Thursday, November 24, 2022

குரு பூர்ணிமா

======குரு பூர்ணிம===== பூர்ணிம என்பது பூரணத்துவம் ஆனது என பொருள். இங்கே குரு என்பவரின் விளக்கம் கூட தவறாக விளங்கி வருகிறது.எது பூரணமானது?, பிரம்மம் பூரணமாக விளங்கி கொண்டிருக்கிறது.அப்போது எது குருவாக மலர்ந்துள்ளது?,பிரம்மமே.ஆகையால் தான் குரு சாட்சாத் பரப்பிரம்மம் என்று சொன்னார்கள். இங்கே ஞானியர்கள் நிகண்டு  'குரு' என்பதுக்கு என்ன பொருள் தரும்?,  ' கு ' என்றால் அஞ்ஞானம் ' ரு ' என்றால் பிரகாசம். அப்போது அஞ்ஞான பிரகாசம் என கொள்ளலாமா? பிரகாசம் பின்னால் நிற்க அஞ்ஞானம் அதற்கு முன்னால் நிற்பது எவ்விதம்? ஒரு வேளை சீடனுக்கு பொருள் சொல்கிறோம் என்றால் ஒத்துக் கொள்கிறேன்,ஆனால் குருவுக்கு அஞ்ஞானம் முன்னால் வருவது எப்படி? தமிழ் கடவுள் முருகன்,அவரது மற்றொரு பெயர் ' குஹ ', ' கு ' என்றால் அஞ்ஞானம் என கொள்ளலாமா? குஹன் என்றால் அஞ்ஞான சொரூபன் என்றா பொருள்?,தவறாக புரிந்து கொண்டு உள்ளதாக தெரிகிறது அல்லவா?" தவறாக தான் குருவுக்கு பொருள் கொண்டுள்ளோம். குஹ என்றால் பிரம்ம சொரூபன் என பொருள், குரு என்றால் பிரம்ம பிரகாசம் என பொருள்.' கு ' என்றால் குஹ்யம் என பொருள்,அதாவது விளக்க அரியது என பொருள். அதாவது மறை பொருள் ஆனது, அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டது என பொருள். குரு ஆனவர் அந்த பிரம்ம சொரூபத்தை பிரகாசிக்க செய்கின்றவர் என பொருள். அதாவது குரு என்றால் பிரம்ம பிரகாசம் என பொருள் விளக்கம்.

No comments:

Post a Comment