குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
குருவாக வந்தாயே திரு வாக வந்து உரைத்தாயே உங்கள் அன்பாலே என் வினைகளை கலைந்தாயே
அமுத மொழியால் செவியில் உபதேசம் அளித்தாயே
தெளிவான அறிவு விளக்கை ஏற்றினாயே
No comments:
Post a Comment