Thursday, November 24, 2022
ஜீவனும் ஆன்மாவும் இரண்டா ஒன்றா
ஜீவனும் ஆன்மாவும் இரண்டா ஒன்றா?? – ரியான் அய்யா
வள்ளலார் இதற்க்கு விளக்கமாக சொல்லுவது என்ன என பார்க்கலாமா?... இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5. அதில் முக்கிய ஸ்தானம் 2. அவை யாவை?
1) கண்டம், 2) சிரம்
சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது.
கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷ ஜீவன்; இது இறந்துவிடும்.
மேற்படி தேகத்தில் பிரமபேதம் கீழும் மேலு மிருப்பதால், நாமடைய வேண்டிய பதஸ்தானங்கள் எவை என்றால்; அவை கண்டமுதல் உச்சி வரையில் அடங்கியிருக்கின்றன. மேற்படி பதங்களாவன சொர்க்க பூர்வமாக சதாசிவபத மீறாக வுள்ளன.
இதற்கு மேல் நாதாதி சுத்த மீறாக உள்ளன. கைலாசாதி பதங்கள் உந்திக்கு மேல் கண்ட மீறாக வுள்ளன; இது சாதாரணபாகம். நரக இடமாவன உந்தி முதல் குதபரியந்தம். கர்ம ஸ்தானம் குத முதல் பாத மீறாக வுள்ளது. இவைகளில் பிரமாதிப் பிரகாச முள்ளது. அனுபவிப்பது கண்டத்தில். இந்தத் தேகத்தில் எமனிருக்குமிடம் குதமாகிய நரகஸ்தானத்துக்கு இடது பாகம். மேற்படி தேகத்தில் ஆன்மா தனித்திருக்கும்; ஜீவன் மனமுதலிய அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.
அப்படியெனில் ஜீவன் என்பது முக்கியமாக இரண்டு வகைகளும், ஆன்மா என்பது முக்கியமாக ஒன்றுமாகும் என காணலாம் அல்லவா?. இனி ஏன் ஜீவன் இரண்டாக இருக்கிறது என அறியவேண்டாமா? அல்லாது ஏனையா மூன்று ஜீவன்களும் எவை எவை எனவும் அறிய வேண்டாமா?.
ஆன்மாவானது தனித்து இருக்கிறது என கூறும் வள்ளலார் ஜீவன்களில் முதலானது புருவமத்தியிலும், இரண்டாவது ஜீவன் கண்டத்திலும் இருக்கிறதாக சொல்லுகிறார் அல்லவா?. முதலாவது சொன்னது சாமானிய ஜீவனும் இரண்டாவது சொன்னது விசேஷ ஜீவனும் ஆக சொல்லுகிறார். ஆனால் இவை இரண்டையும் பரமாத்மா எனவும் ஜீவாத்மா எனவும் பெயரிட்டு அழைக்கவும் செய்கிறார், அப்படித்தானே?. .அப்படியெனில் இவை ஜீவனா அல்லது ஆத்மாவா என கேட்க்க தோன்றுகிறதல்லவா?.சரிதானே??
ஆனால் வள்ளலாரோ மீண்டும் சொல்லுவது என்னவென்றால்,” ஆன்மா தனித்திருக்கும் ஜீவன் மன முதலியு அந்தகரணங்களின் மத்தியில் இருக்கும்” என்பதல்லவா?. .அப்போது தெரிவது என்னவென்றால் தனித்து இருக்கின்ற ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து செயல்படும்போது அது ஜீவான்மா எனவும், அதே போல அந்த ஆன்மாவானது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருக்கின்றபோது அது பரமான்மா எனவும் எனவும் கொள்லப்படுகிறது. அல்லவா?.
ஆனால் நமக்கு ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு அல்லவா ஆன்மாவானது சேர்ந்து இருக்கிறது?... அல்லாது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருப்பதில்லையே?.. அப்படித்தானே?.. ஆகையினால் தானே கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்திருக்கும் நாம் கண்ட ஜீவன் இறந்து போகும் போது இறந்து போகின்றோம்?. .சரிதானே?..
ஆகையினால் கண்டத்தில் இருக்கின்ற ஜீவன் இறந்து போகாமல் இருப்பின் நாமும் இறந்து போகாமல் இருக்கலாமல்லவா?.. அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கண்டத்து ஜீவனை புருவமத்தியில் இருக்கும் ஜீவனோடு சேர்ப்பது என்பதல்லவா?. .சாகாதிருப்பது தானே சன்மார்க்கம்?.. செத்துப்போவது சன்மார்க்கமாகாதே..... ஆகையினால் செத்துப்போகும் ஜீவனை செத்துப்போகாமல் செய்வது தானே சுத்த சன்மார்க்கம் ?... அதனால் கண்டத்து ஜீவனை புருவமத்திக்கு கொண்டு செல்வோம் தக்க ஆசான் துணையுடன். வாழ்க வள்ளலார் மலரடி.
-- நன்றி ரியான் அய்யா அவர்கள் 🙏
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment