Thursday, November 24, 2022
சித்த வித்தையும் வாசி யோகமும் ஒன்றா?
====சித்த வித்தையும் வாசி யோகமும் ஒன்றா?===
சித்தவித்தை என்பது ஹடயோகவில் உஜ்ஜயீ என அழைக்கபடுகின்றது.இது முற்றிலும் ஹடயோக முறை பிராணாயாமம்.தெரியாத பசங்க ஏதோ புதுசுண்ணு நம்ம சிவானந்தபரமஹம்சர் கண்டுபுடிச்சதுண்ணு கதை அளப்பான்.https://www.youtube.com/watch?v=h-91SAyQ5QQ&list=PLzndesNO5XwZz0n4p9BQ4nga2qcdE8IHJ&index=2&t=0s
https://www.youtube.com/watch?v=h-91SAyQ5QQ&list=PLzndesNO5XwZz0n4p9BQ4nga2qcdE8IHJ&index=2&t=0s
கீழே விளக்கபடுபவை தான் சித்தர்களின் வாசி யோக முறை
////சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில் முக்திக்கு மூலமது=ஒளவையார்//
//வாமத்தால் ஈரெட்டு மாத்திரை பூரித்து ஏமுற்ற முப்பத்திரெண்டும் ரேசித்து காமுற்ற பிங்கலை கண்ணாக இவ்விரண்டோமத்தால் எட்டெட்டும் கும்பிக்க உண்மையே=திருமந்திரம்//
//பிங்கலையாவதி ரேசகத்தை வளர்பூரகந்தன்னில் இடத்தூதி நங்களை நந்தியில் கும்பிக்கவே சிவயோகமிதல்லவோ ஞானப்பெண்ணே=கொங்கனர்//
//காணவே ஓங்காரம் பிரதானம் தான்
கருவான ஆதார மூல பீடம்
தோணவே மூலம்மென்ற ஆதாரத்தில்
துலங்கி நின்ற ஆவியட வாசியாச்சு
பேணவே ஆவிஎன்ற வாசிஎறி
பெருகி நின்ற ஆதாரம் கடந்தபபாலே
பூணவே ரவி மதியில் சுடரில் சென்று
புத்தியுடன் பூரணமாய் தீபம் பாரே
-அகத்தியர் அந்தரங்க தீட்சை விதி பாடல் 32//
//கூறவே மூலத்தில் வாசி கொண்டு
கோழி முட்டை போலிருக்கும் முக்கோணத்தில்
மாறவே இடை பின்னாய் இரண்டும் ஓடும்
மற்றொன்று சுழிமுனைதான் மகிழ்ந்து கேளே
-அகத்தியர் அந்தரங்க தீட்சை விதி பாடல் 353//
//வாறான பிராணாயம் வாசிகேளு
வகையான பூரகமே முப்பத்திரண்டு
ஆரன கும்பகமே அறுபத்திநாலு
அட்வான ரேசகமே பதினாறப்பா
கூரான மாத்திரையின் வகைகல்ளெல்லாம்
குறிப்பாக அறிந்து கொள்ளு மாத்திரைசொல்வேன்
தாரான தலைசுத்தி நொடிப்பதப்பா
சமுசயங்கள் ஒன்றுமில்லை மாத்திரையும் மொன்றே
-அகத்தியர் அந்தரங்க தீச்சை விதி பாடல் 346//
//வாசிஎன்ற இடகலையில் பூரனம்தான் ரெண்டு
வரிசையுள்ள சுளினையுள்ளே கும்பகம்தான் நாலு
தேசிஎன்ற பிங்கலையில் ரேசகம் தான் ஒன்று
அகத்தியர் வாத சௌமியம் பாடல் 1.063//
//பாரப்பா பிராணாயா மஞ்சுங் கேழு
பதிவான ரேசக பூராக கும்பகம்
நேரப்ப சவுபீசம் நிற்பீசம் தான்
நிசமாக பிராணாயா மஞ்சும பாரு
பேரப்ப பிராணாயா மஞ்சும பார்த்தால்
பெருகிநின்ற சிவயோகம் உறுதியாச்சு .
அகத்தியர் பூரனகாவியம் பாடல் 47//
//தங்கியதோர் சவபீசாம் மந்திரத்தில் லூடல்
விரைந்துமே நிற்பீசம் மந்த்திரத்தை விட்டு
வெளியிலே பூரித்தல் மெதுவிலேதான்
போகர் 1000 பாடல் 311//.
சித்த வித்தை தான் வாசியோகம் என சொல்லிகிட்டு திரியும் சித்தவித்யார்திகளுக்கு சமர்ப்பணம், வந்து விளக்கம் சொல்வார்களா என்ன?.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment