஆன்மா ரட்சிக்கபட வேண்டியது தானா எனத்தெரியாமலேயே உளறிக்கொண்டிருக்கும் உன்னை விட மூடன் யார்தான் உண்டு.ஆகையினால் முதலில் உன் ஆன்மாவை தேடு மனமே.

Sunday, November 13, 2022

பூசுண்ட பிரணாயம்

 என்னடா இவன் எழுதுறதே தப்பா இருக்கேண்ணு யோசிக்கிறீங்களா..பிராணாயாமம்ண்ணு சொல்லி கேள்விபட்டிருக்கோம், இதென்ன பிரணாயம்ண்ணு யோசிக்கிறீங்க தானே? அது வேற இது வேற.

ஆயம் என்றால் வரவு என பொருள், வியயம் என்றால் செலவு என பொருள்.இப்ப புரிஞ்சிருக்குமே, சரியா தான் சொல்றான்ணு.வரவை மிஞ்சின செலவு நஷ்டம்,வரவு அதிகம் ஆனால் லாபம்.இது தான் பிராணாய நுணுக்ஙம்.

காகபூசுண்டர் ஐயா தான் நுணுக்கமான இந்த பிரணாய வித்தைக்கு தந்தை. பெருநூல் காவியத்தில் குறுக்கு மார்க்கம் எனும் தலைப்பாக மகாநுணுக்கமான இந்த மறை வித்தையை இலைமறை காயாக சொல்லி போயிருப்பார்.பெற்றோர் பேறு கொண்டோர்.பெறாதோர் பேறு கண்டோர்.

தெரிஞ்சுக்க ஆவல் மட்டும் போதும்..

காசு பணம் தேவையே இல்லை..