Thursday, November 24, 2022
செத்தவன் ரகசியம்
====செத்தவன் ரகசியம்====
ஒரு விஷயம் ரகசியம் என்றால் அதை மூடி வைக்கிறோம். மூடி வைக்கபட வேண்டியதே தான் ரகசியம். அப்போ செத்தவனுக்கு எதை மூடி வைக்கிறோம் என்றால் அவன் கண்ணையே அல்லவா?.
செத்தவனின் கண்ணை மூடி வைப்பது அதன் ரகசியம் வெளிப்படாமல் இருக்கவே, ரகசியமாக இருக்கவே. எந்த ரகசியம் என்றால் அவன் செத்தானா அல்லது ஜீவபிரயாணம் ஆனானா எனும் ரகசியம்.
செத்தவனுக்கு கருவிழி இருக்காது என்பது ஞானபாரவான்களின் கூற்று. ஆனால் இங்கோ செத்தவனை சந்தனம் பன்னீர் பூசி அவன் கண்ணை ரகசியமாக மூடி யாரும் அடையாளம் கண்டுவிடாதபடிக்கு மறைத்து ஜீவபிரயாணம் ஆகி விட்டான் என பத்தடையாளம் சொல்லி தம்பட்டம் அடித்துகொண்டிருக்கிறார்கள் கூறு கெட்ட குமண்டிகள். அய்யகோ..
கண்மூடி வித்தையெல்லாம் மண்மூடி போக விண்நாடி வந்தலவோ விண்ணாடி போக.. பத்து அடையாளம் இருந்தும் என்ன பதினெட்டு அடையாளம் இருந்தும் என்ன, அடையாளம் இருக்கு என சொல்லுவது அந்த அடையாளமானதை எல்லோரும் கண்டு இது மெய்யான அடையாளம் தான் என நிர்ணயிக்கவே அல்லவா?.
அதை விடுத்து அடையாளம் இருக்கு என சொல்லுபவர்களே அந்த அடையாளத்தை யாரும் சோதித்து பார்க்ககூடாது, சோதிப்பது கொடுஞ்செயல் என தடுத்து வைத்தால் அடையாளத்தினால் ஆன பயன் யாது?. சும்மா இருக்கு இருக்கு என கோரஸாக சொல்லிகிட்டு இருக்கலாமே ஒழிய வேலைக்கு ஆகாது அல்லவா?
உன்னிடம் அடையாளம் இருக்கிறது எனில் அதை வெளிப்படையாக காட்டு பார்க்கலாம் என ஒருவன் கேட்டால் நீ கூமுட்டைத்தனமாக கோவம் கொள்ளுவது ஏனோ?. ஏன் உன்னிடம் அதை வெளிப்படையாக நிரூபிக்க இயலாமை உள்ளது எனத்தானே பொருள். சரி, அப்படியே விட்டுவிடுவோம் அந்த பரிசுத்த அடையாளங்களை என வைத்துகொள்ளுவோம். ஆயினும் இந்த கருவிழியின் அடையாளமானது உன் பரிசுத்த அடையாளத்தில் ஒன்று அல்ல அன்றோ. இதையாவது வெளிப்படையாக வெளிப்படுத்தவோ சோதித்து பார்க்கவோ நீ அனுமதிக்கலாம் அல்லவா? அப்புறம் ஏன் ஜீவபிரயாணம் என சொல்லிகொண்டு கண் இரண்டையும் மூடி வைத்திருக்கிறாயாம்? என்ன??. மெய்யான பத்து அடையாளங்களோ பதினெட்டு அடையாளங்களோ நாலு அடையாளங்களோ ஒண்ணாவது இருக்கிறதை பார்த்தால் அதை விட பெரும்பேறு என்னவாக இருக்கும்.. அது அருமையே தான். ஆனால் செத்தவனை எல்லாம் பத்து அடையாளம் இருக்குண்ணு முத்திரை குத்தினா அது நிச்சயம் வலியே தான். ஆயினும் செத்தவனுக்கெல்லாம் சலாம்.
நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment