Thursday, November 24, 2022
சிந்திக்க வாசியோகம்
சித்தர்களின் சிவராஜயோக வாசி யோகத்தில் மூலாதாரம் என்பது கண்டத்துக்கு மேலா கீழா?.............
கரிமுகன் பதம் போற்றி கடவுள் பதம் போற்றி கடாச்சித்து எனையீன்ற ஆயி பதம் போற்றி அரிஅயன் பதம் போற்றி வாணிபதம் போற்றி அருள் தந்த லட்சுமிதான் ஆயி பதம் போற்றி வரியமாம் பாட்டனென்ற மூவர் பதம் போற்றி துணையான காலாங்கிஐயர் பதம் போற்றி நிருவிகற்ப்ப சமாதியுற்ற ரிஷிகள் பதம் போற்றி நிறைந்துநின்ற சரளமே காப்புதனே===தானான ஏழுலட்சம் சிவந்தான் சொன்ன சாஸ்த்திரத்தின் கருவெல்லாம் தரிக்கப்பண்ணி கோனான குருநூலாம் ஏழுகாண்டம் கொட்டினேன் வாதமென்ற முறை தடன்னை பானான பாட்டரை தான் கருக்கள் கேட்டே பயின்றெடுத்த ஆயிசொன்ன பண்பு கேட்டு தேனான காலாங்கி ஐயரையும் கேட்டு செப்பினேன் சத்தகாண்டம் திறமாய் தானே==காணவே மூலமது அண்டம் போலே காரணமாய் திரிகோணமாகி நிற்க்கும் பூணவே மூன்றின் மேல் வளையமாகும் பிரம்மாக இதழது தான் நாலுமாகும் நாணவே நாற்கமலத்தட்சரத்தை கேளு வயநமஸ்ரீயாகும் மூணவே முக்கோணத்துள்லொலி ஓங்காரம் முயற்ச்சியாய் அதற்க்குள் அகாரமாச்சே==அகாரத்தின் மேலாக கணேசர் நிற்ப்பார் ஆதியொரு கோணத்திலுகாரம் நிற்க்கும் உகாரத்தின் வல்லமையால் சக்தி நிற்ப்பாள் ஒடுங்கியதோர் கோணத்தில் கதலிபூவாய் புகாரமாய் முகங்கீழ்குண்டலியாங்சக்தி பெண்பாம்புபோல சுருட்டி சீறிகொண்டு சுதாரமாய் சுழுமுனையோடு உருவி நிற்ப்பாள் துரியாதீதமென்ற அவத்தை தானே==அவத்தைக்கிருப்பிடவும் மூலமாகும் அழகிய கதலிபூ எட்டிதழாய் நிற்க்கும் நவத்திற் நந்திநுழை வாயில் நிற்ப்பார் நற்சிவமாம் சிகாரத்தில் கோடியாகும் அவத்தைக்கு வாயில் திறவான் அனல்மூடும் மைந்தனே எட்டிதழில் எட்டுசக்தி பவத்தைக்கு சக்தியெட்டின் பேரேதென்றால் பாங்கான அணிமாவும் லகிமா தானே==நாட்டமாய் லகுவாக மூலம் பாரு நலமான வாசிகொண்டு ஊதிஊதி ஊட்டமாய் சக்கரத்தில் நின்றுகொண்டு உத்தமனே நந்திகண்டால் வாதம் காணும் தூட்டமாய் வெறும் பேச்சால் வார்த்தை சொன்னால் சுடுகாட்டு பிணமான சொல்லுக்கொக்கும் பூட்டுவாய் மூலத்தின் ஒளிகாண் மட்டும் பொஏகொடிபோல் சுழிமுனையும் திறந்து போமே==சுழிமுனையே திறந்தாக்கால் மனமொடுங்கும் சுழியிலே அகப்பட்ட துரும்புபோலாம் சுழிமுனையே ஆதாரம் ஏறலாகும் மகத்தான சித்தியது எட்டுமாகும் சுழிமுனையாம் சுழிக்குள்ளே அழிந்திடாது கணக்கோடே வாசியென்ற குதிரையேறு சுழிமுனையில் இருந்தாக்கால் அங்கொன்றுமில்லை==
உங்கள் கருத்துக்களை பதியவும்.nanri thiru rian avargal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment