Thursday, November 24, 2022
பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் முரீது*
*பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் முரீது*
அந்தெழுத்தையின்னதென்று அதினுடையவளமும்
ஆருஞ்சொல்லார் சொன்னாலும் ஆருமறியாரே
அந்தெழுத்து மூன்றிலொன்று அதுதானே தாத்து
அஹதயத்துமதுதானே யதிலுமதைப்போலே
வந்தது தான் உஹதத்தென்று அமைந்தது சிபாத்து
வதிலுமதைப்போலமைந்த வாஹி தியத்தாமே
வாஹி தியாவானதென்ன வனைத்து முடிந்ததுவாம்
வரமான தவநிலையின் வாழ்த்துக்குயர்மணியாம்
இந்தவகைய றியார்கள் முந்தவகையறியார்
அந்தவகையறியார்க ளந்தரத்திலாவார்
இந்தவகையறிந்தவர்க ளெந்தனக்குங் குருவாம்
இவையறிந்தபேர்களெல்லாம் யாவுமறிந்தவராம்
யாவுமறிந்தவர்களென்று இருதயத் திற்சிறந்து
இவையறியவேண்டுமென்று எவருமடி தொழுதால்
அந்தவகை யறிந்தவரை யடிபணிந்து தொழுதால்
அவர்மனதிலிரக்கம் வந்தால ணுப்போலேவுரைப்பா
எந்தமட்டோ இறையருள்தா னெடுக்கமட்டும்போதும்
இதற்கதிகமானத்தவ மில்லையில்லை
வந்தவரேமனமறிந்து வருடமொன்று தெரிந்து
வளமுளபேராயிருந்தால் வரிசைவளமிருத்தி
வளமாக அறுநான்கு பிரிவுசொல்லித்திருத்தி
வரைந்தெழுத்து மூன்றுஞ்சொல்லி வகைபிரித்து
அந்தமூன்றில் கடையெழுத்தை யாதாமாக்கி
அதற்குமுதலதற்கடியு மதற்கடியும துவாம்
இதமாகரண்டுமது ஒன்றானபொருளை
இதற்கடியிதமாக இருதயத்தைமாற்றி
முந்தற்சொன்ன எட்டெழுத்தில் முடிவெழுத்தென்றியம்பி
முன்னேசொன்ன முடிவெழுத்தை கடையெழுத்தாற் தொழுது
வந்தமுதல்வகையெழுத்தை வடிவான எழுத்தாய்
வருமூன்றெழுத்தின்வள மொன்பதையுமறிந்து
முந்தமுந்தமுதலான முதலெழுத்தையுன்னி
மூன்றெழுத்தும்பிசகாமல் முடிந்துபின்னியுன்னி
அந்தரத்தில் மந்திரத்தை யுருபடுத்தும் விதத்தை
அடிபணிந்தார்க்கீந்தவித மருள்வோனே ஆசான்
இந்தவகையறியாத குருமாருக்குபிராம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment