Thursday, November 24, 2022

பர அறிவு

==========பர அறிவு======= நீ எங்கிருந்து வந்தாய் மகனே...எங்கே செல்கிறாய்.... நில்....கவனி....நிச்சயம் அதை நீ உணர்வாய்....அறியப்படவேண்டியது உன்னுள் இருந்தால் அது உன்னுள் ஏன் மறைந்து இருக்கவேண்டும்?...இருளான ஆன்மாவுக்குள் ஒளியான இறைவன் ஒளிந்திருப்பது எங்ஙனம்?...அதனால் சிந்திப்பாயாக...இறைவன் ஆன்மாவுக்குள் மறைந்து இருக்கமுடியாது......(1) அவனுக்குள் நீ இருக்கிறாயா அல்லது உன்னுக்குள் அவன் இருக்கிறானா?....மகனே நீ கவனி.....அவன் என்று சொல்வதற்க்கு இங்கு எவரும் இல்லை என கண்டாய்.....ஆனால் நீ இருக்கிறாய்.....ஆனால் உன்னையே நீ உருவாக்கி கொள்ளவில்லையே?....அப்படியெனில் நீ எங்கிருந்து வந்தாய் மகனே ...எங்கே போகிறாய்?.... எதற்க்கு வந்தாய் என அறிந்தால் நீ யார் என அறிவாய்....(2) தனியாக நீ வரவில்லை என காண்பாய்....எனில் தனிமை எப்படி உனக்கு உறுதுணையாகும்....தனிமையே உன் உயிர்ப்பு எனில் இயற்கையில் ஒன்றி ஏன் நீ பிறந்தாய்?...நில் கவனி...மகனே உன்னை நீ அறிவாய்...உன்னை நீ இழக்கும் போதே உன்னை நீ அறிகிறாய்......நீ இருக்கும் போது உன்னை நீ அறிவதில்லை....உன் தனிமையே நீ என உணர்வாய்..அதனால் உன் தனிமையை கொன்றுவிடு.....(3) உன் தனிமையில் நீ உன்னுக்குள் செல்கிறாய்... இருளுக்குள் உனக்கு என்ன இருக்கிறது தேடுவதற்க்கு?...இருளுக்குள் தேடுபவன் இறைவனை அடைவதில்லை கண்டாய்....ஒளிக்குள் தேடுபவனே இறைவனை காண்பான்... ஏனெனில் அவர் ஒளியினில் வசிப்பவர்....அவர் வசிக்கும் இடத்தினிலன்றோஅவரை காணமுடியும்?.அவரை அவர் இடத்தினில் தேடுவாயாக மகனே...(4) உன்னை சுற்றி கவனி...நீ எங்கிருக்கிறாய் என காண்பாய்...நீ ஒளியிலே இருக்கிறாய் ஆனால் அதை அறியாமல் கழிக்கிறாய்...உன் இருளே உன்னை அறியவொட்டாமல் செய்கிறது....ஆதலால் இருளான ஆன்மாவை விட்டுவிடு...ஒளியான இறையை கண்டடை...நில் மகனே கவனி....உயிரற்ற ஆன்மா உனக்கெதற்க்கு? ..உயிருள்ள ஒளியினையே அறிவாய் கண்டாய்....(5) உயிர்ப்புடன் இருப்பதற்க்கு உயிர்ப்பையே அணைவாய்...உன்னிலில்லா உயிர்ப்பை உன்னைச்சுற்றி காண்பாய்...நில் மகனே கவனி...நீ தனிமையில் இருக்கவில்லை...ஒளியிலே இருக்கிறாய்....உன் ஆன்மாவை விட்டுவிடு ஒளியினை காண்பாய்...உன்னை சூழ்ந்த உயிராதியை காண்பாய்...ஆன்மாவல்லாத உயிரொளியை காண்பாய்...ஆன்மா இல்லா உயிரது காண்..(6) உயிரான உயிரதுதான் ஓசையாகும்...உணர்வான நாதமுதம் அதுவேயாகும்...துறையான மரத்தினுக்கோர் ஏணியாகும்...சொல்லரிய சூட்சமது பரத்திலாடும்...பயிரான பயிர்வகைகள் பரத்திலாகும்...பரமென்றால் அம்பரமும் அப்பாலாகும்...அப்பரத்தின் படித்துறையை படித்துறையே...உறையாத மனமதுக்கு உரையதாக... உயிரான ஒருமொழியே ஓமதாமே...(7) நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.

No comments:

Post a Comment