Thursday, November 24, 2022
மெய்ப்பொருள்
*மெய்ப்பொருள்*
மெய்ப்பொருள் என்றால் என்ன?
அது கண்ணால் காணக்கூடியதா? அல்லது உணரக் கூடியதா?
அந்த மெய்ப்பொருள் மனுத்தூலமெடுத்த அனைவருள்ளும் நின்று விளங்குகின்றதா?
அல்லது அவதார புருஷர்களிடம் மட்டுமே உள்ளதா?
நாம் இவற்றிற்கெல்லாம் விடை தேடி அலைய வேண்டாம் என்ற பெருங்கருணைப் பேரிரக்கத்தால்......
அதாவது வள்ளலார் அவர்கள் .......
*ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன்*
என்றது போல.....
நமக்காக நம் பிதாவானவர்கள் ஆதிமெய் உதய பூரண வேதாந்த முகப்புப் பாவில்....
*னீதி எனும் பொருள் ஆன மனுக்குலம்* என்றுதான் அருளியுள்ளார்கள்....
னீதி எனும் பொருள் என்று எடுத்துக் கொண்டாலே...
னீதிதான் பொருளாக உள்ளது என்றாகின்றதல்லவா?
அந்த னீதி என்ற மெய்ப்பொருளை தன்னகத்தே ஆனவன் தான் மனிதன் என்று அருளியுள்ளார்களல்லவா?
னீதியென்ற பிடரிக்கண் திறக்கும் காலம்
என்றும். ...
அந்த
னீதியுடன் எனையாண்ட குருபரன் தாள்
என்றும்
னீதியாய் அனுதினம் கருப்பில் வெள்ளை னேசமதே குடியாய்
என்றும்
னீதியில் னடக்க னித்தியன் ஆவாய்
என்றும்
ஆதிதன் சோதி னீதினன் னெறியால்
என்றும்
னீதினீரளித்த ஞானம் னீடூழி காலம் வாழ்க
என்றும்
னீதிவழி பற்றித் தாவித் தொடர்ந்து வெளியாவதற்கென னிற்கும்
என்றும்
னீதி னிறைந்த பரம்பொருளே நித்தமென் சித்தத் துறைந்தவரே
என்றும்
ஊழித்தீர்ப்பு னீதிகொண்டு வந்து னிற்கும் உத்தமியே என் னாவில் னின்று உரையுந்தாயே
என்றும்
ஆதிபராபரை னீதி தராதல அந்தரி சுந்தரியே
என்றும்
னீதினகர்மணி பரைவேற்கண்ணி னித்திரை யற்றவளே
என்றும்
பிரளய னீதி தெளிவுறுங்கோல்கை கொண்டிங் குற்றவளே
என்றும்
னீதி னாமம் வேறு பூண்டு பூண்டு னீனிலத்தில் வந்த காலந்தோறும்
என்றும்
னீரேதுணையல்லால் எங்களுக்குத் தாயே தனிக்குண னீதியரே
என்றும்
னெறினீதித் தலையவர் அறம்வளர் சன்னிதி
என்றும்
சித்தந்தனில் உத்யோவனம் னித்தந்தணி யாதனிறை
னீதினிறைந்து னிறைந்திருக்கும்
என்றும்
னீதிச்சொல் மணம் வீசும்
மாதம் விடாயற்ற ஆதிப்பெண் அவள் வேண்டுமா
என்றும்
ஊழிவிதி னீதித்தீர்ப்பது வந்துவிட்ட உற்றகலியுகக் கடை காலந்தன்னிலே
என்றும்
னீதியுடல் ஆதியெடுத்து
கடைக்காலம்
னின்றிசைய எண்டிசைக்கும் தென்றிசையிங்கே
என்றும்
*ஆதிமார்க்கனாத னீதி சாதிபேதம் தீர்த்த சேதி*
என்றும்
*னீதிப் பெருங்குடி மாலைப்பானைப்பலி பொங்கலோ பொங்கல்*
என்றும்
*னடுனீதி யுகம்புரக்கும் பூவண திடதீர்க்கத் தரிசனம் னடைபெறும் காட்டிலே*
என்றும்
*ஆதித் தலைனாளில் னான் அறிந்து தொட்ட னீதி மெய்யை*
என்றும்
*ஆண்னீதிப் பெண்ணகமாய் அருண்மேனி வந்து னின்ற*
என்றும்
*சென்னெறி னீதிக் குன்றேறியே*
என்றும்
*ஆதியின் னீதி யுகம்புரக்கும்*
என்றும்
*னீந்திப் பிரளயத்தை னீதிக்கரை ஏறவென*
என்றும்
*னலிவுற்ற னீதிக்கண் தெளிவுற்றுப் பெலம் ஏற*
என்றும்
*வேதனெறினீதி விளங்க உலகெங்கும்*
என்றும்
*இறைதிரு இறுதி னீதினடவு வைப்பு*
என்றும்
*பிரளய னீதி னடவு கோட்டு எண்ணத்திற்கு ஏறி வந்து விட்ட நாளையிலே*
என்றும்
மேற்கண்டவாறு நம் ஆண்டவர்கள் சொல்லாட்சியைக் கையாண்டு அருளியுள்ளார்களல்லவா. ......
இதைக் கூர்ந்து கவனிக்கும் விதத்தில்
னீதி என்ற மெய்ப்பொருளானது நம்முள் குடி கொண்டுள்ள இறை சக்தியான பிரணவப் பொருளையும்....
அதைக் கைப்பற்றி ஜோதிமயமானவர்கள் தான் பெரியோர்கள் என்பதையும் நன்கு உணர முடிகின்றதல்லவா? நான்
ஒருதலைமுறைக் காலம் உன்னில் குடியேறியிருக்கின்றேன் ...னீ என்னை திரும்பிப் பார்க்கமாட்டாயா என்றும்
மனுவினுடைய ஜீவ குகைதோறும் வீற்றிருக்கும் மருவில்லா குகன் என்றும்...
நாம் சிவமாய் வாழலாம் நாடிப்பாரே என்றும்
சாயுச்ய அரசனென வருவாய் என்போல் என்ற ஆசிர்பாதத்தையும்....
உற்றுப் பார்க்கையில் அந்த மெய்ப்பொருளானது மனுத்தூலமெடுத்த அனைவருள்ளும் பொதிந்துள்ளது....
அதை திருப்பிக் காட்டி எடுத்துத் தரக்கூடிய பெரியோர்களாக நம் ஆண்டவர்கள் அவதரித்தார்கள் என்பதை ஒலினாடாவில் அருளியுள்ளதோடு
அவர்கள் மான்மியத்தில் 300 ம் பக்கத்தில்
*என்னுடைய உன்னுடையதுமாகிய அசல் தெய்வத்தைக் காட்டி*
என்று அருளியுள்ளார்கள்.
பாவவிமோசனத் திருமந்திரத்தில்
*நாங்களாகிறவர்கள்... உங்களோடு அறிந்து செய்த பாவங்களைத் தொட்டும்*
என்பதை நோக்கும் போது அந்த மெய்ப்பொருள் தான் நம்முள் பர ஆன்மாவாக இருந்து நம்மை வழி நடத்திச் செல்கின்றது....
ஆனால் அந்த ஜீவனை அவாவோடு தாவச்செய்து குற்றச்செயல்களை புரிய வைப்பதும் அல்லது மேல் நிலையிலேயே இருந்து நன்மைகளைக் கைக்கொள்வதும் அவரவரின் எண்ணம் சொல் செயலால் விளங்குகின்றது.
இதைத்தான் மேலே இழுத்தால் சுல்தான்
கீழே இழுத்தால் சைத்தான் என்றும் பெரியோர்கள் அருளியுள்ளார்கள்.
......
*ஜீவனே சிற்றம்பலப் பொருளதாகும்*
என்ற சிவானந்த போத வரிகளைப் போல் நமக்குள்
.....
வாசனை கேள்வி இருகண் வாய் எவைக்கும் வல்லமை அளிக்கும் அக்கண்ணாக..... அதாவது மூன்றாவது கண்ணாக......
சர்வத்திற்கும் தாய்க்குடிலாக.....
தொந்திக் கணபதியாக,
மணிவயிராக,
.....
மனிதனுடைய எண்ணத்தின் பிற்புறப் பிடரியில் னிறை னீதி ஆசன பீடமிட்டிருந்துவரும்
வஸ்து வித்தாகிய அது
கோடி சூரியப்பிரகாச அதியரசு கிரணமாலியாயும் பிரம்ம சொரூப இதய மேருகிரி அரசு தவசு மாலாயும் சுத்தாவிச் சித்து வித்தான
முத்து ஒத்தை உருவாயும்
அணுவினுக்கு அணுவாகவும் அகண்டம் அனைத்தினுக்கும் அதனை விழுங்கிவிடும் அகண்டமாயும் நிலையுற நின்று விளங்கும் அம்மகா மகான்மிய மகத்துவ வித்தினை இங்கே நாம் எழுதாத எழுத்தென் றுரைக்கின்றோம்.....
ஓதாமலோதும் வேதமதென்றும் கூறுவோம்.....
அதனையே வித்தில்லா வித்தென் றுரைப்போம் பிரவியரே....
என்று மான்மியம் பக்கம் 307 ல் அருளியுள்ளார்கள்.
கோடாயிதக்கூர் பக்கம் 22ல்
ஜீவன் பஞ்சு இழை. மயிரிழையைக் காணிலும் எத்தனையோ மடங்கு சிறியது .அந்த இழையிலே ஒரு துளை .அதனுள்ளே ஆவியாக னிற்பது,னுண்ணியதினும் ணுண்ணியதானது ஜீவன். அதனுடைய உசும்புதலாலேயே இந்தத் தேகாதியந்தமும் அசைகிறது. அது ஆத்ம மர்ம ஜலக்கடலின் மேல் இருந்து கொண்டு சர்வ சக்தியோடு, பிரிதொன்றின் துணையின்றி, தேகாதியந்தத்திற்கும் உற்பனத் தாயாக, உசுப்பி நடத்துவதாக விளங்குகின்றது.
பஞ்ச பூதமும் அதனிடமிருந்து கடன் பெற்றே தேகமாகிய இந்தக் கூட்டை கட்டிற்று.
அது மயனத்தில் மயனமாக இருந்து கொண்டு சர்வத்திற்கும் தாய்க்குடிலாகவும்,
புராதன காலந்தொடங்கிச் சர்வத்துக்கும் காரண ரூபமாகவும், சர்வ சத்துக்களுக்கும் பெட்டகமாகவும்,
தொந்திக் கணபதியாகவும்
மணிவயிராகவும் வாய்த்திருந்து, சகலத்துக்கும் உதவுவதான
பெரு வயிருடைய
பஞ்சபூத கணத்தலையரசன் திருத்தலமாகவும் இலங்கி மிலிர்வது......
என்று பிரம்மப்பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள். .....
மெய் இருதயமாம் கல்பை விளங்கிடத் தலமெய்யாகும்....
என்றும் அருளியுள்ளார்கள். ...
அப்ப அந்தக் கலிமாப்பொருளான திருச்சிற்றம்பலப்
பொருளே, சிவமயப் பொருளே நமக்குள் மெய்ப்பொருளாக னாதமாக னின்று விளங்குகின்றது என்பது வேத சாட்சியாக விளங்குகின்றதல்லவா?
இப்படியல்லாமல் நம்மிடம் ஒன்றுமில்லை......
எல்லாம் அவர்களிடம்தான் உள்ளது என்று தர்க்கம் பண்ணினால் அதற்கு வேதம் சாட்சியாக நின்று விளங்காது.....
இதைத்தான்...
அனுபவிக்கின்ற கருவியையும் நமக்குள் வைத்து. .. அனுபவிக்கக்கூடிய பொருள்களையும் வெளியில் வைத்து. ...
அந்த
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்
இவைஐந்தின் வகைதெரிவான் கட்டாக விளங்குவதுதான் அந்த மெய்ப்பொருள் என்றும்
தெய்வத் திருக்குமாரர் ஸ்ரீலஸ்ரீ சாலை யுகவான் அவர்கள் அருளியுள்ளார்கள். ...
ஆக ....
எல்லாப் பாஷைகளிலும்
இலங்கும் ஏகாட்சரமாக
விளங்குவதே மெய்ப்பொருளாகும்....
மேலே மெய்ப்பொருள் பற்றி சிந்தித்தோமல்லவா.......
அது யாருக்கு வேண்டும்?
யாருக்கு வேண்டாம்.....
நம் ஆண்டவர்கள் ஒலினாடாவில் ......
மனிதனுக்கு இல்லாத கயிலாயம் வேறு யாருக்கு?
சிவனோட சித்தப்பன் பிள்ளைகளுக்கா....?
யாருக்கு வேண்டும்... யாருக்கு வேண்டாம். ....
என்று அருளியுள்ளார்கள். ...
அப்ப அந்த மெய்ப்பொருளை அறிந்தால்தான்
கயிலாயம் என்னவென்று அறிய முடியும்.
அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் மற்ற ஐம்புல நுகர்ச்சிகளை ஒரே மாதிரி அனுபவிக்க வைத்துள்ள இறைவன்.......
இந்த மெய்ப்பொருளையும்
இந்த உலகத்தில் உள்ள மனுத்தலைகள் அனைவரும் அறிய வேண்டும் என்றுதான் திருவுளம் பூண்டார்கள்.
தௌகீது காமில் என்ற பகுதியில். .....
னல்லகதினிலை னிலவுலகெலாம் விளங்க...
இதை
எல்லவர்க்கும் சொல்ல என்றன்
இச்சை மதி குதிக்க. ...
இச்சை குதி குதிப்போர்க் கெய்தும் சமதானி
என்றருளியுள்ளார்கள்.
யாரெல்லாம் இந்த மெய்யின்பால் இச்சை கொண்டு தேடி வருகின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த நல்ல கதினிலை கிடைக்க வேண்டும் என்பது நமது மார்க்கனாதப் பெருமானவர்களின் இச்சையல்லவா.....
மேலும்
ஞானமுறையீட்டில்....
எல்லோருமே இந்த இன்பம் அறிந்திட என்றனிட னாட்டம்...
ஏக பராபரப் பூரணமே தினம்
என்னிதயத் தோற்றம் என்றும் அருளியுள்ளார்கள் என்றால் ....
இது வெறும் வாய் வார்த்தைகளா?
அவர்களின் உத்திரவு அல்லவா .....
அப்பேற்பட்ட மகோன்னத...
பூரண னிலையையே இனாமாக வழங்கத் திருவுளம் பூண்டவர்களல்லவா நம் தந்தை.
நமது மூலமந்திரத்தில்...
சதுர் யுகங்கோடிகால மக்கள் இடத்திலுமுள்ள சர்வ மூலமந்திரத்தையும் னிருபனை செய்ய வந்த மகா ஆண்மையர் யுகவான் சாலை ஆண்டவர்களே முத்திபாலிப்பு என்றுதானே தினமும் உச்சரித்து வருகின்றோம்....
அது செயலாகவல்லவா இருக்கின்றது. ...
தினமும் காலை 7 மணிக்குச் சொல்லும் மகா சங்கல்ப மந்திரத்தில்.....
யதார்த்த னன்மனத்தினர் யாராக இருந்தாலும்....
மெய்வழியில் சேர்ந்து தேவப்பிறப்பில் பிறந்து ஆகிக்கொள்வதற்கு ஆண்டவர்களின் ஆசிர்பாதம் என்றுதானே நம் ஆண்டவர்கள் கருணையுடன் எடுத்து நாம் வைத்து தினமும் சொல்லி வருகின்றோம்.....
அப்ப
நம் ஆண்டவர்கள் .....
இந்த மெய்ச்செயலானது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்தான் என்றோ. ... தனது சொந்த பந்தங்களுக்கு மட்டும்தான் என்றோ உத்தரவிடவில்லை. ...
அந்த மதிமாமனச் செம்மல் அவர்கள் நம் மீது இரக்கம் கொண்டு.....
நாம் இந்த
மனுத்தூலமெடுத்து அறிவுகாலம் வந்தும் நபுசுடைய வணக்கத்தைச் செய்துகொண்டும் ....
ஐம்புல நுகர்ச்சியில் வெளியிலே ஓடிக்கொண்டிருந்த நம் அனைவரையும் தமது அமுதனா அருள் வர்ஷிப்பு மூலம் உள்முகமாகத் திருப்பி மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பதிப்பித்துள்ளார்கள்...
இந்தச் செயல் யுகங்கோடிகாலமும் நிலவுகின்றது. .....
ஒரு காலத்தில் ஒரு மாதிரியும் இன்று வேறு மாதிரியாகவும் இல்லை...
அது
பிறந்தது இனி இறவாது பேசும் பஞ்சாட்சரமாக இருந்து கொண்டு அருளை வாரி இறைக்கின்றது.
இந்த மெய்வழிக்கு குருகிய வட்டத்தைப் போட்டு யாரும் திருப்தி அடைந்து விடாமல். ...
இதை உலகம் முழுவதும் உள்ள அனைத்து மனுத்தலைகளும் பெற. ..
அந்த ஆகாய வெளி வீதி
விளையாட்டு யோக
குணாதீதர்
அருயுள்ளதுபோல் ....
அந்த உத்திரவை நாம் சிறமேற் தாங்கி செயல்படுத்துவோம்...
பலன் கொடுப்பவர்கள் நம் ஆண்டவர்கள். ...
அதையல்லாமல் மற்றவர்களைக் குறை கூறுவதன் மூலமோ underestimate பண்ணுவதன் மூலமோ பெருமை கிடைக்கும் என்று எண்ணினால்....
அதற்கும் நம் ஆண்டவர்கள் தான் பலனை அளப்பார்கள்....
பெரியோர்க்குத் தொண்டு செய்வாரைத் தடுத்திடும் பேதையரும்
சரியான னடுனிலை சார்ந்தவர்க்கு அல்லல் சமைப்பவரும் பரிவான தீட்சை கொண்டாரை மறிக்கும் அப் பாதகரும்
எரிவாய் கொடுனரகில் எண்ணில்துயரில் இருப்பரன்றோ...
ஆகையினால் னரியதன் வால் கொண்டு கடல் ஆழம் காட்ட முற்படாமல்
அவரவரும் கடைத்தேற
நம் எண்ணம் சொல் செயலில் நன்மையை மட்டுமே செய்து நற்கதிக்காக நம் தந்தையிடம் முறையிடுவோம்.
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்...
எப்பேர்ப்பட்ட பாவச்செயல் புரிந்திருந்தாலும் அவனைப் பாவியென்று சொல்லாதே என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...
அவர்கள் கருணாமூர்த்தி அல்லவா. ..
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
நாம் நமது கடமையைச் செய்வோம்.
அவரவர் கடைத்தேற வேண்டியவர்களாக உள்ளோம்.
குரு வாழ்க குருவே துணை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment