Thursday, November 24, 2022
சீமாட்டி வித்தை
===== சீமாட்டி வித்தை =====
காலாலே கனல் ஏற்றுங்கடி – சழி
மேலே கொண்டு அமுது ஊட்டுங்கடி
மூலாதாரத்து அலங்கேசரம் – என்று
முழங்கிக் கும்மி அடியுங்கடி
சார்ந்து கொள்ளடி கேசரத்தை – முதல்
அன்னை அறியலாம் தானாகக்
கூர்ந்து மூலக் கணபதி – பாதத்தை
கும்பிட்டுக் கொள்ளடி ஞானப் பெண்ணே
நவ்வெழுத்தே பிரமனார் ஆகும் – அதில்
நாரணன் மவ்வெழுத்து ஆனானே
சிவ்வெழுத்தே தெய்வ ருத்திரனாம் – இன்னும்
செப்புவன் கேளடி ஞானப் பெண்ணே
செப்பவே வவ்வு மகேசுரனாம் – வட்டஞ்
சேர்ந்துப சாரம் சதாசிவனாம்
தம்பிலா ஐந்து எழுத்தாலே – சராசரத்
தங்கி இருந்தது ஞானப் பெண்ணே
வாலையின் அட்சரம் மூன்றாகும் – அதை
வாய் கொண்டு சொல்பவரார் காணும்
மேலொன்றும் கீலொன்றும் மத்திமமும் – கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே..
----------- வாலைகும்மி
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே!"
-- நன்றி: ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment