Thursday, November 17, 2022

ஸகுண நிர்குணங்கள்

 சதுர் வாக்கியங்களால் சுட்டி காட்டப்படும் பிரம்ம சொரூபத்தை ஸகுணம் என்றும் நிர்குணம் என்றும் இரண்டாக பிரித்து குறிப்பிட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். பிரம்மம் என்றாலே பிளவுபடாத ஏக ஸவரூபமானது என சொல்பவர்களே தான் இப்படி இரண்டாக பிரித்து பிரம்ம வியாக்யானம் சொல்பவர்களும் என்பது முரண்பாடு என தோன்றவில்லையா?

தெளிவு வராத மக்கள் இந்த கோட்பாடு விளங்காமல் அத்வைதமான பிரம்மம் எப்படி ஸகுண நிர்குணமாயிற்று என கேட்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் வேதாந்திகள் முழிப்பதை காண்கிறோம்.

உண்மையில் பிரம்மம் நிர்குணமானதா எனக்கூட நிர்ணயம் பண்ண கூடாதது."அது" என சொல்லலாமே ஒழிய "அது" எத்தகையது என சொல்லக்கூடாதது.ஏனெனில் அது இவ்வுலக புலன்களுக்கு எள்ளளவும் எட்டப்படாதது.எக்காலத்தும் எவ்விடத்தும் எத்தன்மையிலும் எத்தன்மையினும் எட்டக்கூடாதது. அது ஒருபோதும் ஸகுணமானதுவும் இல்லை ஸகுணமாக மலர்வதும் இல்லை."அது அதுவாகவே அதன் ஸ்வரூபம்."

அப்படியெனில் சகுணப்பிரம்மம் என்பது எது? அது ஜீவப்பிரம்மம்.அதாவது பிரம்மஸ்வரூபத்தை அறிந்த குணங்களொடு கூடிய ஜீவன். பரமோன்னதமான அறிவை கொண்ட ஞானி. அந்த ஞானி தான் சகுண பிரம்மம். அதனாலேயே குரு சாட்சாத் பரப்பிரம்மம் என்றார்கள்.அவர் சித்தம் ப்ரம்ம ப்ரக்ஞானமாக பிரகாசிக்க கூடியது.குணங்களொடு கூடியிருப்பினும் தூலமான உடலத்தில் உலாவினும் அவர் சித்தம் பரமமான ஞானத்தில் நிலை கொள்கின்றது.

No comments:

Post a Comment