Saturday, November 26, 2022

வாலையை பூசிக்க சித்தனாவாய்

===வாலையை பூசிக்க சித்தனாவாய்=== கொங்கணர் அவர் பாட்டுக்கு சொல்லிகிட்டு போயிட்டார், வாலையை பூசிக்க யாரும் பதினெண் சித்தராவர். பதினெட்ட்டு மெய்யும் உணர்பவர் அல்லவா பதினெண் சித்தர். வாலை என்றால் பத்து வயது பருவ பெண்பிள்ளையை நாம் எல்லோரும் சொல்லிகிட்டு இருக்கோம். ஆனால் என்றும் பத்து வயதுடையவளாய் விலங்கும் தமிழை மறந்துவிடுகிறோம். தமிழ் தாயே தான் வாலை தெய்வம், சித்தர்களுக்கு தாயான தயாபரம். பதினெட்டு அங்கங்களுடன் திகழும் சொரூபம் அவள் திருமேனி, அதுவெ பதினெண் மெய். அதில் பனிரெண்டு உயிர்நிலை இயக்கம். இவை ஒருங்கே அலங்கிருதமாய் திகழும் பொன்மேனி கிரணோதயம். ”அ-ஆ-னா....ஆ-வன்.னா” என தொடங்கி ‘னெள-வன் -னா” என முடியும் மூவெழுத்து மும்மொழி சொருபம் அவள் அங்க துலக்கம்.வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்ட்டு சொல்பவர் யார் காணும் என கொங்கணர் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பாடி போகின்றார்..... வாயுள்ள பிள்ளை பிழைக்கும்..அல்லவா? பல சங்க இலக்கிய இலக்கணங்கள் எல்லாம் ஆழ்ந்த நுண்ணிய அறிவின் பால் நின்று விளங்குவதே தான் என்பதில் ஐய்யமில்லை. ஆயினும், ஞானியர் போக்கு தனி போக்கு. அவர்கள் தெளிவு என்பது அதீதமானது. சின்ன வயசியில சூரியன் கிழக்கே உதிக்கிறது என தெளிந்து எல்லோரும் ஏற்றுகொள்கிறோம். ஆனால் அறிவு விருத்தியடையும் போது சூரியன் உதிப்பதுமில்லை மறைவதுமில்லை என தெளிகிறோம். அதுபோலவே தான் பல ஞான விஷயங்களும். ஒவோருவரும் அவர்களின் முதிர்ச்சிக்கு தகுந்தபடி கையாளல் செய்வர், அவர்களுக்கு புரிந்தபடி, அவர்கள் ஞானத்தின் விளக்கத்திற்க்கு தகுந்தபடி. அவ்வளவுதான். ஞானம் அதிகரிக்க அதிகரிக்க விளக்கங்கள் அதிகரிக்கும், சிலவேளை முற்றிலும் வேறான ஒரு கோணம் கூட உதயமாகும். ---❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

No comments:

Post a Comment