Thursday, November 24, 2022

உள் என்பதேது ? வெளி என்பதேது ?

=== உள் என்பதேது ? வெளி என்பதேது ? === சமீபத்தில் ஒரு நண்பர் முகநூல் விவாதத்தினிடைடே “கடவுள் உள்ளே இருக்கிறாரா? வெளியே இருக்கிறாரா?” என கேள்விமேல் கேள்வியாக கேட்டுகொண்டே இருந்தார்.  அவருக்கு நேரடியாக அதன் பதிலை சொன்னால் புரிந்து கொள்ளமாட்டார் என்பதினால் பதிலேதும் சொல்லாமலேயே இருந்துவிட்டேன். சொல்ல சொல்ல குழப்பம் தான் அதிகரிக்குமே ஒழிய புரிதல் என்பது வராது, ஏனெனில் உள்ளும் புறமும் அற்ற ஒன்றை உள் என சுட்டிகாட்டவா அல்லது வெளி என சுட்டிகாட்டவா?. மற்றொருமுறை இதே கேள்வியை ஒருவர் முன்னம் எழுப்பினார், அப்போது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன், “ஐயா நீங்கள் கடவுளுக்கு உள்ளாக இருக்கிறீர்களா, இல்லை கடவுளுக்கு புறம்பாக இருக்கிறீர்களா?” என. அவர் சற்று ஆலோசித்து விட்டு பதில் சொன்னார், "நாம் எல்லோரும் கடவுளுக்கு உள்ளாகத்தான் இருக்கிறோம்" என.அருமையான பதில் அவருடையது. அதற்க்கு மறுபடியும் சின்ன கேள்விகணை பாய்ந்தது, "அப்படியெனில் கடவுள் உங்களுக்கு வெளி அல்லவா?” .. அவர் பதில் சொல்லமுடியாமல் விழித்தார்.  கடவுளுக்கு உள்ளாக நாம் இருக்கிறோம் எனில், நமக்கு வெளியாகத்தானே கடவுள் இருக்கமுடியும், அல்லவா என்றேன். அவருக்கு நான் சொல்வதும் புரியவில்லை, அவர் சொன்னதும் புரியவில்லை. புரிந்தவர்கள் நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள் என நம்புகிறேன். நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.

No comments:

Post a Comment