Friday, November 25, 2022

சிந்திக்க

இந்தத் தேகத்திற்குப் பிறப்பு 7 உண்டு. அது போல் எழுவகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கு எவ்வேழு பிறப்புண்டு. அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனிபேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம். ஒவ்வொரு பிறவியும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி, இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இத்தேகங் கிடைத்தது. பிரச்சினை என்னவெனில், சன்மார்க்கிகள் எல்லோரும் இனியும் ஒருமுறை மனிதர்களாக பிறப்போம் எனும் நம்பிக்கையில் இருக்கிறார்கள். வள்ளலாரோ இதை ஆணித்தரமாக மறுக்கிறார் அல்லவா?. மனிதன் இதற்க்கு முன் ஒருபோதும் மனிதனாக பிறந்ததில்லை எனவல்லவா வள்ளலார் சொல்லியுள்ளதன் பொருள். மனிதனாக பிறந்திருக்கிற நாம் எழுவகை பிறப்புகள் முடிந்து மேல்நிலை பிறப்பான மனிதப்பிறவி எடுத்திருக்கின்றோம். இதற்க்கு முன் உள்ள அறுவை பிறப்பிலும் மனித பிறப்பு இருந்ததில்லையே அல்லவா?. மட்டுமல்ல ஒவ்வொரு பிறப்புகள் பிறந்து இறந்துவிட்டால அடுத்த கற்பகாலம் வரையிலும் அச்சீவன் மண்ணுக்குள் புதையுண்டு கிடப்பதாக அல்லவா பெருமானார் சொல்லுகிறார், ஜீவன் மண்ணுக்குள் புதை பட்டு கிடப்பது எங்ஙனம்?..அதன்றி ஏழாவதான மனித பிறப்பை எடுத்தவன் பின்னும் எப்படி மனித பிறப்பை எடுக்கமுடியும்?.. எழுவகை பிறப்பும் எடுத்தாயிறே?.. அதற்க்கு மேல் எட்டாவது பிறப்பு என ஒன்றில்லையே?..சன்மார்க்கிகள் விளக்கம் தரவும். நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.

No comments:

Post a Comment