Saturday, November 26, 2022

சித்த வித்தை

மனம் வாக்கு காயம் இவை மூன்றிலும் “சாட்சியை” கொண்டு வருவதே “உண்மை சித்த வித்தை”...அது வராமல் சும்மா மூச்சு பயிற்ச்சி என மட்டுமே நடைமுறை வித்தை கருதப்படும்...அதில் சாட்சி இல்லை...சத்தியம் இல்லை.. செத்த வித்தையாக இருக்கும்....நிரபராதியான ஆத்மா இருக்காது....புரிகிறவர்களுக்கு புரியட்டும்  இந்த நிரபராதியான ஆத்மாவையே “ஈஸ்வரன்’ என அழைக்கிறார்கள்...ஆனால் வருத்தத்துடன் சொல்லிகொள்வதென்னவென்றால் ஜீவனே தான் ஈஸ்வரன் என தவறாக கொள்கின்றனர்...அதனால் அகங்காரம் பெருகுகிறது.. ஜீவனே தான் ஈஸ்வரன் எனில் அங்கு ஜீவேஸ்வர ஐக்கியம் என எப்படி வரும்?...ஐக்கியம் என்பது இரு வெவ்வேறு பொருள்களின் சங்கமம். அல்லாது ஒரு பொருள் உருமாறி மற்றொன்றாக தோற்ற,ம் பெறுவதுவல்லவே...

அட்சரங்கள்

அட்சரங்கள் என்பவை வெறும் எழுத்தினை கொண்டு புரியகூடாது, அவை உயிர் ஓசைகள், உயிர் இருப்பவருக்கு மட்டும் விளங்குபவை. ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதின் ஒரு அடையாளமே ஓசை, குழந்தைகளுக்கு கூட ஓசை வந்த பின்னர்த்தான் குழந்தை உயிருடன் இருக்கிறது என தெளிவுபடுத்துகிறோம்..அக்குழந்தையின் அழுகுரலை கேட்டதும் தாய் தந்தையர் உற்றார் உறவினர் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். ஏனெனில் அது உயிர் விளக்கம், உயிரில் இருந்து வெளிவரும் சத்தம். அட்சரங்களில் இருக்கும் அறிவு கலை ஆற்றலினால் உயிர் சுத்தி செய்து கொண்டு உயிர் ஆற்றல் பெற்று கொள்ளவேண்டும்...அதிலும் வள்ளலார் குறிப்பிட்டு காட்டும் “ழகரம்” என்பது அதிமுக்கியமானது...அருட்பெரும்ஜோதியரை அதிசீக்கிரத்தில் அடைந்து அடிநடுமுடி இன்பானுபவங்களில் முடிநிலை இன்பானுபவத்தை பெற்றுத்தரும் பெருவல்லபம் பொருந்தியது....அதை பெறவேண்டியவர்களிடத்து பெற்றுகொள்ளும் விதத்தில் பெற்றுகொள்ள அது விளக்கமுறும்

தமிழ்

""தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது."....ஆன்மாவுக்கு ஆணவம் எனும் மலம் முழுதும் நிறைந்திருக்கிறது,,ஆன்மாவை மூடி மறைத்திருக்கிறது, அதனை ஏழுதிரைகளால் வள்ளலார் வர்ணிக்கிறார். அது போல உயிருக்கும் மலம் இருக்கிறது. ஆன்மாவுக்கு முழுதும் மலம் எனில் உயிருக்கு கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்....அதுவும் திரைகளாகவே இருக்கிறது...அதுபோல மனதுக்கும் மலம் இருக்கிறது, மனதும் அறிவினை அடைய அதனுடைய விளக்கத்தினை திரைகலை அகற்றியே பெற்றுகொள்ளகூடும்....மனம் விளக்கமுற சித்தம் பிராசிக்கும்...அது ஒரு படிநிலை...இரண்டாவது படிநிலை உயிர் சுத்தம் பண்ணுதல், அதன் அறிவை விளக்குவித்தல்,, மூன்றாம் படிநிலை தான் ஆன்ம விளக்கம் செய்வித்தல். இம்மூன்றும் சன்மார்க்கிகள் செய்தாகவேண்டும்...இவற்றை களையவே ஒழுக்கங்கள் வள்ளலாரால் வைக்கபட்டிருக்கின்றன...கரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் எனும் பெயர்களில். இதை நாம் புரிந்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.

வாலையை பூசிக்க சித்தனாவாய்

===வாலையை பூசிக்க சித்தனாவாய்=== கொங்கணர் அவர் பாட்டுக்கு சொல்லிகிட்டு போயிட்டார், வாலையை பூசிக்க யாரும் பதினெண் சித்தராவர். பதினெட்ட்டு மெய்யும் உணர்பவர் அல்லவா பதினெண் சித்தர். வாலை என்றால் பத்து வயது பருவ பெண்பிள்ளையை நாம் எல்லோரும் சொல்லிகிட்டு இருக்கோம். ஆனால் என்றும் பத்து வயதுடையவளாய் விலங்கும் தமிழை மறந்துவிடுகிறோம். தமிழ் தாயே தான் வாலை தெய்வம், சித்தர்களுக்கு தாயான தயாபரம். பதினெட்டு அங்கங்களுடன் திகழும் சொரூபம் அவள் திருமேனி, அதுவெ பதினெண் மெய். அதில் பனிரெண்டு உயிர்நிலை இயக்கம். இவை ஒருங்கே அலங்கிருதமாய் திகழும் பொன்மேனி கிரணோதயம். ”அ-ஆ-னா....ஆ-வன்.னா” என தொடங்கி ‘னெள-வன் -னா” என முடியும் மூவெழுத்து மும்மொழி சொருபம் அவள் அங்க துலக்கம்.வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்ட்டு சொல்பவர் யார் காணும் என கொங்கணர் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பாடி போகின்றார்..... வாயுள்ள பிள்ளை பிழைக்கும்..அல்லவா? பல சங்க இலக்கிய இலக்கணங்கள் எல்லாம் ஆழ்ந்த நுண்ணிய அறிவின் பால் நின்று விளங்குவதே தான் என்பதில் ஐய்யமில்லை. ஆயினும், ஞானியர் போக்கு தனி போக்கு. அவர்கள் தெளிவு என்பது அதீதமானது. சின்ன வயசியில சூரியன் கிழக்கே உதிக்கிறது என தெளிந்து எல்லோரும் ஏற்றுகொள்கிறோம். ஆனால் அறிவு விருத்தியடையும் போது சூரியன் உதிப்பதுமில்லை மறைவதுமில்லை என தெளிகிறோம். அதுபோலவே தான் பல ஞான விஷயங்களும். ஒவோருவரும் அவர்களின் முதிர்ச்சிக்கு தகுந்தபடி கையாளல் செய்வர், அவர்களுக்கு புரிந்தபடி, அவர்கள் ஞானத்தின் விளக்கத்திற்க்கு தகுந்தபடி. அவ்வளவுதான். ஞானம் அதிகரிக்க அதிகரிக்க விளக்கங்கள் அதிகரிக்கும், சிலவேளை முற்றிலும் வேறான ஒரு கோணம் கூட உதயமாகும். ---❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

சிந்திக்க

மனித பிறப்பு போன்று எண்ணமற்ற பிரபஞ்ச பரிணாமங்களில் இந்த ’பூ’ உலகு அருமையானது, விடுதலைக்கு ஏற்ப ஒருங்கே அமையபெற்றது.இதில் வந்து கருக்கொண்டவன் பூத்து மலராமல் போனால், இனி என்று வாய்க்கபெறும் இப்படியொரு பிறப்பு

தூக்கமும் குண்டலினியும்

=====தூக்கமும் குண்டலினியும்===== ”வாங்கும் கலையும் ஒன்றாகும் வழங்கும் கலையும் பன்னிரண்டில்-தூங்கி கழியும் நாலையும் தான் சுழற்றிபிடித்தால் குருவாகும்,“ என்பதி சித்தர் பரிபாஷை. இவ்வண்ணம் தூங்கி இருப்பதால் நான்கு கலைகள் பாழாகும் என்பது தெரிகிறது, அந்த நாலையும் தக்க ஆசானிடம் கேட்டு தெளிவு பெறலாம். குண்டலினி என்பதும் சித்தர்களின் பரிபாஷை, அது மூன்றரை சுற்றாக சுருண்டு கிடந்து தூங்குவதாக சொல்லி இருப்பார்கள். மூன்றரை சுற்று என்பது ஜாக்கிரதை சொப்பனம் சுழுத்தி துரியம் எனப்படும்.குண்டலினீ எனும் பாம்பானது தன்னுடைய வாலையே தன் வாய்க்குள் அடக்கிகொண்டு தூங்குமாம்..அதாவது துரியம் என்பது ஜாக்கிரதைக்குள் இருக்கும்.அதை அறிந்து கொள்ள முதலில் சுழுத்தி எனும் தூக்கத்தை ஜாக்கிரதை எனும் வாயிலிருந்து வெளியே எடுக்கவேண்டும், அதன் பின்னால் துரியமும் வெளி வரும். இதனையே “தூங்காமல் தூங்கியே காக்கும் போது “ ஆதி என்ற பராபரையும் பரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே என சித்தர்கள் சொல்லுவார்கள். ஒருவன் இரண்டரை நாழிகை தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடங்கள் ஜீவித்திருப்பான் என வள்ளலார் சொல்லுவதன் மர்ம்மமும் இது தான்.கலை நாலு போகிறதை எட்டில் சேரு என அகத்தியர் சொல்லுவதும் இந்த தூக்கத்தை ஜாக்கிரதையுடன் சேர்க்கும் விதமேயாம்.யோக கிரந்தங்களில் குண்டலினி தூங்கி கிடப்பதாக மறையாக சொல்லி இருப்பது என்னவென்றால் நம்முடைய தூக்கத்தையே ஆகும்.நம்முடைய இந்த நான்கு அவத்தைகளுமே குண்டலினி எனப்படுவது, இதன் விரிவுகளை காகபுசுண்டர் உபநிடதம் போன்ற நூல்களில் விளக்கமாக காணலாம். ஒருவன் ஆன்மீக சாதனைகளில் குரு காட்டிய வழியில் செல்லவேண்டுமெனில் அவன் முதலில் பழக வேண்டியது என்பது தூக்கத்தை களைவதுவே ஆகும்...தூக்கத்தை களையாதவன் ஒருவன் குண்டலினியை எழுப்பிவிட்டென் என சொல்வானாகில் அவன் பொய்யாய் இருக்கிறான் என கண்டுகொள்ளுங்கள்.ஞானிகளுக்கு தூக்கம் இருக்காது, தூங்குகின்றவன் ஞானியாகவும் இருக்கமுடியாது. இது அடையாளம். தூக்கம் மெல்ல மெல்ல கலையும் போது உணர்வு நிலைக்கு ஒருவன் வருகிறான், தூக்கத்தை விடும் போது ஆன்மீகம் ஆரம்பமாகிறது, அவனுடைய சாதனை இன்பம் காண தொடங்கிகிறது, அவனுக்கு விழிப்பு நிலை அதிகரிக்க தொடங்குகிறது, அவன் வெற்றியை நோக்கி பயணம் ஆரம்பிக்கிறான். இதனாலேயே எல்லா ஆசான்மார்களும் ஞானிகளும் தூக்கத்தை விட சொல்லுகிறார்கள். நன்றி, வணக்கம்

மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம்

==== மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம் === நாம் தூலத்தில் வசிக்கிறோம், தூலத்தை வளர்க்கிறோம், தூலத்தை மெய்யென கொள்கிறோம்... ஆனால் அவர்கள் தூலத்தை கடந்து சூட்சும தேகங்களில் பிரவேசிக்கிறார்கள், சூட்சும தேகங்களை வளர்த்துகொள்ளுகிறார்கள், அதை மெய்யென்று கொண்டு அதில் குடியேறுகிறார்கள், அட்ட்ட்ட்ட்தில் வாழ்கிறார்கள்.. அந்தந்த தேகங்களின் ஆயுள் முடிவுமட்டும் அந்த நாதந்த நாட்டிற்க்கு வழி தேட வேண்டாமா? ... அதற்க்குத்தான் இவ்வளவும் சொல்லிகொண்டிருக்கிறேன், அந்த "சப்தமய தரிசனமான” தேகத்தை, எஞ்ஞான்றும் அழியாத மெய்க்குள் புகுந்து கொள்ளவேண்டாமா!?  எனத்தான் அரைகூவல் விடுத்துகொண்டிருக்கிறேன். தூலம் ஜோதியாச்சு!! தூலம் ஜோதியாச்சு! என கதறிகொண்டிருக்காமல் ஆகவேண்டிய காரியத்திற்க்கு அழைக்கிறேன்... நாதாந்த நாட்டிற்க்கு நாயகனாகி அரசு பண்ணவேண்டாமா?!..அந்த மெய்தேகத்திற்க்குள் புகுந்துகொள்ளவேண்டாமா?!... எங்கே அந்த வழி?.. யாரிடம் இருக்கிறது என தேடவேண்டாமா...??சிந்திப்பீர்... ஆறானது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதே அதில் ஸ்னானம் பண்ணுபவன் உத்தமன். எந்த ஒரு பொருள் மெய்பொருள் என அழைக்கபடுகிறதோ, எந்த ஒரு பொருள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பூரணமாய் அனாதிகாலம் முதல் நம்மோடு நம் உயிருக்கு உயிராய் நிலைகொண்டிருந்தும் எவ்வண்ணத்தாலும் நமது சிற்றறிவிற்க்கு புலப்படாமல் இருக்கிறதோ, எது மோட்ச சாம்ராஜ்ஜியத்திற்க்கு திறவுகோலாய் இருக்கிறதோ, எதை பற்றி வந்தவந்த வழித்தோன்றல்களும் வந்துபோன மெய்கண்டார்களும் அன்புடன் அழைத்து வாரி வாரி வழங்கினார்களோ  அது ஒன்றே காலம் காலமாய் அற்புத அனவரத தாண்டவமாய் இலங்கிரணங்களை விசிரிம்பித்தபடி அம்பலத்தாடி கொண்டிருக்கிறது...அந்த சேவடிக்கே சரணம். ---❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

பஞ்சாட்சரம்

பஞ்சாட்சரத்தை தின்பது  எப்படியெனில் விளக்கம் மூலரே தருகிறார். "நமவெனும் நாமத்தை நாவினில் ஒடுக்கி சிவவெனும் நாமத்தை சிந்தையுள் ஏற்றி....” இப்படி ஒரு மந்திரம் வரும்... இதைத்தான் மென்று தின்னுதல் என்பார்கள்... அஞ்செழுத்துக்களை மூன்றெழுத்தாக்கி , மூன்றை ரெண்டாக்கி, ரெண்டை ஒன்றாக்கி ஒடுக்குவது.... பஞ்சாட்சர நாவினில் சொல்லாமல் சொல்லிகொண்டிருப்பதையே மெல்லுதல் என்கிறார், நாவிம் வாயும் அசைந்துகொண்டிருக்கும்... இப்படி மென்று மென்று நம என்பது முதலில் ஒடுங்கும்.... ஒடுங்கும் என்றால் நாவினில் இருந்து விட்டு போகும்... சிவய மட்டும் சிந்தையுள் இருக்கும்.... இப்படி ஜெபம் தொடர தொடர சிவய என்பது சொல்லி சொல்லி சிவ சிவ என ஒடுங்கும்.... இப்படி கொஞ்சம் கொஞ்சமாக “மென்று திங்கலாம்”... --- திரு. ரியான் ஐயா அவர்கள்.

னித்தியம் -அனித்தியம் அறிவோம்

===னித்தியம் -அனித்தியம் அறிவோம்===== அறிவானது அறிவற்ற தன்மையில் இருந்து மீண்டு அனேக கோடி கால கர்ம மல பரிபாக நிமித்தம் அனேக கோடி கால அனேக கோடி யோனி பேதங்களாக பிறந்து பிறந்து பரிபாகமுற்று ஒருபோது பரிபாகம் மீண்டும் அற்று கீழ்நிலை மேனிலை என சுழன்று உழன்று முடிவில் மனித உருவறிவு பூண்டு வந்து பிறந்திட்டோம் எனில் இதுவும் அனித்தியமே. முடிவாக தான் மனித தூலம் தரப்பெற்றது எனில் இதன் மாமகத்துவம் சற்று புரியவும்.இப்பிறப்பு நழுவி விடில் அடுத்து மீண்டும் ஒரு மனித தூலம் அமைந்திடும் என இறமாந்திருத்தல் அனியாயம்.ஏனெனில் இனி நீ பிறக்கபோவதில்லை எவ்வுயிராகவும் இவ்வுலகில். நீ பிறவிகளின் பரிணாமத்தில் முற்றுப்பெற்று விட்டாய்.உனக்கு அனேக கோடி தவப்பலனாய் மனிததூலம் வழங்கப்பட்டுவிட்டது. இவ்வுலகம் போராட்டக்களம்,பரிசும் உன்னிடமே இருக்கிறது,அதை உனக்கு வழங்குபவனும் நீயே தான்.அப்படியான ஜீவபரிசை வாழ்நாள் முழுதும் கொண்டு திரிந்தும் அதன் பலனை அறிவு இழந்து நழுவவிட்டு விட்டால் மீண்டும் ஒரு முறை கூட வாய்ப்பு உண்டு,அப்படி பலகோடி மனிததூலம் கொண்டு பரிசினை வெல்லலாம் என கூமுட்டைகளாக இருந்துவிட்டு போக கிடைப்பதே நித்தியம்.பரிசினை வென்று பிறவியின் பயனை நுகர்ந்து பரிபூரணமுற்று போக கிடைப்பதுவும் நித்தியமே தான். அனித்தியம் எனும் பிறவி தோன்றி மறைந்து கொண்டே பல பல யோனி பேதங்களாக சதா நிகழ்ந்து கொண்டிருக்கும். நினித்தியம் எனும் வாழ்க்கையோ முடிவற்றதுவாய் சர்வ காலத்துக்கும் தொடர்ந்து கொண்டிருப்பதுவாம். நன்மை புரிந்தவன் நித்தியமான சொர்க்க பலனையும், தீமை புரிந்தவன் நித்தியமான நரக பலனையும் அடைவான்,அவனே தேடி கொண்ட பரிசு அது. சொர்க்கமும் நரகமும் ஒரு போதும் ஒருவனும் அவன் கடந்து வந்த எந்த கோடிகால பிறப்புகளிலும் அனுபவித்தது இல்லை.மண்ணாக மரமாக புல்லாக புழுவாக பிறந்திளைத்த எந்த பிறவிக்கும் சொர்க்கம் நரகம் என கிடையாது. சொர்க்கமும் நரகமும் மனிதனாக பிறந்தவர்களுக்கு மட்டும் நித்தியமாக வகுக்கப்பட்டுள்ளது.அனித்தியத்தில் இருந்து நித்தியத்துக்கு புகப்பெறுபவன் மனிதன் மட்டுமே. ஏனைய யோனிபேத பிறப்புகளுக்கு இல்லை. நித்தியத்தில் எத்தகைய நித்தியம் வேண்டும் என்பதை போராடி பெறுவாய்....னித்தியமான சொர்க்கமோ...அல்லது நித்தியமான நரகமோ. தூங்குறோம்..அப்போது உலகத்தை அறியவில்லை...ஆனால் உலகம் இருந்தது தான்..... விழிக்கிறோம்..அறிவு வருகிறது...அப்படி உலகமும் வருகிறது.அறிவானது எங்கும் போய்விடவில்லை,ஆனால் அது அறிவற்ற தன்மையில் இருந்ததனால் உலகத்தை அறியவில்லை,பிறவிகளை அறியவில்லை.அவ்வண்ணம் அறிவின் மலர்ந்த சொரூபம் மனிததூலம்

சாவு பொய்யாச்சே என்பது மெய்=

===சாவு பொய்யாச்சே என்பது மெய்==== மனுஷன் நரனாக பிறந்து அறிவு மாணிக்கத்தை பெற்று தேவராகணும் எங்கிற யோசனை அருமை தான் ஐய்யனே, ஆயினும் சற்று சந்தேக நிவர்த்தி வேணுங்கிறேன், தெளிவுக்குத்தான்... சாதி மனுக்குலம் எல்லாம் ஜீவன் என்னவென கண்டறிந்து, அந்த அறிவின் தெளிவினால் ஜென்ம சாபல்ய பலன் அடையட்டும் என்பதும் அருமை தானுங்கோ... ஆனால் அழியகூடிய தூலத்தை விடுத்து அழியா சுவர்ண தேகம் பெற்று எக்காலத்துக்கும் மரணமில்லா பெருவாழ்வு வாழ எத்தனிப்பதும் அருமை தானுங்கோ... தன்னில் தனியனாகிய வஜ்ஜிர மாணிக்கத்தை கைபோட்டு அதில் சென்று உட்புகுந்து, அந்த ஜீவமாளிகையில் பரகாய பிரவேசம் பண்ணுவதும் அருமை தானுங்கோ... ஆனால் நிச்சயமாக அறியவேண்டிய மற்றொரு கேள்விக்கு பதில் கூட தெரியவேணுமுங்கோ... ”உன் ஜீவனை நீ உன் வாழ்நாளில் ஒருமுறையேனும் திரும்பி பாராவிட்டால், அது உன்னை தூக்கி போட்டு விட்டு அலகை எனும் பிசாசிடம் உன்னை ஒப்படைத்து விடும் என்கின்றார்களே அது எப்படி?.. உன்னுடைய ஜீவனை அலகை பிடித்து கொண்டு எக்கோடி காலத்துக்கும் நரக வாதனைக்கே ஆளாக்குவான் என்கிறார்களே, அது எப்படி?.. உண்மையில் உன் ஜீவனை அலகை பிடித்துகொள்ளுவான் என்பது நிச்சயமான உண்மை தானா என சற்று சிந்தித்து பதில் சொல் செல்வமே!!. ....”நீ” உன் ஜீவனை பாராமல் அசட்டை செய்தால் உன் ஜீவனை அலகை கொண்டு போய்விடுவான் என்கிறார்களே, அப்போது அதே ஜீவனில் ”நீ” போய் குடியிருந்தால் மட்டும் அலகை உன் ஜீவனை கொண்டு போகாமல் உன்னை நித்திய ஜீவமாளிகையில் வைத்திருப்பான் என்கிறது என்ன அறிவு? ”நீ” ஜீவனோடு ஐக்கியமானால் உன்னை அலகை விட்டு விலகிவிடுவானாம், ஆனால் ஜீவனோடு ”நீ” சேராவிட்டால் ஜீவனை அலகை கொண்டு சென்றுவிடுவானாம், அது எப்படி? ஜீவனை விட ‘நீ’ பெரியவனோ?..உண்மையில் அலகை கொண்டு போவது யாரை-உன்னையா அல்லது உன் ஜீவனையா

Friday, November 25, 2022

திருமந்திரம்

ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம் ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன வன்னி எழுத்தவை வானுற ஓங்கின வன்னி எழுத்தவை மாபெருஞ் சக்கரம் வன்னி எழுத்திடு மாறது சொல்லுமே சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம் சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச் சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும் மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின் மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே ஞாலம தாக விரிந்தது சக்கரம் ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும் ஞாலம தாயிடும் அப்பதி யோசனை ஞாலம தாக விரிந்த எழுத்தே விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும் விரிந்த எழுத்தது சக்கர மாக விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே அப்பது வாக விரிந்தது சக்கரம் அப்பினில் அப்புறம் அவ் அன லாயிடும் அப்பினில் அப்புறம் மாருத மாய் எழ அப்பினில் அப்புறம் ஆகாச மாமே ஆகாச அக்கர மாவது சொல்லிடில் ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம் ஆகாச அக்கரம் ஆவ தறிமினே. அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து அறிந்திடும் சக்கரம் நாத முதலா அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி ஓர்க்கும் அறிந்திடும் அப்பக லோன்நிலை ஆமே அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும் எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும் இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம் எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும் எழுத்தவை ஆறது அந்நடு வன்னி எழுத்தவை அந்நடு அச்சுட ராகி எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே அந்தமும் ஈறும் முதலா னவைஅற அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால் அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின் அந்தமும் இந்துகை ஆருட மானதே ஆஇன மானவை முந்நூற் றறுபதும் ஆஇனம் அப்பதி னைந்தின மாய்உறும் ஆஇனம் அப்பதி னெட்டுட னாய்உறும் ஆஇனம் அக்கதி ரோன்வர வந்தே. வந்திடும் ஆகாச ஆறது நாழிகை வந்திடும் அக்கரம் முப்ப திராசியும் வந்திடும் நாளது முந்நூற் றறுபதும் வந்திடும் ஆண்டும் வகுத்துறை அவ்விலே அவ்வினம் மூன்றும்அவ் ஆடது வாய்வரும் கெவ்வினம் மூன்றும் கிளர்தரு ஏறதாம் தவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம் இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம் இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின் இராசியுட் சக்கரம் என்றறி விந்துவாம் இராசியுட் சக்கரம் நாதமும் ஒத்தபின் இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம் நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில் நின்றிடும் அப்புறம் தாரகை யானதே தாரகை யாகச் சமைந்தது சக்கரம் தாரகை மேலோர் தழைத்ததோர் பேரொளி தாரகை சந்திரன் நற்பக லோன்வரத் தாரகை தாரகை தாரகை கண்டதே கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம் கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக் கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின் கண்டிடும் அப்புறங் காரொளி யானதே காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும் பாரொளி நீரொளி சாரொளி காலொளி வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின் நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே நின்றது அண்டமும் நீளும் புவியெலாம் நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட நின்ற இவ் அண்டமும் மூல மலமொக்கும் நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில் விந்துவும் நாதமும் ஒக்க விதையதாம் விந்திற் குறைந்திட்டு நாதம் எழுந்திடில் விந்துவை எண்மடி கொண்டது வீசமே. வீசம் இரண்டுள நாதத் தெழுவன வீசமும் ஒன்று விரிந்திடும் மேலுற வீசமும் நாதம் எழுந்துடன் ஒத்தபின் வீசமும் விந்து விரிந்தது காணுமே. விரிந்தது விந்துவும் கெட்டது வீசம் விரிந்தது விந்துவும் நாதத் தளவு விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில் விரிந்தது விந்து விதையது வாமே விதையது விந்து விளைந்தன எல்லாம் விதையது விந்து விளைந்த உயிரும் விதையது விந்து விளைந்தவிஞ் ஞானம் விதையது விந்து விளைந்தவன் தாளே. விளைந்த எழுத்தவை விந்துவும் நாதம் விளைந்த எழுத்தவை சக்கர மாக விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும் விளைந்த எழுத்தவை மந்திர மாமே மந்திரம் சக்கர மானவை சொல்லிடில் தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம் தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை தன்னிட்ட டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே பார்க்கலு மாகும் பகையறு சக்கரம் காக்கலு மாகும் கருத்தில் தடம்எங்கும் நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள் ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே. அறிந்திடுஞ் சக்கரம் ஆதி எழுத்து விரிந்திடுஞ் சக்கரம் மேலெழுத் தம்மை பரிந்திடுஞ் சக்கரம்பார் அங்கி நாலும் குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே கூறிய சக்கரத் துள்எழு மந்திரம் ஆறியல் பாக அமைந்து விரிந்திடும் தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும் மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும் மதித்தங் கெழுந்தவை மாரண மாகில் கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே. கூடிய தம்பனம் மாரணம் வச்சியம் ஆடியல் பாக அமைந்து செறிந்தடும் பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார் தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே அளிந்த அகாரத்தை அந்நடு வாக்கிக் குளிர்ந்த அரவினைக் கூடிஉள் வைத்து அளிந்தவை அங்கெழும் ஆடிய காலே காலரை முக்கால் முழுதெனும் மந்திரம் ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப் பாலித் தெழுந்து பகையற நின்றபின் மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப் பண்டைஉள் நாவில் பகையற விண்டபின் மன்றுள் நிறைந்த மணிவிளக் காத்ஞிளி என்றும் இதயத் தெழுந்து நமவே

இல் வாழ்வு

இல் வாழ்வு தூக்குங் காபுஹெ துடரு மேயுமைன் சுழியஞ் சாத்துக்குள்ளே யாகுமே பார்க்கு மலிபுலாமீம் ஹேயுந் தவுசில்நிற்கப் பழக்க மலிபுலாமீ மாகுமே காக்குந் தேயும் ஹேயுங் கருதுங்கமலஹூவும் கருவு மெழுத்தைக்காணு முனைக்குள்ளே ஆக்குஞ் சகலகுரு காபும் நூனுக் குள்ளே யடங்குந் தமிழட்சரக் குருவும்பார். இல்லென்ற றெழுத்தைப் பற்றி - இரு வாசலைப் பூட்டி யடைத்துப் பிடித்துக் கொல்லன் துருத்திகொண் டூதி - நல்ல கோலமாய் மூலக் குகையை யெழுப்பி வில்லின்மேல் நாணம்பை யேற்றி - வெகு வேகமா யொன்பது வாச லடைத்து அல்ஹம்தில் ஒன்றாகி நின்ற - நந்தம் ஆதியை நன்றாகக் கண்டுகொண் டேனே உச்சிதனிலிருந்து - வுரு வாகி அலிபாகியே நடுவே பச்சிதனிற்றரித்துப் - பல மாகவேஇல்லென்றிருந்கொண்டு வெச்சிதனைக்கடந்து - இல் லல்லாஹூவென்றயெழும்பிநின்று அச்சரமானதுவை - யரு ளாகத்தருந்திருக்கையிதுவே வித்துஞஅ சிலமரமும் வேருமிவை மூன்றும் புத்தி யறிவிக்கப் பூண்டிறைவ - னுற்றுரைப்பான் ஆவென் றதின்பொருளை யார்க்கும் நவிலாதே ஊவதனுக் கப்பாலென் றோதிவிடு - நீயெவர்க்கு பாலுமாம் பாலெரியும் பர்வமெறிந் தாலுனக்குத் தேனுமா மென்றே தெளி . மிக்கசிறி யோர்க்கு மெல்லியர்க்கும் வீணருக்குஞ் சற்குருவி ணுண்மைமொழி சாற்றரிது - மக்கநபி வாகா யெடுத்துரைத்தோர் வான்பொருளைக் கண்டி சாகாமற் செத்தவர்க்கே தாம். அழுக்கறுத்து மெய்யை யறிந்தோர்முன் சென்று சுளுக்கறுத்து நீகேளு சொல்லுவா - ருட்கருத்தில் வஞ்சகத்தை நீக்கி வான்பொருளை யென்றுமவர் தஞ்சமெனக் காட்டுவார் தாம். பொருளொரு பொருட்டு மெல்ல பூமிவிட் டகல்வா ரானா லருளொரு பொருட்டி னாலே யவனியை நோக்கிற் மிருளைவிட் டகல்வா ரில்லென் றிலங்கிய கலிமாக் வெருளதை நீக்கி மேலா சனத்தில்வீற் றிருப்பா ரன்றே. இல்லென நிரம்பி நின்ற வெழுத்தினைக் கமலத் துள்ளே மெல்லவே யிருத்தி வாங்கி வெறுப்பினை யகல நீக்கிச் சொல்லினுஞ் சொல்லா வண்ணந் தோத்திரஞ் செய்வீ ரா கல்பெனும் நயனத் தூடே கதிரவ னொளிய தாமே. மலிவாக வருநாலு ஹறுபேதென் றுணறார்கள் மனங்காபிரா மெலியாத ஹறுபேதென் றுணர்வோர்கள் வெகுஞான வெளிசேர்குவார் வெளிசேரும் படிஞானச் சுடரஞ்சு வெளிகாண்பர் வெகுராசி மொளிசேரு முயிராவ தொருநாளு மொழியாதே யுடலானதி வருநாலு மறையோது கலிமாவி னொளிசேரும் வகையான றெளிவாக விருநாலு ஹறுபான திருநாம மெழுந்தில்லின் கொள்ளுவா ரீமா னுள்ளோர் குறியெல்லாம் புகலக் கேண் ள்ளுவார் நாயன் வைத்த நடுவினி லருளை நோக்கி பிள்ளுவார் கலிமாத் தன்னை விரைந்திரண் டெழுத்தா யள்ளள வெனினும் நீங்கா ரியங்குவார் மூச்சு னோடே. சொல்லுவார் அலியே மேனி சுகமுறும் பாசத் தாலே வெல்லுவான் இபுலீ சும்மை வெருட்டுவான் பயப்ப டாமல் வில்லுநா ணுடம்பு றூஹாய் விழியம்பாற் றொடுதங் கெய் இல்லில்ரண் டெழுத்தொன் றாலே யிறைவனைக் காண லாமே . உடுதுகி லழுக்கை நீக்கு முவமையோ லுணர்ந்து நீங்க ளடுதவ வசனந் தெளபா வாடையை வெளுக்கு மாப்போ லிடுதவங் கமலத் தில்லென் றேற்றிடப் பாவந் தீரும் முடுகுவா றறுஷின் மேலோன் முஹப்பத்தி லாவா ரன்றோ ஆவா ரவனியின்மே லானவறு ஷைக்கடந்து போவார் பிதர்க்கணம் போகாமற்-சீர்பாதஞ் சென்றுதொழு வார்கமலத் தில்லென்ற சத்தநலங் கண்டு தெளிவார்கள் ஹக்காவா-ரென்றுமுள்ள நிச்சயத்தைக் காண்பார் நினைவுகலங் காதிருப்பார் நற்செயலி லேமனத்தைக் நாட்டுவா-ருட்சிவத்தை நாடி யிருப்பார்கள் நானுமல்ல நீயுமென்று தேடி யிருப்பார் தினம். நாலினை இரண்டுஒன்று ஆக்கி நடுவினில் மெலினின் முறைகண் மூன்றில் விதமதாய் காலினின் மறைய நாலும் கதிரவன் ஒளியே பாலினை உண்டு ஞானப் பதியினில் சேர இல்லல்லா நாலில் ஒன்றை இருத்தியே சொல்லெலாம் இரண்டும் கூட்டிச் சுரு கல்லெலாம் உருகச் சாடும் கனிந்தனே வெல்லலாம் மனத்தை எல்லாம் விண் செய்யினு மேவல் தந்தை செயலினைச் செய்யுந் தா சய்யிரு வகையுங் கூடித் தரித்தொருரூப மாகிப் பொய்யிரு ளகன்று ஞானப் பொருளெனக் குபதே அய்யரென் னுளத்தில் வாழ்க ஆமினல் லாகு ஆமீ சொல்லு மடியவரைத் தூடணித்து மேலோர்கள் கல்பதனுக் குள்ளுறையுங் காவலனே - இல்லெனவ தெல்லா வுயிர்க்குமிர ணப்பொலிவு றஹமத்தோ டல்லா வெனப்பெருமை யானவனே - வல்லானே எண்ணு மெழுத்தி லொளியுருவா யெவ்வுயிர்க்கு மன்னன் சிவமயமென் றாள்பவனே வல்ல பங்கொடு மறையுச்சி பழுத்துமண் ணுல நல்ல றந்தரும் ஞானத்தின் நடுவுச்சி பழுத்தங் கில்லே னும்பொரு ளுடைவதெவ் விடத்திலெ புல்ல னையுவந் தடிமைகொள் ளெவர்க்குநற் கருதி யெவருங்கண் டுணராமலே காய மதில்மாயப் பொருளாயெங்கும் சொருகி வுயிர்களோ டிணங்கிமண்ணில் சுணங்கித் திரிகின்ற பொருளையார்க்கும் உருகிக் கிடக்குநல் லுள்ளன்பினோ டொழித்தங் கிருக்கின்ற வுறும்பொருளே வெருவிப் பயந்துன்னோ டிரந்துகேட்பேன் விதன மறிந்தெனக் குதவிசெய்வாய் மருவிப் பெரும்பிழை வாராமலே வல்லோ னேயுன்ற னடைக்கலமே. இல்லென் றுனையடியே னேத்துதல்கண் டா கல்புமுரு காதோவிண் ககனருரை பேசாரே செல்லுமெங்கள் பிழைபொறுத்துன் றிருவுள சொல்லும் பிறவாதோ துயரறவே துய்யவனே செல்லென்றுலகி லெனைப்படைத்த தீனேயெனது தீ அல்லும்பகலு முனைத்தேடி யடியேன் முறையிட் டரு வெல்லுமுயர்கா தேறாதோ வேந்தாவெனக்கும் வீதியீ இல்லென்றடியேன் புகழ்ந்ததுனக் கேற்றதிலையோ ஆதி யொருவனை மறந்துலகி லனேகம் பிழைகள்செய் திறந்தாலங்கண் நீதி பெறுமுயிர் தனையோ விண்ணோர் நெறிசே ருடலையோ கேட்பார் பின்னே சோதி யருட்படி நரகி லிட்டுச் சுடும்போது படுந்துய ரவனோ நாமோ ஓதி யுணர்ந்தோர்க ளடியேன் சொன்ன வுண்மை யறிந்துரை சாற்று வீரே . ஆதியும னாதியாய் அஹமதுமு ஹம்மது சோதியா யேக சுபசொரூபாய் -நீதியாய் இப்புவியில் வந்துயிர்க் ளெல்லவர்க்குந் நிற்பவரை நெஞ்சே நினை. ஆதிபெரும் பொருளே யழிவில் லானே அன்னை யிலுமன் பானபெரி யோனே சோதியிறை யோனே துவக்கமில் லானே துய்யவனே யெல்லாம் படைத்தமிழிப் போனே நீதிபெற வெங்கு நிரம்பிநின் றோனே நிச்சயப் பொருளே நிகரில்லா ஞானமே ஓதியுணர் வல்லார்க்கு முத்தமப் பொருளே உண்மையா யென்மனத் தழுக்கறுப் பாயே. ஆருமின பேரென்றுனை யறியாமலே நெஞ்சுள் சேரும்புகழ் தேடும்படி தெரியுமுறை யேநீ ஓருமுப தேசமொரு நாளுமென துள்ளம். பாரில்மற வாமலுயர் பாடந்தரு வாயே. --- பீர் முஹம்மது ஸாஹிப்

அண்ட பிண்ட ஜீவன்

அண்ட பிண்ட ஜீவன் பிண்டத்திற்க்கு மத்தியாக உயிர்ப்பு எனும் ஜீவன் இருக்கிறது...அதுபோல அண்டத்திற்க்கு மத்தியாக அறிவு எனும் ஜீவன் இருக்கிறது... ஒன்று செத்து போகும் மற்ரையது சாகாது.... அப்படி அண்டத்திற்க்கு மத்தியாக.... கண்ணாக இருப்பதே அறிவெனும் “திரு”...... அதுவே நடுக்கண்...அதுவே திருக்கோயில்...அதயே திறந்து கொள்ளவேண்டும்...அதற்க்கு தக்க ஆசாரியன் அருள் வேண்டும்... ********பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம் - வள்ளலார்

பிரம்மச்சரியம்

உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம் அருள்தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்" "சுக்கில துளையிலே சுரோணிதக் கருவுளே முச்சதுர வாசல் தன்னில் முளைத்தெழுந்த வோட்டினில்" உருத்தரிப்பதற்க்கு முன் உயிர் புகுந்த நாதமும் என்பதில் வரும் நாதமானதை அறிந்து பற்றிகொள்பவன் உண்மையில் பாக்கியசாலியே...வணங்கத்தகுந்தவனே...அவனே நாதனுமாவான். சுக்கிலதுளியின் உள் இருக்கும் உயிரின் உள்ளாக அமைந்திருக்கும் நாதமே பிரம்ம சொரூபம்..அதுவே பிரம்மசரியம். நன்றி: ரியான் அய்யா

அறிவு

ஒருவர் தொட்டுக்காட்டவே அது மிளிரும்...இல்லையெனில் மிளிராது, அறிவு பற்றாது...அறிவிற்க்கு தீட்சை அறிவின் வாயிலாகவே , மனதின் வாயிலாக இருக்கமுடியாது அல்லவா...அதுபோல ஜீவனுக்கு போகும் வாசல் மிகவும் இடுக்கமானது, அதை கண்டடைந்தவர்கள் ஒரு சிலரே

சுழுத்தி

சுழுத்தி: தூக்க நிலையில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மனிதன் கடவுளோடு இதயத்தின் ஒன்றி இருக்கின்றான். மனது சுதந்திரமின்றி பிராண சக்தியால் இழுக்கப்பட்டு தூக்க நிலைக்கு போவதால் அங்கிருந்து கடவுள் அறிவை கொண்டு வர முடியவில்லை. ஆனால் தானாகவே உலகத்தை உதறி தள்ளிவிட்டு புத்தி கூர்மையால் அகங்காரத்தையும் தள்ளிவிட்டு இதயக் குகையில் இருக்கும் தன்னுடையை சுயவீடாகிய சித்தத்தில் குடிக்கொண்டிருக்கும் கடவுளிடம் செல்லுவோமாயானால் விசித்திர அனுபவம் ஏற்படுகிறது. கடவுளின் அருள் ஏற்படுகிறது. இது தான் உண்மை ஞான அறிவு, இந்த அறிவால் பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம். தத்துவங்களையும் எளிதாக அறியலாம். மனம் இப்படி அடிக்கடி கடவுளிடம் போக்குரவரத்து வைத்துக்கொண்டு இருக்குமானால் பேரின்பம் உண்டாகும்

பிராணன்

பிராணன் மனதை தாய்ப்போல் காக்கிறது. விழிப்பு நேரத்தில் குழந்தையாகிய மனதை இந்திரியங்களோடு விளையாட விடுகிறாள். அந்திப்பொழுது ஆனதும் மனதை உள்ளே இழுத்துத் தூங்கப் பண்ண முயற்சி செய்கிறாள் மனது தன நண்பர்களாகிய பஞ்சேந்திரியங்கள் இல்லாமல் தனக்குதானே விளையாடிக் கொள்கிறது. பிறகு இதயத்துக்குள்ளே இழுத்து மடியிற்போட்டு தூங்கப் பண்ணுகிறாள். இங்கே சித்தாக இருந்து கொண்டு மனம் சுகத்தை அனுபவிக்கிறது. பிராணன் விழித்துக் கொண்டிருந்து குழந்தையாகிய மனதின் விளையாட்டு சாமான்களாகிய உடலையும், ஞாபக சக்தியையும், புத்தியையும், அகங்காரத்தையும், ஜாக்கிரதையாய் வைத்துக் கொண்டு விழித்தவுடன் அதனிடம் கொடுத்து விடுகிறது

மனம்=அறிவு

மனமும் வாசியும் சேர்ந்தே இருக்கின்றன...மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு...மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை....மன்மனதுள்ளே மனோலயமாமே ...என மூலர் சொல்லுவார்.....அதை கருத்தில் கொள்ளவேண்டும்.....நாகத்தை மனம் பார்த்த உடனேயே பிராணன் வெடிப்பது இதனாலேயே....நம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்......இப்படி இருப்பதில் மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்...மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர ,தியான சம்பிரதாயங்கள்...பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு....சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்... நன்றி: ரியான் அய்யா இப்படி அகார ஜீவனை உகார ஜீவனோடு சேர்ப்பதே யோக என்பார்கள்....கீழ்முகமான அகாரஜீவனை மேல்முகமான உகார ஜீவனோடு சேர்த்து மகாரமான பிரம்ம ரந்திரத்தில் தானாகி தன்மயமாஇ இருப்பதே யோகமுடிபு.  பிறவி வரும் முன்னே அறிவில்லாமல் இருந்தது..பிறவியினால் அறிவுக்கு ஆதாரமான தூலம் வந்தது..நன்மையை தீமையும் அறியபடுகின்றது...சொர்க்கமும் நரகமும் அறியபடுகின்றது..இருளும் வெளிச்சமும் அறியபடுகின்றது..ஆன்மவும் பிரபஞ்சமும் அறியபடுகின்றது. தூலமில்லையேல் அறிவு விளக்கத்துக்கு வராது.இந்த தூலம் கிடைக்க வேண்டும் எனும் எண்ணத்துடனே தான் மும்மூர்த்திகள் கூட கோடி காலம் தவம் கொண்டுள்ளனர் போலும் என சொல்வர்.முக்திக்கு ஆதாரம் தூலமே தான். எவ்வுலகத்து ஜீவர்களுக்கும் முக்தி அடைய தூலம் புகுந்தே ஆக வேண்டும் ஆனால் வள்ளலாரோ மீண்டும் சொல்லுவது என்னவென்றால்,” ஆன்மா தனித்திருக்கும் ஜீவன் மன முதலியு அந்தகரணங்களின் மத்தியில் இருக்கும்” என்பதல்லவா?..அப்போது தெரிவது என்னவென்றால் தனித்து இருக்கின்ற ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து செயல்படும்போது அது ஜீவான்மா எனவும் , அதே போல அந்த ஆன்மாவானது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருக்கின்றபோது அது பரமான்மா எனவும் எனவும் கொள்லப்படுகிறது. அல்லவா?. ஆனால் நமக்கு ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு அல்லவா ஆன்மாவானது சேர்ந்து இருக்கிறது?...அல்லாது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருப்பதில்லையே?..அப்படித்தானே?..ஆகையினால் தானே கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்துிருக்கும் நாம் கண்ட ஜீவன் இறந்து போகும் போது இறந்து போகின்றோம்?..சரிதானே?.. நன்றி: ரியான் அய்யா ஆகையினால் கண்டத்தில் இருக்கின்ற ஜீவன் இறந்து போகாமல் இருப்பின் நாமும் இறந்து போகாமல் இருக்கலாமல்லவா?..அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கண்டத்து ஜீவனை புருவமத்தியில் இருக்கும் ஜீவனோடு சேர்ப்பது என்பதல்லவா?..சாகாதிருப்பது தானே சன்மார்க்கம்?..செத்துப்போவது சன்மார்க்கமாகாதே.....ஆகையினால் செத்துப்போகும் ஜீவனை செத்துப்போகாமல் செய்வது தானே சுத்த சன்மார்க்கம் ?...அதனால் கண்டத்து ஜீவனை புருவமத்திக்கு கொண்டு செல்வோம் தக்க ஆசான் துணையுடன். வாழ்க வள்ளலார் மலரடி. நன்றி: ரியான் அய்யா மனதினால் செய்யப்படும் தியானம்... பிணத்தை சுட மீண்டும் பிணத்தையே நாடுகிறீர்கள். மனத்தை கொண்டு மனத்தால் விளைந்த உடம்பை சுட வேண்டும் என்கிறீர்கள், மரத்தினால் செய்த கோடாரி எங்காவது மரத்தை வெட்டுமா...? -நன்றி: ரியான் அய்யா  தூலம் சூக்குமம் காரணம் என சொல்லபடும் உடல் மூன்றும் மனம் அல்ல.ஆனால் மனம் இவற்றில் வியாபகம்.. விஸ்வ தைஜச, ப்ராக்ஜ எனும் நாமதேயத்தால் நான்’ ..’நான்’ என எது அறியபடுகிறதோ அது மனமே மனதை அறிய மனதால் சுட்டிகாட்டப்படும் வஸ்த்து வித்தான ஆன்மா வியவகாரத்தில் மனம் எனவும் அந்தரங்கத்தில் ‘நான்’ எனவும் இருவாக பிளந்து நிற்பது எதுவோ அதுவே ஒன்றான ஆன்மம்..இவ்விரு ரூபம் ஒன்றாக இரண்டற்ற சொரூபம் மனதுக்கும் அப்பாற்பட்டு ‘நன்’னுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது என கொள்ளலாம்

ஆதியில் வார்த்தை

ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை ஒரு தேவனாய் இருந்தது, அவர் ஆதியில் தேவனோடிருந்தார், சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை, அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாய் இருந்தது, அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கின்றது, இருளானது அதை பற்றிக்கொள்ளவில்லை, ஆதிமுதல் இருந்ததும்,நாங்கள் கேட்டதும் எங்கள் கண்களினால் கண்டதும்,நாங்கள் நோக்கி பார்த்ததும், எங்கள் கைகளினால் தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையை குறித்து அறிவிக்கின்றோம், அந்த ஜீவன் வெளிப்பட்டது, பிதாவினிடத்தில் இருந்ததும்,எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமான அந்த ஜீவனை நாங்கள் கண்டு,அதை குறித்து அறிவிக்கின்றோம். உலகத்திலே வந்த எந்த மனுஷனேயும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார்,உலகமோ அவர் மூலமாய் உண்டாயிற்று,ஆனால் உலகமோ அவரை அறியவில்லை.எத்தனை பேர்கள் அந்த வார்த்தையை பெற்றுக்கொண்டார்களோ அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகள் ஆவார்கள்.-(பைபிள்

நடுக்கண்

நடுக்கண் - 1 பிண்டத்திற்க்கு மத்தியாக உயிர்ப்பு எனும் ஜீவன் இருக்கிறது... அதுபோல அண்டத்திற்க்கு மத்தியாக அறிவு எனும் ஜீவன் இருக்கிறது... ஒன்று செத்து போகும் மற்ரையது சாகாது.... அப்படி அண்டத்திற்க்கு மத்தியாக....கண்ணாக இருப்பதே அறிவெனும் “திரு”...... அதுவே நடுக்கண்... அதுவே திருக்கோயில்...அதயே திறந்து கொள்ளவேண்டும்... அதற்க்கு தக்க ஆசாரியன் அருள் வேண்டும்...அல்லாது கண்ணை திரு திரு என முழித்துகொண்டு இருந்தால் திறக்காது.... அறிவை அடைந்தவர்கள் கருணை வேண்டும். “கண்ணை முழித்து கொண்டு உணர்வை வருவித்து கொண்டிருந்தால் கண்மணி மத்தியில் உணர்வு மட்டும் தான் இருக்கும்”...ஒளி இருக்காது... ஏனெனில் நீங்கள் “உணர்வை" மட்டும் தான் கவனித்து கொண்டிருக்கிறீர்கள்... ஒளியை அல்ல...அதை கவனிக்க உங்களுக்கு தெரியாது..... உணர்வு என்பது மனமும் பிராணனும் ஒரு இடத்தில் குவிவதால் ஏற்படும் உணர்வாகும். அது ஜீவ ஒளி அல்ல. அதற்க்கு உதாகரணம் என்பது நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் போது நீங்கள் கண்மணியில் உணர்வை அறிவதில்லை... ஏனெனில் மனம் இல்லாதிருப்பதனாலேயே. மனம் எங்கிருக்குமோ அங்கு பிராணன் இருக்கும்.உடம்பில் எந்த இடத்தில் மனதை ஒருமுக படுத்தினாலும் இந்த உணர்வு இருக்கும்.ஆனால் ஒளி என்பது விஷயம் வேறு...அது கண்டுகொண்டால் ஒழிய புரியாது. அருள் நிலை சாதனைகள் என்பது மூக்கின் ஊடே சரிக்கும் வாயுவினை கொண்டோ, கண்களில் ஒளிரும் ஜீவ கலைகலைகொண்டோ ஏனைய ஆதார சக்கர அனுஷ்ட்டான அனுபவ அனுபோக சாத்திய நிலைகளில் முயற்ச்சிகளினால் வருவது இல்லை. வெளிமுயற்ச்சியின்றி அருள்நிலை சாதனைகலெனும் ஆன்ம சாதனைகலால் வருவதாகும்.....அதற்க்கு “அறிவே ஆதாரம்”...வேறு புற கருவிகளோ கரணங்களோ தேவை இல்லை குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும் ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள் சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம் ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும் இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்

ஆன்மாக்களே நம்மை சுற்றி மாயை இருக்கிறது

ஆன்மாக்களே நம்மை சுற்றி மாயை இருக்கிறது அன்பு ஆன்மாக்களே, நம்மை சுற்றி மாயை இருக்கிறது , நாம் மாயையில் சுற்றி உழன்று கொண்டிருக்கிறோம்... ஆனால் எல்லோரும் ஏதாவது சாதனைகள் சொல்லகேட்டு செய்துகொண்டிருக்கிறோம்.... நம்முடைய நம்பிக்கை என்பது அந்த சாதனையினிலே குடி கொண்டிருக்கிறது... அந்த சாதனையானது ஏதோ ஒரு குருவினிடத்தில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் கட்டப்பட்டுள்ளது. குருவை நம்பும் வரை சாதனை இருக்கும்... இல்லாவிட்டால் சாதனை இருக்காது.... இதுவெல்லாம் மாயாஜாலமே... சாதனை என்பது மாயாஜாலமே... சாதனையே உண்மை என நாம் மாயாஜாலமாக நம்பிகொண்டிருக்கிறோம்... அதனால் நிகழ்வது மாபெரும் விபத்து என்பதை கவனிக்க தவறி விடுகிறோம். அது என்னவென்றால், எந்த ஒரு சாதனையும் அந்த சாதனை செய்பவரை வளர்த்து கொண்டிருக்கும், பல அனுபவங்களை கொடுத்து கொண்டிருக்கும், பல சித்திகளை கொடுத்து கொண்டிருக்கும், பல அற்புத செயல்களை வழங்கி கொண்டிருக்கும்... சாதகன் இதில் கட்டுண்டு மேலும் மேலும் சாதனைகளின் தீவிரத்தை கூட்டி கொண்டிருப்பான்.. அதுவே அவனுடைய லட்சியமாக இரவும் பகலுமாக பரிணமிக்கும்.... ஆனால் அவன் கவனிக்க தவறும் ஒரு விஷயம் என்பது அவன் செய்து கொண்டிருப்பது எல்லாம் மாயையின் கட்டுகளுக்குள்ளாகவே... அவன் தன்னை பிறரை விட நன்றாக சாதனை செய்பவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட அதிக சித்திகள் உடையவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட ஆற்றல் மிகுந்தவனாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ளுவான்,.. ஆனால் அவன் உணர்ந்து கொள்ளாத ஒன்று அவனிடம் மேருமலை விட அதிக உயரத்திலும், யானையை விட பெரிய பலத்திலும், சிங்கத்தை விட பெரிய ஆற்றலிலும் அவனிடம் வளர்ந்து அழிக்கமுடியாத அசுர பலத்துடன் கோட்டை கட்டி தகர்க்க முடியாதபடி உருக்கொண்டுவிட்ட “அவன்” அப்போது இருப்பான்..... மாயாஜால உலகினில் தான் மருந்தும் இருக்கிறது , மறைந்து, அதை அறிந்து உணர்ந்து கொள்ளுபவன் அதன் மகத்துவத்தை அறிந்து உலகத்தை பார்ப்பான்.... உலகத்தில் வேரறுத்து விட்டு எங்கும் ஓடி போகமாட்டான். .உலகம் அவனுக்காக, அவனை பக்குவபடுத்தி கொள்ள வழங்கபட்ட மாமருந்து என அறிவான்... அவனில் குடியிருக்கும் "அவனை" தகர்த்து விடக்கூடிய மகா சஞ்சீவினி என்பதை கண்டு கொள்வான். அப்படிப்பட்டவன் உலகத்தின் மாயாஜால வித்தையின்ல் சிக்கி கொள்ளாமல் தனித்து இருப்பான் உலகத்தினுள்ளே... அவனுடைய இருப்பு என்பத அலாதியானதாக இருக்கும்... ஏனையவர்கள் சுழன்று கொண்டிருக்கும் போது ,அவன் அறிந்து கொண்டே சுழன்று கொண்டிருப்பான்.... எப்போதும் “தன்” என்பதை உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்.... அவனிடம் இருக்கும் இருள் அது மட்டுமெ... அதை இந்த உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்...அவன் எப்போதும் தன்னை இழந்து கொண்டிருப்பான்... அவனுக்கு அதுவே சாதனை.... கடைசியில் தன்னையே அறியாது போகும் அவத்தைக்கு போவான்.... தான் என்பது இறந்துபோகும். வேற்றுமை உணர்வே “நான்” என்பது... வேற்றுமை அற்று போனால் “நான்”..."நீ” என்பது அற்று போகும்... .அப்படி அந்த வேற்றுமையை அறுத்துவிடுவதே சாதனையின் முதல் படி.... அதனையே வள்ளலார் “ஒருமை” என கூறுவார்.... தயவு வருவதற்க்கு அந்த ஒருமை வர வேண்டும் என்பார்.....”ஒருமை” என்பது இருமையின் மரணமே ஆகும். தயவு என்பதே அந்த இருமையை வேரறுக்கும் கோடாயுதம், எப்படியெனில் இதையே வள்ளலார் யோகம் என்றும் ஞானம் என்றும் கூறுவார். பசித்த வேறொருவருக்கு பசித்த போது “தனக்கு” பசித்தது போல உணர்வதே யோகம்.. .அப்படி “அந்த பசித்தவர்” பசியாறி திருப்தியின்பத்தை அனுபவிப்பதை காணும் போது தான் அந்த இன்பத்தை அனுபவிப்பதே ஞானம்.... இப்படி "தானும் அவரும்" ஒருமை அடைகின்றனர்.... இப்படியான யோக,, ஞான சாதனையே வள்ளலார் விட்டு சென்ற சாதனை... அப்படி "தான்" என்பதும் "தனக்கு" என்பதும் அற்று "ஒருமை வளரும்".. .ஒருமை வளர வளர இருமை அகலும்... தயவு வர்த்திக்கும்... இதுவே மாமருந்தாக இருக்கும் மாணிக்கமணி. தயவு வர்த்திக்க அருள் உண்டாகும்.

ஸ்தோத்தரித்தல்

ஸ்தோத்தரித்தல் தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை அப்படியெனில் இங்கு “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் “ என குறிப்பிடுவது எதை ஐயா? மஹாமந்திரம் எதர்க்கு கொடுக்கபட்டுள்ளது?...தயவு தான் சாதனம் எனில் மந்திரம் எதற்க்கு? கருணை எனும் தயவினால் சுத்த உஷ்ணம் பெருகாதல்லவா?..அதுக்கு சத் விசாரம் தான் காரியமாக இருக்கிறது...ஆனால் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் தான் சத்விசாரம் என கருதப்படுகிறது...இவற்றில் இவ்விரண்டு விசாரங்களுமே அபர விசாரங்களெயாம்...அதாவது இகலோக விசாரங்கலே...அப்படியாயின் அண்ட பிண்ட விசாரத்தினால் சுத்த உஷ்ணம் வராது என தெளிகிரது....அப்படியெனில் பரவிசாரம் செய்வது எப்படி? சுத்த உஷ்ணம் என்பது நாடிகளின் சமநிலையினால் வருவது என எந்த அனுமானத்தால் எடுத்துகொள்ளுவது?...சத் விசாரத்தினால் வருமென்றல்லவா பெருமானார் சொல்லுகிறார்?...அமுதம் என்பது விசாரமல்ல அல்லவா? ”தயவு எனும் கருணையே என்னை தூக்கிவிட்டது”...தூக்கிவிட்டது என சொல்லுவது ஏன் எனில் வேறு ஏதோ சாதனை சம்பிரதாயம் பெருமானாரால் செய்யப்பட்டுள்ளது...அந்த சம்பிரதாயம் உயர் நிலைகளில் அடைய தயவு தூக்கிவிடும் சாதனமாக இருந்தது, இருக்கிறது....அப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும்...அந்த சாதனை என்பது “சத் விசாரம்” எனும் சாதனையேயாகும்..... துரதிஷ்ட்டமாக நாம் இது வரை கேட்டுரிக்கிர சாதனைகள் சத்விசாரம் அல்ல...அவை அண்டவிசாரமும் பிண்ட விசாரமும் மட்டுமேயாகும்...உண்மை சத்விசாரத்தை செயல்படுத்தும் போது தயவு எனும் இயல்பானது “தூக்கி விடும்...அதாவது சாதனை மலரசெய்யும்..... அதனாலேயே ஜீவகாருண்யமும் சத்விசாரமும் சேர்த்தே வைக்கபட்டிருக்கின்றன.... சத்விசாரம் இல்லத ஜீவகாருண்யம் பூரணமல்ல...அதுபோல ஜீவகாருண்யம் இல்லாத சத்விசாரம் பூரணப்படாது...இவை ரெண்டும் சேர்ந்தே இருக்கின்றன.... நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம். இங்கு “ஸ்தோத்தரித்தும் உண்மை விளங்க வேண்டுமென தெய்வத்தை நினைந்தும் நமது குறையை ஊன்றியும் இடைவிடாது இருத்தலே” சத்விசாரம் என கொள்ளபடுகிறது இதில் “ஸ்தோத்தரிப்பது” என்பது சன்மார்க்கிகளில் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது இப்படி இருப்பதையே பெருமானார் “நல்ல விசாரணை” என்கிறார்....அதாவது பர விசாரணை என பொருள் தோத்தரிப்பது என்பது ஜெபிப்பது கிடையாது...இரண்டும் ஒனென நினைந்து கொண்டுள்ளனர்...அப்படி கொள்ளலாகாது.....தோத்தரிப்பதினால் “திருச்செவியேற்றம் “ நடக்கிறது......அதாவது இறைவனின் காதுகளுக்கு எட்டசெய்வதே தோத்திரம்....சதா இறைவனின் திருசெவிக்கு எட்டும் விதம் “ இருப்பதையே தோத்திரம் என்கின்றனர்....அதையே பெருமானாரும் ... “உன் திருசெவிக்கு “ கேட்க்கிறதா..எட்டுகிரதா எனவெல்லாம் வினவுகிரார் ”திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்......நாம் வீட்டில் “திரு விளக்கு “ வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?... “திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது....அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும் , என்பது பொருள் திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது...அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார். அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம்.கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு “திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள் இப்படி “தோத்திரமானது திருச்செவிக்கு கேட்க்க செய்வதே” சாதனை....சுருங்க சொல்லின், திருவிளக்கானது ஆரம்பகால சாதகர்களுக்கு புரிதல் உண்டாகும் பொருட்டு வைக்கபட்டிருப்பதேயாகும்....கொஞ்சம் தேறினவர்கள் “உண்மை திரு” எனும் இறை அறிவானது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், நாம் பேசும் விஷயங்கள் அனைத்தையும், நாம் என அனைத்தையும் அறிபவனாக இருக்கிறான் என்பதேயாகும். இதனையே “திருவிளங்குதல்” என்பார்கள்... அப்படி நாம் தோத்தரிப்பது திருச்செவிக்கு ஏறும் படியாக , நாம் சொல்லுவதை “அவர்” கேட்க்கின்றார் எனும் “உண்மை நிலை” உடையவர்களுக்கு “அருள் விளக்கம்” உண்டாகும் அப்படி நாம் சொல்லி கேட்கின்றவரிடம் அன்பு மலர்கிறது...எப்போதும் நம் சொல்லுவதை கேட்கின்றவராக அவர் இருக்கிறார் என்பதனை உணரும் போது அந்த அன்பு மேலும் மலர்கிறது.....இதை தான் “தெய்வத்தை கண்டாலொழிய தெய்வத்தின் மேல் அன்பு வராது” என பெருமானார் சொல்லுகிரார் கடவுள்”இயற்க்கை உண்மையாக” இருக்கின்றார்...ஆதலினால் அவரிடம் “இயற்கை உண்மை அன்பு வைத்தல் அவசியம்”..... இதையே, இப்படி “திரு விளங்குதலையே” “பெரும் திறவுகோல்”...என்கிறார் பெருமானார்.....அதை எட்டும் இரண்டு கூட அறிந்து கொள்ள இயலாத நாயிற்கடையேனாகிய தன்னிடம் இறைவன் தந்தனம் என்கிறார்...இது அவருடைய அடிமைபேறு என்பதனை சுட்டுகிறார்....இதை பக்குவம் இல்லாதவர் எட்டும் இரண்டும் தான் பெரும் திறவுகோல் என வள்ளலார் சொல்லி இருப்பதாக பொருள் கொள்கின்றனர் உண்மை அவர் எல்லாம் கேட்ப்பவராக இருக்கிறார் என்பது உண்மை....நம் தோத்திரம் கேட்க்கும் என்பதில் ஐயம் இல்லை....ஆனாஅல் அவர் கேட்க்கிறார் என நாம் உணர்தலே ஆரம்பம்....அந்த உணர்தல் நமக்கு வரவேண்டும்...அவர் பார்க்கிறார் என உணர வேண்டும்...அவர் கேட்க்கிறார் என உணர வேண்டும்.....இதனையே “வெளிச்சத்திற்க்கு வருதல்” எனபடுகிறது....ஏனையவை இருளில் செய்யபடுபவை நாம் ஜெபிப்பதும் அவர் காண்கிறார் , அவர் கேட்க்கிரார் எனும் உனருதல் வரும் போது அது ஆன்ம உணர்தல் ஆகிறது...அப்படி வராது போனால் அவையெல்லாம் இந்திரிய ,மன செயல்களாகவே இருக்கும்... இதையே சித்த வித்தையிலும் சாட்சி என கொள்ளபடுகிறது....சில சம்பிரதாயங்களில் அக்கினி சாட்ச்சி என இதை சொல்லுகிறார்கள்.....இவை எல்லாம் “திரு நிலை விளக்கங்களே”....மறைவாக சொல்லியவற்றை இங்கு தெளிவாக்கி விடுகிறேன்...அவ்வளவுதான் என் வேலை... ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.

நான் என்பதும் இல்லை

நான் என்பதும் இல்லை இறை என்பதும் இல்லை, இரண்டும் கானல் நீரே. நானும் அவனும் அற்றதே வெட்டவெளியாம் இரண்டற்ற மெய்மை வெங்காயம் தானுரிக்க வந்திருந்த கதை போல் வந்தாயிங்குனுது இறையென்று கண்டாயோ-கண்டார் கண்ணிருந்தும் காணா கனவினுக்கோர் கண்ணுண்டே வம்பாய் வந்திருப்பார் கண் தன்னை விட்டு தானல்லாமல் மற்றொன்று இல்லை, எல்லாம் தானே த்ன்மயமே தான்.மற்றை எல்லாம் கற்பனை மனம் தானன்றி பலதாய் கற்பித்து தன்னையே தான் ஏமாற்றி திரிகிறது பொய் மனம் நான்’ .’நான்’ என ஏதொன்று சதா மனம் கற்பித்துகொண்டிருக்கின்றதோ அது உண்மையில் தானல்ல, அது மனதின் கற்பிதம். நான் இங்கு இல்லவே இல்லை என்பதே மெய்மை. இரு வேறு கூறு பட்ட மனம் ஒரு கூறை ‘நான்’ எனவும் மற்றைய கூறை எண்ணம்’ எனவும் கற்பித்து எண்ணத்தை காட்டி ‘நான்’ என்பதை வலை பின்னி சிக்க வைத்து தன்னையே தானாக ஏமாற்றிகொண்டிருக்கின்ரது. இதில் இறை என்பதும் இரட்சிப்பு என்பதும் கூட மனதின் கற்பனையே தான். அறிவு அறிவு என தமிழ் மொழியிலும்,ஞானம் ஞானம் என வடமொழியாலும் சொல்லபடும் உபாயம் தான் சுத்தவித்தை எனும் ஆறாம் அறிவு. அந்த ‘விளக்கு’ முன் இல்லாமல் பிரயாணம் கூட பொய் விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.-திருமந்திரம்

ஜீவன்

ஐந்து இந்திரியங்களின் ஊடாக செய்யாத ஒரு அறிவு இருக்கின்றது ஜீ.அதை தான் ஆறாம் அறிவு என்பார்கள் ஞானிகள். பஞ்ச இந்திரிய அறிவுகள் பாழானவை. பிரயோஜன படாதவை.. பஞ்ச இந்திரியங்கள் கொண்டு செய்யும் எந்த செயலை ஞானத்தை காட்டாது.ஆகையினால் பஞ்ச இந்திரியம் கடந்து மனிதன் மட்டும் செயலாற்றகூடிய வித்தையினை கண்டுனருங்கள். அதுவே மெய் சாதனம்.  ஜீவனின் வழி செயலாற்ற வேண்டும் எனில் முதலில் நீங்கள் ஜீவனை அறிந்திருக்க வேண்டும். ஜீவனை தெரியாமல், இருப்பதை அறியாமல் இருப்புக்கு அப்பால் உள்ள பிரம்மத்தை விலக்கி பயனென்னவாம் ஜீவனை கண்டுவிட்டால், அது நாம் சொல்வது அவன் சொல்வது என பேதம் இருக்காது. உங்களில் என்னில் அனைவரிடத்திலும் இருக்கும் ஜீவனை காட்டித்டருபவரே உண்மையான குரு. அப்படி காணவில்லையெனில் இந்த சென்மத்தில் ஜீவன் தரிசனைக்கு வராது.எந்த பிராணாயாமம் பண்ணினாலும் ஜீவன் அறிவுக்கு வராது. குருவின் திருப்பாதமே சரனாகதி

பெரிய வித்தை எது தெரியுமா?

பெரிய வித்தை எது தெரியுமா? ஆன்மீக வாழ்கையில் பல படிகள் கடந்து எங்குமே அடையாமல் வீணாக செத்து தொலையும் மக்களை அனேகம் காண்கிறோம். வள்ளலார் சில இடங்களில் சொல்லி வருகிறார், சின்ன ஒளியை கண்டு ஏமாந்து பெரிய ஞனிகளாக வலம் வருபவர்கள் ஏராளமாக காண்கிறோம்.ஆனால் பெரியதாக இருக்கிற வித்தையை நாம் நிச்சயம் கண்டிருக்க வேண்டும். நிச்சயம் நமுக்கு அது பெருந்துணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வித்தைகளுக்கு எல்லாம் ராஜ வித்தை என்பது தன்னை காப்பதுவாகும். தன்னை காப்பது என்பது தன்னை வெளிக்காட்டாமல் இருப்பது ஆகும். தன்னை வெளிகாட்டாமல் இருப்பது என்பது தன்னடக்கம் ஆகும். தன்னடக்கம் என்பது வீண் கர்வம் கொள்ளாதிருத்தலே ஆகும். உலகத்தில் பெரிய வித்தை என்பது நான் பிரம்மாண்டமான ஏதோ வித்தையை பண்ணி கொண்டிருக்கிரேன், மற்று எல்லா வித்தைகளும் என் வித்தைக்கு மட்டமானது எனும் "வித்தை பெருமை", அது எல்லா வித்தை பண்ணுபவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம். யார் ஒருவருக்கு இப்படியான வித்தை கர்வம் இருக்கிரதோ நிச்சயம் அவர்கள் தனக்கு தானே வேலி கட்டி கொண்டு தன்னந்தனியாக கம்பு சுற்றுபவர்கலே ஆம். அவர்கள் மற்றவர்களை, ஏனைய வித்தைகளை, சம்பிரதாயங்களை அறிந்து கொள்லாமலேயே அவை அனைத்தும் தவறு என கங்கணம் கொண்டுவிடுவர். அவர்கள் தன்னை சுற்றி வேலி கட்டி உட்கார்ந்து விடுவதனால் அவர்கள் அந்த வேலிக்கு வெளியே வந்து வெளியில் உலாவி வரும் வித்தைகள் என்னன்ன என்பதை கற்க்க இயலாமல் தனித்து விடுவர். இதன் பரிணாமம் தான் "தன் வித்தை தான் பிரம்மாண்டம்", இதுவே பெரிய வித்தை எனும் தற்பெருமை.இதை வெற்றி கொள்வதே பெரிய வித்தைகளுக்கு எல்லாம் பெரிய வித்தை

பிரம்ம வித்தை எனும் உஜூது

பிரம்ம வித்தை எனும் உஜூது “பாய்மன வீட்டிற் பேய்குடி யிருக்கும் பேரறி வடிமையங் ஙாகும் வாயினில் னாயும் னாசியில் வண்டும் மதுசெவி தனில்விஷப் பாம்பும் ஈயணைந் நிடும்கண் ணீபுலீசன் வீடா மிப்படிக் கென்றுனீ தெளிந்து பாய்வாசி முனைகால் வழிகண்டு செவ்வேட் பதிபுரு வத்திடை யடிகீழ் வாசிகா லுச்சி கண்டத்தின் வழியாய் ஊசியின் தமர்வழி யோடிப் பேசரு மூளை மண்டலக் குகைமேல் பெலஞானக் கண்ணொன் றங்கிருந்நு வாசனை கேள்வி யிருகண்வா யெவைக்கும் வல்லமை யளிக்குமக் கண்ணே ஈசன்றன் னிருப்பும் ரவிகோடி வீசும் இருதய மலர்விரிந் தெழும்பும்“” (ஸ்ரீ வித்துனாயகம் பிரம்மபிரகாச சாலை ”ஆண்”தவர்கள் அவர்கள்) ஆண்குரு அவர்களே இதை மெய்வழியென இயம்ப நீயோ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய் மகனே? பார்! உனை சுற்றி!! பிரம்மபிரகாசத்தின் கிரணவீச்சு தெளிய மெய்யை விளம்புவர்களை காண்கிறாயா என்ன? பார்!உனை சுற்றி!! உன் பாய்மன வீட்டில் பேயலவோ குடியேறி நிற்கிறது என அறியிலயோ? பார்!உனை சுற்றி!! உன் வாயினில் நாயல்லாவோ குரைக்கிறது என தெளிவதெப்போது? பார்!உனை சுற்றி!! உன் அறிவு பன்றியை பற்றி நிற்கின்றதே அறிவு எதை தின்னும்? பார்!உனை சுற்றி!! உஜூது நடைகாண ஈயில்லா கண் தேடே கண்டம் கரயேறாயோ? பார்!உனை சுற்றி!! நாதனாதாந்த தொனி கேட்க உன் செவியில் விஷபாம்பு அறியாயோ? பார்!உனை சுற்றி!! பார்க்க பார்க்க ஈயெல்லாம் போயே வண்டது தான் மடியுமே!

சுவாசம் ஓடும் கணக்கு

சுவாசம் ஓடும் கணக்கு கடைசி னேரத்தில் னோயாளிக்கு பிராணவாயுவை குழாய் மூலமாக டாக்டர்கள் செலுத்துவதைப் பற்றி சபையில் வினவிய போது, ஆண்டவர்கள் - சுவாசம் எப்படி ஓடுகிறதென்று உனக்குத் தெரியுமா? தெரியாது - தாவர வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம் - ஒரு மாதத்திற்குத் தண்ணீர் ஊற்றினால், எங்ஙு தளிர்க்கும், எப்போது அழியும் என்று உனக்குச் சொல்லத் தெரியுமா? இறைவனின் கஜானாவிலிருந்நு வெளியானாலன்றி அது உனக்கு விளங்ஙாது - னகம் எப்படி வளருகிறது? ரோமம் எப்படி உண்டாகிறது? ரோமத்தின் அடிப்பாகத்தில் கிழங்ஙு இருக்கிறது - அதை ஒட்டிய ஒரு பொருள் கறுப்பு ரோமத்தைத் தள்ளுகிறது - எந்ந அனலான காப்பைக் கொண்டு கருப்பாக ஆகுது? பின் எப்படி வெளுப்பாக மாறுகிறது? இதைப் பற்றிக் கூடத் தெரியாவிட்டால் உன் படிப்பின் தரம் தான் என்ன? இந்ந னினைப்பாவது உனக்கு வருமா? ஒரு வித்திற்குள் னுழைந்நு அதன் அகண்ட விரிப்பை னுணுகி னுணுகிப் பார்க்கும் தகுதி வந்நாலன்றி இது தெரியாது. மனித உடலில் சுவாசம் ஓடும் கணக்கு ஒன்று இருக்கிறது - அதாவது மாமிசத்தின் உஷ்ணம் ஒரு பங்ஙும், அதைப் போல் இரண்டு பங்ஙு ரத்தத்தின் உஷ்ணமும், அதைப் போல இரண்டு பங்ஙு னரம்பின் உஷ்ணமும் உண்டு - இவை மூன்றும் சரியாக இருந்நால்தான் சுவாசம் ஓடும் - ஏதாவது ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் சரியாக ஓடாது - இப்படியிருக்க இவனாக பிராணவாயுவை ஏற்றினால் என்ன பிரயோசனம் - உள்ளே வாங்ஙும் கருவியின் மூன்று பாகங்ஙளும் இருக்க வேண்டியபடி இருந்நால் தானே வாங்ஙும்? இல்லாவிடில் கருக்கரிவாள் போட்டு அறுக்கும் வாதனையாக இருக்குமே - பட்ட மரத்திற்குத் தண்ணீருற்றி, மேலே தழைக்கிறதா என்று அண்ணாந்நு பார்ப்பவன் செயல்போல்தானிருக்கும் - மேற்கொண்டு அது மொய், மொய்யென்று அழுகுவதால் கொடூரமான வாதையையே உண்டாக்கும். இதை அறிந்நால், பூலோகத்தின் எடை எவ்வளவு என்று அறிவது போல இருக்கும் - அனைத்தையும் உண்டாக்கிய காலவரம்பின் எடை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டது போல இருக்கும் - இது யாருக்கு விளங்ஙும்? ஓடுகிற ஓட்டத்தை, (சுவாசத்தை) னிறுத்தி வைப்பவருக்கல்லவா தெரியும்? இதை னாம் வெளியாக்கினாலொழிய உலகத்திற்குத் தெரியாது. --- சாலை ஆண்டவர்கள்

வாய் உணவு - செவி உணவு

வாய் உணவு - செவி உணவு "வாயுணவுஇந்ந அனித்திய உடலை வளர்ப்பதற்காக என்று யாவற்றிராளும் அறிவார்கள். ஆனால் செவியுணவு எது, அது எதற்காகத் தரப்பெற்றது என்பது தான் எவருக்கும் எட்டவில்லை. னித்திய தேகமெடுத்து வாழ்வதுதான் செவியுணவின் பலன் என்று இந்ந அகில உலகத்திற்கும் அறிவிக்கவே னாம் வந்நுள்ளோம்.அந்ந வுணவை யார் கையில் தரப்பெற்று இந்ந உலக முழுதினுக்கும் வழங்ஙப்பெற வேண்டுமோ அவர்கள்கையிலே இறைவன் அதை ஒப்படைத்தாயிற்று. அந்நச் செவியுணவின் பலனை ஏராளமானபேர் இங்ஙுபெற்றிருக்கிறார்கள். இனியும் பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம்." "மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால்கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக்கொடுத்துள்ளான். வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்." "மூக்கறிவு வளர்வதற்காகத்தான் தேக பரிசுத்தம். ஆலய வழிபாடு முதலியன எடுத்து வைக்கப் பெற்றதுஅதற்கே. மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும். ஜீவனுக்கு மெய் உணர்ச்சி தைப்பது காது வழியாகத்தான்.செவிச் சுவை உன் ஜீவனுக்கு உஷ்ணத்தையும் தேஜஸ்ஸையும் தருகிறது - கிளப்பி உண்டாக்குகிறது.செவிக்கு உணவு அருந்நுபவன் யோகத்தில் ஆழ்வான். வாய்க்கு உணவு அருந்நுபவன் பாபத்தில்,துக்கத்தில் ஆழ்வான். செவிக்கு உணவு அருந்நுவது என்பது, ஞான சைதன்ய வார்த்தைகளை உள்ளம்சம்மதிக்கச்செவி மடுப்பது - யோகத்தைப் பெருக்கி சீவேசனாக்கும் செயலில் உன்னை விழுத்தாட்டுவது." ---- மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் வாக்கியம்

புதிபுருவத் தடி

புதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும் பவள நிறம் போன்றிருக்குந் திரிகோ ணந்தான் துதிபெறுசிங் குவையுபத்த சுகந்தி யாகச் சுபாவசா தனையினால் மவுன மாச்சு; விதிவிகிதப் பிராரத்வ "கர்மம்" போச்சு; விடயபோ கத்தினிச்சை விட்டுப்போச்சு; மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு; வத்துவதே காரணமா மகிமை யாச்சே

ஜீவாக்னி - ஜடாக்னி

ஜீவாக்னி - ஜடாக்னி உஷ்ணம் அதாவது அக்னி என்னும் சிவரூபம் உயிருக்கு ஆதாரமாயும் எங்கும் தூலக் கண்ணால் காண இயலாததும், அண்ட சராசரங்களிலும் கடல் சூழ் இப்பூமியன் கண் மட்டும் , சகல ஜீவராசிகளிலும் மயன௹பமான அ௹பத்தில் மாயாரூபியாய் அரசாட்சி செய்து வருகிறான். அச் சிவமானவன் மனிதனிடத்து மட்டும் அறிவாயும் மனமாயும் உடலாகவும் முப்பொருளாய் குடியமர்ந்து உள்ளான்.. சொல் என்னும் பேசும் கலையானது அகச் சொல்லாகவும் புறச் சொல்லாகவும் பரிணமித்து மனிதனுக்கு மட்டும் தனித்துவமான அமானிதமாக இறைவனால் வெகுமதியாய் தரப்பட்ட ஒரு தனிவரம். ஒரு சொல்லின் தன்மையைப் பொறுத்து உடலில் உஷ்ணமானது ஜீவாக்னி என்றும் ஜடாக்னி என்றும் இரு பிரிவாய் மாறுகிறது. ஜடாக்னி உணவாலும் மற்றும் குணமாற்றங்களாலும் குற்றமாகி எண்ணக்குவியலாய் மாறி நோய் என்னும் எமனிடம் தூலத்தை ஒப்புவித்து மரணத்துக்கேதுவாய் ஜடம் அழிவுரு அடைந்து தன் கடமை மறந்த பாவத்திற்கு ஜனன மரண படுகுழியில் விழுந்து மீட்படையா அலகையாகிறது. குருவுரு - மனம் - மருள் - ஜடாக்னி திருவுரு (பொருளுரு) _ ஆன்மா - அருள் - ஜீவாக்னி. ஆதம் - ஆத்மா தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லார் மனக்கவலை மாற்றல் அரிது. தாள் சேர்தல் என்பது காலக் கணக்கான கண்ணையும் நாக்கையும் முறையாகக் கைக்கொள்ளும் போது கணக்கு என்ற நினைவினில் உஷ்ணம் உண்டாக்கி தனக்குள்ளே பேசும் பேச்சு உண்டாக்கும் ஒரு அருங் கலை. நினைவின் பிறப்பு தூலக் கண்ணின் பின்புலத்தில் உள்ளது. இமையா நாட்டம் என்னும் தவநெறியில் ஜீவாக்னி என்னும் அழியா நிலை கைவரவாகி உதயமாகிறது. இது அகத்தே ஸ்தோத்தரித்து தன்னைத்தானே சுயம்புவாய் அர்ச்சித்துக் கொள்ளும் தன்மையால் கொழுந்துவிட்டு ஜ்வாலையாய் ஆகுர்தி வேள்வியில் நிலை கொள்கிறது. இது 24 ஆண்டுகால வைவஸ்ய பாடுடைய தவ முறையால் சித்திக்கிறது. அதாவது அறிய வரமாகிய பேசும் கலையை உடல் சார்ந்து உபயோகிக்கும் போது அழிவுக்கும் ஆன்மாவோடு உபயோகிக்கும் போது அழியாமைக்கும் இட்டுச் செல்லும். ஒரு மொழிக் கீதையாம் ஓர் மாத்திரைக்கோல் கொண்டு ஆன்மாவோடு உரையாடுவதே வாழும் கலை என்னும் சாகாக்கலை . மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்பதை மனமது செம்மையாக மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்று பகுத்தறிவு கொண்டு பயணிக்கும் போது உஷ்ணம் உண்டாக்கிக் கொள்ள முடியும். இது மேலும் சொல்லுக சொல்லில் வெல்லும் சொல் என்றும் விரிகிறது. செம்மை என்பது சிவப்பு நிறத்தையும் குறிக்கும். உஷ்ணத்தால்தான் எந்தப் பொருளையும் சிவப்பாக்க இயலும். நம்முடைய தூல தேகத்தில் எந்தப் பொருளை செம்மை என்னும் உஷ்ணத்தால் சிகப் படையச் செய்யலாம் என்று தன்னில் அறிந்து உறக்கத்தை ஜெயம்கொள்ளும் போது இந்தப் பூதவுடல் அழிவிலிருந்து அழியாமையை அடைந்து பொன்னுடம்பு தேகமாகிறது. இது வாசி ஹட யோகத்திற்கும் மற்றும் தேக சாஸ்த்திரத்தில் லக்ஷ்யம் கொண்டு யோக நிலை சித்து சக்தி பெற முயல்வோருக்கு கை கூடாதென்பது திண்ணம். மனம் என்னும் நினைவு அசையும் இடத்தே 'உடல் உஷ்ணத்தையும்' நினைவு அசையா இடமாகிய நினையாப்புரம் என்னும் பிடரிக் கண் வெளியிலே 'ஆன்ம உஷ்ணத்தையும் ' தன்னுள் தானே ஏற்படுத்திக் கொள்வதே சாகாக்கலை என்னும் பிரம்ம வித்தைச் செயல் என்று எங்கள் மதினாவரசர் மாணிக்கப் பொன்னம்பல மதி மேடைவீற்றிருக்கும் எம்மான் "சாலை ஆண்டவர்கள்" திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். நன்றி: --- திரு. சாலை ஜெயராமன் அய்யா அவர்கள்

றசூல்

===== றசூல் ===== வெம்பனி என்றால் சூரியனே நடுங்கும் வெப்பம் மிகுந்த துளி. பீரப்பா பாடுவர் "பருதி நடுங்கும் துளிகொடென் ஆவி அமைத்தோனே” என.இந்த துளிக்கு “ஆஷிக்” என சூஃபிஸம் கூறும். பிரபஞ்ச உற்பத்தி காலத்தில் இறைவனும் இறைவனுடைய பெருங்கருணையும் மட்டுமே இருந்தன. அந்த கருணை கடலுக்கு "றஹ்மத் கடல்" என பெயர், அல்லது "ஆத்தும மர்ம ஜலக்கடல்" எனவும் பெயர். மேற்படி றஹ்மத்து கடலில் சதா இறைவனுடைய பேரருள் பெருமழையான துளி பெய்துகொண்டிருக்குமாம். அப்படியான றஹ்மத்து கடலில் கோடானுகோடி கற்பாந்தங்களினூடாக ஒரு மலர்ச்சி உண்டாகுமாமந்த மலர்சிக்கு காரணமானது கடலில் நீரோடு நீராக உறைந்துள்ள "தாத்து" எனும் தன்மையே. இதையே மஹரிபத்துமாலையில் "தாத்து றஹ்மத்து கடல் நிறைந்த ரகசியம் தனை சொல்லக்கேளும்” என பீரப்பா விவரிக்கின்றார். அந்த தாத்தானது சிபத்து சிபாத்துகளாக விரியும். அந்த தாத்து விரிந்து "அஹமத்" என வளரும், அஹமது பின்னர் "முஹம்மதுவாக மலரும்", அதன் விரிவு நிறைய சொல்ல உண்டு. இந்த முஹமதுவை தான் வலம்புரி என்கின்றோம். வலம் புரியான இதற்குள் மேற்சொன்ன ஆஷிக் துளியை உண்டு முத்து உதயமாகும். இதுவே றசூல். ====🌺 திரு. ரியான் ஐயா அவர்கள் 🌺

வெட்டவெளி

வெட்டவெளி பிரபஞ்சம் எனும் சொல் சமஸ்கிருதச்சொல். அதன் பொருள் ‘நன்கு விரிந்தது’ என்பதே. தமிழில் பேரண்டம் எனச் சொல்லலாம். பிரபஞ்சத்தை நம்மால் ஒருபோதும் முழுமையான புறவயத்தில் கண்டுவிடவே முடியாது.  பிரபஞ்சத்தின் வடிவம் கோளம் . பிரபஞ்சம் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் இருப்பது *வெளி* ஆகும். அதை *வெட்டவெளி* எனச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். அதுவே பிரம்மம் என்று கூறப்படுகிறது . வெட்டவெளி > பேரண்டங்கள் > அண்டங்கள் > விண்மீன் குடும்பங்கள் > கதிரவக்குடும்பம் > பூமிக்கோள் > உயிர்கள் > மனிதன் என்பதாக ஒரு நேர்வாக்கியத்தை அமைத்தால் நம்மால் பரிணாமத்தை ஓரளவு விளங்கிக் கொள்தல் சாத்தியம். திடும்மென வெட்டவெளியின் ஒரு புள்ளியில் நிகழும் உசும்புதல் (இயக்கம்) விரியத்துவங்குகிறது. அவ்விரிவால் அண்டங்கள் உள்ளிட்ட அமைப்புகள் தோன்றுகின்றன. வெட்டவெளியின் சிறுபுள்ளியில் திடீரென நிகழும் உசும்புதல் அல்லது விரிவின்போது எழும் சத்தமும்(ஒலி), வெளிச்சமும் (ஒளி) பேரண்டத்திற்கான முதற்புள்ளிகள்.  அவ்வொலியை ஓங்காரம் என்றும், அவ்வொளியை சோதி என்றும் குறிப்பிடுகிறார்கள் . நாதம், விந்து என இரண்டு சொற்களை  தோற்றக்குறியீடுகளாகக் குறிப்பிடுவர். நாதம் என்பது ஒலி; விந்து என்பது ஒளி. ”நாத விந்து கலாதி நமோநம” எனும் அருணகிரிநாதரின் திருப்புகழ் ஒரு சான்று. சமயத்தில் இறைவனை நாதன் என்றும் சொல்வதை நினைவுகூரவும். பிரபஞ்சத்தோற்றத்திற்கு அடிப்படையான நாதத்திற்கு மூலமான பொருளைச் சுட்டும் குறியீடு நாதன். சைவசமயத்தில் சிவம், சக்தி எனும் முதன்மைக் குறியீடுகளை  பார்ப்போம். சிவம் என்பது வெட்டவெளியைக் குறிப்பது. சவம் என்றால் உயிரற்றது. இயக்கமும் அற்றது . அப்படியானால் சிவம்? ஆம், உயிருள்ளது. சிவத்தை நுட்பமாக அணுகினால இயக்கமற்று உயிருள்ளதாகக் காட்சியளிக்கும். அதாவது, இயக்கமில்லாமல் உயிரோடு இருக்கும் வெளியே சிவம். உயிருள்ள இயக்கமாக மாறுகிற வெளி வளியே  சக்தி. உயிருள்ள இயக்கமற்ற வெளியைச் சிவம் என்றும் உயிருள்ள இயக்கங்கள் நிகழும் வெளியை சிவசக்தி என்றும் கொள்ளலாம். ”*வெட்டவெளி* தன்னை மெய்யென்று இருப்போர்க்கு பட்டயம் ஏதுக்கடி, குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி” (குதம்பைச் சித்தர்), “மெய்ஞானப் பாதையிலேறு – சுத்த வேதாந்த *வெட்டவெளி* யினைத் தேறு” (கடுவெளிச் சித்தர்), ” *வெட்டவெளி* தனையன்றி வேறு தெய்வமில்லையே”(சிவவாக்கியர்), ”வெட்டவெளி தன்னில் விளைந்த வெறும்பாழ் திட்டமுடன் கண்டு தெளிவதினி எக்காலம்?”(பத்ரகிரியார்), ”வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி யானேண்டி” (பட்டினத்தார்),

குருவடி

குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் ⁠ தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து ⁠ குருவாக வந்தாயே திரு வாக வந்து உரைத்தாயே  உங்கள் அன்பாலே என் வினைகளை கலைந்தாயே அமுத  மொழியால் செவியில் உபதேசம் அளித்தாயே தெளிவான அறிவு விளக்கை ஏற்றினாயே

ஆன்மா =மனம்

சிவம் என தனியாகஎதுவுமில்லை...தனியாகவெளிப்பட்டிருக்க ஜீவன்எனவும்..மொத்தமாக தோற்றம்பெற்றிருக்கும் போது ஜீவசிவம் எனவும்பெயர்.நமக்கு ஜீவன் என தனியாகஇருப்பது போல தோன்றினாலும் அதுதனியான ஜீவன் இல்லை...அது ஒருசங்கிலி தொடரின் அமைப்பு..நமக்கு நம்தந்தையிடம் இருந்துவருகிறது..அவருக்கு அவரின்தந்தையிடம் இருந்து...இப்படி ஒரு பின்நோக்கிய அதுவும் முன்னோக்கியசங்கிலி தொடர்...இந்த தொடர்முழுமைக்கும் சேர்த்து ஜீவசிவம் எனபெயர்.அது நம்முடன் மட்டுமல்ல,இவ்வுலகத்து ஜீவஜாலங்கள்அனைத்திற்க்குள்ளுக்குள்ளாகபிணைந்திருக்கும் தொடர்...அதைஉள்ளூர உனரும் போது ஜீவசிவ தன்மைவெளிப்படும். Hseija Ed Rian: இந்த புரிதல் என்பதுஅசாத்தியமான சாத்தியபுரிதல்...தனிமையில் இருந்துமுழுமையை உணர்தல்சாத்தியம்....முழுமை முற்றுபெற்றுவிலங்கும் தன்மை அது. அனைத்துஜீவன்களும் ஒரு தொடரே என தெளியசிவமாம் தன்மை விளங்கும் என்பதுஆன்றோர் மதம். சிவம் என தனியாகபின்னமாக நினைத்து வேறுபாடுஉணர்வது அறிவின்குறைபாடு...இருப்பது அகண்ட சிவம்ஒன்றே தான்...முழுபூசணிக்காய்சோற்றில் மறைந்துள்ளது Hseija Ed Rian: இயற்கை உண்மை என்பதுஜீவனுக்கு இடுபெயர்...அதுவேஅருட்பெரும்ஜோதியாம் தனிப்பெரும்கடவுள்...அதுவே உடலான உடலெல்லாம்நிறைந்து அருட்பிரகாசமாகவிரிந்துள்ளது..அதை தனிமையில்உணர மலர்தல் சாத்தியம்..உணராவிடில்ஜீவன் என அறிவு மழுங்கி தன்நினைப்பே வெளிப்பட்டு தான் வேறுஎனும் னவேற்றுமை உருவாகிறது....அந்தவேற்றுமை மறைய ஒருமைதுளிர்க்கிறது. அதனால் நம்முள்இயங்கும் ஜீவனை பார்த்துஅறிவோமாக..அதுவே பரஉடலங்களிலும் இயங்குகிறதுஎன்பதுவே ஒருமைக்கு மூலாதாரம் Hseija Ed Rian: சிவன் என கங்கணம்பூண்டு திருநீறு பூசி கபால மாலைஅணிந்து அங்க எங்கேயோகைலாசத்துல பார்வதி தேவியைபக்கத்துல வெச்சுகிட்டு பூதகனங்கள்நடனமாட யாரும் கிடையாது...எந்த ஒருமனிதன் ஜீவசிவத்தை உணர்ந்துதன்மயமாகிறானே அவனேசிவன்....அதாவது, எவனொருவன்ஜீவனை கண்டு அந்த ஜீவனேஅனைத்திற்க்குள்ளும்பிரகாசித்துகொண்டிருக்கும் ஜீவசிவம்என தெளிவுறுகிறானே அவனுக்குசிவன் என பெயர். அல்லாது பாம்பைகழுத்துல தொங்கவிட்டுகொண்டுஇருக்கும் ஒரு கற்பனைகதாபாத்திரத்திற்க்கு அல்ல...எங்கோகைலாயத்தில் இருக்கிறார் எனகற்பனை கைலாயத்தில் இருப்பவருக்குஅல்ல....இருப்பது ஒன்றே தான்..அதுவேஜீவனாகவும் ஜீவசிவமுமாக இருக்கிறது Hseija Ed Rian: சிவ சிவாகலிகாலம்...மனமே கேட்டு படி...அங்ககைலாயத்துல இருந்துகிட்டு சிவனார்பிரபஞ்சத்தை படைத்தார் என்பதைகற்றுணர் ..மனமே...ஏய்உன்னையத்தான் மனமேஉன்னையத்தான்...ஏன் பிதற்ருகிறாய்என் மனமே ஏன் பிதற்றுகிறாய்...நீயும்மாயசொப்பனத்தின் வடிவழகு கண்டுமலைத்தாயோ...சிதம்பரத்தில்வாதவூரார் கண்ட சிவன்பொற்சிலைக்குள் மாயமாய்மறைந்ததையும் கண்டாயோ..ஏய் மனமேஇன்னும் தெளிவிலையோ உனக்கு..ஏய்அழகிய பல உலகங்கலை உன் சிற்றணுதொகுப்பால் காட்டி வித்தை புரியும்மனமே நீ உனராயோ. Hseija Ed Rian: கண்டதெலாம்அனித்தியமே கேட்டதெலாம் பழுதெ நீஉண்டதெலாம் மலமே என வள்லல்பெருந்தகை பாடி சென்ரது கூடஉணராமல் இருக்கின்றாயோ மனமே...நீதிருந்துவது எப்போது...உன்னையே கட்டிமேய்த்து ஓய்ந்து விட்டேன் மனமே..என்றுநீ உன் கற்பனை கொட்டைக்குளிருந்துமீண்டு வரபோகிராய்...யுகங்கள்எத்தனையாக கற்பனைகட்டிகொண்டாய்...கற்பாந்தங்கள்எத்தனையென கனவுகட்டிகொண்டாய்...இது தான் உன்நித்திய வேலையோ என்மனமே..உணர்வாய் திரும்பி எழு என்மனமே மாய்ந்து விடாதே..கற்பனைசாகரத்துள் மீழ்கிவிடாதே...ஏய்கொள்லிபிசாசே உன்னைத்தான்சொல்லுகிறேன்..ஏன் இப்படிபிதற்றல்?..ஏன் இந்தமயக்கம்..எண்ணிலொகோடி தேவர்கள்ஆமே என எண்ணிலொகோடிதவமிருந்தாயே..இன்னுமா உன் மயக்கம்மாறவில்லை..??விழி மனமே விழி Hseija Ed Rian: மனம் பக்தியில் முதிர்ந்துசித்தியில் சிறந்து விடினும் மயக்கம்மாறா....ஏனெனில் பக்தியெலாம்சித்தியெலாம் மனத்தின் மயக்கமேதாம்....பக்தி முற்றி பழுத்து கனிந்துவிடும் தருணம் வரைக்கும் மனத்தின்மயக்கம் இருக்கும் தொடர்வுறாதுநிற்க்கும். பிற்பாடு தான் மனம்தன்னையே மாய்க்கும் தருனம்வரும்...அப்போது தான் “உன்னுடைய்ம்உன் உயிரையும் எனக்குதந்தாய்..என்னுடலையும்என்னுயிரையும் நீ கொண்டாய்” என்பதுமலரும்..மனம் ரெண்டற்று பக்தனும்பரமனும் ஒன்றாவர்...உடலும் ஒன்றாகிஉயிரும் ஒன்றாகும்....அது கடைசிநிலை...மனம் ரெண்டற்று போனபின்னர்நிகழ்வது....அது வரை கற்பனைதான்...மனத்தின் மாபெரும்கற்பனை....பக்தெனும் பரமனும்இணைந்து விட்ட பிறகு பக்தி என்பதுபயனற்று போய்விடும் seija Ed Rian: மூணாவது உள்ளஇருப்பது “நான்” எனும் ஆன்மா...அதுக்குமனம் ஒரு கோட்டை...கோட்டைக்குள்சிங்காசனத்தில் இருந்து அரசாட்சிநடக்கிறது....”நானே” அரசன் எனும்இறமாப்புடன் Hseija Ed Rian: இது தான் ஒன்றினில்ரெண்டும் ரெண்டினில்ஒன்றும்...வள்லலார் பாடி சென்றது Hseija Ed Rian: ஆன்மாவே ரெண்டாகிமனம் என திரிகிறது..உண்மையில்மனமே ஆன்மா..மனமில்லையெனில்ஆன்மா என தனியாகஒன்றுமில்ல்லை...ஆன்மாவும் மனமும்ரெண்டாக பிளவு பட்டிருப்பதேஆன்மாவும் மனமும் இரண்டு எனபேதலிக்க வைக்கிறது Hseija Ed Rian: பார்ப்பவனும்நானே..அதை பார்க்க வைப்பவனும்நானே..இது தான் நிலை....இது மயக்கம் Hseija Ed Rian: இவை ரெண்டுமாகஇருப்பது மனம் எனும் ஆன்மாவே தான்

மனசு

எல்லோரும் மனசு ஒரு நிலையா இல்லைன்னு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முதல்லே.... மனசை, அது என்னனு கண்டுபிடிச்சா அவர்களுக்கு தெரியும். உண்மைதான். தியானத்துக்கு உக்காந்தா நினைப்பு டஜன் கணக்குலே வர்றது.  மனசு நினைப்பு மூட்டை தானே! நினைப்புகளை ஒழிச்சுக் கட்டறதுதான் முயற்சி பலிக்க மாட்டேங்குது. ஒருத்தன் எந்த வழியிலேயோ, ஆத்மாவிலே ஓய்ஞ்சு இருந்தா சரிதான்.  ஆத்மா விசாரத்திலே முடியலேன்னா... ஜபமோ, தியானமோ பண்ணனும்.... யானை துதிக்கைக்கு சங்கிலியைப் பிடிசுக்கக் கொடுக்கிறது மாதிரிதான்.  ஜபமோ, தியானமோ பண்ணினா பிற நினைப்புகள் போகும்.  ஏகாக்கிரம் ஏற்படும். மனசு அமைதி அடையும்.  அதுக்காக, பெரிய போராட்டத்துக்கு அப்புறம்தான் அமைதி வரும்னு அர்த்தம் இல்லை.  அமைதி எப்பவும் இருக்கு. நினைப்பை போக்கிறதுக்குதான் இந்தப் போராட்டம் எல்லாம். மாடு பிறர் கொல்லையிலே போய் மேயறது.  மாட்டை இழுத்து வந்து கொட்டத்திலே கட்டினாலும் ... அவிழ்த்துக் கொண்டு ஓடிடும்.  இப்போ... நல்ல புல்லைக் கொட்டத்திலேயே கொடுத்தோம்னா... முதல்லே ஒரு வாய் சாப்பிடும்.. பழைய பழக்கத்தினாலே, அடுத்த கொல்லைக்கு ஓடிடும்.  அடுத்த நாள் இரண்டு வாய் சாப்பிடும்.. பழகப் பழக நிறைய புல்லைச் சாப்பிடும்.  கடைசிலே பிறர் கொல்லைக்கு ஓடறதை விட்டுடும்.  அந்தப் பழக்கம் சுத்தமா போச்சுனா... அதைக் கட்டத் தேவையில்லை...  அவிழ்த்து விட்டுடலாம்.  பக்கத்துக் கொல்லைக்குப் போகாது.  கொட்டதிலே அதை அடிச்சாக்கூட கொட்டத்தை விட்டுப் போகாது. இப்படிதான் மனசும், வாசனைகள் இருக்கற வரைக்கும் ஒரு நிலையிலே இருக்காது. வாசனை எல்லாம் வெளியே வரணும்.  வந்துதான் அழியும். மனம்னா என்னனு பாத்தா.... நினைப்பு எல்லாம் போய் அது ஆத்மான்னே முடிஞ்சிடும்.  எண்ணங்களின் மொத்த தொகுதியைத் தான் மனம்கறோம். எண்ணங்கள் ஆத்மாவிலே இருந்துதான் வர்றதுன்னு தெரிஞ்சு ... ஆத்மாவிலே இருந்தா மனம் மறைஞ்சுடும்.  அமைதி நிலைச்சிடும்... நினைக்கிறது கஷ்டமாகியிருக்கும்... இப்போ நினைப்பு இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கோ ... அப்படி அப்போ நினைக்கிறது கஷ்டமாயிருக்கும் ... இங்கே மனம்தான் மாடு; நினைப்புகள் தான் அடுத்தவா கொல்லை; கொட்டம் தான் நம்மளோட சொருபம். தூங்கறவனை வேலையைப் பாருன்னு எழுப்பினா எப்படி இருக்கும்? தூக்க சுகத்தை வேலைக்காக தியாகம் பண்ண சிரமாமாயிருக்கும்.  அப்படித்தான் மனமற்ற நம்மளோட நிலை. சுகஸ்வருபம்.  அதை விட்டுட்டு சிந்திச்சுக்கொண்டு துக்கப்படறது ரொம்ப கஷ்டம்.  நம்மளோட சொருபத்தோட ஆனந்தத்தைத் தொந்தரவு பண்ணவே சம்மதிக்க மாட்டோம். மனமற்ற நிலையிலே நிக்கணும்னா..... பெரிய போராட்டந்தான்.  போராடித்தான் நம்மளோட சொருபத்தைப் பெற வேண்டியதிருக்கு.  போராட்டத்தை ஜெயிச்சு லக்ஷியத்தை அடைஞ்சா, எதிரி ஆத்மாவிலேயே அடங்கி இல்லாம போயிடுவான்.  மனந்தான் எதிரி.  நினைப்புதான் எதிரி.  நினைவுகள் தான் உலகம்.  நினைப்பு இல்லேன்னா... உலகமும் இல்லை... கடவுள் இல்லை.  ஆத்மா மட்டும் தனியிருப்பா விளங்கும்.

மகா மந்திரம்

===== மகா மந்திரம் ====== தமிழ் தெரியாத ஒருவர் சீவகாருண்யத்தை கடைபிடிக்கிறார் என கொள்ளவோம்.. அவரும் கூட தமிழில் எழுதப்பட்டிருக்கும் “அருட் பெரும் ஜோதி.....” என சொல்லவேண்டுமா? அல்லது அவருடைய சொந்த மொழியில் சொல்ல வேண்டுமா இந்த மஹா மந்திரத்தை?...எப்படி தோன்றுகிறது உங்களுக்கு? (657) கற்பம் பலபல கழியினு மழியாப் பொற்புற வளித்த புனிதமந் திரமே (658) அகரமு முகரமு மழியாச் சிகரமும் வகரமு மாகிய வாய்மைமந் திரமே (656) வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து நான்பெற வளித்த நாதமந் திரமே இதுவே நாதாந்த திறவுகோல்.... நாதமந்திரமானது நாதாந்தத்திற்க்கு வழிகோலும்... இதுவே திருமூலர் கூறும் கருத்து... "காலை எழுந்து கருத்தறிந்தோதில் ஞாலம் அறிய நரை திரை மாறுமே” ....அந்த கருத்தே இதுவாம்... இது ஏனையோர் ஜெபிப்பது போன்றதுவே.. "பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே....” எனவர்கள் முறயிடுவர்... அதேதான் உங்கள் முறையீடும்.... குரு இல்லாமல் அனுபவம் என்பது வராது.... ஒரு சிறு விளக்கை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும், அதை விட கொஞ்சம் பெரிய தீ பந்தத்தை நோக்கி பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது, கார்த்திகை சொக்கப்பனையை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும்... ஒரு காடே பற்றி எரியும் போது அதை பார்த்து அருட்பெரும் ஜொதீ என்பதும்... இந்த உலகத்தயே இரயாக்ககூடிய தீப்பிழம்பான சூரியனை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது ஒன்றாகுமா? அப்போ உண்மையான ஜோதியை வணங்க வேண்டுமா.. அல்லது பாவிக்கப்படும் ஒரு ஜோதியை வணங்க வேண்டுமா... அதற்க்கு “பக்தி” எனும் ஒரு புனை பெயருடன்?.... பொய்யான ஒன்று பக்தியினால் மெய்யாகுமா... மெய்யான ஜோதியை வணங்குவது தானே முறையும் அழகும்? அந்த நாதாந்த மந்திரத்தை பெற்று கொள்வது தானே விவேகமான செயல்?? மந்திரங்கள் உச்சரிப்பதனால் மூடத்துவம் உண்டாகும் என்று சொன்னவர் வள்ளலார்.... அவரே பிற்பாடு இப்படி ஒரு மந்திரத்தை சொன்னார் எனில் அதன் தன்மை எதுவோ.... மட்டுமன்றி ஒவ்வொரு மொழியினரும் இதை கற்று கொள்ளவும் வேண்டுமே... ஆனால் "நாத மந்திரைத்தை" அறியும் நாள் எந்நாளோ..??

சன்மார்க்கத்தில் உருவ வழிபாடு கொள்லலாமா?

== சன்மார்க்கத்தில் உருவ வழிபாடு கொள்லலாமா? === உருவ வழிபாடு கொள்ளுவோருக்கு ஒரு எச்சரிக்கை........... நீங்கள் எத்தனை பேர் “அலகை” என்பதனை தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்?... "அலகை"  என்பது என்ன?.. வள்ளலார் “அலகை” என்பதனை குறிப்பிட்டுள்ளார்கள், அது என்ன என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...ப்ளீஸ். ஐயாமார்களே... மனிதன் தவிர ஏனைய ஜீவஜெந்துக்கள் செத்து போனால் நரகத்துக்கு போகுமாண்னு யாருக்காவது ஒரு பதில் இருக்குதா?.. அல்லது சொர்க்கத்துக்கு போகுமா?...நீங்க எல்லாம் சன்மார்க்கிகள் தானே?...அதுக்கு அப்புறம் இந்த விக்கிரக ஆராதனைகாரர்கள் எங்க போவாங்க என சொல்லுகிறேன் “அலகை” என்பதை தெரிந்தவர்கள் கொஞ்சம் பெர்தான் இருக்கிறார்கள்... தெரியாதவர்கள் தான் உருவ வழிபாடு செய்கிறார்கள். பெரும் ஆண்டவர் ”மனிதர்களுக்கு மட்டும்”கொடுக்கும் இரு பொருள்களே “வித்தியா தத்துவம்” எனும் அமானிதம், ரெண்டாவது என்பது “அலகை”... வித்யா தத்துவம் விளங்கினவனுக்கு அலகை இருக்காது... விளங்காதவன் அலகை பொருந்தும்.... உயிர் உள்ளவனுக்கு கொடுக்கப்படுவது வித்தியா தத்துவம், எனில் செத்தவனுக்கு கொடுக்கபடுவது “அலகை”..இதை ஆண்டவனால் அல்லாது மற்றமுடியாது.... இதுவே “செத்தாரை எழுப்புதல்”. வித்தியா தத்துவம் விளங்காத ஒருவனும் அலகையை தவிர்க்க முடியவே முடியாது. அலகை பொருந்தினவன் எக்கோடி காலத்துக்கும் பிறக்கவே மாட்டான்.. அவன் கதை அவ்வளவு தான்..... இது தான் அலகையின் ரகசியம். வித்தியா தத்துவம் பொருந்தினவன் மீண்டும் பிறப்பான்... மேல்நிலை அறிவுடன். எத்தனை பெரிய அந்தஸ்தை உடையவனாலும் சரி, எத்தனை பெரிய விஞ்ஞானியானாலும் சரி. எத்தனை பெரிய ஆன்மீகவாதியானாலும் சரி, எத்தனை பெரிய அரசனானாலும் சரி, அலகையை தவிர்க்க வித்தியா தத்துவம் பொருந்துவது அவசியம். அல்லாவிடில் அலகை தேகம் பொருந்தியே தீரும். சன்மார்க்கி என சொல்லிகொண்டாலும் ஒருவன் உருவத்தை வழிபடுவானாகில் அவன் அலகையை அன்றி எதை பொருந்த முடியும்?... பொருந்தியே தீரும்.அதனாலேஎயே வள்ளலார் தன் உருவம் உருவாக்கபட்டது கண்டவுடனேயே அதை தகர்த்தெறிந்தார்.... ஆனால் சன்மார்க்கம் என சொல்லிகொண்டு அலகையை பூஜிக்கின்றனர். இறைவனின் சொரூபத்தை அன்றி வேறெந்த சொரூபத்தை பூஜிக்கிறவனும் அலகையை தான் பூஜிக்கிறான் என அறிந்துகொள்ளுவதில்லை. இறைவனின் சொருபமோ தயவே வடிவமான அருள்.... அதை சடமான உருவத்தில் காணமுற்படுபவன் அலகையின் தீவிர பக்தன் தான் என்பதில் ஐயம் வேண்டாம்.... விஜயகுமார் ஐயாவிடம் கேட்டு பாருங்கள் மேலும் விளக்குவார். பஞ்சபூத்த்தையும் ஏவலாக்கி கொண்டவர்களுக்கு மரணம் ஏது?. அருட்பெருஞ்சோதி என்ற மெய்பொருளை உணர்ந்து தன்தேகத்தை காயசித்தி செய்து அதன்மூலம் பனிரெண்டு வருடம் யோகம் முயன்று அதன மூலம் சொரூப சித்தியை அடைந்து இறையோடு இறை ஆகன்றனர். அந்த யோகத்தை கை கொள்ளவே சமாதி நிலையை மேற்கொள்கின்றனர். யோக சித்தியின் முடிவில் பஞ்சபூதங்களில் ஒன்றை தேர்வு செய்து உருவத்தை அருவமாக்கி சொரூப யிலையை அடைகின்றனர். நாம் சிலாகித்து பேசும் யோகம் பிரணாயாம்ம இது போன்ற நிலையில் நம் உடலில் நடப்பதில்லை. அதை தான் ஞானிகள் உளவு என்கின்றனர். அது எங்கே நடக்கிறது என்பதே நாம் அறிய வேண்டிய உளவு அந்த வாசி ஒடுங்கும் இடமான ஆதம்பாதத்தை அறியா தொழுகை ஆற்றில் கரைத்த புளி என ஞானிகள் கூறுவதும் இதனாலே. வாசி எனப்படும் அது அமுதமாய் உள்ளது என உணராமல் மோசம் போனோர் கோடி என சிவவாக்கியர் குறிப்பிடும் அந்த வாசியே அருட்பெருஞ்சோதி. இதை தான் வள்ளுவர் பெருந்தகையோ "அறிவுடயார் ஆவது அறிவர் அறிவிளார் அஃதறி கல்லாதார்" எள உணர்த்தினார் ஆ என்பது என்னவென்றும் அஃதறி எளப்படுவது என்னவென்று உணர்வதே ஞானம். சிவலிங்க ரூபத்தை விளக்கும் போது "தாயும் தந்தையும் மருவியது போலவே காணும் அந்த விந்து நாதம் என மனதில் நிலை நாட்டல் நலம் ஒரு சின்ன திருத்தல், லிங்கமானது ஆவுடையில் சேரும் நிலையில் இருப்பதில்லை.... ஆவுடையில் இருந்து வெளிப்படு நிலையில் இருக்கும்...அதாவது லிங்கத்தின் முகப்பு வெளிபட்டுவரும் நிலை..உட்செல்லும் நிலை இல்லை என்பதை கவனிக்கவும் வித்தியா தத்துவத்தை தான் அறிவு என்கின்றனர்..... ஆனால் அந்த அறிவு நமக்கு காரியப்படாமல் உள்ளது , அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கிறோம்... அந்த அறிவினாலேயே ஆன்மாவை அறியகூடும்.. அல்லாது மனமோ, பிரானனோ ஆன்மாவை சென்று அடையாது... அதனாலேயே அறிவு விளக்கம் பெறவேண்டும் என வள்ளலாரும் சொல்லுகின்றார்... அதற்காகவே பல பயிற்ச்சிகளும் உள்ளது... ஆனால் விளக்கம் பெறுவதற்க்கு தயவே உத்தம வழி... தயவு வர்த்திக்க அறிவு விளக்கம் உண்டாகும்.... இது பொருந்தினவன் அலகையை கடப்பான்... வள்ளலார் “அற்ப அறிவு” உடைய காலத்தில் நடந்தது வேறு... "பெரிய அறிவு” கொண்டபோது நடந்தவை வேறு... அதை அவரே ஒத்துகொள்கிறார் அல்லவா? ஆதலால் பெரிய அறிவு கொள்ளுதலே முக்கியம்,,அதை விடுத்து சிறிய அறிவினால் சிறிய நிலைகளின் தன்மைகளை மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் என நினைக்கிறேன்... அந்த வித்தியா தத்துவமெனும் அறிவே விளக்கு... விளக்கு என்றால் மறைந்திருப்பதை, அஞ்ஞானமாகிய பெரு இருளை அகற்றும் பொருள்.... அப்படி ஆன்ம விளக்கம் உண்டாகும் என கணிப்பு உருவ வழிபாடில் இருந்து வந்தார் என்பதற்க்கு அதையே கொண்டு நடப்பது எதற்க்கு?... மேல் நிலைகளில் ஏற ஏணி அத்தியாவசியம்... அதற்க்காக மேல் நிலை அடைந்த பிற்பாடும் யாராவது ஏணியையும் சுமந்துகொண்டு திரிவார்களா என்ன? அந்த ஏணிக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு எங்காவது வைத்துவிடுங்கள்.. அதையே சுமந்து திரிந்தால் தோள்களுக்கு கொடுையான வலிகள் ஏற்படும்.

குருடர்கள் ஞானம் பெற முடியுமா

குருடர்கள் ஞானம் பெற முடியுமா? நம் உயிரை பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது. இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது. இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை. எதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே. ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம். என பல சற்குருமார்களும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அதில் எந்தளவுக்கு ஞானம் இருக்கிறது என ஆராய்வது அவசியம். அல்லாவிட்டால் துர்மரணம் அடைந்து விடுவது நிச்சயம். கண்மணி என்பது பார்வை செயல்படுமிடம் என்பது தெரியும் . காது போன்ற ஏனைய இந்திரியங்கள் எவ்வாறு மனதுக்கு செயல் ஆற்ற உதவுகிறதோ அவ்வண்ணமே கண்ணும் செயல் படுகிறது. ஐந்து இந்திரியங்களின் மூலம் அறிவானது செயல்பட்டு நமக்கு உலக நிகழ்வுகளை அறிவுக்கு கொண்டு வருகிறது.ஒளி என்பதோ ஓசை என்பதோ கண்ணிலோ காதிலோ இருப்பது அல்ல. அது இந்திரியங்களின் மூலம் அறியப்படுவதாகும். தூங்கி கிடக்கும் போது கண்ணில் ஒளி இருக்காது, ஏனெனில் அப்போது அறிவானது கண்களினூடே செயல்படாது.அல்லாது கண்மணியில் தான் உயிர் இருக்கிறது என்பது முட்டாள் தனமான மூட நம்பிக்கை. அதினால் எந்தவொரு பயனும் நிகழ்ந்து விடப்பொவதில்லை என்பதை மனதில் கொள்வது நலம். முதலில் கண்மணி மத்தியில் ஊசிமுனை அ்ளவு ஒரு துவாரம் இல்லை என்பதனை தெளிந்து கொள்ளுங்கள்...ஒளி ஊடுரும் தன்மையினாலான ஒரு அமைப்பே உள்ளது...சந்தேகம் இருந்தால் ஒரு கண் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கவும்...அந்த அமைப்பானது விரியவும் சுருங்கவும் கூடிய ட்தன்மையில் உள்ளது. கண்ணாடியில் எப்படி ஒளி ஊடுருவுமோ அதே படி இங்கும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது..... திரைகள் என்பவை ஆன்மாவை மூடி இருக்கும் தன்மை உடையது...அது கண்மண் தவத்தினால் கண்ணீர் பெருக்கினால் உருகும் தன்மை கொண்டது இல்லை. சுக்கிலத்தில் இருக்கும் போதே திரையானது இருக்கும்...அது கண்மணியில் வருவது கிடையாது. ஒரு மனிதன் வினை திரை அகலாது செத்து போனால் அவன் கூட இந்த கண்மணியும் கூடவே செல்லாது அல்லவா?..அப்படி இருக்கும் போது அவனுடைய வினைதிரையானது எங்கிருக்கும் என ஆலோசிப்பது நலம்...ஆன்ம ஸ்தானம் என்பது உடம்பை பற்றியதி இல்லை, அதாவது தூல பொருள் இல்லை...உடம்பாலது தூலம்,, மனம் சூட்சுமம், அதையும் கடந்தது ஆன்மா...அது தூலமான உடம்பில் ஒரு இடத்தில் இருப்பது இல்லை...அப்படி இருக்காது , ஏனெனில் சூட்சுமமானது தூலத்தில் அடையாளமாக இருக்காது...தூலம் என்றால் அதற்க்கு நிறை இருக்கும், கொள்ளளவு எனும் இடம் இருக்கும்...அப்படி சொல்லப்படும் ஒன்று பருப்பொருள் எனப்பெடும்...ஆன்மா பருப்பொருள் இல்லை..அதற்க்கு எடை இல்லை,..இடம் இல்லை...அப்படி இருக்க எப்படி அது தூலத்தில் இருக்கும் என சிந்திப்பது நலம்....தேவை இருந்தால் இதற்க்கும் ஆழமாக விவாதிகலாம்.... கண் தானம் பண்னுவது தெரியுமில்லையா...செத்தவர் கண்மணியில் இருக்கும் இந்த ஒளி ஊடுருவும் அமைப்பையே அறுவை சிகிட்சையின் மூலம் எடுத்து வேறொருவருக்கு தானம்மாக செய்கிறார்கள்...அப்போது இந்த கண்மணியில் இருக்கும் வினையானது கந்தானம் பெற்றவருக்கு போய் விடுமா என்பதை ஆழமாக விசாரியுங்கள்...அப்போது கண்மணி தவத்தின் பொய் தோற்றம் புலப்பெடும் மட்டுமல்ல கண்மணி தவத்தினால் எவனொருவனும் கண்மணியினூடே உள்ளே புகுந்து போகமுடியாது. எனெனில் புகுந்து செல்லவேண்டுமெனில் முதலில் அவன் கண்மணியின் வெளியில் இருக்கவேண்டும்.ஆனால் அவன் இருப்பதொ உள் எனப்பெடும் ஆன்மீக ரகசியஸ்தானத்தில் தான். அதையே இருதயம் என்பார்கள். உள்ளெ இருப்பவனாகிய அவன் எப்படி வெளியில் இருந்து கண்மணி வழியே உட்புகுவான்? அப்படி புகவேண்டுமெனில் அவன் ரெண்டு மணி வழியாகவும் ஏக காலத்தில் உட்செல்வானா?.அப்படி செல்லமுடியுமா என்பதை சற்று அறிவுடையவர்கள் அறிந்து கொள்ளவேண்டாமா?

எந்த வித்தை மெய்யானது

===எந்த வித்தை மெய்யானது?=== ஆன்மீகவாதிகள் பொதுவாக பார்த்தால் எதையாவது ஒரு சம்பிரதாயத்தை முன்னிறுத்தியே முன்னேறுவதை பார்க்கிறோம், அந்த சம்பிரதாயம் தான் பெரிய வித்தைண்ணு சொல்லிகிட்டு இருப்பதையும் பார்த்திருக்கிறோம்.பக்தியில் திளைக்கிறவன் சிவன் தான் பெரிசு அல்லது விஷ்ணு தான் பெருசு அல்லது அம்மன் தான் பெரிசுண்ணு கோஷம் போட்டுகிட்டு இருப்பாங்க.மனம் அவங்களை மயக்கி வெச்சிருக்கும்.ஒருவித போதை போன்றது இது,அவர்களின் இஷ்ட்ட தெய்வ சங்கல்பத்தால் போதை கொண்டு இருப்பார்கள், இதையே பக்தி என்கிறோம்.இதில் தான் மிதம் தீவிரம் என இருவகை.இந்த பிரிவு எல்லா மதங்களிலும் உண்டு.ஒருத்தன் சண்டைக்கு போவான் ,மற்றவன் தான் உண்டு தன்பாடு உண்டு என இருப்பார்கள்.இவர்களுக்கு ஆராதனை செபம் தோத்திரம் இவையே போதும், இவற்றில் அடிமுட்டாளாக இருப்பான், ஞானம் சொன்னாலும் காதுக்கு ஏறாது.இப்படியானவர்களை சமீபிக்காமல் இருப்பது நலம். இரண்டாவது குரூப்பு என்பது சற்று உயர்ந்தவர்கள், கொஞ்சம் கேள்விஞானம் கொண்டவர்கள்.பலவிதமான ஆன்மீக கேள்விகளை தன்னகத்தே கொண்டவர்கள்,ஆனாலும் ஞானம் என்ன என விளங்கி கொள்ள முடியாதவர்கள்,இவர்களிடமும் பக்தி நிறைந்திருக்கும்,ஆனால் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள்.அரைவேக்காடுகள் என சொல்லலாம்.இவர்களை சொல்லி புரியவைப்பது கடினம்.அதனால் இவர்களிடமும் சமீபிக்காமல் இருப்பது நலம். மூன்றாவது வகையறா என்பது ஏராளம் படித்தவன்,இவன் ஒன்றையும் ஆழமாக செல்லமாட்டான், எல்லாத்தையும் படிப்பான்,பெரிய குப்பைதொட்டியாக இருப்பான்.எல்லா குருமார்கள் கிட்டயும் போவான்,எல்லா சடங்கு சம்பிரதாயம் நம்பிக்கை என எல்லாம் இருக்கும்,ஆனால் தெளிவு இருக்காது.இவனையும் சமீபிக்காமல் இருப்பது நலம். நான்காவது வகை போலிகுரு.ஒண்ணும் தெரியாது,நெறைய வித்தை வகையறாக்கள் இவனிடம் இருக்கும்,எல்லாத்தையும் கூவி கூவி அழைத்து வார் வாரி வித்தைகள் வழங்குவான்.எதுக்கு கொடுக்குறோம், யாருக்கு கொடுக்கிறோம் என கூட அவனுக்கே தெரியாது, ஆனால் குருவாக இருக்க ஆசைபட்டு இப்படியெல்லாம் செய்துகிட்டு இருப்பான்,பனத்துக்கு ஆசைபடுகிரவனும் உண்டு, பணம் வாங்காமலேயே கிடைக்கிறவங்கலை எல்லாம் குட்டிசுவராக்கி கிட்டு இருப்பான். இவனும் சமீபிக்க தகுதியற்றவன். ஐந்தவது வகையானவன் எல்லாம் கற்றவனாக இருந்தாலும் ஒன்றும் புரியாதவனாக இருப்பான், இவனிடம் இருக்கும் அருமையான குணம் என்பது தனக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை உணர்ந்திருப்பான்.அதனால் தன்னடக்கம் இவனிடம் இருக்கும்,ஆனாலும் குருமார்கள் முன் மண்டியிட இவன் ஆணவம் இடம் கொடுக்காது.ஆகையினால் இவன் நுணுக்கங்களை அறியாமலேயே போய்விடுவான்.இவனும் சமீபிக்க தகுதி அற்றவன். ஆறாவது வகையானவன் கற்றதெல்லாம் மெய்யல்ல என உணர்வு கொண்டவன், அனைத்து வேத ஆகம சாத்திரங்களுக்கும் மேலாக அறிந்து கொள்ள வேண்டிய அறிவு இருக்கிறது என புரிந்து கொண்டவன்,ஆனால் ஆன்ம விளக்கம் இன்றி அலைந்து கொண்டிருப்பான். எதை தான் இவனிடம் போய் சொன்னாலும் ஏற்றுகொள்ளமாட்டான்,அலைவதே அவன் கர்மம்.இவனையும் சமீபிக்க தகுந்தவன் அல்ல. ஏழாவது வருகிறவன்,சாதனையாளன்.யராவது சொல்லியோ,அல்லது எங்கிருந்தாவது கேட்டோ,அல்லது எதாவது நூல்கலை கிளறியோ கொண்ட அறிவால் கடினமான சாதனை செய்பவன்,தீவிர வைராக்கியம் கொண்டவனாக இருப்பான், ஆனால் தான் செய்வதை மனைவிக்கு கூட சொல்லமாட்டான்,அப்படி ரகசியம் காப்பவன்.அவன் செய்ய்ம் வித்தையே பெரிசு எனும் எண்ணம் இவனுக்குள் இருப்பதால் மற்றவர்களை பொருட்படுத்தமாட்டான்.எப்போதும் தனிமையில் இருப்பான்,சாதனையில் கண்ணும் கருத்துமாக இருப்பான்.இவனுக்கும் ஆன்ம விளக்கம் இருக்காது,ஆகையினால் சமீபிக்க தகுந்தவன் அல்ல. எட்டாவது வருகிறவன் ஞானமுட்டாள் என வகைபடுத்தலாம்.தான் செய்யும் வித்தை பரமோன்னதமானது,வித்தையினால் சொர்க்கம் போகலாம், பரமண்டலத்தில் ஏறிவிடுவேன் என பெருமையினால் இருப்பவன்.சிறந்த சாதனையாளனாக இருந்தாலும் இவன் தேடுதலை நிறுத்திகொண்டவனாகையினால் இவனுக்கும் ஞான விளக்கம் இருக்காது.எது சொன்னாலும் உறைக்காது,சாகும் தருவாயில் கூட உபதேசம் ஏற்றுகொள்ள தயங்குவான்.அவன் வித்தையே பரமமானது என முட்டாள்தனமாக இருப்பவன்.இவனையும் சமீபிக்காமல் இருப்பது நலம். ஒன்பதாவது வருபவன் வித்தையை நம்புவான் ஆனால் குருவை நம்பமாட்டான். வித்தை மட்டும் போது ஆன்மவிளக்கம் உண்டாகும் என இருப்பவன்.வித்தையின் நுணுக்கம் ஆழ்ந்த அனுபவம் கொண்ட குருவிடம் இருக்கின்றது என விளங்கிகொள்ள மாட்டான்.குருவை மனுஷதூலம் என கருதி மரியாதை செய்யமாட்டான்.குருவிடம் மறைவான ஞானவிளக்கம் குடிகொள்கின்றது என புரிந்துகொள்ளாமல் வித்தையை மட்டும் வாங்கிகொண்டு ஓடிவிடுவான்.இவனும் கதைக்கு ஆகாதவன். ===(தொடரும்)

பெரிய வித்தை

உலகத்தில் பெரிய வித்தை என்பது நான் பிரம்மாண்டமான ஏதோ வித்தையை பண்ணி கொண்டிருக்கிரேன், மற்று எல்லா வித்தைகளும் என் வித்தைக்கு மட்டமானது எனும் ’வித்தை பெருமை’, அது எல்லா வித்தை பண்ணுபவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம். யார் ஒருவருக்கு இப்படியான வித்தை கர்வம் இருக்கிரதோ நிச்சயம் அவர்கள் தனக்கு தானே வேலி கட்டி கொண்டு தன்னந்தனியாக கம்பு சுற்றுபவர்கலே ஆம். அவர்கள் மற்றவர்களை, ஏனைய வித்தைகளை, சம்பிரதாயங்களை அறிந்து கொள்லாமலேயே அவை அனைத்தும் தவறு என கங்கணம் கொண்டுவிடுவர். அவர்கள் தன்னை சுற்றி வேலி கட்டி உட்கார்ந்து விடுவதனால் அவர்கள் அந்த வேலிக்கு வெளியே வந்து வெளியில் உலாவி வரும் வித்தைகள் என்னன்ன என்பதை கற்க்க இயலாமல் தனித்து விடுவர். இதன் பரிணாமம் தான் "தன் வித்தை தான் பிரம்மாண்டம்", இதுவே பெரிய வித்தை எனும் தற்பெருமை. இதை வெற்றி கொள்வதே பெரிய வித்தைகளுக்கு எல்லாம் பெரிய வித்தை.

வள்ளலார் அருளிய நித்திய கரும விதி இன்றைய சிந்தனைக்கு*

*வள்ளலார் அருளிய நித்திய கரும விதி இன்றைய சிந்தனைக்கு* 1) எப்போதும் பயத்தோடிருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கப்படாது. எப்போதும் மனவுற்சாகத்தோடிருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல்(BAD WORD) முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல்(ARGUMENT), சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாகச் செலவாகாமற்படி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும். 2)இந்தத் தேகத்தில் புருவமத்தியில், நமது ஆன்ம அறிவென்கிற கற்பூரத்தில், கடவுள் அருளென்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப் பார்த்து, அதில் பழகிப் பழகிக் கடவுளிடத்தே உண்மையாகிய அன்பையும், ஜீவர்களிடத்தே உண்மையாகிய காருணியத்தையும் இடைவிடாமல் வைத்து அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி என்னும் மகா மந்தரம் ஞாபகஞ்செய்தல் வேண்டும். *Hseija Ed Rian:* அப்போ பயம் பூஜ்ஜியம் என வள்ளலார் கூறுவதின் அர்த்தம் என்ன? *Hseija Ed Rian:* பிராணவாயு எந்தவிதத்திலும் செலவாகாமல் இருக்கவேண்டுமெனில் எப்போது பிரானவாயுவை அதிகமாக பிரயானம் செய்யாமல் வைத்திருக்கவேண்டும், அப்படி வைத்திருக்க பிராணனை கட்டுக்குள் வைத்திருக்கும் கலை பயிலவேண்டும் அல்லவா? *Pothigaipriyan Vallalar:* பயம் சுத்தமாக இருக்க கூடாது என்பதே பயம் பூஜ்யம் என்கிறார் நண்பரே இது இச்சிறியேன் சிற்றிவுக்கு விளங்கியது ,மேலும் விளக்கம் இருந்தால் கூறலாம் .நன்றி வணக்கம் *Hseija Ed Rian:* விசேடமாக பார்க்கில், வல்லலார் சொல்வது அப்படி “ஜாக்கிரதையாக பழகுதல் வேண்டும்”...அப்படியாயின் அது ஒரு பழக்கம் தானே அல்லவா?...சகஜமானது இல்லை....பிராணனை பழகவேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா?... *Hseija Ed Rian:* “பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கபடாது “ என்கிறார்...அப்படியாயின் கொஞ்சம் பயம் வேண்டும் என்கிறார் அல்லவா?...இது ரெண்டு விதமான பயம் என தோன்றுகிறதல்லவா...? *Pothigaipriyan Vallalar:* பிராணன் அதிக செலவு செய்ய கூடாது என்கிறார் ,ஆனால் அது கலை இயக்கம் என்பதை அவர் கூறியதாக தெரியவில்லை ,ஏன் என்றால் பிராணயாம பயிற்சியை அவர் எந்த இடத்திலும் வலியுறுத்தியதாக தெரிய வில்லை ,ஆதாரம் இருந்தால் கூறுங்கள் .தெரிந்து கொள்ளலாம் *Hseija Ed Rian:* மட்டுமல்ல, புருவமத்தியில் நாடி வழி ஏறுவதும் இறங்குவதும் பிராணாயாமமே....சூட்ச்சுமமானது....தூல பிராணன் அல்ல... *Hseija Ed Rian:* அப்படியாயின், சன்மார்க்க கொடி கட்டிக்கொண்டு அவர் உரையாற்றியபோது, சித்தர்கள் மறைத்த உண்மையை குறிப்பிட்டு , மேலும் புருவமத்தியின் உள் நாடிகளை நுணுக்கமாக வெளிப்படுத்தி அதி ஏறவும் இறங்கவும் அருள் புரிகிறாரே...அது எதற்க்கு? *Hseija Ed Rian:* கொடிகட்டிக்கொண்டது சன்மார்க்கம் பூரனப்படு அவர் கடிசி காலத்தில் வெளிப்படுத்தியதே...அல்லாமல் அவர் சைவ சமயத்தில் பற்றுதல் கொண்டிருந்தபோது அல்ல என்பதையும் கருத்தில் கொள்வது நலம்... *Hseija Ed Rian:* அதனாலேயே அந்த உபதேசம் “பேருபதேசம்” எனப்படுகிறது....பெரிய ஒரு விஷயம் சொல்ல்ப்பட்டிருக்கிறது.அதனாலேயே பேருபதேசம்...அல்லாது நிறைய கருத்துக்களை கூறியதனால் அல்ல... *Pothigaipriyan Vallalar:* அது அனுபவ கண் விளங்கும் என்கிறார் நண்பரே ,இந்த சிறியேனுக்கு அனுபவம் இன்னும் இறைவன் அளிக்கவில்லை ,தங்களுக்கு அனுபவம் இருந்தால் கூறுங்களேன் ! *Hseija Ed Rian:* நான் இங்கு விசாரிப்பது மேலும் மேலும் நாம் சத்விசாரத்தில் முன்னேறவேண்டும் எனுமவாலால் *Lalitha Arutperum Jothi:* அப்போ இங்கே வள்ளலார் வாசியை பற்றி கூறுகிறாரா? *Hseija Ed Rian:* வள்ளலார் வாசியை பற்றி கூறினார் என யாரும் கூறவில்லையே....”பிராணவாயுவை அதிகம் செலவாகாமல் படி ஜாக்கிரதையாக பழகுதல் வேண்டும்” என்று தான் வள்ளலார் கூறுகிரார்....அப்படி பழகுவது வாசி அல்ல....சற்று விளக்குகிறேன் புரிந்து கொள்வது நலம்..... *Hseija Ed Rian:* அதாவது, அருட்பெரும் ஜோதியெனும் மகாமந்திரத்தை மெல்லன தோத்திரம் செய்தல் வேண்டும்....அதே மந்திரத்தை நாம் 60 டெசிபெல் அளவுக்கு மேலெயும் உரக்க தோத்திரம் செய்யலாம்....அப்படி செய்வதினால் பிராணவாயு நஷ்ட்டம் செய்கிறது...அப்படி செய்யாது அங்கு ஒரு “மெல்லன” எனும் உபயோகம் உருவாக்கப்பட்டுள்ளது....அது போல பிராணவாயுவை அதிகம் நஷ்டம் செய்யாது ஜாக்கிரதையாக பழகும் முறை உண்டு....அது குரு முறை...ஆனால் தக்க முறையில் பெற்று கொள்ல தடையில்லை... *Hseija Ed Rian:* அந்த முறையை வாசி யோகம் என தவறாக உருத்திரித்து கொள்ளவேண்டாம்....”மெல்லன” தோத்தரித்தலே ஒரு பிராண பழக்கமே...அது கொஞ்ச கொஞ்சமாக நீண்ட மூச்சை கொடுக்கும்...முதலில் தோத்திரம் செய்பவர்களுக்கு மூச்சு உள்வாங்கி வலிக்கும்...போக பொக மூச்சு நடை குறையும் ...நீண்ட மூச்சு உருவாகும்....ஓடிக்கொண்டு தோத்திரம் செய்தால் கூட மூச்சு வாங்காது...அப்படி மூசு பரிணமிக்கும்....தோத்திரத்தின் இனிமை அலாதியாகும்.... *Hseija Ed Rian:* எங்க ஊரிலே ஒரு பழக்கம் உண்டு...சிவாலய ஓட்டம் என்பார்கள்...எல்லா சிவராத்திரிக்கும் சிவனடியார்கள் 120 கிமீ தூரம் உள்ள 12 சிவ ஆலங்களை ஓடி வலம் வருவார்கள்..இந்த நடைமுறை அனாதிகாலம் முதல் நிலுவையில் உள்ளது...அந்று குமரிமாவட்டத்திற்க்கு லோக்கல் விடுமுறை...ஏனெனில் அந்த அளவிற்க்கு சிவனடியார்கள் நெடுஞ்சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பார்கல், கூடவே ஒரு தோத்திரமும் உண்டு....”கோபாலா..கோவிந்தா...சிவனே வல்லபோ....” என்பதாஅகும்....24 மணி நேரம் ஓடி 12வது ஆலயத்தில் சரணடைவர்....இப்படி நீண்ட தூரம் ஓடினாலும் தோத்திரம் நடந்துகொண்டே இருக்கும்....அப்படி ஓடி எங்களுக்கு சஹஜம்... *Hseija Ed Rian:* இப்படி வாய் வழியாக மூச்சு 24 மணி நேரெம் நடந்து கொண்டிருக்கும்....இதுவே ” தோத்திரத்தின் ரகசியம்...இது வாசி கிடையாது....இதன் நுணுக்கமெ “பாகவத பாராயணம்” மற்ரும் “ராமாயண பாராயணத்திலும் உ்ண்டு *Hseija Ed Rian:* இது வாசி வித்தை கிடையாது. *Hseija Ed Rian:* திருமூலர் சொல்வார் “வள்ளல் பிரினோர்க்கு வாய் கோபுர வாசல் “ என்று...இதையே கண்ணபிரான் யசோதாதேவியாருக்கு வாயை திறந்து காட்ட 14 உலகங்களும் தெரிந்த கதை.

சிந்திக்க

ம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்//

சிந்திக்க

படிப்பதாயின் எல்லா அங்ஙங்களும் தோய படிக்கவேண்டும்.வாயிற் சொல்லும் ராக ஞானம் செவி கேட்க வேண்டும்.செவி கேட்ட பின்னரே மனம் அதை தெரிந்துகொள்ளும்.அதன் பிறகுதான் அறிவு உணரமுடியும்.வாய் மூடிகொண்டு படிக்கிற பழக்கம்-கிரகிக்கிற பழக்கம் இந்த மெய்ஞான கல்விக்கு ஆகவே ஆகாது. வேதத்திலிருக்கும் முத்துக்களை வரிசையாக எடுத்துவிட முடியாது.ஒரு முத்து இங்கிருக்கும்,மற்றொரு முத்து மற்றொரு அள்ளையிலிருக்கும்,மற்றொன்று எட்ட முடியாத ஆழத்தில் இருக்கும்.இவ்வாறு பாராதூரமாகிய மறைப்பு ஒளிப்புகளுக்கிடையில் சிதறியிருந்தவற்றை தருமமாக ஞானிகள் திரட்டி சேர்த்து,வேதாந்தமென்று ஓதி வைத்திருப்பார்கள்.அதை வாய்விட்டு படிப்பதால்,கருவி குலங்ஙள் ஒவ்வொன்றும் அதை பருகுகின்றன.அதில் சாந்தியாகிய ஒரு சலாமத் இருக்கின்றது.

நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை

நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை , அவர் சத்தத்தை கேடதுமில்லை என அவர் சொல்லுவார்... ஆனால் பைபிளில் எங்குமே அவருடைய பிதா யார் எனவோ, அவரின் நாமம் இன்னது எனவோ சொல்லபட்டிருக்காது.... நானும் பிதாவும், பிதாவுக்கு இஷ்ட்டமானவர்களும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான் என சொல்லுவதன் மூலம் அந்த விஷயத்தின் ஆழமும் மறை பொருளும் ஒருவாறு விளங்கி கொள்ளலாம்? அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" அவரது நாமம்தான் அந்த வார்த்தையா ஐயா? அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பது இதுவே, அதனாலேயே பைபிளில் எங்குமே பிதாவின் நாமம் இன்னது என சொல்லப்படவில்லை. அந்த வார்த்தையை அறிந்து கொண்டவன் பிதாவை பிதாவின் சொந்த நாமத்திலே அழைக்கிறான்... அவனுக்கு அவர் மறு உத்தரவு கொடுக்கிறார்.... அறியாதவனோ யாரிடம் பேசுகிறோம் என அறியாமல் பேசிக்கொண்டே இருப்பான்... யாரும் மறு உத்தரவு கொடுப்பதில்லை அவருடைய மாமிசத்தை போஜனம் பண்ணி அவருடைய இரத்தத்தை பானம் பண்ணுவதே நித்திய ஜீவனுக்கு மார்க்கம் அதை தெரியாமல் பிரெட்டும் வைனும் பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறர்கள்...எங்கே நித்திய ஜீவன் வரபோகிறது? மாமிசம் என்பது அந்த வார்த்தையில் இருக்கும் “மெய்” எழுத்து.. இரத்தம் என்பது “உயிர்” எழுத்து. மாமிசமும் இரத்தமும் இன்னதென்று அறிந்து கொள்வது எவ்வாறு? ஹ..ஹ..ஹ...கடந்த 2000 வருடமாக இதைத்தான் தேடிகொண்டிருக்கிறார்கள்... வாத்திகன் உட்பட யாரும் அறியவில்லை ஆனால் அவரோ அவருடைய கடைசி போஜனத்தின் போது சீடர்கலுக்கு அதை பிய்த்து காட்டிகொடுத்தார் அதாவது அந்த வார்த்தையை பிரித்து காட்டி அதை சாப்பிட்டு அருந்த சொன்னார்.. அவர்கள் புரிந்துகொண்டார்கலோ என தெரியவில்லை ஆனால் ஒருவர் அதை அறிந்திருந்தார் என்பது நிச்சயம்... "லாசரஸ்"... இன்னதென்று சுட்டி காட்டியும் மற்றவர்கள் விளங்காதிருக்க காரணம் என்ன? சிலபோது சீடர்கள் அதிக பண்டிதர்களாக இருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்...மீன் பிடித்துக்கொண்டும் வயலில் ஆடுமேய்த்துகொண்டும் கிடந்தவர்கலை அல்லவா சொர்க்க ராஜ்ஜியத்திற்க்கு வரும் படி அழைப்பு விடுத்தார்... தேவனுடைய வார்த்தையால் பிறப்பது எதுவோ அது தேவனுடைய சாயலில் இருக்கும் அந்த வார்த்தையானது தூலத்தை கடந்த சூட்சுமத்தில் அவனுக்குள் வைக்கபடுகிறது...சூட்சும தேகத்தில் பிறக்காதவன் அதை புரிந்துகொள்ளவும் மாட்டான் ஆனால் மனிதர்கள் அவருடைய சாயலிலும் அவருடைய ரூபத்திலும் இருக்க காணோமே!..அந்த சாயல் எங்கே?..அந்த ரூபம் எங்கே? ...அதை குரு தான் காட்டவேண்டும் அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மில் வாசம் பண்ணினார் என்பது இதுவே..கிருபையும் சத்தியமுமே தேவனுடைய ரூபமும் சாயலும்.....அவர் உடுத்தியிருந்த வஸ்த்திரத்தின் நுனி நூலை தொட்ட பெண்ணுக்கு அக்கணமே ரோகம் சாந்தமானது அந்த வல்லபமே நடந்து போகையில் அவர் காலடியின் கீழே பல்லாயிரம் கோடி வருடங்கலாக மண்ணறையில் துயிபவர்கள் கூட உயிர் பெற்று எழும்பும் வல்லமை கொண்டது அந்த ஜீவவார்த்தை. ❣ நன்றி: திரு. ரியான் ஐயா ❣

மனமும் வாசியும்

மனமும் வாசியும் சேர்ந்தே இருக்கின்றன...மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு...மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை....மன்மனதுள்ளே மனோலயமாமே ...என மூலர் சொல்லுவார்.....அதை கருத்தில் கொள்ளவேண்டும்.....நாகத்தை மனம் பார்த்த உடனேயே பிராணன் வெடிப்பது இதனாலேயே....நம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், ஜீவனானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்......இப்படி இருப்பதில் மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்...மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர ,தியான சம்பிரதாயங்கள்...பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு....சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்...

ஜீவன்

ஜீவன் இறந்து போகாமல் இருப்பின் நாமும் இறந்து போகாமல் இருக்கலாமல்லவா?..அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கண்டத்து ஜீவனை புருவமத்தியில் இருக்கும் ஜீவனோடு சேர்ப்பது என்பதல்லவா?..சாகாதிருப்பது தானே சன்மார்க்கம்?..செத்துப்போவது சன்மார்க்கமாகாதே.....ஆகையினால் செத்துப்போகும் ஜீவனை செத்துப்போகாமல் செய்வது தானே சுத்த சன்மார்க்கம் ?...அதனால் கண்டத்து ஜீவனை புருவமத்திக்கு கொண்டு செல்வோம் தக்க ஆசான் துணையுடன். வாழ்க வள்ளலார் மலரடி

ஆன்ம சொரூபமே

ஆன்ம சொரூபமே அன்றி வேறல்ல.அதையே வள்ளலாரும் ஆன்மாவின் பீடம் அக்கினி என்பார், அவ்வக்கினியோ தீர்த்தமாகிய சுக்கிலத்தில் உள்லது. அதுவே இறையாத தீர்த்தம். சுக்கிலம் புட்ப வடிவத்துடன் இருக்கிறது என்பார் வள்ளலார்.அதுவே புருவமத்தியில் பிரகாசிக்கின்றது

விந்து நிலை தனை அறிந்து

விந்து நிலை தனை அறிந்து விந்தைக்காண விதமான நாதமது குருவாய் போகும் என வகுத்தார்.அதாவது விந்துநிலையதாம் மெய்யறிவு பெற நாதநிலையே குருவதாம்.நாத நாதாந்த நிலையே இறையறிவு,அவ்வறிவு இரக்கமுற்று சீவர்கள்பால் கருணையுற்று நாதநிலை கொண்டு உயிரென விளங்கும்.மெய்யென்பது விந்து நிலையுடன் விளங்கும் ஆன்ம அறிவேயாம்,அவ்வான்ம அறிவிற்கு விளக்கம் உண்டாகும்பொருட்டே உயிராணி திருவசனம் நாதநிலையாய் பனிரெண்டு பிரிவாய் விளக்கமுறும்.உயிராணிநாதத்திருவசனத்தின் தூண்டுதலால் மெய்க்கு மெய்யறிவு தோன்றும் அவனருளாலே.அவ்வசனம் ஊடுருவுங்காலே விந்துநிலை விளக்கமுற்று ஒளிபெருகி ஒளிரும்,அவ்வொளியே மெய்யறிவு பகரவும் அமைத்து.மெய் பதினெட்டும் விந்துநிலையதாம்,ஆதலின் அதன்கண் விந்து பதிற்று.(விந்து-புள்ளி

உயிர் வேற மனம் வேற சார்..

உயிர் வேற மனம் வேற சார்... தூங்கி கிடக்கும் போதும் மனம் உடல் முழுக்க வியாபித்திருக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்.. .உயிர் வியாபித்திருப்பதினால் மனம் உணர்ந்த உடன் அந்த உயிரை பற்றி உடல் முழுக்க வியாபிக்கும்... தூக்கத்தில் கூட மனம் செயலாற்றாமல் உயிரை பற்றியே இருக்கும்..... தூக்கத்தில் “நான்” என்பதுகூட உடல் முழுக்க வியாபிக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்... இரண்டும் நிற்பது செயலாற்றுவது வியாபிப்பது இரண்டு இடங்களில் நின்று... அதை தக்க குருமூலம் அறியவும்... பிராணன் உயிரில் நின்று கிளம்பும்... மனம் “நான்” என்பதில் நின்று கிளம்பும்... சரியாக புரியவில்லையெனில் வாழ்நால் முழுக்க குழப்பம் மாறாது. இதுக்குத்தான் சொன்னே படிப்பு பெருசு என

பிரம்மரந்திரம்

பிரம்மரந்திரம் என்பது சிறு துளை என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதன் புரிதல் சற்று வித்யாசமானது. நமது தந்தை நமுக்கு தானமாக தந்த ஒரு துளி ஜீவ அணுவின் வாசலே பிரம்மரந்திரம். அந்த ஜீவ அணுவின் மெல்லிய வாசலில் இருந்து ஜீவ கலையாம் அக்கினி நமது சுவாசம் வழியாக வெளியேறி கொண்டிருக்கிறது. அப்படி வெளியேறாமல் அதை அக்கினியின் இருப்பிடத்தில் வைத்து பாதுகாப்பது தான் ஊர்த்வகதி.இதை தான் ‘சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரியரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே’ என சிவவாக்கியர் சொல்லுகிறார். உன்னுடைய தந்தை வழங்கிய உயிர்துளியே உனது மூலாதாரம், அது நீ நினைக்கிற பிறப்பு உறுப்பின் அருகாமையில் இருப்பது அல்ல. உச்சரிக்கும் மந்திரத்தின் ஊடாக இயங்கி நிற்பது சுவாசத்தின் மூலமான அக்கினியே. அக்கினி அறுந்து போனால் மரணம். உன் உடல் குளிர்ந்து போகும்

ஆத்மா

ஆத்மா என்னப்பெற்றது இந்த பொய்த்தூலம் கடந்த ஜீவதேகத்திற்கு அப்பாலுள்ள காரண தேகதிலுள்ள ஒரு பொருள். தூல தேகத்திலுள்ளவர்களுக்கு செவிப்புலனில் அறிவிக்கிறதென்றால், ஜீவதேகத்திலுள்ள இருட்கோலமாக இருக்கும் “ அசைவற்ற னினைவை” அசைவிற்கு கொண்டு வரும் பொருளே ஆத்மா. அதன் வல்லபம் கூறவென்றால் நூறு நூற்றைம்பது ஆண்டுகாலம் ஒருவன் உயிரோடு இருந்தாலும் அவன் உடலை நாற்றத்திற்க்கு விடாமல் பிடித்து வைத்திருக்கிறது , காரண தேகத்தில் நின்று நிலவும் அந்த ஆத்மாதான்

ஆன்ம ஸ்தானம்

“ஆறு பட்டையுடன் கூடிய மணி” இலங்கும் புருவமத்தியே ஆன்ம ஸ்தானம்,ஆதலினாலே வள்ளலார் ”ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி.” என்கிறார் . புருவமத்தியை விளக்குமிடத்து “இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் மகேசுவரனும், அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் சதாசிவமும், அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் விந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் நாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரவிந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரநாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் திக்கிராந்தம் அதிக்கிராந்தம் துவாதசாந்தம் முதலானவைகளும், அதீதத்தில் சுத்தசிவமு முள” என்கிறார். அதாவது புருவமத்திக்கு கீழ் ரெண்டரை அங்குலத்தில்அண்ணாக்கும், புருவமத்திக்கு மேல் ரெண்டரை அங்குலத்தில் நாதமும் இருக்கும் .புருவமத்தி விந்துஸ்தானம். அந்த விந்துஸ்தானம் அக்கினி பீடமாகவும் அதன் மேல் ஆன்மாவும் விளங்கும். இதுவே “மணியாடும் மன்று” அல்லவா?.அப்படியெனில் கண்டிப்பாக இந்த புருவமத்திக்கு ரெண்டரை அங்குலத்திற்க்கு மேல் நாதஸ்தானம் வரவேண்டும், அப்படி வராத எந்த ஒருஇடமும் புருவமத்தி என சொல்லக்கூடது, ஏற்கவும் கூடாது அல்லவா?. மேலும் , சோம சூரி யாக்கினி பிரம விஷ்ணுக்கள் இருக்குமிடம்: நேத்திரம் புருவமத்தி, அண்ணா, பிரமரந்திரம் என்றும் வள்ளலார் புருவமத்தியை குறிப்பிடுகின்றார் அல்லவா?...அதை விளக்கமாக பார்ப்போம். முதலில் மேலிருந்து கீழாக முதலில்பிரம்மரந்திரத்தில் யார் இருக்கிறார்கள் என பார்ப்போம். பிரம்மரந்திரத்தில் விஷ்ணு இருக்கிறார் என சொல்கிறார்., அடுத்து அண்ணாவில் பிரம்மாவும், அதற்க்கு கீழ் புருவமத்தியில் அக்கினியும், நேத்திரம் என்பதில் சோமசூரியனும் இருக்கிறார்கள். அப்படித்தானே? ரெண்டு கண்களிலும் சோம சூரியன் இருவரும், புருவமத்தியில் அக்கினியும் இருப்பதாகத்தானே சொல்கிறார்?..அப்படி அக்கினி இருக்கும் புருவமத்தியே ஆன்மஸ்தானமாகிய ”மணியாடும் மன்று” எனப்படும் சிற்சபை.. இதற்க்கு ஆதாரமாக வள்ளலார் சொல்லுவதை பார்ப்போமா? அதாவது நெற்றியில் ரோமம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கிறதல்லவா? அது ஏன் என சொல்லும்கிறார் ,” இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது. நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது.’ ‘ இதிலிருந்து நாம் தீர்க்கமாக புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் புருவமத்தி என சொல்லப்படுகிற இடத்தினில் அக்கினியின் காரியத்தினால் ”ரோமம் தோன்றியும் தோன்றாமலும் அருகி இருக்கும்”. அப்படி ரோம அருகி இருக்கும் இடமே புருவமத்தி எனப்படும் விந்துஸ்தானமாகிய நெற்றிக்கண் என்ற சித்சபா அங்கமாகும் மஹாமேருவாகிய லலாடம். தகரவெளி சிற்றம்பலவாணர் துணை

ஆண் =பெண்

நாதம் உண்டான பிறகே மனிதப்பிறவியில் ஆண் பெண் என்ற வித்தியாசம் ஏற்படுகிறது.அது வரையில் ஒரே தன்மை தான்.ஆண் பெண் என்ற வேற்றுமை இல்லாமல் ஒன்றாகவே விளையாடுவார்கள். பெண் பருவமடைந்ததும் அவளது தேகத்தில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன.குணத்திலும் அப்படியே. ஆணுக்கு பதினாறு வயது எட்டினதும் அவனது தேகத்தில் சுக்கிலம் உற்பத்தியாகி,பாலனின் தொனி மாறி,கம்பீரமான ஆண்மைகுரல் எழும்புகிறது.ஆக நாதம் தான் ஆண்.இந்த நாதமில்லையேல் ஞானமில்லை.னாதமே ஞானத்துக்கு மூலம். நாதன் உன்னை தொட வேண்டுமென்றால் உன்னிடத்தில் நாதம் இருக்கவேண்டும்.அப்போது தான் உனது நாதத்தை எழுப்பமுடியும்.ஆதலால் தான் இளமை ததும்பும் போதே ஞானத்தை அடைய வேண்டுமென்கிறோம்.ஆதலால் தாம் ’இளமையில் கல்’ என்று எழுதி வைத்தார்கள்.இளமையில் நாதம் னிரம்பி வழியும்.ஞானத்தை எளிதாக பற்றும்.அதை விட்டு விட்டு ஞானத்தை வயது முதிர்ந்து அடையலாம் என்று சொல்லுவது உதவாத பேச்சு. பதினாறு வயதுக்கு முன்னும் அறுபது வயதுக்கு பின்னும் ஞானதீபத்தை ஏற்ற முடியாது. [புரிகிறவங்க புரிஞ்சுக்கிடுங்கோண்ணேன்.....ரியான் உள்விளி]

ஆதி புள்ளி

==== ஆதி புள்ளி ==== எழுத்தெல்லாம் புள்ளியிலிருந்து தானே தொடங்குது. ஆனால் புள்ளி வைச்சா முற்றும்னு சொல்றாங்க. என்ன ஒரு விந்தை? எந்த எழுத்து புள்ளியால தொடங்குது?...   ”ம்” னு எழுதுறோம் ,புள்ளி வெச்சா "ம்" என எழுதுறோம்? .. இல்லையே .. பேனா காகிதத்தைத் தொட்டவுடன் நிகழ்கிறது. பேனா காகிதத்தை தொடவில்லையெனில் எழுத்து இல்லை... புள்ளி இல்லை..அப்படியா? பேனா காகிதத்தை தொட்ட உடன் இடம், வலமாக எழுத்து மலர்கிறது.. புள்ளியில் இருந்து...அதுபோல.... ”இ” என்பதில் மட்டும் புள்ளியும் சுற்றி மூணு சுழியும்...,  ”ஈ”க்கு மட்டும் ரெண்டு புள்ளி. அ இடது பக்கம், உ வலது பக்கம், மத்தியில் இ, எல்லா உயிரெழுத்துக்கும் இவை மூணுமே ஆதாரம்.அல்லவா? க் முதல் ன் வரை மெய்யை பார்த்தால், பேனா காகிதத்தை தொட ஆரம்பிக்கும் முதல் புள்ளி ஒன்று, அப்புறம் ம் மேலே வரும் கடை புள்ளி ஒன்று என இரண்டு புள்ளி. இதுல ”ம” என்பது ஆரம்பித்து எழுதி முடியறது ஒரு சுழி புள்ளி... இது நடுபுள்ளி. ---🌺 திரு. ரியான் ஐயா அவர்கள்.🌺 ஆதியில் புள்ளி இருந்தது,அந்த புள்ளி ஆதியோடு இருந்தது, அந்த புள்ளி ஆதியாகவும் இருந்தது, அந்த புள்ளியின் உள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்குள் ஒளியாக இருந்தது. அந்த ஒளி மனிதனுக்குள் பிரகாசிக்கின்றது, ஆனால் மனிதனோ அந்த புள்ளியை பற்றி கொள்ளாமல் இருக்கின்றான். அந்த புள்ளியே தனது தந்தையாகிய பிதாவினிடத்தில் இருந்து கன்னியாகிய தாயின் சூலில் தங்கிய குமாரனாகிய நாம். ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன. அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம். ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம். மெய்யிடம் விளங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும், ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது. அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும். இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயாணம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.

அசபை ஹம்ச ஸோகம்

மன்னும் முக்கோணம் வயங்கும் நாப்பண் இயங்கும் அசபை நயந்து இனிது உரைக்கில் இருபத்து ஒராயிரத்து அறுநூறு மருவிய வாயு வலம் இடமாக மாறி மாறி வேறு பாடாகிப் பூதம் ஐந்தினும் தோன்றும் நாழிகை ஒன்றுக்கு ஒன்று குன்றாது எழுந்து பன்னிரண்டு அங்குலம் முன்னி ஒடி இருநாலு மீண்டங்கு ஒருநால் ஒழியும் இந்தக் கருத்தைச் சிந்தித்து அறிவால் அந்த ஆதாரம் அசைவுஓர் ஏழினும் பற்றற நிற்கும் பவனம் அறுநூறு மூன்றாயிரம் மூன்றிடம் மருவி ஒன்றிட மூவாயிரம் என நிறுத்தி மந்திரம் ஆம் எனத் தந்திரம் சொல்லும்

புள்ளி=

======புள்ளி==== எத்தனைக்கும்பெரியதவம் இறைனாமம் பிஸ்மில்- இதற்குள்ளே அடங்கும் பொருள் எடுத்துரைப்பதரிதே- அந்த பிஸ்மில் முதலான விதமேதால்- அணுப்போல கொண்டபுள்ளி அலிபாக நீண்டே- அந்த புள்ளி அலிபு மறைந்ததொரு பேயாம் - அந்தரத்திலானதினால் அதுநினைவு சிர்றாம்- இந்த சிர்றே மீமாம் இது நாலும் இஸ்மாம்- இது நாலும் அவனாம் இதுவிதம் வேறில்லை -அந்தரத்திலான சிர்றால் அமைந்த  மீமுக்குள்ளே -அமைந்தவெளி நூறான பேருமஹ்மூதாம்- இந்த பிஸ்மிலுக்குள் உயிரெழுத்து மூன்று- எல்லா மறைகளுக்கும் மெத்த முள்ளதாமே -அந்தெழுத்தை இன்னதென்று அதனுடைய வளமும் -ஆரும் சொல்லார் சொன்னாலும் ஆரும் அறியாரே -அந்தெழுத்து மூன்றிலொன்று அது தானே தாத்து -அஹதயத்தும் அதுதானே  அதிலுமதைபோல -வந்ததுதான் உஹதத்தென்று அமைந்தது சிபாத்து -அதிலுமதைப்போல அமைந்தது வாஹிதியத்தாமே- வாஹிதியாவதென்ன அனைத்தும் முடிந்ததுவாம்- வரமான தவநிலையின் வாழ்த்துக்குயர் மணியாம்- இந்தவகை அறியார்கள் முந்தவகையறியார் -அந்தவகையறியார்கள் அந்தரத்திலாவார் -இந்தவகை அறிந்தவர்கள் எந்தனுக்கும் குருவாம் -இவையறிந்த பேர்களெல்லாம் யாவும் அறிந்தவராம்=(பிஸுமில் குறம்)