Thursday, November 24, 2022
சிந்திக்க அட்சரம்
அகாரம் எனும் அட்சரம் இருப்பு சுவாதிஷ்ட்டானம்..அகாரமாய் மலர்வதற்க்கு முந்திய இருப்பு மூலாதாரம்...அதையே உனரா நிலை என்பார்கள்..அதாவது அகார சக்தி தூங்கும் நிலை...அகாரத்தில் இருந்து உகாரம் பிறக்கிறது...இது இரண்டின் மத்தியே ரீங்காரமான குண்டலினி...ரகாரம் என்பது சுழிமுனை...இகாரம் தான் மேலேறும் குண்டலினி
நாமகள் என்பது சரசுவதி..அவள் இருக்குமிடம் தான் சுவாதிஷ்ட்டானம்...நமக்கு எல்லோருக்கும் தெரியும் சரசுவது இருக்குமிடம் என்பது நாக்கில் தான்.நாக்கு ஆரம்பிக்கும் இடம் தான் சுவாதிஷ்ட்டானம்..அங்கே பிரம்மாவும் சரசுவதியும் குடியிருப்பு...அதனாலேயே நாக்கில் சரசுவது இருப்பு என பெரியோர்கள் சொல்லி இருக்கின்றனர்...அதற்க்கு மேல் நாலங்குலம் மனி பூரகம்...இங்கு நாலங்குலம் என்பதனை விரல் அங்குலமாக காண்பதினால் ஏராளமானவர்கள் ஏமாறுகின்றனர்...அங்குல பிரமாணம் என்பது சுவாச அங்குல அடக்கத்தை கூறுகிரது...அப்படி 12 அங்குலம் மேலேறுவது புருவமத்தி
அந்த உள் நாக்கை சிங்குவை என சித்தர்கள் அழைப்பார்கள்...காகபுசுண்டர்பிரான், பதிபுருவத்தடிமுனைகீழ் அண்ணாக்கென்னும் பவழநிறம்போன்றிருக்கும் திரிகோனந்தான் துதிபெரு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு ==என சொல்லுவார்...அந்த சிங்குவையான மூலாதாரத்தில் இருந்து பிண்ட நாடிகள் தோன்ருகின்றன.
அந்த அகாரத்தை நாக்கை முன்னிட்டு தொடங்குவதால் சிரிஷ்ட்டி எனவும்...நாக்கின் மத்தியில் மனி பூரகம் எனவும்ஸ்தியாகவும் நாக்கின் நுனியில் அனாகதம் எனும் ருத்திரம்சமான சங்காரம் எனவும் சொல்லுவர்...நாக்கின் மத்தியில் மகா இனிப்புள்ள கட்டியாக மணி போன்ரு அரிருதம் இருக்கும் என பஞ்ச அமிர்த ஸ்தானங்கள் எனுமிடத்தில் வள்ளலாரும் சொல்லுவார்...அமிர்தம் மணியாக அனுபவப்படும் இடமே மணிபூரகம்..அது நாக்கு மத்தி
நாம் பிறக்கும் போது பேச்சும் மூச்சும் உடனே வருவதில்லை..நமது நாக்கானது உள்மடிந்து அண்ணாக்கினுள் இருக்கும்...அதை வெலியே இழுத்துவிட்டபின் தான் மூச்சு பின் பேச்சு வரும்...அது ஒரு ரகசியம்...அரிந்தவர் ஒருசிலரே...நாபியில் இருந்துகோண்டு சுவாசித்த நாம் மூக்கு வழியாக சுவாசிக்கும் கலையை பெற்றோம்...ஆக நம் எண்ணங்கள் எப்போதும் மனதில் பேச்சுவடிவில் அலையாடி நாவில் எப்போதும் சலித்துகொண்டிருக்கும்...மவுனமாக இருந்தாலும் நாவில் பலவித பேச்சுக்கள் சலித்துகொண்டிருக்கும்...எப்போது நாவு சலனத்தை நிறுத்துகிறதோ அது மவுனம்...எண்ணத்தில் கூட அதிர்வு இருக்காது...அப்போது மூச்சும் அடங்கும்...எல்லாம் நாக்கின் கைவண்ணம்...நாக்கை பாதுகாக்கிறவன் தன் ஆன்மாவை பாதுகாக்கிறான்...அசைந்தாடி கொண்டிருக்கும் எதுவோ அதை இருதயம் என அரிவோமாக.....கடவுள் அருள் விளங்கட்டும்
யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோ காப்பார் சொல் இழுக்குபட்டு
என்று இதனால் தான் வள்ளுவர்குறளில் கூறியிருப்பார் போலும்
ஆறு ஆதாரங்கள் கண்டத்திற்கு மேலேயே ஆகும்.மூலங்கள் மூன்று.கீழ் மூலம் ,நடு மூலம் ,மேல் மூலம்
கீழ் மூலம் என்பது அண்னாக்கின் வட்டம் ஆகும்.நடு மூலம் என்பது ஆக்கினை.மேல் மூலம் என்பது நெற்றிக்கு நேரே உச்சியின் கீழே உண்னாக்கின் மேலே உள்ள தலம்.
மதி ரவி கண் மூக்கு செவி யோடு ஸ்பரிசம் எட்டும் பதிய இந்த இடங்களில் வாசி ஓட்டம் சுழியாக தெரியும் .ஜோதி விளங்கும்.ஜோதி விளக்கம் ஏற்பட்ட பிறகு வாசி யோட்டம் தானாகவே தெரியும் .இவற்றின் மேல் விளக்கம் ஆகஸ்தியர் ஞானத்தில் கூறப் பட்டுள்ளது.
தகுந்த வழி காட்டுதலுடன் அல்லாது செல்வது அபாயங்கள் நிறைந்தது.
எல்லோரும் போகும் வாசல் யார்க்கு சொந்தம்.
பார் நெற்றி நடு நாம வழியே மார்க்கம் ,முத்திக்கு இதுதானே நேராம் பாதை உச்சியேற .ஜோதியே பெருங் ஜோதி சொல்லொண்ணாது சுழி வாசல் தான் திறந்தோர் காண்பார்
"கல்லாதார் சாஸ்திரத்தை பாராமல் தான் கரையேற நினைப்பவர்கள் கிறுக்காவேரே" விளக்கம் காக புசுண்டர் பெரு நூல்காவியம்
வள்ளலாரும், ஆதாரங்கள் பற்றி உரை நடை பகுதியில் உள்ளது
சுத்த சன் மார்க்க அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்
ஞான யோக அனுபவ நிலைகள்
படிக மேடை
ஆயிரத்தெட்டு கமல் இதழ்
ஓங்காரபீடம்
குண்டலி வட்டம்
ஜோதி ஸ்தம்பம்
சுத்தநடனம்
மேற் கொண்டு விபரங்கள் அனுபவத்தில் உணர வேண்டும்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment