Thursday, November 24, 2022

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும்

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்; அஞ்செழுத்தும் நெஞ்சழுத்து அவ்வெழுத் தறிந்தபின் அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா? நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா? அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா? பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள் அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே ஓரெழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர் மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே. நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும் நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும் நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே நமசிவாய உண்மையை நன்கு உரை செய் நாதனே ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின் ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே! அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்; அஞ்செழுத்தும் நெஞ்சழுத்து அவ்வெழுத் தறிந்தபின் அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா? நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா? அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா? பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே. அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள் அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால் நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால் அஞ்சும்ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி மெள்ளவே வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின் அவனும்நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்! அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே! 20

No comments:

Post a Comment