Friday, November 25, 2022

ஜீவாக்னி - ஜடாக்னி

ஜீவாக்னி - ஜடாக்னி உஷ்ணம் அதாவது அக்னி என்னும் சிவரூபம் உயிருக்கு ஆதாரமாயும் எங்கும் தூலக் கண்ணால் காண இயலாததும், அண்ட சராசரங்களிலும் கடல் சூழ் இப்பூமியன் கண் மட்டும் , சகல ஜீவராசிகளிலும் மயன௹பமான அ௹பத்தில் மாயாரூபியாய் அரசாட்சி செய்து வருகிறான். அச் சிவமானவன் மனிதனிடத்து மட்டும் அறிவாயும் மனமாயும் உடலாகவும் முப்பொருளாய் குடியமர்ந்து உள்ளான்.. சொல் என்னும் பேசும் கலையானது அகச் சொல்லாகவும் புறச் சொல்லாகவும் பரிணமித்து மனிதனுக்கு மட்டும் தனித்துவமான அமானிதமாக இறைவனால் வெகுமதியாய் தரப்பட்ட ஒரு தனிவரம். ஒரு சொல்லின் தன்மையைப் பொறுத்து உடலில் உஷ்ணமானது ஜீவாக்னி என்றும் ஜடாக்னி என்றும் இரு பிரிவாய் மாறுகிறது. ஜடாக்னி உணவாலும் மற்றும் குணமாற்றங்களாலும் குற்றமாகி எண்ணக்குவியலாய் மாறி நோய் என்னும் எமனிடம் தூலத்தை ஒப்புவித்து மரணத்துக்கேதுவாய் ஜடம் அழிவுரு அடைந்து தன் கடமை மறந்த பாவத்திற்கு ஜனன மரண படுகுழியில் விழுந்து மீட்படையா அலகையாகிறது. குருவுரு - மனம் - மருள் - ஜடாக்னி திருவுரு (பொருளுரு) _ ஆன்மா - அருள் - ஜீவாக்னி. ஆதம் - ஆத்மா தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லார் மனக்கவலை மாற்றல் அரிது. தாள் சேர்தல் என்பது காலக் கணக்கான கண்ணையும் நாக்கையும் முறையாகக் கைக்கொள்ளும் போது கணக்கு என்ற நினைவினில் உஷ்ணம் உண்டாக்கி தனக்குள்ளே பேசும் பேச்சு உண்டாக்கும் ஒரு அருங் கலை. நினைவின் பிறப்பு தூலக் கண்ணின் பின்புலத்தில் உள்ளது. இமையா நாட்டம் என்னும் தவநெறியில் ஜீவாக்னி என்னும் அழியா நிலை கைவரவாகி உதயமாகிறது. இது அகத்தே ஸ்தோத்தரித்து தன்னைத்தானே சுயம்புவாய் அர்ச்சித்துக் கொள்ளும் தன்மையால் கொழுந்துவிட்டு ஜ்வாலையாய் ஆகுர்தி வேள்வியில் நிலை கொள்கிறது. இது 24 ஆண்டுகால வைவஸ்ய பாடுடைய தவ முறையால் சித்திக்கிறது. அதாவது அறிய வரமாகிய பேசும் கலையை உடல் சார்ந்து உபயோகிக்கும் போது அழிவுக்கும் ஆன்மாவோடு உபயோகிக்கும் போது அழியாமைக்கும் இட்டுச் செல்லும். ஒரு மொழிக் கீதையாம் ஓர் மாத்திரைக்கோல் கொண்டு ஆன்மாவோடு உரையாடுவதே வாழும் கலை என்னும் சாகாக்கலை . மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்பதை மனமது செம்மையாக மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்று பகுத்தறிவு கொண்டு பயணிக்கும் போது உஷ்ணம் உண்டாக்கிக் கொள்ள முடியும். இது மேலும் சொல்லுக சொல்லில் வெல்லும் சொல் என்றும் விரிகிறது. செம்மை என்பது சிவப்பு நிறத்தையும் குறிக்கும். உஷ்ணத்தால்தான் எந்தப் பொருளையும் சிவப்பாக்க இயலும். நம்முடைய தூல தேகத்தில் எந்தப் பொருளை செம்மை என்னும் உஷ்ணத்தால் சிகப் படையச் செய்யலாம் என்று தன்னில் அறிந்து உறக்கத்தை ஜெயம்கொள்ளும் போது இந்தப் பூதவுடல் அழிவிலிருந்து அழியாமையை அடைந்து பொன்னுடம்பு தேகமாகிறது. இது வாசி ஹட யோகத்திற்கும் மற்றும் தேக சாஸ்த்திரத்தில் லக்ஷ்யம் கொண்டு யோக நிலை சித்து சக்தி பெற முயல்வோருக்கு கை கூடாதென்பது திண்ணம். மனம் என்னும் நினைவு அசையும் இடத்தே 'உடல் உஷ்ணத்தையும்' நினைவு அசையா இடமாகிய நினையாப்புரம் என்னும் பிடரிக் கண் வெளியிலே 'ஆன்ம உஷ்ணத்தையும் ' தன்னுள் தானே ஏற்படுத்திக் கொள்வதே சாகாக்கலை என்னும் பிரம்ம வித்தைச் செயல் என்று எங்கள் மதினாவரசர் மாணிக்கப் பொன்னம்பல மதி மேடைவீற்றிருக்கும் எம்மான் "சாலை ஆண்டவர்கள்" திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். நன்றி: --- திரு. சாலை ஜெயராமன் அய்யா அவர்கள்

No comments:

Post a Comment