Thursday, November 24, 2022
உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கு -
உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கு -
எழுத்துகள் தோன்றுமிடமே உயிர் இயங்குமிடமாகும். எழுத்தும் இசையும் தோன்றுமிடம் ஒன்றேயாகும். 5 மூலாதாரத்திலிருந்து எழுகின்ற எழுத்தின் ஒலியை இசை என்றும் பண் என்று பஞ்சமரபு கூறுகிறது.
"எழுத்தெனப் படுப
அகரமுத னகர விறுவாய்
முப்பஃ தென்ப" - நூன்மரபு. 1
அகரம் தானும் இயங்கித் தனிமெய்களை இயக்குதற் சிறப்பான் முன் வைக்கப்பட்டது. னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது என்பர் (இளம்பூரணம். பக்.26)
உடல் இயங்குவதற்கு ஏதுவாகிய அகரத்தை தொடக்கத்திலும், வீடு பேறடையும் ஆண்பாலைக் குறிக்கும் னகரத்தை இறுதியிலும் கொண்ட எழுத்துகளின் வைப்புமுறை அமைந்துள்ளதால் தொல்காப்பியம் ஓக முறைகளையே முதலாகக் கொண்டுள்ளது எனலாம்.
தமிழ் எழுத்துகள் முப்பது என்னும் அவ்வெண், திங்கள் ஒன்றுக்குரிய நாள்களைக் குறிப்பதாகும். உடம்பிலுள்ள உயிர் அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையிலும், பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலும் உள்ள முப்பது நாள்களும் உடலில், ‘அமுத நிலைகள்’ என்னும் உயிரின் சுழற்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அதன் சுழற்சி, ஒவ்வொரு நாளும் உடற்பகுதி ஒவ்வொன்றிலும் நின்று செல்லும் என்று தமிழ் மருத்துவம் குறிப்பிடுகிறது. உயிரின் சுழற்சியை குறிக்கும் நாள்களின் எண்ணிக்கையைக் குறிக்க எழுத்துகள் முப்பதாக அமைந்துள்ளன எனலாம்.
உயிரெழுத்து ஒலிகள்[தொகு]
(ச ரி க ப த என்னும் ஐந்து ஒலிகளையும் ச ரி க ம ப த நி என்னும் ஏழு ஒலிகளையும் சேர்த்து பன்னிரண்டு ஒலிகள் இசையொலிகளாகக் கொள்ளப்படுகின்றன.)
அ இ உ எ ஒ ஆகிய ஐந்து குற்றொலிகளையும் ஆ ஈ ஊ ஏ ஓ ஐ ஔ ஆகிய ஏழு நெட்டொலிகளையும் சேர்த்து உயிரொலிகளைப் பன்னிரண்டு எனத் தொல்காப்பியம் குறிக்கிறது.
குற்றொலி ஐந்தாகும் போது நெட்டொலியும் ஐந்தாகவே இருக்க வேண்டும்.
உள்ளங்கை இரண்டு உடையவர்க்குப் புறங்கையும் இரண்டாகத்தாம் இருக்கும். நான்காக முடியாது என்று நச்சினார்க்கினியர் விளக்குகிறார்.
"எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்” (புணரியல். 141)
உயிரும் உயிரும் புணருமிடத்து உடம்படுமெய் வடிவு தோன்றும் என்று இலக்கணம் வகுக்கும் தொல்காப்பியம், அ+இ = ஐ என்றும், அ+உ = ஔ என்றும் கூறப்பட்டதன் காரணம் யாதெனின், உயிரெழுத்தின் எண்ணிக்கை பன்னிரண்டாக அமைய வேண்டும் என்பதுவே யாகும். 6 உயிர் என்றாலே பன்னிரண்டு தான். அதாவது, உடம்பில் உயிர் நிலைத்திருக்க வேண்டுமென்றால், சூரிய கலையில் சுவாசத்தின் அளவு பன்னிரண்டாக அமைய வேண்டும்.
தமிழ் மருத்துவம் குறிப்பிடும் சூரிய கலையின் அளவு உயிரோட்டத்தின் அளவாகக் கருதிக்கொண்டு உயிரெழுத்துகள் பன்னிரண்டாக அமைக்கப்பட்டுள்ளன. உடம்பினுள் இயங்கும் சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று கலைகளும் பதினாறு, பன்னிரண்டு, பத்து எனும் அளவுகளைக் கொண்டுள்ளன என்று மருத்துவம் குறிப்பிடுகிறது.
உயிரும் மெய்யும்[தொகு]
உயிரும் உடலும் நாள் ஒன்றுக்கு விடுகின்ற மூச்சின் எண்ணிக்கை 21600 ஆகும். இதுவே, உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் பெருக்கினால் கிடைக்கின்ற எண்களாகும்.
12 x 18 x 100 = 21600
தமிழ் மருத்துவம் கூறும் உயிர் உடல் ஆகிய இரண்டின் இயக்கத்தை அறிந்தே தொல்காப்பியம் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையை அமைத்துள்ளது எனலாம்.
சார்பெழுத்து[தொகு]
எழுத்துகள் உயிர், மெய், சார்பு என மூன்று வகை என்றும், உயிரையும் மெய்யையும் சார்ந்து வருபவை சார்பெழுத்து என்றும் உரைக்கப்படுகிறது. சார்பெழுத்துகள் மூன்றும் உயிரையும் உடம்பையும் சார்ந்து இயங்குகின்ற வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று வளி இயக்கங்களைக் குறிப்பவையாகும்.
அவை போல், மெய்யெழுத்துகள் ஆறு ஆறு எழுத்தாக வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அவை உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்களையும் அவற்றின் இடையே ஊர்ந்து செல்லும் இடகலை, பிங்கலை, சுழுனை என்னும் மூன்று நாடிகளையும் உடலின் தன்மைகளான வன்மை, மென்மை, இடைமை எனக் குறிக்கின்றன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment