Monday, November 14, 2022

பாவ புண்ணியங்கள்

 உலகில் எது பாவம் எது புண்ணியம் என கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை தருவார்கள்.ஆனால் ஞானிகளோ திடசித்தமாக ஒரேயொரு பதிலை தான் தருவார்கள்.

கர்மங்களினால் உருவாகும் பலன்களை பாவ பலன் புண்ணிய பலன் என சொல்லப்படுவதில்லை.அவை கர்ம பலன்கள் மட்டுமே.அனைத்து கர்மங்களுக்கும் பலன் உண்டு அவ்வளவே.

 தூங்குவது என்பது ஒரு கர்மம்,அதன் பலன் புண்ணியமானதா பாவமானதா எனக்கேட்டால் நம்மை பைத்தியம் என்பார்கள்.நீராடுவது ஒரு கர்மம்,அது புண்ணியபா பாவமா எனக்கேட்டால் நம்மை மேலும் கீழுமாக பார்பார்கள்.ஆனால் அங்கு கர்மபலன் என ஒன்று இருக்கிறது. 

இப்படியாக அனைத்து அன்றாட செயல்களுக்கும் அதன் பலன் என ஒன்று இருக்கும் என்பது நிச்சயம்.ஆனால் பாவம் புண்ணியம் என்பது கர்மத்தினால் விளைவது அல்ல.அது கர்மவும் அல்ல.

பாவம் புண்ணியம் என்பவை சகஜமான மனிதர்கள் மிருகங்கள் என உயிரினங்கள் ஆற்றும் செயலல்ல. பாவம் புண்ணியம் என்பது எவனொருவன் தன்னை உய்விக்க கொண்டானோ அவனை உள்ளத்தால் கொளும் வஞ்சமும் வஞ்சமின்மையும் ஆம்.

அதனாலேயே "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என சொல்லப்பட்டது.

No comments:

Post a Comment